ஞாயிறு, 30 டிசம்பர், 2018

நம்மைக் கடந்த அரசியல்.

  2018ல்  தமிழக அரசியல் நிகழ்வுகள்.!
அவசர நிலை'-யின்போது மிசா சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்ட காலத்துக்கு முன்பிருந்தே கலைஞர்  மகனான மு.க.ஸ்டாலின், திமுக மூலம் தீவிர அரசியலில் ஈடுபட்டு வந்தார்.

உண்மையிலேயே  கடந்த அரை நூற்றாண்டில் ஸ்டாலினுக்கு நிகராக திமுக-வில் உழைத்தவர்கள் மிகச் சொற்பமானவர்களே எனலாம். 

இருந்தும், குறைந்தபட்சம் ஓராண்டுக்கு முன்னராவது கிடைத்திருக்க வேண்டிய ‘தலைவர்' பதவி, ஸ்டாலினுக்கு இந்த ஆண்டு ஆகஸ்ட், 28-ல்தான் கிடைத்தது. 

இவ்வளவு காலம் கழித்து வந்தாலும், ஸ்டாலின் இனி ஆற்றப் போகும் செயல் தான், தலைவர் பதவிக்கு அவர் தகுதியானவரா என்பதை எடுத்துக் காட்டும். 

மு.க.அழகிரி-யை இடம் தெரியாமல் ஒதுங்க  வைத்ததன் மூலம் தனது தலைமைக்கான பணியை சிறப்பாக செய்துள்ளார் ஸ்டாலின்.
''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''

 திரைத் துறையில் 50 ஆண்டுகளுக்கும் மேல் முடிசூடா மன்னனாக வலம் வந்த கமல்ஹாசன், 
2017 ஆரம்பம் முதல் அதிமுக அரசை, ட்விட்டர் மூலம் விமர்சிக்க ஆரம்பித்தார்.

 ‘இவர் வெறும் ட்விட்டர் அரசியல்வாதி' என்று வெறுப்பேற்றப்பட்ட போது, ‘அரசியல் கட்சிகளைத் திருத்த நான் சொந்தக் கட்சித் தொடங்கவும் தயங்கமாட்டேன்' என்று எச்சரித்தார். 

சொன்னபடியே, இந்த ஆண்டு பிப்ரவரி, 21-ல் ‘மக்கள் நீதி மய்யம்' கட்சியைத் தொடங்கினார். 

ஜெயலலிதாவும் கருணாநிதியும் அரசியலில் கோலோச்சிக் கொண்டிருந்தபோது நடிகராக மட்டுமிருந்த கமல், அதற்கு பின்னர் ஏற்பட்ட வெற்றிடம் காரணமாக அரசியலிலும் எதிர் நீச்சல் போட வந்துள்ளார்.

 கட்சி ஆரம்பித்து ஓராண்டு நிறைவடையப் போகும் நிலையிலும் இன்றுவரை கொள்கை, கோட்பாடு  பேசாமல் மக்களைதேடிச்சென்று  வருகிறார். 
கஜா புயல் பாதிப்பில் உள்ள மக்களை மூன்று முறை அப்பகுதிகளை நேரில் சென்று பார்வையிட்டு உதவிகள் செய்தது மக்களிடையே பலத்த ஆதரவைத்தந்துள்ளது.

இவருடன் திரைத்துறையிலும் ,அரசியல் துறையிலும் எதிரே இருக்கும் நடிகர் ரஜினிகாந்த் கட்சி ஆரம்பிக்கப்போவதாக கூறிக்கொண்டே இருக்கிறார்.தேர்தலில் நிற்போம் என்று அது ஆன்மிக அரசியல் என்று சொல்லியுள்ள ரஜினி இதுவரை கஜா புயல் பாதிப்படைந்த மக்களை சந்திக்கவே இல்லை.

அதற்கு மாறாக உதய்ப்பூர் சென்று அம்பானி மகள் தீர்மானத்தில் கலந்து கொண்டதும்,பெங்களூர் சென்று கன்னட நடிகர் அம்ரிஷ் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டதும் நடிகர் ரஜினிகாந்த் மீது தமிழக மக்களுக்கு ஒரு அதிருப்தியை தந்துள்ளது உண்மை.

