ஊழலுக்கு அர்த்தம் தெரியாத ..., .?

 கூட்டணி கட்சிகளின் கைப்பிடிக்குள் ...
எப்போதும் பாஜகவையும்,மோடியையும் பற்றியே செய்திகள் தருவது எங்களுக்கே சலிப்பாகத்தான் இருக்கிறது.
அதை படிக்கும் நீங்களும் வெறுப்பில்தான் இருப்பீர்கள்.
ஆனால் இன்று இந்தியா முழுக்க காவியாக்கும் முயற்சியில் மோடி செயல்பட்டால் கூட அவர்கள் கொள்கையே இந்துத்துவாதான் என்று பொறுத்துக்கொள்ளலாம் .
ஆனால் மோடி எடுக்கும் ஒவ்வொரு நடவடிக்கையம் போடும் ஒவ்வொரு சட்டங்களும்  ஓட்ட மொத்த இந்தியாவையும் இந்துக்கள் உடன்பட அணைத்து மக்களையும் பாதிக்கும்,சிக்கலில் வாழ்க்கையை மாற்றிவிடும் ,ஏழைகளாக்கும் ,கொடுமைப்படுத்தும் விதமாகவே உள்ளதுதான் கொடுமையாக இருக்கிறது.

பெருவாரியாக வாக்களித்த மக்கள் நலனை முற்றிலும் ஒதுக்கி விட்டு மதவெறியை மட்டம் தூண்டிவிட்டு கார்ப்பரேட்கள் ,அம்பானிகள்,மோடிகள் ,அதானிகள் போன்ற பெரும் பணக்காரர்களுக்கு மட்டுமே நலன்களை குறிவைத்து பாஜக,மோடி பணியாற்றுவது ,ஆட்சி செய்வதுதான் நரேந்திர மோடி நிர்வாக,பொருளாதாரக் கொள்கையாக ள்ளது.

நம் தமிழ்நாட்டை பின்வாசல் வழியே ஆட்சி செய்வது பாஜக தான் என்பது உலகமே அறிந்த உண்மை.
ஆனால் தங்களின் சர்வாதிகார போக்கினால் இந்தியாவின் அணைத்து மாநிலங்களையம் ஆக்டொபஸாக இறுக்கிவைத்துள்ளது.தான் ஆளாத மாநிலங்களுக்கு முடிந்த அளவு சிக்கல்களை தொடர்ந்து கொடுத்துவருகிறது.
அதற்கு நல்ல உதாரணம் கேரளா.

பாரதிய ஜனதா கட்சி தங்கள் கூட்டாளிகளை இரு வகையில் மட்டுமே பார்த்திருந்து. ஒன்று தேசிய ஜனநாயக கூட்டணிக்கு அதிக இடங்களைக் கொண்டு வருபவர்கள்.
இன்னொன்று, இந்திய அரசியலின் மையமாக பாஜகவை நிறுத்தும் முயற்சிகளை வலுப்படுத்துபவர்கள்.

மத்தியபிரதேசம், சத்தீஸ்கர் மற்றும் ராஜஸ்தான் ஆகிய மூன்று முக்கிய இந்தி பேசும் மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல் நடந்தபின், தன் கூட்டணிக் கட்சிகளை பாஜக நடத்தும் விதம் பெரிய மாற்றத்தைச் சந்தித்துள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பாஜக தலைவர் அமித் ஷா ஆகியோர், தங்களை பழைய நிலையை மாற்றி கூட்டணி யுகத்துக்கு தயாராகி வருகின்றனர்.

என்ன ஆனாலும் 2019 மக்களவைத் தேர்தலில் பாஜக தோற்கவே வாய்ப்பில்லை என்று இருந்த அவர்கள்,இருந்த அவர்கள், கூட்டணிக் கட்சிகள் மீது அவர்கள் மென்மையான அணுகுமுறையைக் கையாளவில்லை.

