இன்றைய செய்தி,நாளைய வரலாறு. நாளைய வரலாறை படிப்போம்.

சனி, 29 டிசம்பர், 2018

விடை தேடும் வினாக்கள்?

"ஆளுக்கு 15 லட்சம் வாங்க்க்கணக்கில் போடப்படும் என்று கூறி ஆட்சிக்கு வந்த நரேந்திரமோடி வேலை வாய்ப்கள், பணமதிப்பிழப்பு, சிபிஐ,வெறுப்பைக் கக்கும் குற்றங்கள், ரபேல் -என்று எண்ணற்ற கேள்விகளுக்கு பதில் சொல்லாமலேயே பிரதமர் மோடி கடந்த நான்காண்டு காலத்தைக் கழித்துவிட்டார். "
இதுதொடர்பாக தி ஒயர்இணைய இதழ், 15 கேள்விகளை மோடியிடம்  கேட்டிருக்கிறது. 


1. வேலையில்லா வளர்ச்சி
 
வேலைவாய்ப்பு என்பது நாட்டின் மிகப்பெரிய சவால்களில் ஒன்றாகும்.
சென்ற மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தின்போது, நீங்கள் ஒரு கோடி பேருக்கு வேலை அளிக்கத் தவறியதற்காக, காங்கிரஸ் கட்சியைக் கேலி செய்தீர்கள்.
 இப்போது நான்கு ஆண்டுகள் ஓடிவிட்டன.

 வேலைவாய்ப்பை உருவாக்குவது தொடர்பாக உங்கள் பதிவு என்பது மிக மோசம் என்று பல்வேறுசுயேச்சையான மதிப்பீடுகள் கூறுகின்றன.
உதாரணமாக2017இல் 14 லட்சம் வேலைகள்தான் தரப்பட்டிருக்கின்றன.

உங்கள் முந்த்ரா திட்டத்தின்கீழ் அளிக்கப்பட்ட கடன்கள்கூட, உங்கள் அமைச்சர்களின் கூற்றின்படியே,அவ்வாறு கொடுத்திட்ட கடன்களில் பெரும்பாலானவை மிகவும் அற்பமானவை என்றும் அவற்றால் எவ்விதமான வேலைவாய்ப்பையும் உருவாக்க முடியாது என்றும் ஏன், பகோடா கடை கூட திறக்கமுடியாது என்றும் கூறியிருக்கிறார்கள்.

 எனவே, மிஸ்டர் மோடி அவர்களே, வேலைவாய்ப்பு தொடர்பாக, 2014இல் நீங்கள் வாக்காளர்களுக்கு அளித்திட்ட உறுதிமொழி என்னாயிற்று?

2. கிராமப்புற விவசாய நெருக்கடி
 விவசாயிகளின் வருமானத்தை 2022க்குள் இரட்டிப்பாக்குவேன் என்கிற உங்களின் உறுதிமொழியும் இலக்கை நோக்கி இன்னும் தொடங்கவே இல்லை என்றநிலையில்தான் இருக்கிறது.

விவசாய விளைபொருள்களின் உற்பத்திச் செலவினத்துடன் 50 சதவீதம் உயர்த்தி குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயம் செய்யப்படும் என்று கூறியிருந்தீர்கள்.
ஆனால், நாடு முழுவதுமே விவசாயிகள் தாங்கள் விளைவித்த பயிர்களை, குறைந்தபட்ச ஆதார விலையைவிடக் குறைவான விலைக்கே விற்கக்கூடிய அளவிற்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள்.
மேலும், நீங்கள் அறிவித்த பயிர் இன்சூரன்ஸ் திட்டம் ஒரு பெரிய மோசடி என்றும் அவர்கள் கூறுகிறார்கள்.

இத்திட்டத்திற்காக அவர்கள் பிரிமியம் செலுத்துகிறார்கள், ஆனால் பயனேதும் பெற்றிடவில்லை.

3. நிதி நிலை

தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசாங்கமானது, ஐமுகூ அரசாங்கம் நிதியை மிகவும் ஊதாரித்தனமாக செலவுசெய்ததாகக் குற்றஞ்சாட்டியது.
 எனினும் நீங்கள்ஆட்சிக்கு வந்தபின்னர், அரசாங்கத்தின் நிதிநிலைமையை அதிகரிப்பதற்காக எண்ணற்ற நடவடிக்கை எடுத்தீர்கள்.
 மானியங்கள் கொடுப்பதில் வெட்டு, பட்ஜெட்டுக்கு அப்பாற்பட்டு பல வடிவங்களில் வசூல், பொதுத்துறை நிறுவனங்களைத் தனியாருக்குத் தாரைவார்ப்பதன் மூலம் வரக்கூடிய நிதி எனப் பலவகைகளில் முயற்சிகளை மேற்கொண்டீர்கள்.
எனினும் தற்போது அரசாங்கத்தின் நிலைமை எப்படி இருக்கிறது?

