இன்றைய செய்தி,நாளைய வரலாறு. நாளைய வரலாறை படிப்போம்.

திங்கள், 15 அக்டோபர், 2018

கீழடியும், ஸ்டெர்லைட் படுகொலைகளும்.

தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடிட வலியுறுத்தி பல போராட்டங்கள் நடைபெற்றுவந்தன. இந்தப் போராட்டத்தின் 100-வது நாளான கடந்த மே-22-ம் தேதி நடைபெற்ற முற்றுகைப் போராட்டத்தில் கலவரம் வெடித்தது. இதில், போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 2 பெண்கள் உட்பட 13 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவம் தொடர்பாக தமிழக அரசு, ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒருநபர் கமிஷனை நியமித்தது. இந்த ஆணையம், கடந்த ஜூன் மாதம் முதல் தனது விசாரணையை நடத்திவருகிறது.
இந்த சம்பவம் தொடர்பாக, தூத்துக்குடியில் உள்ள 4 காவல் நிலையங்களில் 243 வழக்குகள் பதிவுசெய்யப்பட்டன. இதில் முக்கியமான 5 வழக்குகள் மட்டும் சி.பி.சி.ஐ.டி பிரிவு விசாரணைக்கு மாற்றப்பட்டன. இதையடுத்து, 5 வழக்குகளும் ஒரே வழக்காகப் பதிவு செய்யப்பட்டது. தொடர்ந்து, சி.பி.சி.ஐ.டி., ஏ.டி.எஸ்.பி., மாரிராஜா தலைமையிலான போலீஸார் விசாரணையையும் நடத்தினர். இந்நிலையில், 243 வழக்குகளில் சிப்காட் காவல் நிலையத்தில் பதிவுசெய்யப்பட்ட 173 வழக்குகளை ஒரே வழக்காக மாற்றப்பட்டது.
இந்த நிலையில், துப்பாக்கிச் சூடு சம்பந்தமான வழக்குகளை சி.பி.ஐ விசாரணைக்கு மாற்றக் கோரி, உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் 15-க்கும் மேற்பட்ட பொதுநலன் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இவற்றை விசாரித்த நீதிபதிகள் செல்வம் மற்றும் பஷீர் அகமது ஆகியோர் அமர்வு, இச்சம்பவம் தொடர்பான அனைத்து வழக்குகளையும் சி.பி.ஐ-க்கு மாற்றி, கடந்த ஆகஸ்ட் 14-ம் தேதி உத்தரவிட்டது. இதையடுத்து, சி.பி.சி.ஐ.டி போலீஸார் சி.பி.ஐ-யிடம் ஆவணங்களை சில நாட்களுக்கு முன்பு ஒப்படைத்தனர்.
இந்தச் சூழ்நிலையில், சி.பி.ஐ துணைக் கண்காணிப்பாளர் ரவி தலைமையிலான குழுவினர், நேற்று மதியம் தூத்துக்குடியில் விசாரணையைத் தொடங்கினர்.
கொலை முயற்சி, கொலை மிரட்டல், அரசு ஊழியர்களை பணிசெய்யவிடாமல் தடுத்தல், பயங்கர ஆயுதங்களை வைத்து தாக்குதல், சந்தேக மரணங்கள் உள்ளிட்ட 13 சட்டப்பிரிவுகளின் கீழ் சி.பி.ஐ. அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கினர்.
முதற்கட்டமாக அவர்கள் தூத்துக்குடி சிப்காட் போலீஸ் நிலையம், தென்பாகம், வடபாகம், ஆயுதப்படை வளாகம் உள்ளிட்ட இடங்களுக்கு சென்று வழக்கு தொடர்பாக ஆவணங்களை சேகரித்தனர்.
சி.பி.ஐ. அதிகாரிகள் தற்போது சேகரிக்கப்பட்ட ஆவணங்களுடன் சி.பி.சி.ஐ.டி. போலீசார் ஒப்படைத்த ஆவணங்களை ஒப்பிட்டு பார்த்தனர். இதைத் தொடர்ந்து இன்று 2-வது நாளாக சி.பி.ஐ. அதிகாரிகள் தங்கள் விசாரணையை தொடங்கினர்.
துப்பாக்கிச் சூடு சம்பவத்தின்போது பணியில் இருந்த வட்டாட்சியர் சந்திரனிடம் சிபிஐ அதிகாரிகள் தற்போது விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஆனால் இந்த துப்பாக்கி சூடும்,அதில் 13 பேர் இறந்ததும் தெரியாமல் தொலைக்காட்சியில் அது.இது,எது பார்த்துக்கொண்டிருந்ததாக கூறும்  எடப்பாடி எடுபிடி அரசோ  ‘இந்த வழக்கை சி.பி.ஐ விசாரணைக்கு மாற்றியது அவசியம் இல்லாத ஒன்று. 

இந்த உத்தரவை ரத்துசெய்ய வேண்டும்; மீண்டும் தமிழக அரசே விசாரணை நடத்திட உத்தரவிட வேண்டும்” என்று  உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளது.
காரணம் துப்பாக்கி சூடு நடத்த ஆணையிடும் அதிகாரம் உள்ள மாவட்ட ஆட்சியர் .அருகில் ஓட்டப்பிடாரம் வட்டத்தில் இருக்கையில் 13 கிமீ தூரத்தில் உள்ள துணை வட்டாசியர் சுட ஆணை கொடுத்த அசிங்கம் தெரியுமே?
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் வெளியே இருந்த கண்காணிப்பு காமிரா மக்கள் வரும் முன்னரே கீழ்நோக்கி தொங்கிக்கொண்டிருந்த்தும்,வாயில் கண்ணாடிகள் உள்ளிருந்து உடைக்கப்பட்டதும் தெரிந்து விடும்.

நல்ல காவல் அலுவலர்களும் இருந்தனர்  

மக்கள் திரள் வரும் முன்னரே அரசு ஊழியர்கள் வெளியேற்றப்பட்டதும்,கழிக்கப்பட்ட கோப்புகள் தீவைக்கப்பட்டதும் தெரிந்து விடுமே?
ஸ்டெர்லை எதிர்ப்பு போராட்டம் நடக்கும் என்பதும்,அதற்கு அன்று 144 தடை விதிக்கப்பட்டதும் மாவட்ட ஆட்சியர் வெங்கடேஷுக்கு நன்கு தெரியும் .144 தடை போட்டதே அவர்தான்.
பின் இவ்வளவு சட்டம் ஒழுங்கு பத்தாஹ்ட்டம் உள்ள நிலையில் அலுவலகத்தில் இருந்து கண்காணிக்காமல் மாவட்ட ஆட்சியரும்,மாவட்ட காவல் கண்காணிப்பாளரும் தலைமையிடத்தை விட்டு ஓட்டப்பிடாரம்,விளாத்திகுளம் என்று திடீர் முகாம் சென்றது ஏன்?
அப்படியே இருந்தாலும் காவல்துறை கூறியபடியே வரும் வழியெல்லாம் கலவரம் செய்து சமூக விரோதிகள்,நக்சலைட்டுகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை தாக்க வரும் போது அருகில் உள்ள அலுவலகத்திற்கு ஏன் அவசரமாகத்திரும்பி வரவில்லை.