அவரின் கடந்த கால அணுகுமுறைகளை வைத்து பல விமர்சனங்கள் முன் வைக்கப்பட்டாலும், இனி வரும் காலங்களில் களத்தில் கமலின் செயல்பாடுகள்தான் என்றென்றைக்கும் நிலைத்து நிற்கும்.
''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''


வாழும்போதும் சரி வாழ்க்கைக்குப் பிறகும் சரி மக்கள் மட்டுமல்ல அரசியல் தலைவர்களும் அவரது கட்சியினரும்  புரிந்த கொள்ளமுடியாத மர்ம மங்கையாக இருந்தவர் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா.

 2016, டிசம்பர் 5 ஆம் தேதி சிகிச்சைப் பலனில்லாமல் சென்னை, அப்போலோ மருத்துவமனையில் ஜெயலலிதா மறைந்த பின்னர், அவர் தொடர்பான எந்த விவரமும் பொது வெளியில் கிடைக்கவில்லை. 


ஒரு பக்கம் சசிகலாவுக்கு எதிராக போர்க் கொடி தூக்கிய ஓ.பன்னீர்செல்வம், ‘ஜெயலலிதா மரணம் குறித்து நீதி விசாரணை வேண்டும்' என்று கூறி பகீர் கிளப்பினார். 
இந்தக் கருத்தைச் சொல்லும்போது ஓபிஎஸ்-தான் தமிழக முதல்வர் என்பது குறிப்பிடத்தக்கது. இன்றுவரை தமிழக அரசு சார்பில் அமைத்த ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் ஜெ., மரணம் தொடர்பான விசாரணையை முடிக்கவில்லை.


ஆர்.கே.நகர் இடைத் தேர்தல் நடக்க ஒரு நாள் இருந்த நிலையில் தினகரன் ஆதரவாளரான வெற்றிவேல், மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுக் கொண்டிருந்த ஜெயலலிதாவின் வீடியோ காட்சிகளை வெளியிட்டார். 

அதைத் தொடர்ந்து இந்த ஆண்டு ஜெயலலிதா, அப்போலோ மருத்துவர்களிடம் பேசும் ஒரு ஆடியோ பதிவு லீக் ஆனது. எத்தனை லீக்ஸ் வந்தாலும், ஜெயலலிதா இறப்பு மட்டுமல்ல ,இட்லி தின்றது,இட்லி சாப்பிட்டதற்கு 1.17 கோடிகள் விலைப்பட்டியல் என்று  நிலவி வரும் மர்மங்கள் மட்டும் ஓயவில்லை.
''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''

 அதிமுக-வையும் இரட்டை இலைச் சின்னத்தையும் கைப்பற்றுவதே எனது முக்கிய நோக்கம். அதற்காக ஆரம்பிக்கப்பட்ட அமைப்புதான் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம்' என்று அமமுக குறித்து மார்ச் 15-ல் பிரகடனம் செய்தார் சசிகலாவின் அக்கா மகனான டிடிவி தினகரன். ஆர்.கே.நகர் வெற்றியைத் தவிர, டிடிவி-யின் அரசியல் ரீ-என்ட்ரியில் சொல்லிக் கொள்ளும்படி எந்த வெற்றியும் கிட்டிவிடவில்லை. 
ஆரம்பத்தில் தினகரனுடன் இருந்த திவாகரன், செந்தில் பாலாஜி என பல முக்கியப் புள்ளிகள் இன்று அவருடன் இல்லை. 

தொடர்ந்து அமமுக முகாமிலிருந்து தன்னிச்சையான கருத்துகள் ஒலிக்கின்றன. அனைத்தையும் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டுமென்று தினகரன் நினைத்தாலும், எதுவும் செய்ய முடியாத கையறு நிலையில் இருக்கிறார். ‘இடைத் தேர்தல் வந்தால் 20 தொகுதிகளையும் கைப்பற்றுவோம்' என்று டிடிவி நம்புகிறார். 

20-ல் பத்து தொகுதிகளையாவது தன் வசமாக்கினால்தான் தினகரனுக்கு அரசியல் எதிர்காலம் இருக்கும். ஒரு வகையில் இடைத் தேர்தலில் யார் அதிக தொகுதிகளை கைப்பற்றுகிறார்களோ, அவர்கள் பக்கமே அதிமுக சாயும். 
தினகரனுக்கும் சரி, ஈபிஎஸ்-ஓபிஎஸ்.ஸுக்கும் சரி அடுத்து நடக்கவுள்ள எந்தத் தேர்தலும் அக்னிப் பரீட்சைதான்.
''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''

தகுதி நீக்க வழக்கில் தினகரன் தரப்புக்கு ஆதரவாக தீர்ப்பு வந்திருந்தால், ஒன்று அதிமுக ஆட்சி கவிழ்ந்திருக்கும். அல்லது, தினகரன் கையில் கட்சியும் ஆட்சியும் வந்திருக்கும். 
தமிழக வரலாற்றிலேயே மிகப் பெரிய தாக்கம் ஏற்படுத்திய 18 எம்.எல்.ஏ-க்கள் வழக்கின் தீர்ப்பு இந்தாண்டு அக்டோபர் 25 ஆம் தேதி, எடப்பாடி அணிக்கு ஆதரவாக சென்னை உயர் நீதிமன்றத்தால் வழங்கப்பட்டது.