4.வங்கிகளின் கார்ப்பரேட் சலுகைகள்.

 வங்கிகளில் கடன்கள் வாங்கி விட்டுத் திருப்பித் தராதவர்களும், மோசடி செய்தவர்களும்
இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம்ராஜன், 2015 பிப்ரவரியில் உங்களுக்கு, வங்கிகளில் கடன்கள் பெற்றுவிட்டுத் திருப்பிச் செலுத்தாமல் மோசடிசெய்த கோடீஸ்வரர்களின் பட்டியலை அனுப்பி அவர்கள்மீது வழக்கு தொடுக்க வேண்டியது அவசியம் என்று குறிப்பிட்டிருந்தார்.

வங்கிகளை ஏமாற்றிய அவர்கள் மீதுவிசாரணை செய்து வழக்கு தொடர என்ன நடவடிக்கை எடுத்தீர்கள்?
மோசடி செய்தவர்களின் பட்டியலையேகூட வெளியிட நீங்களும், உங்கள் அரசாங்கமும் தயங்குவதற்கான காரணம் என்ன?
ஒரு நாடாளுமன்றக்குழு கூட, இது தொடர்பாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் எண்ணற்ற விண்ணப்பங்கள் இருந்ததால், பிரதமர் அலுவலகத்திலிருந்து தகவல்கள்கோரியிருந்தன.

 ஆனாலும் அவற்றைப் பகிரங்கப்படுத்த நீங்கள் மறுத்திருக்கிறீர்கள்.
 ஏன்?

5. பணமதிப்பிழப்புப் பேரிடர்

2016 நவம்பர் 14 அன்று, பணமதிப்பிழப்பு முடிவு தவறாக இருந்திடுமானால், எந்தத் தண்டனையையும் எதிர்கொள்ளத் தயாராக இருப்பேன் என்று நீங்கள் சொன்னீர்கள். நடுத்தெருவில் தூக்கிலிடுங்கள் என்று கூட ஆவேசமாக பேசினீர்கள்.

 நல்லது, இந்திய ரிசர்வ் வங்கியே, சமீபத்தில் பணமதிப்பிழப்பு முடிவானது, கறுப்புப் பணத்தை வெளிக்கொணர்வதிலும் (பணமதிப்பிழப்பு செய்திட்ட ரூபாய் நோட்டுகளில் 99 சதவீதம் மீண்டும்வங்கி அமைப்புமுறைக்கு வந்துவிட்டது), கள்ளநோட்டுகளைக் கட்டுப்படுத்துவதிலும், பணப்புழக்கத்தைக் குறைப்பதிலும், பொருளாதாரத்தில் உயர்ந்தமதிப்பிலான நோட்டுகள் புழக்கத்தைக் குறைப்பதிலும் பெயரளவிலும் மற்றும் மிகவும் சிறிய அளவிலும்தான் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது என்று கூறியிருக்கிறதே!

 நேரடி வரி வசூலில் ஒரு பாய்ச்சல் ஏற்பட்டிருப்பது உண்மையெனினும் இதுபோன்று முந்தைய காலங்களிலும் நடந்திருக்கிறது.
எனவே, பணமதிப்பிழப்பு மூலம் என்ன சாதித்திருக்கிறீர்கள்?

அது தொடர்பாக அரசாங்கம் மேற்கொண்ட செலவினத்துடன் ஒப்பிடுகையில் உண்மையில் அது மதிப்புமிக்கதுதானா?
சமீபத்தில், ஒரு கேபினட் அமைச்சர்மக்களவையில், உங்களுடைய அரசாங்கமானது பணமதிப்பிழப்பால் ஏற்பட்ட சமூக மற்றும் பொருளாதாரப் பாதிப்புகள் குறித்து ஆராய்ந்திட எவ்விதத்திலும் அக்கறைசெலுத்தவில்லை என்றும் கூட கூறியிருக்கிறார்.

சமீபத்திய பிரச்சாரக் கூட்டம் ஒன்றில் பேசும்போது, இப்போது, சர்வதேச நிதியத்தின் புதிய தலைமைப் பொருளாதாரவாதியான, கீதா கோபிநாத், பணமதிப்பிழப்பின் காரணமாக காலாண்டுக்கான மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியில் குறைந்தபட்சம் 2 சதவீதம் வீழ்ச்சிஏற்பட்டது என்று மதிப்பிட்டிருக்கிறார்.