2014 மக்களவைத் தேர்தலில் கிடைத்த மாபெரும் வெற்றி மற்றும் சட்டமன்றத் தேர்தல்களில் கிடைத்த தொடர் வெற்றிகள்  நரேந்திர மோடி மையமாக வைத்து இயங்கும் அரசியல் நடவடிக்கைகள் போதும் என பாஜகவை எண்ண வைத்தன. கூட்டணிக் கட்சிகளின் அதிருப்தி அப்போது பாஜகவுக்கு பெரும் பொருட்டாக இல்லை.


வரவுள்ள மக்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு வேறு வழியில்லாத வகையில் அதிகமான மக்களவைத் தொகுதிகளைக் கேட்கிறார்கள் என்பதற்காக கூட்டணிக் கட்சிகளை இழப்பது பாஜகவுக்கு மேலும் பலவீனமாகவே அமையும் என்பதை மோடி  - ஷா கூட்டணி உணர்ந்துள்ளது.

மாநில வாரியாக காங்கிரஸ் கூட்டணி அமைத்து வரும் சூழலில், பாஜவுக்கு தேர்தலுக்கு முந்தைய கூட்டணி மட்டுமல்லாது தேர்தலுக்கு பிந்தைய கூட்டணியும் தேவை.
சிவசேனா தலைவர் உத்தவ் தாக்ரே தனியாகவே தேர்தலைச் சிந்திப்போம் என்று கூறினாலும், அமித் ஷா பாஜக - சிவசேனா கூட்டணி ஒன்றாகவே தேர்தலைச் சந்திக்கும் என்றே கூறுவார்.

பீஹாரை சேர்ந்த லோக் ஜனசக்தி கட்சியின் வலிமை, அக்கட்சித் தலைவர்கள் கூறுவதைவிட களத்தில் குறைவாக இருந்தாலும், அக்கட்சியின் பெரிய கோரிக்கைகளுக்கு பாஜக செவிமடுக்க வேண்டிய அவசியம் உள்ளது.
சமீபத்தில் தெலுங்கு தேசம் கட்சியின் சந்திரபாபு நாயுடு, ராஷ்ட்ரிய லோக் சமதா கட்சியின் உபேந்திர குஷ்வாஹா ஆகியோர் தேசிய ஜனநாயக கூட்டணியை விட்டு வெளியேறியதைப் போல சிவசேனாவும் பிரிந்து செல்வதை பாஜக விரும்பாது.


பீஹாரில் ஐக்கிய ஜனதா தளத்துடன் 17 தொகுதிகள் வீதம் தொகுதிப் பங்கீடு செய்துள்ள போதிலும், லோக் ஜனசக்தி கட்சிக்கு ஆறு தொகுதிகளை பாஜக வழங்கியுள்ளது.

அக்கட்சித் தலைவர் ராம் விலாஸ் பஸ்வானுக்கு அஸ்ஸாமில் இருந்து மாநிலங்களை உறுப்பினர் பதவியும் வழங்கப்படலாம் என்று தெரிகிறது.

2014இல் பீஹாரில் 30 தொகுதிகளில் போட்டியிட்டு 22 தொகுதிகளில் வென்றது.நிதிஷ் குமாருடன் மீண்டும் கூட்டணி அமைத்தபின் இப்போது 17 தொகுதிகளில் மட்டுமே போட்டியிடுகிறது.

அங்கு கூட்டாளியாக இருந்த உபேந்திர குஷ்வாஹாவின் கட்சி காங்கிரஸ் - ராஷ்ட்ரிய ஜனதா தளத்துடன் இருப்பதாய் சௌகரியமாகக் கருதுகிறது.
கடுமையாக நடந்துகொள்ளாதவரை மோடி - அமித் ஷா ஆகியோரிடம் எதையும் சாதிக்க முடியாது என்பதை பாஜகவின் கூட்டணைக் கட்சிகள் உணர்ந்துள்ளன.

உத்தரப் பிரதேசத்தின் சிறிய கூட்டாளியாக இருக்கும் அப்னா தள் கட்சி பாஜக தங்களுக்கு போதிய மரியாதை கிடைக்கவில்லை என கருதுகிறது. அக்கட்சியின் தலைவர் ஆஷிஷ் படேலின் மனைவி அனுப்பிரியா படேல் மத்திய இணையமைச்சராக உள்ளார்.