அருகிலேயே மாவட்ட ஆட்சியர்,காவல் கண்காணிப்பாளர் இருக்கையில், பேக்ஸ், அலைபேசி ,நேரடி காணொளி (வீடியோ கான்பரன்ஸ் வசதிகள் முதல்வர்,தலைமைச்செயலாளர் போன்ற அலுவலர்களுடன் தொடர்பு கொண்டு நிலையை விளக்கி ஆணைகள் பெறாமல் சான்றுகள் வழங்கும் அதிகாரம் மட்டுமே உள்ள அதாவது சிறப்பு காவல் சார் ஆய்வாளர் (எஸ்.எஸ்.ஐ )நிலையில் உள்ள  துணை வட்டாட்சியரிடம் துப்பாக்கிச்சூடு நடத்த ஆணை பெற்றது ஏன்?
என்ற கேள்விகளுக்கெல்லாம் பதில் சொல்லியே ஆக வேண்டும்.
இதைவிட மர்மம்  மஞ்சள் பனியனுடன் வேனில் ஏறி துப்பாக்கியால் சுட்டதாக கூறப்பட்ட காவலர் தான் குறிமட்டுமே பார்த்ததாகவும் சுடவில்லை,அதற்குள் வேறு நபர்கள் கொலை செய்யப்பட்டவர்கள் அருகில் இருந்தே ஆட்களை அடையாளம் கண்டு சுட்டதாக கூறியுள்ளார்.
அத்துடன் "காலையிலேயே எங்களை சீருடை இல்லாமல் மஞ்சள் பணியந்தான் வரக்கூறினார்கள் .நாங்கள் முன்பு பயிற்சி முடித்து மஞ்சள் பனியனுடன் மாவட்ட ஆட்சியருடன் எடுத்த புகைப்படத்தை பத்திரிகைகளுக்கு கொடுத்ததம் யார் எனத்தெரியவில்லை.அப்படம் மக்கள் தொடர்பு அலுவலகத்தாரால்தான் எடுக்கப்பட்டது "என்றும் கூறியுள்ளார். 
சி.பி.ஐ தோண்டினால் கீழடி,ஆதிச்சநல்லூரை விட பல உண்மைகள் வெளிவரலாம்.ஆனால் கீழடி,ஆதிச்சநல்லூரை ஆட்சியாளர்கள் 13 பேர்கள் கொலை ,ஸ்டெர்லைட் விவகாரத்தை தோண்டவிடுவார்களா?
அல்லது தோண்டியபின் அறிக்கையை எப்படி விட வேண்டும் என்று அனில் அகர்வால்தான் அறிவுரை வழங்காமல் இருப்பாரா?
===========================================================================================
ன்று,
அக்டோபர்-15.

 • இந்திய இளைஞர் எழுச்சி தினம்

 • உலக  கிராமப்புற பெண்கள் தினம்

 • பிரேசில் ஆசிரியர் தினம்

 • இலங்கை தேசிய மரம் நடும் தினம்

 • இந்திய முன்னாள்குடியரசுத் தலைவர்  அப்துல் கலாம் பிறந்த தினம்(1931)
============================================================================================
               பாஜக ஆட்சியில் எவ்வளவு,முறைகேடுகள்,ஊழல்கள் அதை எல்லாம் கானால் கோமா                                                நிலையில்  இவனும்(அன்னா கஸாரே) ஒரு ஊழல்வாதிதான்.


ஞாயிறு, 14 அக்டோபர், 2018

அது என்ன புஷ்கரணி- புஷ்கரம் ?


இந்தியாவில் தென்கோடியில் தாமிரபரணி துவங்கி, சிந்து, கங்கை, பிரம்ம புத்திரா, ராபி, பியாஜ், ஜீலம், சென்னாப் என வற்றாத நதிகள் வெகுசில உண்டு. 

இவற்றில், சிந்து, கங்கை, யமுனை, நர்மதை, சரஸ்வதி, கிருஷ்ணா, கோதாவரி, காவிரி, பிரம்மபுத்ரா, துங்கபத்ரை, பிராணகிதா போன்ற ஆறுகளைப் புண்ணிய தீர்த்தங்கள் என புராணங்கள் வாயிலாகவும், மத நம்பிக்கைகளின் அடிப்படையிலும் நீராடி, மலர்த்தூவி, தீபாராதனை காட்டி, வழிபடுகிற சடங்கிற்கு புஷ்கரம் என்று பெயர் சூட்டி வழங்குகின்றார்கள்.
ஆறுகளை வழிபடுவது இந்த நிலத்தின் தொன்மம். 


‘ஆற்றுப் பெருக்கற்று அடிசுடும் அந்நாளும் ஊற்றுப் பெருக்கால் உலகூட்டும் தாமிரபரணி’ என்பது வழக்கு. திருநெல்வேலியின் பூர்வாங்கம் தாமிரபரணியின் படித்துறைகளில் பொதிந்து கிடக்கிறது. 
ஆறும் ஊறும் கலந்துகிடக்கிற மக்களை இன்றும் நீங்கள் அங்குசென்றால் கண்ணாரக் கண்டடைய முடியும். 

மேல் தட்டு கீழ்தட்டு என்ற பாகுபாடுகள் எதையும் தனக்குள் கொள்ளாமல் அநேக மக்களின் அன்றாடப் பாடுகளுக்குள் கலந்துகிடக்கிற நதி அது.
அப்பேர்பட்ட தாமிரபரணிக்கு 144 ஆண்டுகளுக்குப் பிறகு புஷ்கர விழா நடைபெற இருக்கிறது. 
ஆனால், இன்று சொல்லப்படும் 144 ஆண்டுகளுக்கு முந்தைய, விருச்சிகத்தில் இருந்து கடகத்திற்கு இடம்பெயரும் நாட்களில் நடைபெறும் ‘தாமிரபரணி புஷ்கரம்’ எனும் இந்து மதக் கட்டுக் கதைகள் உண்மையானதா?

தாமிரபரணியில் இந்தப் புஷ்கர நிகழ்வை ஏற்பாடு செய்ய முன்னின்று உழைப்பவர்கள் காஞ்சி காமகோடி பீடத்து நிர்வாகிகள். 
இவர்கள்தான் “இந்த 144 ஆண்டுக்குப் பிறகு” என்ற போலி வரலாற்றைத் தாமிரபரணி ஆற்றின் மீது கட்டமைப்பவர்கள். 

கிமு. ஐந்தாம் நூற்றாண்டுகளுக்கு முன்பிருந்தே இயங்குகிற மடம் தங்களுடையது என்று காஞ்சி மடத்தின் தோற்றக்கதையிலே அடித்து விடுகிற இவர்களுக்கு இந்தக் காலகட்டப் பிரச்சனை ஒன்றும் பெரிய விஷயமில்லை.

இது 2018ம் ஆண்டு. இவர்களின் கணைக்குப்படி, 144 ஆண்டுகளுக்கு முன் புஷ்கரம் நடைபெற்றது என்றால் 1874ம் ஆண்டில் அப்படி ஓர் நிகழ்வு நடைபெற்றிருக்க வேண்டும். 
சற்றும் முன் அல்லது பின்னாக 1870 முதல் 1875 வரையிலான திருநெல்வேலி வரலாற்றைச் சரியாக அமர்ந்து வாசித்தால் இவர்களது முழுப் புரட்டும் பொய்யும் அம்பலம் ஏறிவிடும்.

1870ம் ஆண்டு அக்டோபர் முதல் நவம்பர் வரை திருநெல்வேலி ஜில்லாவில் ஆக்டிங் கலெக்டராக இருந்தவர் ஜே.ஆர்.அற்புத நாத். 
அவரையடுத்து மாவட்ட கலெக்ட்டராகப் பொறுப்பேற்ற ஆர்.கே.பக்கிள் 16 நவம்பர் 1870 முதல் 27 பிப்ரவரி 1874 வரை திருநெல்வேலி மாவட்ட கலெக்டராகப் பணிபுரிந்தவர். 
பின், நிர்வாக காரணங்களுக்காக அதே ஆண்டில் மட்டும் டபிள்யு.ஏ.ஹெப்பள், டபிள்யு.எச்.காமின் இருவரும் ஆக்டிங் கலெக்டராக மாற்றி மாற்றிப் பொறுப்பேற்றனர்.

1875 அக்டோபரில் 5ம் தேதியில் ஒருநாள் கலெக்டராக இருந்த ஹெப்பள்-க்குப் பிறகு, ஜே.பி.பென்னிங்டன் மாவட்ட கலெக்டராக அறிவிக்கப்பட்டார். 
ஆனால், அவரின் நேரடிப் அதிகாரத்திற்கு வருவதற்காக அடுத்த 13 நாட்களும் திருநெல்வேலி கலெக்டர் இல்லாத மாவட்டமாகவே இயங்கியது. 
18 அக்டோபர் 1875ல் ஏ.ஜே.ஸ்டூவர்ட் மீண்டும் ஆக்டிங் கலெக்டராக வந்தபோதும் மாவட்ட ஆட்சித் தலைவர் பொறுப்பு சீரான நிலைக்குத் திரும்பவில்லை.

மேற்சொன்ன மாவட்ட ஆட்சித் தலைவர்கள் எவருடைய குறிப்புகளிலும் தாமிரபரணி ஆற்றில் இப்படி ஒரு விழா நடைபெற்றதற்கான அறிவிப்புகளோ அல்லது அனுமதி வழங்கின குறிப்புகளோ கிடையாது. 

மாறாக, 1869, 1874, 1877 ஆகிய அடுத்தடுத்த ஆண்டுகளில் முறையே மூன்று தடவை தாமிரபரணியில் பெருவெள்ளம் ஏற்பட்டு, கரைகள் உடைந்தன.