அதிமுக ஆட்சி மேலும் சில காலம் தொடர தீர்ப்பு வழிவகை செய்துவிட்டது. 18 எம்.எல்.ஏ-க்கள் தரப்பு, ‘மேல்முறையீடு இல்லை. மக்கள் மன்றத்தில்தான் முறையீடு' என்று திட்டவட்டமாக தெரிவித்துவிட்டது. அமமுக, திமுக மட்டுமல்ல ஒருவகையில் ஒட்டு மொத்த தமிழ்நாடும் தேர்தலை நோக்கித் தான் காத்திருக்கிறது.

''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
அக்டோபர் மாத இறுதியில், தமிழக மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார், ஒரு பெண்ணிடம் பேசுவது போன்ற ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. 

அந்த ஆடியோவின் ஆண் குரல், தன்னால் கர்ப்பமான ஒரு பெண் குறித்து பேசியது. அந்த ஆண் குரலுக்குச் சொந்தக்காரர் ஜெயக்குமார் தான் என்று பேசப்பட்டு வந்த நிலையில், அடுத்த நாளே குற்றச்சாட்டுகளை அவர் மறுத்தார். 

அதே நாளில், செய்தியாளர்கள் முன்னிலையில் பேட்டியளித்த தினகரன் தரப்பு ஆதரவாளர் வெற்றிவேல், ‘அந்தப் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தது ஜெயக்குமார்தான். 
 அவருக்கு இப்போது தம்பி பாப்பா பிறந்துள்ளது' என்று கூறி பகீர் கிளப்பினார். 

அடுத்தடுத்து வந்த மற்ற அரசியல் பரபரப்புகளால் இந்த பெண் ஆடியோ லீக் விவகாரம் கண்டுகொள்ளப்படவில்லை.
''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''

‘ஒரு பக்கம் தர்ம யுத்தம் செய்து கொண்டு, இன்னொரு பக்கம் ஓ.பன்னீர்செல்வம் செய்த வேலை என்ன தெரியுமா..? 2017-ல் எடப்பாடி பழனிசாமி அணியுடன் இணைந்த பின்னர் ஓபிஎஸ் என்னை ரகசியமாக சந்திக்கத் தூது விட்டார். 
 நானும் சந்தித்தேன். 
அப்போது கூட, இந்த ஆட்சி சரியில்லை. நீங்களே தலைமை பொறுப்பை ஏற்றுக் கொள்ளுங்கள் என்று கெஞ்சினார்' என பகீர் கிளப்பும் கருத்தை இந்த ஆண்டு அக்டோபர் மாதம் தெரிவித்தார் டிடிவி தினகரன்.


 அவர் மேலும், ‘அவ்வளவு ஏன், மீண்டும் என்னை சந்திக்க வேண்டுமென்று சில வாரங்களுக்கு முன்னர் கூட மீண்டும் தூது விட்டார் ஓபிஎஸ். இதுதான் அவரின் யோக்கியம்' என்றார் சிரித்துக் கொண்டே.

இந்தக் கருத்துக்கு ஓபிஎஸ் தரப்பிலிருந்து இதுவரை சரிவர விளக்கம் அளிக்கப்படவில்லை.

 எடப்பாடி பழனிசாமிக்கும் பன்னீர் செல்வத்துக்கும் இடையில் இன்னும் இருக்கும் உரசல்தான் இதைப் போன்ற தகவல்கள் மேலும் மேலும் உணர்த்துகின்றன.
'''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''
சென்ற ஆண்டு ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் டிடிவி தினகரன் வெற்றி பெற்ற பிறகு, ‘வரும் தைப் பொங்கலின் போது எடப்பாடியின் ஆட்சி கவிழ்க்கப்படும்' என்று சூளுரைத்தார்.
 இதோ, அடுத்த தைப் பொங்கலே வரப் போகிறது. இன்னும் எடப்பாடி பழனிசாமிதான் முதல்வர். அதிமுக-தான் ஆளுங்கட்சி. பிப்ரவரி 16-ம் தேதியுடன் ஓராண்டு ஆட்சியை நிறைவு செய்துள்ளார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. 
ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது, யாரென்றே தெரியாத வகையில் பொதுப் பணித் துறையைப் பார்த்து வந்தவர் எடப்பாடி. ஆனால், இன்று அதிமுக-வின் முகமாக மாறியுள்ளார். யாரால் முதல்வர் ஆக்கப்பட்டாரோ அவர்களையே கட்சியிலிருந்து நீக்கிய ‘தில்' எடப்பாடியையே சாறும்.