சுகாதார மற்றும் குடும்பநலத் துறை இணை அமைச்சராக உள்ள அவர் சமீபத்தில் நடந்த சில மருத்துவக் கல்லூரிகளின் திறப்பு விழாவுக்குத் தாம் அழைக்கப்படவில்லை என்றார். "சிறிய கட்சிகளான நாங்களும் கொஞ்சம் மரியாதையை எதிர்பார்க்கிறோம்," என்கிறார் ஆஷிஷ் படேல்.

2014இல் மூன்று தொகுதிகளில் போட்டியிட்ட அக்கட்சி இப்போது பாஜகவிடம் நான்கு தொகுதிகளைக் கேட்கிறது.
உத்தரப்பிரதேசத்தில் மாநில அரசில் அங்கம் வகிக்கும் சுகல்தேவ் பாரதிய சமாஜ் கட்சியின் தலைவர் ஓம் பிரகாஷ் ராஜ்பர் மத்தியில் மற்றும் மாநிலத்தில் உள்ள பாஜக அரசுகளை விமர்சித்து வருகிறார். அவர் உத்திரப்பிரதேச மாநில அமைச்சரவையில் அங்கம் வகிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்போது பாஜகவிற்கு மிகப்பெரிய சவாலாக இருப்பது சிவசேனா கட்சிதான். தங்கள் தேர்தல் சின்னமான புலியைப் போலவே உறுமுகிறது சிவசேனா.
அதன் நோக்கம் அதிக மக்களவை இடங்களைப் பெறுவது.


சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சிகள் மகாராஷ்டிராவில் கூட்டணி அமைத்தால் சிவசேனாவுக்கு தங்களுடன் கூட்டணி அமைப்பதைவிட வேறு வழி இல்லை என்று பாஜக நினைக்கிறது.

தேர்தலுக்கு முந்தைய கூட்டணி அமைப்பது தொடர்பாக சிவசேனா இன்னும் முடிவெடுக்கவில்லை என்கின்றனர் பாஜவினர் சிலர்.

ஆனால், சிவசேனாவின் கணக்கு வேறு. 2019 நவம்பரில் மகாராஷ்டிராவில் சட்டமன்றத் தேர்தல் வருகிறது. அப்போது சில தரப்பினரிடையே பாஜகவுக்கு எதிராக உள்ள மனநிலையில் இருந்து தங்கள் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களை பாதுகாத்துக்கொள்ள அக்கட்சி விரும்புகிறது.

நாடாளுமன்றத் தேர்தல் சமயத்திலேயே சட்டமன்றத் தேர்தலையும் எதிர்கொள்ள மகாராஷ்டிர முதலமைச்சர் தேவேந்திர பட்நாவிஸ் ஒருவேளை முடிவு செய்யலாம்.

கூட்டணிக் கட்சிகளின் அழுத்தத்துக்கு செவிமடுக்கும் நிலை வந்தால் பாஜக அமித் ஷாவின் அடாவடி ,குதிரை பேர அரசியலை   மட்டுமே நம்பியிருக்க முடியாது.

அருண் ஜேட்லி போன்றவர்கள் இன்னும் பெரும் பங்காற்றுவார்கள்.

அருண் ஜேட்லி ஏற்கனவே மத்திய அமைச்சரவையில் நிதிஷ் குமாருடன் பணியாற்றியுள்ளார்.
 அமித் ஷாவும் நிதிஷ் குமாருடன் தனது உறவை மேம்படுத்தி வருகிறார்.

ஒருவேளை கடந்த தேர்தலைவிட குறைவான இடங்களில் வென்று  பாஜகவின்  கூட்டணிக் கட்சிகள் தயவிதான் பெரும்பான்மை என்று அவைகள் முடிவெடுக்கும் அதிகாரம் மிக்கவையாக உருவெடுத்தாலும் பாஜகவுக்கு வேறு வழியில்லா நிலைதான் உருவாகும்.அது சென்ற வாஜ்பாய் ஆட்சிக்காலத்துக்குத்தான் அவர்களை விட்டு செல்லும்.