1869-74ம் ஆண்டுகளில் வடகிழக்குப் பருவமழையின் காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில் அன்றைய ஒருங்கிணைந்த திருநெல்வேலியின் ஆழ்வார் திருநகரி, திருவைகுண்டம், ஆத்தூர் தென்பகுதிகள் அளவிட முடியாத பாதிப்புகளைச் சந்தித்தன. 

77ல் கொற்கை, கோரம்பள்ளம் நீர்த்தேக்கங்கள் உடைந்து விழுந்தன. 


1868 முதல் 74 வரையிலான ஆண்டுகளைத் தாமிரபரணியின் சங்கடமான விளைவுகளை ஏற்படுத்திய ஆண்டுகள் என்றே வருணிக்கிறது கெஸட்ஸ் ஆஃப் திருநெல்வேலி வால்யூம் ஒன்று.
அதில் 1874ம் ஆண்டின் வெள்ளச்சேதம் பற்றிய குறிப்பு ஒன்று, “நவம்பர் 24ம் நாள் பாளையங்கோட்டை திரும்பவும் ஒரு பெரு வெள்ளத்துக்குத் தயாராகிவிட்டது. 1869ம் ஆண்டில் ஏற்பட்ட வெள்ளத்தில் இது மூன்று அடி தான் குறைவு. 

திருநெல்வேலி கிருஷ்ணப்பேரி தேக்கங்கள் நிறைந்துவிட்டன. 
நயினார்குளம் நிரம்பி வழிந்து பயமுறுத்துகிறது. 

நெல்லையும் பாளையங்கோட்டையும் ஒன்றிலிருந்து ஒன்று முழுமையாகத் துண்டிக்கப் பட்டிருக்கின்றன. இடைப்பட்ட பகுதிகளில் இருநூறுக்கு மேற்பட்ட வீடுகளும், மக்களும் பெரும் துன்பத்திற்கு ஆளாகியுள்ளார்கள்.
 உயிர்ச்சேதம் ஏதும் இல்லை.” என்று தெரிவிக்கிறது.

ஆனால், இந்தக் காலகட்டத்தில் தான் தாமிரபரணி மகா புஷ்கரம் நடைபெற்றதாகக் காஞ்சி காமகோடி பீடம் தன் பொய்யான பரப்புரையை மேற்கொள்கிறது.
சரி மாவட்ட கெஸட் தான் பொய் சொல்லுகிறது என்றால், அதே காலகட்டத்தில் காஞ்சி பீடத்தில் ஆறாவது மடாதிபதியாகப் பொறுப்புக்கு வந்த சுதர்சன மகா தேவேந்திர சரசுவதி (1851லிருந்து 1891)யாவது உண்மையைச் சொல்லி இருக்கலாம். 

ஆனால் அவர், கணக்கு வழக்கில்லாமல் செலவு செய்த காரணத்தால் மடத்தின் கணக்குகளைக் கண்காணித்து வந்த அவரது சித்தப்பா கணபதி சாஸ்திரியால், தஞ்சை மன்னரின் உதவியோடு சிறை வைக்கப்பட்டது துவங்கி சிறையில் உண்ணாநோன்பிருந்தது வரைக்கும் அவரது அத்தனை கதையும் எழுதி வைக்கப் பட்டிருக்கிறது. 


அதில் காஞ்சி பீடத்தினரால், தாமிரபரணியில் மகா புஷ்கரம் நடைபெற்றதாக எங்கும் குறிப்பிட்டிருக்கவில்லை. 
ஏன்? 
உண்மையில் அப்படியோர் நிகழ்வு நடந்திருந்தால் தானே?

விவரங்கள் இப்படி இருக்க இவர்கள் எப்படி 144 ஆண்டுகள் முந்தைய புனித அடையாளத்தைத் தாமிரபரணி மீது புகுத்த முயல்கிறார்கள்? 

ஏன்? 

இங்கே தான் மதவாத விஷ்வ இந்து பரிஷத் உட்பட்ட அனைத்து காவி அடையாளங்களின் கரங்கள் வேலை செய்யத் துவங்குகின்றன. 
இவர்கள் முதலில் பொய்யை உண்மையென அறிவிப்பார்கள். அனைத்து பிராமணிய ஊடகங்களும் அவர்களுக்கு உறுதுணையாக மேற்படி பொய்யை உண்மை உண்மை என்று அறைகூவும். பிறகு மக்கள் வாய்மொழியில் இது நிஜம் தான் போல என்ற நம்பிக்கை உருவாகத் துவங்கும்.

இந்த மகா புஷ்கர நிகழ்விற்காக நதியின் கரைகளையும், துறைகளையும் கோயில் சாலைகளையும் புனரமைக்க மக்கள் வரிப்பணம் தான் செலவிடப்படும் என்றாலும் இவர்களது கைங்கரியத்தால் தங்களது மத அடையாளங்களை மக்களின் தொன்மங்களுக்குள் விசமமாகப் புகுத்தத் துவங்குவார்கள்.

 எளிய மக்களின் அடையாளமாக விளங்கும் நாட்டார் தெய்வங்களை, ஆற்றங்கரைப் பள்ளிவாசல்களை, தேவாலயங்களை, எளிய மக்களின் இயற்கை வழிபாடுகளை அடையாளமிழக்கச் செய்து, அவற்றுக்கு காவிநிறம் பூசுவார்கள். 

எங்கள் அய்யனார் கோயில்களில் பின்னே நவக்கிரகங்கள் புகுந்ததெப்படி?
தாமிரபரணி ஆற்றங்கரை உலகின் தொன்மையான நாகரிக வெளி. 
ஆதிச்சநல்லூர் அதன் கண்டெடுக்கப்பட்ட எச்சம். 


அங்கே காவி மத அடையாளத்தின் பெயரால் தங்கள் அரசியல் தேவைகளை நிவர்த்தி செய்துகொள்ளும் பிராமணியச் சிந்தனையின் யுக்தியை, அதன் முன்பின்னுள்ள சக்திகள் எளிய மக்களின் பண்பாட்டுத் தொடர்ச்சியோடு பொருத்தி விளையாட்டுக் காண்பிக்கின்றன.

நம் மக்களிடம் இதுகுறித்து எதிர்க்கருத்தைச் சொன்னால், “என்னம்ன்னாலும் நம்மூருக்கு நல்லதுதான்ல செய்தான்” என்பார்கள். 
அவர்களிடம் விளங்கச் சொல்லிப் புரியவைப்பதில் சங்கடம்தான் எஞ்சும். 

ஊரின், நகரத்தின், தேசத்தின் முக்கியமான அடையாளங்கள் மீது கல்லெறிந்து, அந்த சலசலப்பிலே தங்களை வளர்க்கத் துடிக்கும் புத்திசீவிகள் காவிகள். 
கங்கை முதல் கன்னியாகுமரி வரை அவர்கள் அதைத்தான் செய்தார்கள் செய்வார்கள்.
தாமிரபரணி ஆறும், திருநெல்வேலி ஊரும் நம்முடையது. 

எனில், இந்தப் பொய்யும் புரட்டு செய்து கொண்டாடும் விழா யாருக்கானது. 

யாரோ ஒருத்தனாவது எதிர்த்து எழுதியதாக இருக்கட்டும் என்று இதை எழுதுகிறேன். 
இந்த மகா புஷ்கரம் குறித்து எழுதச் சொல்லிக் கேட்ட நண்பன் பிரகாஷ்க்கு நன்றி.
                                                                                                                                                                                                                                                                                                                                      முகநூலில் -கார்த்திக் புகழேந்தி.
12-10-2018.
=====================================================================================================
ன்று,
அக்டோபர்-14.
 • உலக தர நிர்ணய தினம்
 • முதலாவது அச்சான சிறுவர் நூல்  வின்னீ தி பூ வெளியிடப்பட்டது(1926)
 • இலங்கையின் முதலாவது நாடாளுமன்றம் கூடியது(1948)
 • விண்ணிலிருந்து முதலாவது நேரடி தொலைக்காட்சி ஒளிபரப்பு அப்போலோ 7 விண்கலத்தில் இருந்த மேற்கொள்ளப்பட்டது(1968)
======================================================================================================