பணமதிப்பிழப்பின் காரணமாக ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து, பிரதமர்என்ற முறையில் நீங்கள் ஓர் ஆய்வினை செய்வதற்கு ஆணை பிறப்பித்திருக்க வேண்டாமா?

இந்த முடிவைஎடுப்பதற்கு முன்பு நீங்கள் யாரைக் கலந்தாலோசித்தீர்கள்? இதனைத் தொடர்ந்து மிகப்பெரிய அளவில்சீர்குலைவு ஏற்படும் என்பதை நீங்கள் அறியாதிருந்தீர்களா?


6. கூண்டுக்கிளி

மத்தியக் குற்றப்புலனாய்வுக் கழகம் (சிபிஐ), இப்போது ‘நம்பகத்தன்மை நெருக்கடிக்குள்’ சிக்கித் தவித்துக்கொண்டிருக்கிறது.
நீங்கள் எதிர்க்கட்சி வரிசையிலிருந்த போது, அதனை ஒரு கூண்டுக்கிளி என்றுஅழைத்தீர்கள். ஆனால் இப்போதும் அதே நிலைதான்.
அது, லாலுபிரசாத் யாதவ், ப.சிதம்பரம் உட்பட உங்கள்அரசியலுக்கு எதிராக உள்ளவர்களுக்கு எதிராகவுள்ள பழைய வழக்குகளை விசாரணை செய்வதில் மிகவும் சுறுசுறுப்பாக இருக்கிறது.

 ஆனால் அதே சமயத்தில், உங்களுடைய அரசியல் கூட்டாளி அமித்ஷாவை கொலைவழக்கு ஒன்றில், கீழமை நீதிமன்றம், விசாரணை தொடங்குவதற்கு முன்பாகவே, வழக்கு எதுவும் கிடையாது என்று விட்டுவிட்டபோது அதற்கெதிராக மேல்முறையீடு செய்வதற்கு மறுத்திருக்கிறது.
அதேபோன்று, உங்களின் கூட்டாளிகளாக அல்லது புதிய உறுப்பினர்களாக மாறியுள்ள முகுல் ராய் அல்லது நாராயண் ரானே உட்பட பாஜகவின்புதிய உறுப்பினர்கள் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளுக்குஎதிராகவும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் இருக்கிறது.

உங்களுடைய அரசியல் ஆதாயங்களுக்காக, தேர்ந்தெடுக்கப்பட்ட சில வழக்குகளை மட்டும்தான் சிபிஐ விசாரித்திடுமா?

7. வெறுப்பை உமிழ்தல்

உங்களுடைய முதல் சுதந்திர தின உரையின்போது, வகுப்புவாதம் மீதான பிரச்சாரங்களை ஒரு பத்தாண்டுகாலத்திற்குத் தள்ளிவைப்போம் என்று கூறினீர்கள்.
ஆனால், மதவெறி அடிப்படையிலான குற்றங்கள் அதிகரித்திருப்பதாகவே பல்வேறு மதிப்பீடுகள் முடிவுக்கு வந்துள்ளன.
உங்களுடைய ஆட்சிக்காலத்தில் கும்பல்கள் மேற்கொண்ட தாக்குதல்களில் குறைந்தபட்சம் 314 பேர் பலியாகியிருக்கிறார்கள்.
 குண்டர்கள் நாட்டின் சட்டத்தைத் தங்கள் கைகளில் எடுத்துக்கொண்டு தண்டனை அளித்துள்ள நிகழ்வுகளில் 39 பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள் என்றும் தலித்துகள் மற்றும் பழங்குடியினர் மீதான தாக்குதல்கள் அநேகமாக 25 சதவீதம் அதிகரித்திருக்கின்றன என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன.

உங்களுடைய கட்சித் தலைவர்களும், நாடாளுமன்ற உறுப்பினர்களும், அமைச்சர்களும், சங் பரிவாரக் கூட்டத்தினரும் மதவெறிப் பேச்சுக்களை நாள்தோறும் மேற்கொண்டு வருகிறார்கள்.
உங்களால் பொறுக்கி எடுக்கப்பட்டு முதலமைச்சராக ஆகியிருக்கிற உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், அவருடைய மதவெறி நிகழ்ச்சி நிரலுக்காக ராஜினாமா செய்யப்பட வேண்டும் என்று வலியுறுத்தி ஓய்வுபெற்ற 80 ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் கடிதம் எழுதியிருக்கிறார்கள்.