நல்ல வேளை ஜெயலலிதா உயிருடன் இல்லை.அவரின் அப்போதைய வழிகாட்டல்களைப்பற்றி சொல்ல வாஜ்பாயும் இல்லை.
------------------------------------------------------------------------------------------------------------------------------------
ஊழலுக்கு அர்த்தம் தெரியாத பாஜக .?
அமைச்சர்களின் லஞ்ச பேரம் அம்பலம்!
உத்தரப்பிரதேச பாஜக அமைச்சர்களின் உதவியாளர்கள் 3 பேர், பகிரங்கமாக லஞ்சம் கேட்டு பேரம்பேசும் வீடியோஊடகங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப்பிரதேச மாநில அமைச்சரவையில், சுரங்கம், கலால் மற்றும் மதுவிலக்குத்துறை அமைச்சராக இருப்பவர் அர்ச்சனா பாண்டே. இதேபோல பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக ஓம் பிரகாஷ் ராஜ்பர், கல்வித்துறை அமைச்சராக சந்தீப் சிங் ஆகியோர் உள்ளனர்.
இந்த 3 அமைச்சர்களின் உதவியாளர்களும், தத்தமது துறைசார்ந்த காண்ட் ராக்டர்களிடம் லஞ்சம் கேட்டு பேரம் பேசியுள்ளனர்.பள்ளி மாணவ - மாணவியருக்கான புத்தகம் அச்சிடும் பணிக்கான காண்ட்ராக்ட்டில் தங்களுக்குரிய பங்கு வந்துவிட வேண்டும் என்று கல்வித்துறை அமைச்சர் சந்தீப் சிங்கின் உதவியாளர் சந்தோஷ் அவதி, காண்ட்ராக்டர் ஒருவரிடம் பேரம் பேசியுள்ளார்.

ஷஹரான்பூர் சுரங்க ஒப்பந்தம் உட்பட 12 மாவட்டங்களுக்கான சுரங்கஒப்பந்தங்கள் தொடர்பாக, அமைச்சர்அர்ச்சனா பாண்டேவின் உதவியாளர் எஸ்.பி. திரிபாதி லஞ்சம் கேட்டுள்ளார்.
இடமாறுதல் உள்ளிட்ட விஷயங்களுக் காக ஓம் பிரகாஷ் ராஜ்பரின் உதவியாளர்ஓம் பிரகாஷ் காஷ்யப்பும் ரூ. 40 லட்சம்லஞ்சம் கேட்டுள்ளார். 3 பேரும் லக்னோவில் உத்தரப்பிரதேச அரசின் தலைமைச் செயலகத்தில் இருந்துகொண்டே, இந்த லஞ்ச பேரத்தை நடத்தியுள்ளனர்.


இதுதொடர்பான வீடியோதான் தற்போது வெளியாகியுள்ளது. தனியார்செய்தி ஊடகமான ஏபிபி இந்த வீடியோவை வெளியிட்டுள்ளது.

லஞ்ச பேர விவகாரத்தில் சிக்கியிருப்பவர்களில் 2 பேர் பாஜக அமைச்சர்களின் உதவியாளர்கள். ஒருவர் சுகல்தேவ் பாரதிய சமாஜ் கட்சி அமைச்சரின் உதவியாளர்.

ஆதித்யநாத் தலைமையிலான பாஜக ஆட்சியில் ஊழல் அதிகரித்து விட்டதாக கடந்த ஜனவரி மாதமே குற்றச்சாட்டு எழுந்தது.
 “சமாஜ்வாதி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சியின் ஆட்சியோடு ஒப்பிடும்போது இப்போது பாஜக ஆட்சியின் கீழ் ஊழல் அதிகரித்துதான் உள்ளது” என்று பகிரங்கமாக கூறப் பட்டது.
இந்த புகாரை வைத்தவரே, சுகல்தேவ் பாரதிய சமாஜ் கட்சியின் தலைவர் ஓம் பிரகாஷ் ராஜ்பர். தற்போது அவருமே லஞ்ச பேரத்தில் சிக்கியிருக்கிறார். பாஜக கூட்டணியில் இருக்கும் தங்களை உத்தரப்பிரதேச முதல்வர் ஆதித்யநாத் மதிப்பதில்லை என்று ராஜ்பர், கடந்த11 மாதங்களுக்கு முன்பு குறிப்பிட்டிருந்தார்.

