நாம் குஜராத்திகளாக இல்லை.

 கௌதம் அதானி 2023 புத்தாண்டில் மிகப்பெரிய சரிவை சந்தித்து வருகிறார். ஃபோர்ப்ஸ் (Forbes) ரியல் டைம் உலக பணக்காரர்கள் பட்டியலில் உலக பணக்காரர்கள் பட்டியலில் தற்போது 3வது இடத்திலிருந்து 7-வது இடத்திற்கு தள்ளப்பட்டார்.

சந்தை மதிப்பீட்டில் இருந்து 4.17 லட்சம் கோடி ரூபாய் அதானி குழும்ம்  இழந்துள்ளது.


ஹிண்டன்பர்க் ரிசர்ச் அறிக்கையில், நிறுவனங்களின் பங்குமதிப்பு உயர்வைக் காட்டி அதானி குழும நிறுவனங்கள் மிக அதிக அளவில் கடன் பெற்றுள்ளன என்றும், இது பங்குச் சந்தையில் முறைகேடுகள் செய்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது. 

மேலும், அதானி குடும்ப உறுப்பினர்கள் வெளிநாடுகளில் போலி நிறுவனங்களைத் தொடங்கி வரி ஏய்ப்பு செய்து பண மோசடியிலும் ஈடுபட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவித்திருந்தது.

அதானி குழுமம் குறித்த அமெரிக்க ஆய்வு நிறுவனமான ஹிண்டன்பர்க் ஆராய்ச்சி அறிக்கை மிகவும் நம்பகமானது மற்றும் நன்கு ஆராய்ச்சி செய்யப்பட்ட பின்னர் தயாரிக்கப்பட்டுள்ளதாக பில்லியனர் முதலீட்டாளர் வில்லியம் எக்மேன் தெரிவித்துள்ளார்.

அவரது சொத்து மதிப்பில் தொடர்ச்சியான சரிவு காரணமாக அவர் இந்தப் பின்னடைவை அடைந்துள்ளார்.

அதோடு, இந்த ஆண்டில் மட்டும் இதுவரை சுமார் ரூ.2,27,385 கோடியை அவர் இழந்துள்ளார்.

அதானி குழுமத்தின் பதிலை தயாரிப்பதற்கு குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும், 100 பக்கங்களுக்கு மேல் பதிலை தயாரித்து உள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் அதை எப்போது வெளியிடுவது என்பது குறித்து சட்ட ஆலோசனை நடைபெறுகிறது என்று தகவல் வெளியாகி உள்ளது. 

இந்த பதில் ஜன. 31க்கு முன் இருக்காது என்றாலும், பதில் எப்போது வரும் என்பது குறித்த உறுதியான பதில் இல்லை.


புதிய பங்கு விற்பனை முடித்த பிறகு வெளியாகும் எனக்கூறி வருகின்றனர்.


ஹிண்டன்பர்க் அறிக்கைக்குப் பின் அந்த பங்கு விலை 20% சதவிகிதம் சரிவை சந்தித்தது.


 இந்த நிலையில் 200 பில்லியன் ரூபாயை திரட்ட இந்தியாவின் மிகப் பெரிய முதன்மையான ஃபாலோ-ஆன் பொதுப் பங்களிப்பை அறிமுகப்படுத்தியது. இது மூலதனச் செலவினங்களுக்கு நிதியளிப்பதற்கும் அதன் பல்வேறு அலகுகளின் கடனைச் செலுத்துவதற்கும் ஆகும்.


ஆனால் 1%தான்  பங்கு கேட்புகள் வந்தன.


அதானி குழுமத்தின் இந்த சிக்கலினால் பங்கு முதலீட்டாளர்கள் மட்டும் இல்லாமல், அரசுக்கு சொந்தமான ஆயுள் காப்பீட்டு நிறுவனம், மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் பெரும் நெருக்கடியை சந்தித்துள்ளன. 

அதாவது எல் ஐ சி அதானி குழுமத்தில் பெரிய அளவில் முதலீடு செய்திருந்தன. அதாவது எல் ஐ சி -யின் முதலீடு 24,000 கோடி ரூபாய் வரை சரிவடைந்துள்ளது.

எல்ஐசி மற்றும் எம்எஃப் நிறுவனங்கள் பாதிப்பு அடைந்துள்ளதால், அவற்றின் முதலீடுகளைச் செய்யும் சிறு முதலீட்டாளர்களுக்கு இது மறைமுகமான பாதிப்பாகும்.

ஒட்டுமொத்தமாக, அதானி குழுமப் பங்குகள் சந்தை மதிப்பில் ரூ.4.18 டிரில்லியன் சரிவை சந்தித்துள்ளன.

அதானி குழுமத்தின் மிகப்பெரிய உள்நாட்டு நிறுவன முதலீட்டாளர் எல்ஐசி ஆகும். பட்டியலிடப்பட்ட நான்கு அதானி குழுமப் பங்குகளில் 5 சதவீதத்திற்கும் அதிகமான பங்குகளை எல் ஐ சி வைத்துள்ளது. 

மேலும் சில மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களும் அதானி குழுமத்தின் பங்குகளில் முதலீடு செய்து வைத்துள்ளன.