 இவ்வாறு உங்கள் கட்சியின் சகாக்கள், இந்தியக் குடிமக்கள் மீது வன்முறை வெறியாட்டங்களில் ஈடுபடும்போது, நீங்கள் ஏன் மவுனமாக இருந்து வருகிறீர்கள்?
முஸ்லிம்கள் குறிவைத்துத் தாக்கப்படும்போது ஒருவார்த்தைக்கூட நீங்கள் கூறவில்லை. ‘‘அனைவருடனும்’’  என்று நீங்கள் கூறுவதில், ‘‘முஸ்லிம்களுடனும்’’ என்று அர்த்தம் இல்லையா?
தாமரையை மலர்விடாத தமிழ்நாட்டை மோடி அரசு சோதித்துப்பார்ப்பதிலேயே,வெறுப்பை கக்குவதிலேயே காலத்தை கடத்துகிறது .எந்த விதமான மோசமான,இயற்கைக்கு,மக்களுக்கு கேடு விளைவிக்கும் திட்டம் என்றாலே அதை தமிழ்நாட்டில்தான் செயல்படுத்துகிறது.
இந்தோனேசியா,பாலித்தீவு,நேபாளம் என்று பிறநாடுகளுக்கு 1500 கோடிகளுக்கு மேல் நிதியுதவி செய்துள்ள மோடி இந்தியாவிலேயே அதிக வரியை மத்திய அரசுக்கு வரை கொடுக்கும் மகாராஷ்டிரத்துக்கு அடுத்த இரண்டாவது மாநிலமான தமிழ்நாட்டின் கஜா புயலுக்கு வெறும் 353 கோடிகளை தந்துள்ளது.சேதவிபரமோ 19000 கோடிகள்.இது  மத்திய குழுவே பார்வையிட்டு ஒத்துக்கொண்ட மதிப்பீடு.
இதற்க்கு காரணம் #go back modi யால் உண்டான வெறுப்பரசியல்தானே?

8. ரபேல் ரகசியம்

நீங்கள் 2015 ஏப்ரல் 10 அன்று பாரீஸ் சென்றிருந்த சமயத்தில் 36 ரபேல் விமானங்கள் வாங்குவது தொடர்பாக அறிவித்தீர்கள்.
 பாதுகாப்புக் கொள்முதல் வழிகாட்டுதல்களின்கீழ், அவ்வாறு நீங்கள் அறிவிப்பதற்கு முன்பு, இந்திய விமானப் படை மற்றும் பாதுகாப்பு அமைச்சகத்திற்குள் ஒரு முறையான நடைமுறை பின்பற்றப்பட்டிருக்க வேண்டும். ஆனால், உங்கள் அரசாங்கமானது இதுதொடர்பாக எவ்விதமான தகவலையும் உச்சநீதிமன்றத்தில் அளித்திடவில்லை.
நீங்கள் திரும்பிவந்த பின்னர்என்ன நடந்தது என்று மட்டும்தான் அது கவனம் செலுத்தியது.

ஆகவே, நீங்கள் இந்த அறிவிப்பைச் செய்வதற்குமுன்பு, அரசாங்கத்திற்குள் என்ன முறையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன என்று உங்களால் தயவுசெய்து கூற முடியுமா?
 இதற்கு முன்பு இதுதொடர்பாக செய்யப்பட்டிருந்த ஒப்பந்தத்தில் இந்தியாவிலேயே தயாரிப்பதற்கும், தொழில்நுட்பப் பரிமாற்றத்திற்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருந்தனவே.
அவற்றை ஏன் நீங்கள் ரத்து செய்தீர்கள்?
மேலும் ஒவ்வொரு விமானத்திற்கும், முன்புநிச்சயித்த விலையைவிட மூன்று மடங்கு அதிகமாக விலை நிர்ணயித்தது ஏன்?

9. பாபர் மசூதியும் அயோத்தியும்

நீங்களும், உங்கள் கட்சியும் 1992இல் பாபர் மசூதிஇடிக்கப்பட்ட இடத்தில் ராமர் கோவிலைக் கட்டுவதற்குஉறுதிபூண்டிருக்கிறீர்கள்.
 பாபர் மசூதி இடிக்கப்பட்டதும் அங்கே வைக்கப்பட்டிருந்த கலைப் பொக்கிஷங்களை அழித்த சதிகாரர்களும் தண்டிக்கப்பட வேண்டியவர்களே என்று நீங்கள் நம்புகிறீர்களா?