ரெண்டுசாமி...மூணு சாமி....இப்போ  சிபிஐ சாமி.?
எடப்பாடி பழனிசாமி அரசுக்கு எதிரான சிபிஐ நெருக்கடி அதிகரிக்க ஆரம்பித்திருக்கிறது. ஏற்கனவே குட்கா ஊழல் வழக்கில் பலரையும் உலுக்கி வரும் சிபிஐ, நெடுஞ்சாலை ஊழல் வழக்கிலும் அதிரடி காட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழக நெடுஞ்சாலைத்துறை டெண்டரில் ரூ.4 ஆயிரத்து 800 கோடி அளவுக்கு முறைகேடுகள் நடந்துள்ளதாக கூறி தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தக்கோரி தி.மு.க. அமைப்பு செயலாளரும், எம்.பி.யுமான ஆர்.எஸ்.பாரதி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கில் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்தனர். இதற்கிடையே, முதல்வர் கையில் இருக்கும் லஞ்ச ஒழிப்பு துறை இதனை முறையாக விசாரித்து இருக்காது என மனுதாரர் கூடுதல் மனுதாக்கல் செய்தனர். இதையடுத்து, முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீதான டெண்டர் புகாரை சிபிஐ விசாரிக்க ஐகோர்ட் உத்தரவிட்டது.
சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஜெகதீஷ் சந்திரா பிறப்பித்த இந்த உத்தரவின் முக்கிய அம்சங்கள் இங்கே:
ஒரு குற்ற வழக்கை விசாரிக்கும் புலன் விசாரணை அமைப்பிடமிருந்து மற்றொரு அமைப்புக்கு மாற்ற நீதிமன்றத்திற்கு அதிகாரம் உள்ளது. அதேநேரம் வழக்கமான முறையில் இந்த அதிகாரத்தை பயன்படுத்த முடியாது. இந்த வழக்கில் மாநில காவல்துறை மீது மனுதாரர் பாரதி தரப்பில் குற்றச்சாட்டுகளை சுமத்துகிறார். அப்படிப்பட்ட சூழலில் உயர் நீதிமன்றத்தின் அதிகாரத்தை எச்சரிக்கையுடனும், கவனத்துடனும் செயல்படுத்த வேண்டும். குற்றச்சாட்டுகள் குறித்த நேர்மையான விசாரணை நடக்கிறது என்ற நம்பிக்கையை மக்கள் மனதில் ஏற்படுத்த வேண்டும்.
இந்த வழக்கை பொறுத்தவரை உயர்ந்த பதவியில் உள்ள நபரின் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளாதால், மனுதாரர் அளித்த புகாரை லஞ்ச ஒழிப்பு துறையிடமிருந்து வேறு அமைப்புக்கு மாற்ற முடிவெடுக்கப்படுகிறது.
பொது வாழ்வில் அனைவரும் நேர்மையுடன் இருக்க வேண்டும். அரசியலில் இருப்பவர்கள் மீதான நேர்மையை நிரூபிக்கும் வகையில் வேறு விசாரணைக்கு உத்தரவிடுவதை வெறுப்பின் காரணமாக உத்தரவிடுவதாக கருதக்கூடாது.
உயர் பதவியில் இருக்கும் நபர் மீது தீவிரமான குற்றச்சாட்டு உள்ளதால் தானாக முன்வந்து, தன்னிச்சையாக விசாரிக்க கூடிய சுதந்திரமான விசாரணை அமைப்பிடம் ஒப்படைக்க வேண்டும். அப்போதுதான் சம்பந்தப்பட்ட நபரின் மீதான சந்தேகங்கள் கலைந்து நம்பிக்கை உண்டாகும்.

புகாரில் முகாந்திரம் உள்ளதா இல்லையா என்ற முடிவுக்கு தற்போதைய சூழ்நிலையில் வரமுடியாது. இந்த புகாரை லஞ்ச ஒழிப்புதுறை விசாரித்தால் முறையாக இருக்காது. புகாரை விசாரிக்கும் புலனாய்வு அமைப்பு முதல்வரின் கட்டுப்பாட்டிலேயே இருப்பதால் விசாரணை நேர்மையாக இருக்காது என்ற முடிவுக்கு வருகிறேன். அதனடிப்படையில், மனுதாரர் அளித்த புகாரை சிபிஐ விசாரிக்க உத்தரவிடப்படுகிறது.
மனுதாரர் அளித்த புகார் மனு, அதனடிப்படையில் மேற்கொண்ட விசாரணையின் அடிப்படையில் கிடைத்த ஆவண ஆதாரங்களை லஞ்ச ஒழிப்பு துறை இயக்குனர் ஒரு வாரத்தில் சென்னை சிபிஐ இணை இயக்குனரிடம் ஒப்படைக்க வேண்டும். ஆவணங்கள் கிடைத்தவுடன் ஆரம்பகட்ட விசாரணையை தொடங்கி அதை மூன்று மாதத்தில் முடிக்க வேண்டும்.
ஆரம்பகட்ட விசாரணையில் முகாந்திரம் இருந்தால் வழக்குப்பதிவு செய்து சட்டப்படியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
மனுதாரர் கூறும் குற்றச்சாட்டுகள் மீது எவ்வித கருத்தையும் தெரிவிக்க விரும்பவில்லை என்பதை மீண்டும் தெளிவு படுத்துகிறேன். வெளிப்படையான நேர்மையான விசாரணை நடப்பதை உறுதி செய்ய வேண்டும் என்ற நீதியின் மீதான அக்கறையுடன் இந்த உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது. இவ்வாறு நீதிபதி ஜெகதீஷ் சந்திரா பிறப்பித்த உத்தரவில் கூறப்பட்டிருக்கிறது.
இந்நிலையில், டெண்டர் விவகாரம் தொடர்பான சிபிஐ விசாரணையை எதிர்த்து மேல் முறையீடு செய்யவுள்ளோம் என அதிமுக தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக, சென்னை ராயப்பேட்டை தலைமை அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் பொன்னையன், அமைச்சர் ஜெயக்குமார் ஆகியோர் கூறியதாவது:
முதலமைச்சர் மீதான புகார் குறித்து சிபிஐ விசாரிக்க வேண்டும் என்ற சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வோம். நெடுஞ்சாலைத்துறை டெண்டர் வழங்கியதில் எந்த முறைகேடும் நடைபெறவில்லை. முதலமைச்சர் மீதான புகாரை விரைவுப்படுத்தவே எதிர்க்கட்சியினர் கோரிக்கை விடுத்திருந்தனர்.

லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கை முழுவதும் முடித்துவிட்டது. லஞ்ச ஒழிப்புத்துறை விசாரித்து முடித்துவிட்ட நிலையில் சிபிஐ விசாரிக்க உத்தரவிட்டது தவறு. நீதிமன்றத்தின் மீது நாங்கள் எந்த குற்றச்சாட்டையும் கூறவில்லை. 2009-ல் திமுக ஆட்சியில் சாலை பணிக்கு ஒரு கிலோ மீட்டருக்கு 33 கோடி ரூபாய் டெண்டர் விடப்பட்டுள்ளது. தற்போதைய அதிமுக ஆட்சியில் சாலை பணிக்கு ஒரு கிலோ மீட்டருக்கு 10 கோடி ரூபாய் மட்டுமே டெண்டர் விடப்பட்டுள்ளது. தற்போது டெண்டர் வழங்கப்பட்டுள்ள நிறுவனத்திற்கு, திமுக ஆட்சியில் 10-க்கும் மேற்பட்ட டெண்டர்கள் வழங்கப்பட்டுள்ளது.
நெடுஞ்சாலை ஒப்பந்த முறைகேட்டில் அப்போதைய திமுக அரசு ஈடுபட்டதற்கு ஆதாரம் உள்ளது. விரைவில் திமுக மீது வழக்கு தொடருவோம்’. இவ்வாறு அவர்கள் கூறினர்.

ஏற்கனவே குட்கா ஊழல் வழக்கில் தமிழக உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள், மத்திய கலால் அதிகாரிகள் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். 
விழுப்புரம் எஸ்.பி ஜெயகுமார் உள்ளிட்ட போலீஸ் அதிகாரிகளையும் சிபிஐ விசாரித்து வருகிறது. 
மேலும் உயர் போலீஸ் அதிகாரிகள், சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆகியோருக்கு அந்த வழக்கு நெருக்கடி கொடுக்கும் என தெரிகிறது.
குட்கா ஊழலுக்கு எதிராக முதலில் வருமான வரித்துறையினர்தான் களத்தில் இறங்கி நடவடிக்கையை ஆரம்பித்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 
அவர்கள் எடுத்துக் கொடுத்த ஆதாரங்கள் அடிப்படையில் சிபிஐ துருவி வருகிறது.
நெடுஞ்சாலைத்துறை ஊழலைப் பொறுத்தவரை கடந்த சில மாதங்களாகவே நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்தாரர்களை வருமான வரித்துறை தனது ரெய்டு மற்றும் விசாரணையால் உலுக்கிக் கொண்டிருக்கிறது. 
அதே விவகாரம் தற்போது நீதிமன்ற உத்தரவு மூலமாகவே சிபிஐ வசம் வந்து சேர்ந்திருக்கிறது. எனவே இந்த வழக்கையும் சிபிஐ சீரியஸாக விசாரிக்க ஆரம்பித்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எடப்பாடி பழனிசாமி உள்பட அதிமுக அமைச்சர்கள் பலரையுமே சிபிஐ தனது விசாரணை வளையத்திற்குள் கொண்டு வரும் வாய்ப்புகள் அதிகரித்துள்ளது .