ஒரு புறம் எடப்பாடியின் ஆளுமைத் திறனால் கட்சியைக் கைக்குள் கொண்டு வந்து, ஆட்சியை பிரச்னையில்லாமல் நடத்தினாலும், ‘இன்னும் எத்தனை நாளைக்கு' என்று கேள்வி மட்டும் விட்டபாடில்லை. 
உள்ளாட்சித் தேர்தல், இடைத் தேர்தல், நாடாளுமன்றத் தேர்தல் என எதையும் சந்திக்கும் நிலையில் இன்றைய அதிமுக இல்லை என்பதே தொடர்ந்து தேர்தல் தேதியைத் தள்ளிப்போடும் நடவடிக்கைகள் உணர்த்துகின்றன.
'''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''

திமுக-விலிருந்து பிரிந்து சென்று அதிமுக-வில் சேர்ந்த செந்தில் பாலாஜி, அமைச்சர் பதவி என்று சுக போகங்களை அனுபதவித்தார்.

 சசிகலா ஆதரவு நிலைப்பாட்டை எடுத்ததால், தனக்கான எம்.எல்.ஏ என்ற அந்தஸ்தை இழந்தார். டிடிவி.தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் அமைப்புச் செயலாளராக பணி செய்து வந்த செந்தில் பாலாஜிக்கும், கட்சியின் தலைவரான தினகரனுக்கும் சில மாதங்களாக முட்டல் மோதல் இருந்தது. 

எப்படியும் செந்தில் பாலாஜி ஆளுங்கட்சியான அதிமுக பக்கம் சாய்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஸ்டாலின் தலைமையில் திமுக-வில் சேர்ந்து பலருக்கு ஷாக் கொடுத்தார்.

திமுக-வில் சேர்ந்த உடன் அளித்த முதல் பேட்டியில், ‘எடப்பாடியும், ஓ.பி.எஸ்-ஸும் கூட திமுக-வில் இணையும் காலம் வெகு தொலைவில் இல்லை' என்ற பகீர் கருத்தைக் கூறினார். 
திமுக-வில் செந்தில் பாலாஜி எத்தனை நாள் இருப்பாரோ என்று அவரை அறிந்த  அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது..
=====================================================
ன்று,
டிசம்பர்-30.

 சோவியத் சோசலிச குடியரசுகளின் ஒன்றியம் உருவாக்கப்பட்டது(1922)


சுபாஷ் சந்திர போஸ் போர்ட் பிளையரில் இந்திய விடுதலை கொடியை ஏற்றினார்(1943)


உலகின் முதல் வண்ண தொலைக்காட்சி பெட்டி விற்பனை(1953)
====================================================
 மோடியின் தேர்தல் காப்பீடு.
ஏப்ரல், மே மாதத்தில் நடைபெற உள்ள மக்களவை தேர்தலில் மீண்டும் ஆட்சியை பிடிக்க தீவிரமாக காங்கிரஸ் பல்வேறு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

அதைவிட  தீவிரமாக பாஜக ஆட்சியை தக்க வைக்க வேண்டும் என்பதில் மும்முரமாக  செயல்பட்டு வருகிறது. 

 நடந்து முடிந்த ஐந்து மாநில தேர்தல்களில் பாஜக  தனது கோட்டைகளில் வெற்றி வாய்ப்பை இழந்தாலும், சில இடங்களில் காங்கிரஸைவிட அதிக வாக்குகளை பெற்றுள்ளது பாஜகவுக்கு நம்பிக்கையை தரத்தான் செய்துள்ளது.

அடுத்து, காங்கிரஸ் தான் ஆட்சியை பிடிக்கும் என பரவலான கருத்து நிலவி வந்தாலும், முன்போல் மக்களை கொஞ்சம் ஏமாற்றினால் போதும் மீண்டும் நாம்தான் என்பது மோடி-அமித்ஷா நம்பிக்கை.