 இது தொடர்பாக (1) சட்டம் இயற்றியோ அல்லது அவசரச்சட்டம் பிரகடனம் செய்தோ நீதிமன்றத்தில் நடைபெற்றுவரும் வழக்கை சீர்கேடு அடையச் செய்திட முயற்சிக்கமாட்டேன் என்றும்
 (2) உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு, அதன்முடிவு எப்படி இருந்தாலும் (தாவாவுக்குரிய இடம் முஸ்லிம்களுக்குச் சொந்தமானது என்று தீர்ப்பு அளித்தாலும்) அதனை முழுமையாக ஏற்றுக்கொள்வேன் என்றும் உங்களால் உத்தரவாதம் கொடுக்க முடியுமா?


10. காஷ்மீர் முட்டுக்கட்டை

காஷ்மீர் பள்ளத்தாக்கில் வாழும் மக்கள், சமீப ஆண்டுகளில், தாங்கள் அந்நியப்படுத்தப்பட்டதாக கருதும் அளவிற்கு முன்னெப்போதும் இருந்ததில்லை என்று பெரும்பாலான அறிஞர் பெருமக்கள் கூறுகிறார்கள். நீங்கள் இந்த மாநிலத்தை, முதலில் கூட்டணி அரசாங்கமாகவும், பின்னர் தனியாகவும், நான்கு ஆண்டு காலம்ஆட்சி செய்திருக்கிறீர்கள்.
அப்பாவி மக்கள் கொல்லப்படுவது அதிகரித்திருக்கிறது.
அதேபோன்று காஷ்மீரி இளைஞர்கள் தீவிரவாத இயக்கங்களில் இணைவதும் அதிகரித்துக் கொண்டிருக்கிறது.
மாநிலத்திற்குள் மக்களிடையே உள்ள குறைகளைத் தீர்ப்பதற்கு ஆழமானஅரசியல் முன்முயற்சி எதையும் நீங்கள் எடுத்திடவில்லை.
மாறாக, அரசமைப்புச் சட்டம் 35-ஏ-பிரிவைக் கூறி அங்கே பதற்றத்தை மேலும் அதிகரித்திட அனுமதித்தீர்கள். இந்த மாநிலத்தின் பிரச்சனைகளை எந்தவிதத்தில் தொடரலாம் என்று எண்ணிக்கொண்டிருக்கிறீர்கள்?

11. அறிவியலை உதாசீனம் செய்தல்

ஆட்சியில் உள்ளவர்களின் சொற்களும், செயல்களும் இந்திய சமூகத்தின் அறிவியல் மனோபாவத்தையே சேதப்படுத்திக் கொண்டிருக்கின்றன என்றும் கூறி பலஅறிவியலாளர்களும், அறிவியல் அறிஞர்களும் தங்கள்ஆட்சிக்கு எதிராக எதிர்ப்புக் குரல் எழுப்பியிருக்கிறார்கள்.
உங்கள் அரசாங்கம், ‘பாரம்பர்ய’ அறிவியலுக்காக  செலவு செய்வதை அதிகரித்திருக்கிறது.
பசு மூத்திரம் குறித்து ஆராய்ச்சி செய்யவும்கூட செலவு செய்திருக்கிறது. ஆனால் அரசு நிதியில் இவை தொடர்பாக மேற்கொண்ட ஆராய்ச்சிகளின் மூலமாக உருப்படியாக எதுவும் வெளிப்படுத்தப்படவில்லை.

எனினும், உங்கள் அரசாங்கமானது,
உலகத்திற்கே இந்தியாதான் அறிவியலை ‘வழங்கியது’ என்றும், நம் அறிவியலாளர்கள் நோபல் பரிசுகள் வெல்வார்கள் என்றும் எதிர்பார்க்கிறது.
 ஆராய்ச்சிக்காகவும் வளர்ச்சிக்காகவும் செலவுசெய்வது என்பது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் வெறும் 0.7 சதவீத அளவிற்கு என்று குறைந்துவிட்டது.
 போராடிக் கொண்டிருக்கிறார்கள்.
இந்த முரண்பாடுகளை எப்படி நீங்கள் சரிசெய்யப் போகிறீர்கள்?

12. தகவல்உரிமைச் சட்டம்,லோக்பால் மீதான யுத்தம்


உங்கள் கட்சியானது, எங்கள் ஆட்சியில் வெளிப்படைத் தன்மையை மேம்படுத்துவோம் என்று கூறிவரும்அதே சமயத்தில், தகவல் அறியும் சட்டத்தில் நீங்கள் கொண்டுவந்துள்ள திருத்தங்கள் அந்தச் சட்டத்தை நீர்த்துப்போகச் செய்யக்கூடிய அளவிற்கு இருக்கிறதே. பல துறைகளிடமிருந்து விவரங்களைக் கோர முடியாது என்று கூறுகின்றனவே!
 மேலும் நீங்கள், மத்திய தகவல் ஆணையத்தையும், அதில் நிலுவையில் உள்ள காலியிடங்களைப் பூர்த்தி செய்யாமல், பலவீனப்படுத்தி இருக்கிறீர்களே!

