பொய்ப் பிரமாணம்
எடுத்துள்ள ஆளுநர் ஆர் யன்.ரவி. வாயைத் திறந்தாலே பொய்யும் புளுகும்தான் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு வருகிறது. இந்தத் திறமையில் பாஜக தமிழ்நாடு தலைவரையே புறங்காண வைத்திடுவார் போல் இருக்கிறது . ஒரு சம்பவத்தை வைத்து அவர் நூற்றுக்க ணக்கான பொய்களைச் சொல்லத் தொடங்கி விட்டார். ஆளுநர் மாளிகை இருக்கும் சாலையில் கடந்த 25 ஆம் தேதி என்ன நடந்தது? 25.10.2023 அன்று மதியம் 3 மணியளவில், கருக்கா வினோத் (42 வயது – - E-–3 தேனாம்பேட்டை காவல் நிலையத்தின் வழக்கமான குற்றவாளி) என்பவர் ஆளுநர் மாளிகை அருகே தனியாக சாதாரணமாக நடந்து வந்தார். பெட்ரோல் நிரப்பிய நான்கு பாட்டில்களைக் கொண்டு வந்து, அவற்றை ஆளுநர் மாளிகை அமைந்துள்ள சர்தார் படேல் சாலையில் எதிர்ப்புறத்தில் இருந்து எறிய முயன்றார். ஆளுநர் மாளிகையின் வெளிப்புறத்தில் பாதுகாப்புப் பணியில் இருந்த தமிழ்நாடு காவல்துறை போலீசாரால் தடுக்கப்பட்டார். அப்போது சம்பவ இடத்திற்கு எதிரே சற்று தூரத்தில் இருந்து இரண்டு பாட்டில்களை வீசினார். அவை ஆளுநர் மாளிகையின் அருகே சர்தார் படேல் ...