ஒட்டுமொத்த இந்தியாவையும் பாஜக பக்கம் சாய்க்க கொண்டு  மோடி பல்வேறு சில அதிரடி முடிவை எடுத்து வருவதாக தெரிகிறது.அநேகமாக புதிய ஆண்டின் துவக்கத்தில் விவசாயக்கடன்கள் தொடர்பாக அறிவிப்புகளை வெளியிட்டு பாஜகவின் பேட் தோல்விக்கு காரணமான விவசாயிகளை அமைதிப்படுத்தும் திட்டம் ள்ளதாகத் தெரிகிறது.

 தற்போது மருத்துவக்காப்பீட்டு திட்டத்தில் சேர பயங்கரமான கட்டுப்பாடுகளை கொன்டவந்து பெயரளவில் காகிதத்தில் இருக்கும் அத்திட்டத்தில் மக்களும் உயர்மட்ட சிகிச்சைகள் பெரும் வகையில் ரூ.10 லட்சத்திற்கு குறைவான ஆண்டு வருமானம் உள்ளவர்களுக்கு,
 ரூ.5  லட்சத்திற்கான மருத்துவ காப்பீடு அட்டையை, அவரவர் விலாசத்திற்கு மத்திய அரசு சார்பாக அனுப்பி உள்ளது வியப்பைத்தருகிறது.

காரணம் இத்திட்டத்தில் மக்கள் ஒருவரையும் இணைய விண்ணப்பிக்கவில்லை என்பதுதான் நாடறிந்த உண்மை.
அதற்கு விதிகள்தான் கரணம்.
சொந்த வீடு இருக்கக்கூடாது.காங்கிரீட் கூரை வீட்டில் வசிக்கக்கூடாது .
இரு சக்கரவாகனம் கண்டிப்பாக இருக்கக்கூடாது,
அவர் பெயரில் தொலைபேசி இணைப்பு இருக்கக்கூடாது போல பல இருக்கக்கூடாதுகள்.

மொத்தத்தில் மக்கள் யாரும் அத்திட்டத்தில் சேரக்கூடாது என்பதுதான் அரசின் முக்கிய நோக்கம்.

ஆனால் தொடர்ந்த பலத்த அடிகள் ,ஐந்து மாநில தோல்விகள்,கூட்டணி கட்சிகள் விலகல்கள் விமானத்தில் சுற்றுலா சென்ற மோடி-அமித்ஷா தலைமையை கொஞ்சம் இந்தியாவில் தரையிறங்க வைத்துள்ளது.

பாஜகவுக்கு வாக்களித்தது மக்கள்தான்,அம்பானிகள்,அதானிகள் ,மோடிகள்,மல்லையாக்கள் இல்லை என்பதை தேர்தல்  நேரம் தங்களால் காந்த் கொள்ளப்படாத விவசாயிகள்,தொழிலாளர்கள்,நடைஉத்தர-அடித்தட்டு மக்களிடம்தான் கையேந்த வேண்டும் என்ற உண்மையை உணர்த்தியுள்ளது .

அதனால் குடும்ப அட்டை வைத்திருக்கும் மக்கள் அனைவருக்கும் மத்திய அரசே அதன் விபரப்படி 5 லட்சத்திற்கான மருத்துவக்காப்பீட்டு அட்டையை அனுப்பி வருகிறதாம்.அதுவும் பதிவுத்தபாலில்.
உங்கள் குடும்ப அட்டை (ஸ்மார்ட் கார்டு)யில் நாம் கொடுத்துள்ள விலாசத்திற்கு இந்த காப்பீட்டு அட்டை வீடு தேடி வரும்.

உங்கள் பகுதிக்கு பிறருக்கு வந்து வரவிட்டாலோ,நீங்கள் விலாசத்தை மாறி இருந்தால் உங்கள் குடும்ப அட்டை (ஸ்மார்ட்கார்டில்)யில்  உள்ள முகவரி அடங்கியுள்ள அஞ்சல் அலுவலகத்திற்கு சென்று, குடும்ப தலைவர் தனது குடும்ப அட்டை மற்றும் தேவைப்பட்டால் வேறு அடையாள ஆதாரத்தை காண்பித்து  பெற்றுக்கொள்ளலாம்.

மோடி போகிற போக்கைப்பார்த்தால் பெறபப்டாத மருத்துவ காப்பீட்டு அடையாள அட்டையை பாஜகவினரே உங்களைத்தேடி வந்து கொடுத்து தாமரையை மலரசச்செய்யும் முயற்சியில் இறங்குவார்கள் என்றே தெரிகிறது.
 --------------------------------------------------------------------------------------------------------------------------------------