 உங்கள் சொல்லுக்கும் செயலுக்கும் இடையே ஏன் இந்த இடைவெளி?
 லோக்பால் சட்டம்2014இல் நிறைவேற்றப்பட்டது.
 இதுவரை அதற்குத் தலைவரை ஏன் உங்கள் அரசாங்கம் நியமித்திடவில்லை. இதுதொடர்பாக முன்பு ஒருமுறை நீங்கள் பேசும்போது, தெரிவுக்குழுவில் எதிர்க்கட்சித் தலைவரும் இடம் பெறுவார் என்று கூறினீர்கள். 
ஆனால் அப்படி யாரும் இல்லையே!
தரம் தாழ்ந்த பேச்சுக்கள்

13. அமெரிக்காவும் ஆசியாவும்

உங்கள் கட்சி ஆட்சிக்கு வந்த சமயத்தில், அமெரிக்கஜனாதிபதி டிரம்புடன் மிகவும் நெருக்கமான உறவினைவைத்திருந்ததுபோல் தெரிகிறது.
ஆனால் சமீபமாதங்களில், இதில் இந்தியா அடக்கி வாசிப்பதுபோலவும், சீனாவுடனும் ரஷ்யாவுடனும் நல்லிணக்கத்தை ஏற்படுத்தமுயற்சிப்பது போலவும் தோன்றுகிறது.

டிரம்பின் கொள்கைகள் இப்பிராந்தியத்தில், குறிப்பாக ஈரான், சவூதி அரேபியா, இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனம் தொடர்பாகப்பெரிய அளவில் ஸ்திரமின்மையையும் வன்முறையையும்ஏற்படுத்தும் என்றும், இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பை மட்டுமல்ல, தெற்காசியாவில் பணியாற்றும் பல லட்சக்கணக்கான இந்தியத் தொழிலாளர்களையும் பாதித்திடும்என்பதாலும் நீங்கள் சங்கடத்திற்கு உள்ளாகியிருக்கிறீர்களா?

14 .கல்வித் தகுதி?

முதலில் நீங்கள் தில்லிப் பல்கலைக்கழகத்திலிருந்து தொலைதூரக் கல்வி மூலமாக பெற்ற பி.ஏ. பட்டம் குறித்துப் பேசினீர்கள்.
குஜராத் முதலமைச்சராவதற்கு முன்பு, 2000இல் நடைபெற்ற ஒரு நேர்காணலில் எம்.ஏ.குறித்தும் பேசினீர்கள். பின் ஏன், நீங்களோ அல்லது உங்கள் அரசாங்கமோ தில்லிப் பல்கலைக் கழகத்திலிருந்து நீங்கள் பெற்ற ஒரிஜினல் ஆவணங்களை வெளியிடத் தயங்குகிறீர்கள்.


இதுதொடர்பாக எழுந்துள்ள கருத்துவேறுபாடுகளை நீங்கள் தில்லிப் பல்கலைக் கழகத்தையும், குஜராத் பல்கலைக்கழகத்தையும் உடனடியாகக் கேட்டுக்கொள்வதன்மூலம் உங்களின் பட்டம் குறித்த விவரங்களை பொதுமக்களுக்குத் தெரியப்படுத்துவதன் மூலம், சரி செய்திருக்க முடியாதா?
 ஏன் இதை நீங்கள் செய்யவில்லை?

15. தரம் தாழ்ந்த பேச்சுக்கள்

நீங்கள் சமீபத்தில் சோனியா காந்தியை விளிக்கும்போது, ‘‘காங்கிரஸ் விதவை’’ என்று குறிப்பிட்டீர்கள்.

இப்போது உங்களுக்குப் போட்டியாக இருந்துவரும் சோனியா மற்றும் ராகுல் காந்தியை மட்டுமல்ல, முன்புஆட்சி செய்த ராஜீவ், இந்திரா காந்தி மற்றும் ஜவஹர்லால் நேருவைக் கூட தாக்கி இருக்கிறீர்கள்.