சனி, 13 அக்டோபர், 2018

"மோ(ச)டி கேர்...?

தற்போது  மோடி *ஆயுஷ்மான் பாரத் - மோடிகேர்* திட்டத்தை ரொம்ப பெருமிதமாக அறிவித்ததும் அதை ஊடகங்களும் ,பாஜகவும்,ஜாலராக்களும் கைதட்டி வழி மொழிந்ததும் ,வானளாவ புகழ்ந்ததும்  ஞாபகமிருக்கும்.
இது போன்ற மருத்துவ காப்பீடு திட்டங்கள் வட மாநிலங்களுக்கு வேண்டுமானால் புதிதாக இருக்கலாம்.

இங்கே நாங்க தமிழ்நாட்டில் கலைஞர் இலவச மருத்துவ காப்பீடு திட்டம் கொடுத்து 12 ஆண்டுகள் ஆகிறது.
தென்னாட்டில்  கேரளா,  தெலங்கானா, ஆந்திரா விலும் ஒடிசா, பஞ்சாப் மாநிலங்களிலும் கலைஞரை முன்மாதிரியாகக் கொண்டு இத்திட்டங்கள் விரிவாக செயல்படுகின்றது.
மக்களுக்கு மருத்துவ வசதியை இலவசமாக செய்து வருகிறது.

ஆனால் மோடியின் திட்டம் இலவசமல்ல, பயன்பெற விரும்பும் மக்கள் பிரிமீயம் கட்டணம் .தனியார் காப்பீடு நிறுவனங்கள் போன்றே காசு செலுத்திவிட்டு பெரும் மருத்துவ காப்பீட்டு திட்டம்தான் இந்த மோடி அறிவித்தத் திட்டம்.


தற்போது இலவச மருத்துவ காப்பீடு திட்டத்தின் முன்னோடியான திமுக கொண்டு வந்த ஏழை மக்கள் பெரிதும் பயன்பெற்று வந்த இலவச காப்பீடு திட்டத்தை ரத்து செய்து எடப்பாடி பழனிச்சாமி  மத்தியரசின் மோடி கேர் திட்டத்தில்  
தமிழ்நாடு 
இணைவதாக அறிவித்துள்ளார் .

அப்படியென்ன அந்த மோடி கேர் கலைஞர் காப்பீட்டு திட்டத்தை விட சிறந்தது என்ற ஆராயப்போனால் அதிர்ச்சி மேல் அதிர்ச்சி.

பிரதமர் மோடி அறிவித்த தேசிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் யாருக்குமே உதவாத, ஒரு மோசடி திட்டம் என்பது தெரிய வந்திருக்கிறது.

ஓராண்டுக்கு ஒரு குடும்பத்துக்கு 5 லட்சம் வரை மருத்துவக் காப்பீடு வழங்குவதாக மோடி பெருமையாக அறிவிச்சிருக்கார். 
திட்டத்தை வெளிப்படையாக...டாம்பீகமாக அறிவித்த மோடி .அந்த திட்டத்தில் மக்கள் இணைவதற்கு  விதித்திருக்கும் நிபந்தனைகளை பகிரங்கமாக அறிவிக்கவில்லை.திட்டத்தில் நீங்கள் சேர முயன்றால் பல 
ரகசியமாக அரசாணையில் உள்ள பல நிபந்தனைகள் உங்களை அதிரவைக்கும்.

 குடும்ப மாத வருமானம் ரூ.10 ஆயிரத்துக்கு மேல் இருக்கக்கூடாது.!

 ஃபிரிட்ஜ், பைக், கார் வைத்திருக்கக்கூடாது.!

 லேண்ட்லைன் போன் வைத்திருக்கூடாது.!

 வீட்டில் 3 அறைகள் இருக்கக்கூடாது.!

 வீட்டில் சிமெண்ட் சுவர், கான்கிரீட் கூரை இருக்கக்கூடாது.!

 மீன்பிடி படகு, டிராக்டர் அல்லது 3 சக்கர உழவு எந்திரம் இருக்கக்கூடாது.!

 விவசாயிகள் கிசான் கடன் அட்டையின் மதிப்பு ரூ.50 ஆயிரத்துக்கும் அதிகமாக வைத்திருக்கக்கூடாது.!

 அரசு ஊழியராக இருக்கக்கூடாது.

 வருமானவரி செலுத்துவோர், வர்த்தக வரி செலுத்துவோர், விவசாயம் சாராத நிறுவனங்கள் நடத்துவோர் திட்டத்தில் பங்கேற்க முடியாது.!

 2.5 ஏக்கருக்கு அதிகமான பாசன நிலம், பாசன உபகரணங்கள்
 5 ஏக்கர் அல்லது அதிகமான பாசன நிலத்தை 2 அல்லது அதற்கு மேலாக பயிர் பருவங்களில் வைத்திருப்போர்,
 குறைந்தபட்சம் 7.5 ஏக்கர் நிலம்
 பாசன உபகரணங்கள் வைத்திருப்போர் தேசிய மருத்துவக் காப்பீட்டுக்குள் வரமாட்டார்கள்.!
அப்புறம் யாருக்குதான் இந்தத் திட்டத்தினால் பலன் கிடைக்கும் என்றால், ஒருவருக்கும் இல்லை என்பதே பதில்.

இதற்கெல்லாம் பக்தர்களிடம் நேரடி பதிலிருக்காது. 

2019ல் எங்களை வென்றுகாட்டுங்கள் என்ற வாய்சவடால் தான் வரும். எதற்கு? 
இவர்கள் செய்த எல்லா அலங்கோலங்களையும் சரி செய்யவா?

வடக்கு முட்டாப்புண்ணாக்குகள் மதவெறியின் காரணமாக தூக்கிப்பிடிக்கும் பாஜகவை தெற்கு சுமக்காது என்பது நமக்கு நல்லா தெரியும்.

அதனால வடக்கில் அவனவன் இந்த அரசாங்கத்தை நம்பி நடுரோட்டுக்கு வரட்டும். 
நாம அமைதியா ஓரம் உட்கார்ந்து பார்த்து ரசிப்போம்.  
மோடி தலைமையில் வந்த இப்பொழுது “ஆயுஷ்மான் பாரத்” மருத்துவ காப்பீடு திட்டத்தை கேரளா, ஒடிசா, பஞ்சாப், தெலங்கானா, ஆந்திரா ஆகிய ஐந்து மாநிலங்கள் நிராகரித்துவிட்டன. 

இதற்கு காரணமாக அம்மாநிலங்களின் அரசுகள்சொல்வது எங்கள் மாநிலங்களில் இருக்கும் மருத்துவ காப்பீடு திட்டங்கள் மோடி அறிவித்த திட்டத்தைவிட பல வகைகளில் மேலானது என்பதாகும்.
கலைஞர் காப்பீடு போன்ற திட்டங்கள் இல்லாத மாநிலங்கள்தான் இதை ஏற்றுக்கொண்டுள்ளது.
கலைஞர் காப்பீடு போன்ற இலவச மருத்துவ திட்டங்களுக்கு மக்கள் ஒரு பைசா கூட கையிலிருந்து செலுத்தி உறுப்பினராக வேண்டியதில்லை.
ஆனால் இந்த மோடி கேர் திட்டத்துக்கு பயனர்கள் உறுப்பினராக பணம் செலுத்தியாக  வேண்டும்.