 ஆனால், தற்போதைய அவரின்லஞ்ச பேரத்தை வைத்துப் பார்க்கும்போது, அடித்த கொள்ளையில் தங்களுக்குரிய பங்கை ஆதித்யநாத் அரசு சரியாக பிரித்துக் கொடுக்கவில்லை என்ற கோபத்திலேயே அப்போது அவர்பேசியது போல தெரிகிறது.
தற்போது பாஜக அமைச்சர்களுடன், சுகல்தேவ் பாரதிய சமாஜ் கட்சித் தலைவரும், கூட்டுக் கொள்ளையில் ஈடுபட்டு மாட்டிக்கொண்டுள்ளார்.

பாஜக அமைச்சர்களின் உதவியாளர்கள் லஞ்ச பேரத்தில் ஈடுபட்ட சம்பவம், உத்தரப்பிரதேசத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 மக்களவைத் தேர்தல் நெருங்கும் நேரத்தில் இப்படியொரு சிக்கலில் மாட்டியது பாஜக தலைமையை பதற்றம் அடைய வைத்துள் ளது.
அமைச்சர்களின் லஞ்ச விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த வேண் டும் என்று எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன.

====================================================
ன்று,
டிசம்பர்-28.
லண்டனில் வெஸ்ட்மின்ஸ்ட் தேவாலயம் திறக்கப்பட்டது(1065)
கலிலியோ கலிலி, நெப்டியக்ஷன் கோளைக் கண்டுபிடித்தார்(1612)
தெற்கு ஆஸ்திரேலியா, அடிலெய்ட் ஆகியன அமைக்கப்பட்டன(1836)
 இந்திய தேசிய காங்கிரஸ் துவங்கப்பட்டது (1885)
====================================================
 பிளிப்கார்ட் மற்றும் அமேசான் களுக்கு ஆப்பு ?
இந்தியாவில் ஆன்லைன் வர்த்தக நிறுவனங்களுக்கு பல்வேறு புதிய கட்டுப்பாடுகளை மத்திய அரசு விதித்துள்ளது.

 ப்ளிப்கார்ட் மற்றும் அமேசான் வலைத்தளங்களுக்கு எதிராக இந்திய ஆன்லைன் வர்த்தக கூட்டமைப்பு சார்பில் மத்திய வர்த்தக அமைச்சகத்தில் புகார் தெரிவிக்கப்பட்டது.

புகாரை விசாரித்த மத்திய வர்த்தக அமைச்சகம், ஆன்லைன் வர்த்தக நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

அதன்படி எந்த ஒரு நிறுவனமும் தனது உற்பத்தி பொருளில் 25 சதவிகிதத்தை மட்டுமே ஆன்லைனில் விற்க வேண்டும். மற்றவற்றை வெளிச்சந்தைக்கு விட வேண்டும்.
குறிப்பிட்ட பொருள் இந்த ஆன்லைன் நிறுவனத்தில் மட்டும் தான் கிடைக்கும் என்று விளம்பரம் செய்யக் கூடாது.

அதுபோன்ற நிலையையும் உருவாக்கக் கூடாது.
எந்த ஒரு தயாரிப்பாக இருந்தாலும் எல்லா ஆன்லைன் நிறுவனங்களிலும் விற்பனை செய்ய வேண்டும்.

தள்ளுபடி விலைகளை அறிவிக்கும் போது, வாடிக்கையாளர்களுக்கு பாரபட்சம் காட்டக்கூடாது.

குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே சலுகை என்பது போன்ற அறிவிப்புகளையும் வெளியிடக் கூடாது. இவ்வாறு விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன.
இந்த கட்டுப்பாடு வருகிற பிப்ரவரி மாதம் முதல் அமலுக்கு வருகிறது.
--------------------------------------------------------------------------------------------------------------------------------------

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?