பாஜகவின் செய்தித்தொடர்பாளர்களில் ஒருவர், நேருவை, ‘‘இந்துஸ்தானின் கொள்ளைக்காரன்’’  என்றுகூட விளித்தார். சசி தரூர் மணம் செய்திட முடிவு செய்திருந்த பெண்ணைக் குறித்து, நீங்கள்ஒருமுறை, ‘‘50 கோடிக்கான பெண் நண்பர்’’ என்று கூட அழைத்தீர்கள்.
 நீங்களும் உங்கள் கட்சியைச் சேர்ந்தவர்களும் இப்படித்தான் பேசிக்கொண்டிருப்பீர்களா?
 நீங்கள் ஏற்றுள்ள பிரதமர் பதவியின் கண்ணியத்தை இது காப்பாற்றுமா?
உங்களுடையஅதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் உங்களைப் பின்பற்றும் சிலர் மிகவும் பழிதூற்றுகிற, மதவெறியுடன் கூடிய, பெண்களுக்கு எதிரான சொற்களை உதிர்க்கிறார்களே, இது போன்றவர்களை நீங்கள் ஏன் பின்தொடர்கிறீர்கள்?

நன்றி: தி ஒயர் இணைய இதழ்
தமிழில்: ச.வீரமணி

====================================================
ன்று,
டிசம்பர்-29.

தாமஸ் ஆல்வா எடிசன் வானொலிக்கான காப்புரிமம் பெற்றார்(1891)


மங்கோலியா, கிங் வம்சத்திடம் இருந்து விடுதலை பெற்றது(1911)


ஐரிய  நாடு அயர்லாந்து குடியரசு எனப் பெயரை மாற்றியது(1937)


 உலகின் மிகப் பெரிய செப்பினாலான புத்தர் சிலை ஹாங்காங்கில் அமைக்கப்பட்டது(1993)

====================================================
"மீண்டும் சோவியத்நாடு வேண்டும்’
ரஷ்யாவில் பெரும்பாலான மக்கள் மீண்டும் முந்தைய சோசலிச சோவியத் அமைப்பு வரவேண்டும் என்று விருப்பம் தெரிவித்துள்ளனர். அதாவது, 66 சதவீத மக்கள் இவ்வாறு கருத்துத் தெரிவித்துள்ளனர். 

சோசலிச சோவியத் அமைப்பைக் கலைத்துவிட்டது குறித்துத் தாங்கள் கவலைப்படுவதாகவும் அவர்கள் கூறுகின்றனர்
. ‘லாவதா சென்டர்’ என்றசுயேச்சையான அமைப்பு நடத்திய கருத்துக் கணிப்பில் இது தெரிய வந்துள்ளது.

அதிகாரத்தில் உள்ள ஜனாதிபதி புடின் அரசு தொழிலாளர்களுக்கு எதிரான ஆட்சியே நடத்துகிறது.

இந்த அரசு வறுமையில் வாடும் மக்களை மேலும் அதிக வறுமையில்தான் தள்ளுகிறது. 
முதலாளிகளை மேலும்மேலும் வளர்க்கிறது. 


தொழிலாளர் களின் குடும்ப வருமானம் குறைந்து கொண்டே போகிறது என்றும் அந்த ஆய்வில் மக்கள் கருத்துத் தெரி வித்துள்ளனர்.

 சோவியத்நாடு பெற்ற சமூக சாதனைகளெல்லாம் இப்போது இல்லை என்று அதிருப்தி தெரி விக்கின்றனர்.

1991 டிசம்பர் 25-இல்தான் சோவியத்நாடு என்ற சோசலிச அமைப்பைக் கலைத்துவிட்டதாக அன்றைய ஜனாதிபதி கோர்ப்பசேவ் அறிவித்தார்.

 ரஷ்ய மக்களிடம் கடந்த ஆண்டு நடத்திய கருத்துக் கணிப்பு ஆய்வில் சோவியத் அமைப்பைக் கலைத்துவிட்டதை எதிர்த்து 58 சதவீதம் மக்கள் கருத்துத் தெரிவித்திருந்த னர்.
 இவ்வாண்டு தற்போதைய கரு த்துக் கணிப்பில் அது 66 சதவீதமாக அதிகரித்துள்ளது.
-------------------------------------------------------------------------------------------------------------------------------------

வாஸ்துவே சரணம்.
டில்லியில் புதிதாக கட்டப்பட்ட அலுவலகமே, சமீபத்திய தோல்விகள் அத்தனைக்கும் காரணம் என்று பாஜக-வினர் காரணம் கண்டுபிடித்துள்ளனர்.
தில்லியில் புதிதாக திறக்கப்பட்ட அலுவலகத்தில் வாஸ்து சரியில்லை என்று கூறும் அவர்கள், மீண்டும் பழைய அலுவலகத்திற்கே சென்றுவிடலாம் என்று கூறத் துவங்கியுள்ளனர். பாஜக தலைமையும் இதுதொடர்பாக தீவிர யோசனையில் இறங்கியிருப்பதாக செய்திகள் வெளியாகி இருக்கின்றன.