ஆனால் தமிழகத்தில் ஏற்கனவே இருந்த முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டம் மோடி அறிவித்துள்ள இந்த திட்டத்தைவிட பன்மடங்கு சிறந்த திட்டமாக இருந்த நிலையில் தற்போது சற்றும் அருகதையின்றி ஆட்சி அதிகாரத்தை ஆக்கிரமித்திருக்கும், மோடி அசைக்கும்படி ஆடும் கைப்பாவைகளாம் கோழை எடுபுடி கொத்தடிமைகள் அரசு மோடி அறிவித்துள்ள இந்த திட்டத்தில் தமிழகத்தை இணைத்து தமிழக மக்களுக்கு பெருத்த துரோகத்தை இழைத்துவிட்டன.
==========================================================================================
ன்று,
அக்டோபர்-13.
உலக  இயற்கை பேரிடர் தினம்
 • தாய்லாந்து தேசிய காவல்துறை தினம்
 • உலக பொது  நேரம் கணக்கிடும் இடமாக கிறீனிச் தேர்வு செய்யப்பட்டது(1884)
 • வெள்ளை மாளிகைக்கான அடிக்கல் வாஷிங்டனில் இடப்பட்டது(1792)
 • துருக்கி தலைநகர் இஸ்தான்புல் நகரில் இருந்து அங்காராவுக்கு மாற்றப்பட்டது(1923)
==========================================================================================

அடுத்த 48 மணி நேரத்திற்கு உலகம் முழுவதும் இணையத்தளங்கள்  முடங்குகிறது!இணையதளம் இயங்குவதற்கு அடிப்படையாக இருக்கும் முக்கிய சர்வரில் பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால், 
அடுத்த 48 மணி  நேரத்திற்கு உலகம் முழுவதும் இணையதள சேவையில் சிக்கல் ஏற்படலாம் என ரஷ்யா டுடே செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.
===========================================================================================
"உசுர எடுக்காம கீழ இறங்குயா..
அது வெளிநாட்டுக்கெல்லாம் போகாது.. இதுல..இஞ்சினே இல்ல..." 


நார்த் சவுத் உதவித்தொகை


l
அமெரிக்காவைச் சேர்ந்த நார்த் சவுத் பவுண்டேஷன் (என்.எஸ்.எப்.,) பொருளாதார நிலையில் பின்தங்கியுள்ள இளநிலை பட்டம் பெற விரும்பும் இந்திய மாணவர்களுக்காக உதவித்தொகைகளை வழங்குகிறது.
நார்த் சவுத் பௌண்டேஷன்அமெரிக்கவாழ் இந்திய வம்சாவளிகளுக்கு ‘ஸ்பெல்லிங் பி’, ‘வக்காபிலரி பி’, ‘ஜியோகிராபி பி’ போன்ற போட்டிகள் நடத்தி, அதில் திரட்டப்படும்  நிதியை உயர்கல்வி பயில விரும்பும் இந்திய மாணவர்களுக்கு உதவித்தொகையாக வழங்குகிறது, நார்த் சவுத் பவுண்டேஷன்.
படிப்புகள்:இளநிலை - மருத்துவம், பொறியியல், பல் மருத்துவம், கால்நடை மருத்துவம், நர்சிங்.
டிப்ளமா - பொறியியல் மற்றும் வேளாண்மை
ஸ்காலர்ஷிப் எண்ணிக்கைஆயிரத்திற்கும் அதிகமான தகுதியான மாணவர்களுக்கு இந்த உதவித்தொகை வழங்கப்படுகிறது.
தகுதிகள்:
10ம், 12ம் வகுப்பு மற்றும் சி.இ.டி.,/ஜே.இ.டி., போன்ற நுழைவுத்தேர்வு தரவரிசை பட்டியலில் முதல் 10 சதவீதத்திற்குள்ளான இடத்தை பெற்றிருக்க வேண்டும். 
அரசு அல்லது அரசு அங்கிகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் சேர்க்கை பெற்றிருப்பது அவசியம். வேறு எந்த உதவித்தொகை திட்டத்திற்கும் தேர்வாகியிருக்கக் கூடாது. 
குறிப்பாகக் குடும்பத்தின் மொத்த ஆண்டு வருமானம் 1 லட்சம் ரூபாய்க்கு மேல் இருக்கக் கூடாது. மேலும், பட்டப்படிப்பு படிக்கும் காலங்களிலும் வருகின்ற தேர்வுகளில் நல்ல மதிப்பெண்கள் பெற வேண்டியது முக்கியம்.
உதவித்தொகை:மருத்துவ மாணவர்களுக்கு ஆண்டிற்கு 25,000 ரூபாய்
பொறியியல் மாணவர்களுக்கு ஆண்டிற்கு 20,000 ரூபாய்
பல் மருத்துவம் மற்றும் கால்நடை மருத்துவ மாணவர்களுக்கு ஆண்டிற்கு 20,000 ரூபாய்
நர்ஸிக் மாணவர்களுக்கு ஆண்டிற்கு 8,000 ரூபாய்
பொறியியல் டிப்ளமா மாணவர்களுக்கு ஆண்டிற்கு 8,000 ரூபாய்
வேளாண் டிப்ளமா மாணவர்களுக்கு ஆண்டிற்கு 8,000 ரூபாய்
தேர்வு முறை:
மாணவர்களின் மதிப்பெண் மற்றும் குடும்பத்தின் பொருளாதார நிலையின் அடிப்படையிலேயே தேர்வு முறை இருக்கும். 
குறிப்பாக அரசுப் பள்ளி அல்லது கல்லூரி மாணவர்களுக்கு மற்றும் தரவரிசை பட்டியலில் முன்னிலை பெற்ற மாணவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது. 
இறுதியாக, நேர்முகத் தேர்வின் அடிப்படையில் உதவித்தொகைக்கு தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்க :-என்.எஸ்.எப்., உதவித்தொகைக்கான அதிகாரப்பூர்வ இணையத்தளம் www.northsouth.org, மூலம் மாணவர்கள் பதிவு செய்ய வேண்டும்.


வெள்ளி, 12 அக்டோபர், 2018

‘குஜராத் மாடலின்’ கோர வடிவம்

பிரதமர் நரேந்திர மோடியாலும், பாஜகவினராலும் மிகவும் தம்பட்டம் அடிக்கப்பட்ட ‘குஜராத்மாடல்’,

 பீகார் மற்றும் உத்தரப்பிரதேச மாநிலங்களிலிருந்து புலம்பெயர்ந்து வந்து வேலைகளைச் செய்துகொண்டிருந்த தொழிலாளர்கள் குஜராத்திலிருந்து வெளியேறிச் சென்றுகொண்டிருப்பதன் மூலமாக மீண்டும் ஒருமுறை தன் கோர வடிவத்தை மக்கள் மத்தியில் தோலுரித்துக் காட்டிக் கொண்டிருக்கிறது. 

அவர்கள் மீது ஏவப்படும் வன்முறை வெறியாட்டங்களின் காரணமாகவும், அவர்களுக்கெதிரான பிரச்சாரங்கள் மூலமாகவும் மோடியின் ‘குஜராத் மாடல்’ எந்த அளவிற்கு சமூக ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் படுதோல்வி அடைந்துள்ளது என்பதைஇன்னும் முழுமையாக வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது. 
குஜராத்திலிருந்து அச்சத்துடன் மீண்டும் தங்கள் மாநிலங்களுக்குத் திரும்பும் தொழிலாளர்களில் மிகப்பெரும்பாலானவர்கள் பீகார் மற்றும் உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள். 

உண்மையில் இவர்கள் அனைவரும், 2014 மக்களவைத் தேர்தலின்போது மோடிக்காகவும் பாஜகவிற்காகவும் ‘குஜராத் மடலை’ப் பிரச்சாரம் செய்வதற்காக குஜராத் வந்தவர்கள்.புலம்பெயர்ந்து வந்த தொழிலாளர்கள் தற்போதைய வன்முறை வெறியாட்டங்களின் விளைவாக, வெளியேறுவது என்பது, எப்படித் தொடங்கியது? 

குஜராத்தின் சபர்கந்தா மாவட்டத்தில் ஹிம்மத்நகர் அருகில் 14 மாதப் பெண்குழந்தை வன்புணர்வுக் கொடுமைக்கு ஆளானது. 
இதற்கு பீகாரைச் சேர்ந்த புலம்பெயர்ந்து வந்த தொழிலாளி ஒருவர்தான் காரணம் என்றுகுற்றம் சாட்டப்பட்டு, “அயலார்களை விரட்டியடிப்போம்” என்று வெறுப்புப் பிரச்சாரம் கட்டவிழ்த்துவிடப்பட்டதுதான் காரணமாகும்.

கடந்த நான்கு நாட்களாக, புலம் பெயர்ந்து வந்தஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வட குஜராத்திலிருந்து, ரயில்கள், பேருந்துகள், லாரிகள் என எந்தவிதமானபோக்குவரத்து கிடைத்தாலும் அதன்மூலம் தங்கள் ஊரை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறார்கள். 