அதானி குழுமத்தின் கடன் இந்திய வங்கித் துறையில் மொத்தக் கடன்களில் 0.5% ஆகும். பொதுத்துறை வங்கிகளின் கடன் மொத்தக் கடனில் 0.7% ஆகவும், தனியார் வங்கிகளில் 0.3% ஆகவும் உள்ளது.

கடந்த இரண்டு நாட்களாக அதானி குழுமத்தின் பங்குகள் பெருமளவில் சரிந்து வர்த்தகமாகி வருகிறது. 

அதாவது பங்குகளின் விலை 20% வரை சரிந்து பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் ஒருங்கிணைந்த சந்தை மதிப்பீட்டில் இருந்து 4.17 லட்சம் கோடி ரூபாய் இழந்துள்ளது.

ஜனவரி 24ம் தேதி ஹிண்டன்பர்க்கின் அறிக்கை வெளியானது. இதில் கரீபியன், மொரிஷியஸ் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இருந்து ஆகிய இடங்களில் அதானி குடும்பக் கட்டுப்பாட்டில் உள்ள ஆஃப்ஷோர் ஷெல் நிறுவனங்கள் இருப்பதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. . 

குழுவின் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களிடமிருந்து பணத்தைப் பெறும்போது ஊழல், பணமோசடி, வரி மோசடி என அதானி குழுமத்தின் மீது பல குற்றச்சாட்டுகளை அந்த குழுமம் வைத்துள்ளது. அனைத்து குற்றச்சாட்டுகளையும் அதானி குழுமம் மறுத்துள்ளது.

அதானி குழுமம் இப்போது ஹிண்டன்பர்க் ஆராய்ச்சிக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து ஆலோசித்து வருகிறது. அதானி குழுமத்தின் சட்டத் தலைவர் ஒரு அறிக்கையில், அமெரிக்கா மற்றும் இந்திய சட்டங்களின் கீழ், ஹிண்டன்பர்க்கிற்கு எதிரான வழக்குகள் தொடரப்படும் என்று தெரிவித்தார்.

மறுபுறம், சந்தை கட்டுப்பாட்டாளரான செபியும் கடந்த ஆண்டில் அதானி குழுமத்தின் ஒப்பந்தங்கள் மீதான ஆய்வுகளை அதிகப்படுத்தியுள்ளது.

இதற்கிடையில், அதானி குழுமத்தின் பங்குகளில் எல்ஐசி மற்றும் எஸ்பிஐ அதிக அளவு முதலீடு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

பொதுத்துறை நிறுவனங்களின் முதலீடுகள் குறித்து காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கூறுகையில், இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவனம் (எல்ஐசி), பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) போன்ற நிதி நிறுவனங்களை அதானி குழுமத்திற்கு அதிக அளவில் முதலீடு செய்திருப்பது நிதி நிலைத்தன்மைக்கும், கோடிக்கணக்கான இந்தியர்களின் சேமிப்புக்கும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

காங்கிரஸ் தலைவர், மத்திய அரசின் நிர்வாகத்தின் கீழ் உள்ள எல்ஐசியின் ஈக்விட்டி சொத்துக்களில் 8%, அதாவது மிகப்பெரிய தொகையான 74,000 கோடி ரூபாய், அதானி நிறுவனங்களில் உள்ளது. அதன் இரண்டாவது பெரிய பங்குகளை உள்ளடக்கியது என்று கூறினார்.

லட்சக்கணக்கான  எஸ்பிஐ தலைவர் தினேஷ் குமார் காரா, 

அதானி குழுமம் சமீப காலங்களில் எஸ்பிஐயிடம் இருந்து எந்த நிதியுதவியையும் திரட்டவில்லை என்றும், எதிர்காலத்தில் ஆனால் அதானி எந்த நிதிக் கோரிக்கையையும் வங்கி வந்தாலும் அதை விதிகளுக்கு உட்பட்டு செயல்படுவோம் எனக்கூனியுள்ளார்.

அதாவது இன்னும் அதானிக்கு கடனை  அள்ளிக் கொடுப்போம் என்கிறார்.


அதானி குழுமத்தின் கடன் இந்திய வங்கித் துறையில் மொத்தக் கடன்களில் 0.5% ஆகும். பொதுத்துறை வங்கிகளின் கடன் மொத்தக் கடனில் 0.7% ஆகவும், 

தனியார் வங்கிகளில் 0.3% ஆகவும் உள்ளது.

ஆக தனியார் வங்கிகள் கவனமுடன் இருந்துள்ளது.

அரசு வங்கிகள்தான் மோடி,நிர்மலா பேச்சைக் கேட்டு மக்கள் பணத்தை அள்ளி வழங்கியுள்ளது.

மக்கள் கல்விக் கடன் 

மூன்று லட்சம் வாங்க எவ்வளவு மூச்சை காலி செய்யவேண்டியுள்ளது.தினசரி அலைய வேண்டியுள்ளது.

காரணம் அவர்கள்  மோடியின் நண்பர்கறாக இல்லை.அதிலும் முக்கியமாக குஜராத்திகளாக இல்லை.

---------------------------------------------------------------


இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?