பாஜக-வின் தலைமை அலுவலகம் தில்லியின் மையப்பகுதியான ‘எண் 11, அசோகா சாலை’யில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வந்தது.

இந்நிலையில், மோடி ஆட்சிக்கு வந்ததற்குப் பின், இந்த இடத்திலிருந்து ஐந்து கி.மீ. தொலைவில் உள்ள தீன்தயாள் உபாத்யாய் மார்க்கில் கடந்த பிப்ரவரி 19-ஆம் தேதி பாஜக தனது புதிய தலைமை அலுவலகத்தை திறந்தது.
அமித்ஷாவால் அடிக்கல் நாட்டப்பட்டு, பிரதமர் மோடி திறந்து வைத்த அலுவலகம் இது.

 1100 கோடி ரூபாய் செலவில், 2 ஏக்கர் பரப்பளவில் 1 லட்சத்து 70 ஆயிரம் சதுர அடியில், அதி நவீன வசதிகளுடன் 4 மாடிகள், 70 அறைகளைக் கொண்டதாக இந்த அலுவலகம் கட்டப்பட்டுள்ளது 

இவ்வளவு பெரிய, அதி நவீன அலுவலகம், உலகிலேயே வேறெந்த கட்சிக்கும் இல்லை என்றெல்லாம் அலுவலகத் திறப்பு விழாவின்போது பாஜக-வினர் பெருமை பேசினர்.ஆனால் இந்த அலுவலகத்திற்கு மாறியபின்புதான், தங்களுக்கு சோதனைகள் ஆரம்பித்ததாக பாஜக-வினர் கூறுகின்றனர்.

இந்தக் காலத்தில்தான், சிவசேனாவுடன் மோதல் துவங்கியது. கர்நாடகாவில், தோல்வி கிடைத்தது.

தெலுங்கு தேசம் கட்சி, ராஷ்ட்ரிய லோக் சமதா கட்சி ஆகியவை கூட்டணியிலிருந்து விலகின.
 கோரக்பூர், பூல்பூர் துவங்கி கைரானா வரைக்கும் நாடாளுமன்ற இடைத்தேர்தல்களிலும், அண்மையில் நடைப்பெற்ற 5 மாநிலத் தேர்தல்களிலும் பாஜக தோற்றது.

 பாஜக கோட்டைகளான சத்தீஸ்கர், ராஜஸ்தான், மத்தியப்பிரதேச மாநிலங்களிலேயே அக்கட்சி மண்ணைக் கவ்வியது. எல்லாவற்றுக்கும் மேலாக எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்ந்து இருக்கின்றன.
அதிலும் குறிப்பாக, ‘பப்பு’ என்றுகூறப்பட்ட ராகுல் காந்தி பெரிய அளவில் புகழடைந்து இருக்கிறார் என்பதையெல்லாம் பாஜகவினர் இணைத்துக் காட்டுகின்றனர்.

அந்த வகையில், தங்களின் தோல்விக்கு, தாங்கள் நடத்திய மக்கள் விரோத ஆட்சிதான் காரணம் என்பதை புரிந்துகொள்ளாத அவர்கள், புதிய அலுவலகத்தில் வாஸ்து பிரச்சனை இருப்பதே தொடர் தோல்விகளுக்கு காரணம் என்று கூறி வருகின்றனர்.

மேலும், இந்த புதிய அலுவல கத்தில் இருந்தவாறே 2019 நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொண்டால், தோல்வி நிச்சயம் என்ற பீதிக்கு உள்ளாகியிருக்கும் அவர்கள், அசோகா சாலையில் இருக்கும் பழைய கட்டடத்திற்கே தலைமையகத்தை மாற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தத் துவங்கியுள்ளனர்.

எதிலும் மூடநம்பிக்கைகள் மிகுந்த பாஜகவினர் வாஸ்து எல்லாமே பார்க்கமலா இக்கட்டிடத்தைக்கட்டியிருப்பார்கள்.
பலி கூட கொடுக்கப்பட்டதாக செய்திகள் உள்ளன.

கட்டிடத்தை மாற்றுவார்களேத்தவிர பாஜகவினரும்,மோடியும் தங்கள் மக்கள் விரோத ஆட்சிக்கு கொள்கைகளை மாற்றுவதாகத்தெரியவில்லை.
தோல்விக்கு அதுதான் காரணம் என்பதை கூட உணரமுடியாத அறிவார் குழுதான் ஆர்.எஸ்.எஸ்.வழிகாட்டல் குழுவா?

-------------------------------------------------------------------------------------------------------------------------------------