மீண்டும்தங்கள் ஊருக்குத் திரும்பிச் செல்ல முடியாத நிலையில் உள்ள ஒருசிலர் மட்டும் வஸ்த்ரால் என்னுமிடத்தில் உத்தர்பாரதிய விகாஸ் பரிஷத் என்னும் அமைப்பின் தொண்டர்களால் அமைக்கப்பட்டுள்ள முகாமில் தங்க வைக்கப்பட்டிருக்கிறார்கள்.குஜராத் காவல்துறைத் தலைவர் சிவானந்த் ஜா, செய்தியாளரிடம் கூறுகையில், வன்முறையாளர்களுக்கு எதிராக இதுவரை 42 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 342 பேர் கைது செய்யப்பட்டிருப்பதாகக் கூறினார்.

தொழிலாளர்கள் நவராத்திரி, தீபாவளி மற்றும் தங்கள்மாநிலத்தில் நடைபெறும் சில பண்டிகைகளைக் கொண்டாடுவதற்காகத்தான் திரும்பிக் கொண்டிருக்கிறார்கள் என்றும் அவர் கூறிக் கொண்டார், அது பொய் என்பது அவருக்கே தெரியும்.

குஜராத் வளர்ச்சி என்னும் மாயை

குஜராத் மாநிலத்தில் சமீப காலங்களில் வன்புணர்வுக் கொடுமைகள் ஏராளமாக அரங்கேறியிருக்கின்றன. 
எனினும் இப்போது ஒரு குழந்தை வன்புணர்வுக் கொடுமைக்கு ஆளாகியிருக்கிறது.கடந்த சில ஆண்டுகளாகவே, பிரதமர் நரேந்திர மோடியும், பாஜக தலைவர் அமித் ஷாவும் ‘குஜராத் மாடலை’ இந்தியா முழுமைக்கும் கொண்டுசெல்ல வேண்டும் என்று முயற்சிகளை மேற்கொண்டு வந்தார்கள். 


பாஜகவின் வெறுப்பு அரசியலின் ஓர் அங்கமாக, குஜராத்திற்கு புலம்பெயர்ந்து வந்தவர்களுக்கு எதிராகவும்பிரச்சாரத்தை மேற்கொண்டு வந்தவர்கள் வேலையில்லாஇளைஞர்கள்தான். ஆனால் அவர்களுக்கும்கூட கவுரவமான வேலை எதுவும் கிடைத்திடவில்லை. 

இவர்கள் தங்கள்கோபத்தை, இதற்குக் காரணமான ஆட்சியாளர்களுக்கு எதிராகத் திருப்பாமல், எவ்விதத்திலும் காரணமற்ற, புலம்பெயர் தொழிலாளர்களுக்கு எதிராகத் திருப்பி இருக்கிறார்கள். 

இவ்வாறாவது தங்களுக்கு வேலை கிடைக்கலாம் என நம்புகிறார்கள்.

அரசாங்கத்திடமிருந்து பல்வேறு சலுகைகள் பெற்றுநிறுவனங்களை அமைத்திடும் தனியார் தங்கள் நிறுவனங்களில் ஒரு குறிப்பிட்ட அளவு – அதாவது 80 சதவீதம் - உள்ளூர் ஆட்களுக்கு வேலை அளித்திட வேண்டும் என்பதுமாகும். 
இதனை அவர்கள் நிறைவேற்றத் தவறியதும் இப்போது ஏற்பட்டிருக்கிற பிரச்சனைக்குக் காரணமாகும்.

இந்த அம்சத்தை, காங்கிரஸ் எம்எல்ஏ அல்பேஷ் தாகூர் என்பவர் சமீபத்தில் பேசியிருக்கிறார். இதனைத் தொடர்ந்து இவர்தான் வன்முறையைத் தூண்டிவிடுகிறார் என்று தற்போது சமூக வலைத்தளங்களில் பிரச்சாரம் முடுக்கிவிடப்பட்டிருக்கிறது.
குஜராத்தில் நடைபெற்றுவரும் சம்பவங்கள் குறித்து சமூக விஞ்ஞானியும், எழுத்தாளருமான அச்யுத் யக்னிக்கூறுகையில், “இதன்மூலம், அரசாங்கத்தின் பொருளாதாரக் கொள்கையின் தோல்வி மிகவும் தெளிவாகத் தெரிகிறது. 

வேலையற்ற இளைஞர்களின் பிரச்சனைகளைத் தீர்த்திட, அரசாங்கம் தவறிவிட்டது. மாநிலத்தில் மிகவும்வலுவாக உள்ள தாகூர்கள் என்னும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரில்கூட இன்றைய தினம் வேலையின்மை மிகப்பெரிய அளவில் காணப்படுகிறது” என்கிறார்.
அவர் மேலும் கூறுகையில், “சிறிய அளவில் நிலம்வைத்திருந்த விவசாயிகள், ‘குஜராத் மாடல் என்பதன்கீழ் வளர்ச்சி’ என்கிற மாயைக்குப் பலியாகி, தங்கள் நிலங்களை விற்றுவிட்டு, தொழிலாளியாக மாறத் தயாரானார்கள்.

எனினும், பிற மாநிலங்களிலிருந்து வந்த தொழிலாளர்கள் எந்த வேலையையும், எந்த சம்பளத்திற்கும் செய்யத்தயாராய் இருந்த நிலையில், நடுத்தர மற்றும் உயர் நடுத்தர வகுப்பைச் சேர்ந்த உள்ளூர்வாசிகளால் அவர்களுடன் போட்டிபோட முடியவில்லை. 
இதுவும் பிற மாநிலத்தவருக்கு எதிராக உள்ளூர்வாசிகளுக்கு கோபம் ஏற்படுவதற்குக் காரணமாகும்” என்கிறார்.


வெறுப்பு அரசியல்

குஜராத் மாநிலத்தில் இப்போது ஏற்பட்டிருக்கும் மோசமான நிலைமைக்கு காரணம் ‘குஜராத் மாடலின்’ பொருளாதாரத் தோல்வி மட்டுமல்ல; மாறாக, கடந்த முப்பதாண்டு காலமாக இந்துத்துவா அமைப்புகளும், பாஜகவும் அங்கு முஸ்லிம்கள் உட்பட மதச் சிறுபான்மையினர், தலித்துகள் மற்றும் இப்போது புலம்பெயர்ந்து வந்துள்ளஅயல் மாநிலங்களைச் சேர்ந்தவர்களுக்கு எதிராக மேற்கொண்டுவந்த வெறுப்பு அரசியல் பிரச்சாரமும் காரணங்களாகும். 
இவ்வாறான ‘வெறுப்பு அரசியல்’ என்னும் பூதம்தான் குஜராத்தை இப்போது ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கிறது.

“வெறுப்பு அரசியல் இப்போது புதியதொரு வடிவத்தில் வந்திருக்கிறது. 
1980களில் இட ஒதுக்கீட்டிற்கு எதிராக உருவான கிளர்ச்சிப் போராட்டங்கள், 
1985வாக்கில் மிகவும் சூழ்ச்சிகரமான முறையில் வகுப்புவாதமோதல்களாக மாற்றப்பட்டன. 

பின்னர் 1986-87 மற்றும்1990-92களில் ராம ஜென்மபூமி-பாபர் மசூதி பிரச்சனையைத் தொடர்ந்து முஸ்லிம்களுக்கு எதிரான மதவெறி வன்மம் நிறைந்த சம்பவங்களாக மாற்றமடைந்தன. 
பின்னர் 2002 கலவரங்கள் வெடித்தன,” என்று யாக்னிக் விளக்குகிறார்.

2002 கலவரங்களுக்கு முன்னர், 1998களில் தெற்கு குஜராத்தின் பழங்குடியினர் வாழும் பகுதிகளில் கிறித்துவர்களுக்கு எதிரான வன்முறை வெறியாட்டங்கள் தொடக்கி வைக்கப்பட்டன. 
இவர்களுடைய வெறுப்பு அரசியலானது கடந்த இரண்டு ஆண்டுகளாக, தலித்துகளுக்கு எதிராக விஸ்வரூபம் எடுத்திருப்பதை நன்குகாண முடிகிறது. 

இதற்கு உனா சம்பவம் முக்கிய எடுத்துக்காட்டாகும். இப்போது பிற மாநிலத்தவர்களை “வெளிநபர்கள்” என்று முத்திரை குத்துகிற பிரச்சாரமாக உருவெடுத்திருக்கிறது.
‘குஜராத் மாடலின்’ இருண்ட பக்கம் இப்போது தெளிவாகத் தெரியத் தொடங்கிவிட்டது. விவசாய நெருக்கடி, வேலையின்மை, வெறுப்பு அரசியல் ஆகியவற்றால் குஜராத் பீடிக்கப்பட்டிருக்கிறது. 

இதரபகுதி மக்களுக்கு இது ஓர் எச்சரிக்கை என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். அவ்வாறில்லாது, ‘குஜராத் மாடலை’ இன்னமும் மக்கள் நம்பினார்கள் என்றால், 2019 மக்களவைத் தேர்தலுக்கு முன்னர் இதுபோன்ற பதற்ற நிலைமைகள் இன்னும் உருவாக்கப்படக்கூடும்.
நன்றி: தி ஒயர் இணைய இதழ் 
தமிழில்:ச.வீரமணி
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
பாஜக அடிமை பினாமி அதிமுக அரசின் நிலக்கரி ஊழல்..
Coal India , எனப்படும் அரசு நிறுவனத்தில் ஒரு டன் நிலக்கரியின் விலை : டன்னுக்கு 2,000 ரூபாய்
அதானி நிறுவனத்தில் ஒரு டன் நிலக்கரியின் விலை : டன்னுக்கு 5,000 ரூபாய் .
அதாவது, அதிமுக அரசு ஒரு டன்னுக்கு 3,000 ரூபாய் அதிகமாக அதானி நிறுவனத்திற்கு கொடுக்க ஒப்பந்தம் போடுகிறது.
இது குறித்து பேச வேண்டிய, நம்முடைய முகநூல்  போராளிகள் அனைவரும் வைரமுத்துவை நோண்டிக்கொண்டே இறக்கிறார்கள்.
Don Vetrio Selvini
========================================================================================
ன்று,
அக்டோபர்-12.


 • ரிச்சர்ட் ஜான்சன் என்பவர் தமிழகத்தின் முதல் செய்திப்பத்திரிக்கையான மெட்ராஸ் கூரியர் என்ற வார இதழை வெளியிட்டார்(1785)
 • கொலம்பஸ் தினம் முதன் முறையாக நியூயார்க்கில் கொண்டாடப்பட்டது(1792)
 • சார்லஸ் மேகின்டொஸ், முதல் ரெயின்கோட் விற்பனை 
=========================================================================================

பாஜக  தடையை உடைத்த 

"தேசர்கதா" !

திரிபுரா மாநிலத்தில் 40 ஆண்டுகளாக வெளிவந்துகொண்டிருந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பத்திரிகை தேசர்கதா. நாளிதழாக வெளிவந்துகொண்டிருந்த அந்த பத்திரிகையை புதிதாக அங்கு ஆட்சிப் பொறுப்பேற்ற பாஜக அரசு முடக்க முனைந்தது.
 அந்தப் பத்திரிகை, பத்திரிகைகள் பதிவு விதிகளை மீறியிருப்பதாக பொய்க்காரணம் காட்டி, பத்திரிகையின் பதிவை நீக்கி  மாவட்ட ஆட்சியர் மூலமாக ஆணை  பிறப்பிக்கச் செய்தது.

 
இதையடுத்து கடந்த 10 நாட்களாக அந்த பத்திரிகை வெளிவரவில்லை. 

இச்செய்தியை நாம் ஏற்கனவே வெளியிட்டோம்.

மாவட்ட ஆட்சியரின் ஆணையை  எதிர்த்து திரிபுரா உயர்நீதிமன்றத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வழக்குத் தொடரப்பட்டது. 

வழக்கை விசாரித்த நீதிமன்றம் மாவட்ட ஆட்சியரின்ஆணையை தடை செய்து அதை நீக்கி தீர்ப்பு வழங்கியது.
 அதைத் தொடர்ந்து அந்த பத்திரிகை இன்று காலை வெளியானது.
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

மாசு கட்டுப்பாட்டு வாரியமா?

மாசு உருவாக்க  வாரியமா??


தமிழகத்தின் நெற்களஞ்சியம் என்று அழைக்கப்படும் காவிரி டெல்டா பகுதியை அழிக்க மத்தியஅரசும் தனியார் பெரு நிறுவனங்களும் துடித்துக்கொண்டிருக்கின்றன.

ஹைட்ரோ கார்பன், பாறையிடுக்கு வாயு (ஷேல்,கேஸ்) எடுத்தல் போன்றநாசகரமான திட்டங்களை இப்பகுதியில்அமல்படுத்த தொடர்ச்சியாக முயற்சித்து வருகின்றன. 

தமிழகத்தில் இரண்டு இடங்களில்ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கான அனுமதி,ஸ்டெர்லைட் ஆலையைக் கொண்டு முத்துநகரைநாசமாக்கிய வேதாந்தா குழுமத்திற்கு மத்திய அரசால் வழங்கப்பட்டுள்ளது. 
இந்நிலையில்தான், தமிழகத்தை சுற்றுச்சூழல்மாசுவில் இருந்து பாதுகாக்கவேண்டிய மாநிலமாசுகட்டுப்பாட்டு வாரியம் மோசமான கோரிக்கையை மத்திய அரசிடம் விடுத்துள்ளது. 

மிகப்பெரிய திட்டங்களை தமிழகத்தில் அமல்படுத்தும் சமயத்தில் அதுகுறித்து மக்களிடம் கருத்துக்கேட்பு கூட்டம் நடத்தும் போது, ஏதாவது பிரச்சனை ஏற்பட்டு அக்கூட்டம் தடைபட்டால் அடுத்த கூட்டத்தை நடத்துவதில் இருந்துவிலக்கு அளிக்கவேண்டும் என்பதுதான் அந்தகோரிக்கை.இதன் அர்த்தம் என்னவென்றால் மீண்டும் கூட்டம் நடத்தாமல் சம்பந்தப்பட்ட திட்டத்திற்கு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் தானாக அனுமதி அளிக்கவேண்டும் என்பதுதான்.


புதுதில்லியில் கடந்த செவ்வாய்க்கிழமை இதுபோன்ற பல கோரிக்கைகளை மத்திய சுற்றுச் சூழல் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தனிடம் மாநில சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பண்ணன் அளித்துள்ளார். 

பொது சுத்திகரிப்பு நிலையம் அமைப்பது, நகராட்சிக்கழிவுகள் மேலாண்மை வசதி, அபாயகரமானகழிவுகளை பராமரிக்கும் மையம், எண்ணெய்மற்றும் இயற்கை எரிவாயுயை கொண்டு செல்லகுழாய் பதித்தல் போன்ற எண்ணற்ற திட்டங்களை அமல்படுத்த மத்திய அரசு உடனடியாகஇதில் தலையிட வேண்டும் என்று அந்தமனுவில் கோரப்பட்டுள்ளது. 

இது ஏதோ இந்தமாநில அரசின் கோரிக்கை போன்று தெரியவில்லை. ஸ்டெர்லைட் ஆலை, சேலம்-சென்னைஎட்டுவழிச்சாலை, ஹைட்ரோ கார்பன், விவசாய நிலங்களில் எரிவாயுக் குழாய் பதித்தல்போன்ற திட்டங்களுக்கு தமிழக மக்களிடையே கடும்எதிர்ப்பு உள்ளது. 
களத்திலும் நீதிமன்றங்களிலும் மக்கள் தொடர்ச்சியாக போராடி வருகிறார்கள். 

நெடுவாசல், கதிராமங்கலம் போன்ற இடங்களில் ஹைட்ரோ கார்பன்எடுக்க கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால் பெருநிறுவனங்கள்தங்களது கொள்ளை லாபத்திற்காக தமிழகத்தின் இயற்கையை எளிதாக சூறையாடமுடியவில்லை. 
எனவே தான் மாநில அரசை ஒருகருவியாக பயன்படுத்தி இந்த கோரிக்கை எழுப்பப்படுகிறதோ என்று எண்ணத்தோன்றுகிறது. 

மக்களை பாதிக்கும் திட்டங்களை தடையில்லாமல் அமல்படுத்த மத்திய அரசிடம் இவர்கள் அனுமதி கோருகிறார்கள். 
வேண்டுமென்றே விஷமிகளை வைத்து மக்கள் மீதுதாக்குதல் நடத்தி கருத்துக் கேட்புகூட்டங்களை கலைத்த வரலாறும் உண்டு. 

எனவே மாநில அரசின் இந்த ஜனநாயக விரோதமான மக்கள் விரோதமான ஆபத்தான யோசனை துவக்க நிலையிலேயே நிராகரிக்கப்பட வேண்டியதாகும்.
==========================================================================================