கருப்பு வரலாறு

 நாக்பூரில் நடைபெற்ற விஜயதசமி தின நிகழ்வில் ஆர்எஸ்எஸ் தலைவர் பேசிய பேச்சை, அதன் அதிகாரப்பூர்வ மான அறிவிப்புகள் என்றே எடுத்துக்கொள்ள வேண்டும்.

 2023 அக்டோபர் 24 அன்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் மோகன் பகவத் பேசிய பேச்சு,  ஆர்எஸ்எஸ்-இன் நாசகர உலகக் கண்ணோட்டத் தின் வழிகாட்டுதலின் அடிப்படையிலேயே மோடி அரசாங்கம் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது என்பதை முழுமையாக அடையாளப்படுத்தும் விதத்தில் அமைந்திருந்தது.

இந்தத் தடவை அவர் ஆற்றிய உரையின்போது, “இந்தியாவை நம்முடைய ஒரு மாபெரும் வல்லர சாக மாற்றுவதற்காக அல்லும் பகலும் அயராது பாடு பட்டுக்கொண்டிருக்கும் பாஜக மற்றும் அதன் அர சாங்கத்தின் பின்னே, ஆர்எஸ்எஸ்-இன் அனைத்து  அணிகளும் அணிதிரள வேண்டும்,” என்று அவர் அறைகூவல் விடுத்திருப்பது, வரவிருக்கும் மக்கள வைத் தேர்தலுக்கு முன் தங்கள் தொண்டர்கள் அனைவரையும் முடுக்கிவிட வேண்டும் என்ற நோக்கத்துடனேயே என்பது தெளிவாகிறது.

இவ்வாறு பேசியுள்ள மோகன் பகவத் மேலும், “இந்தியா முன்னேறுவதை விரும்பாத சிலர் ‘ஒரு புதிய அச்சுறுத்தலாக உருவாகியிருப்பதாக’வும் கூறி இருக்கிறார். “அவர்கள் சமூகத்தில் பேதங்களை உருவாக்க முயற்சித்துக் கொண்டிருக்கிறார்கள்,” என்றும், “தற்போது ஆக்கப்பூர்வமாகவுள்ள கட்ட மைப்பை உடைக்கவும், அவர்களைத் தனித்தனியே பிரித்து மோதலை உருவாக்கவும் முயற்சித்துக் கொண்டிருக்கிறார்கள்,” என்றும் திருவாய் மலர்ந்திருக்கிறார்.

“இந்த நாசகர சக்திகளை” அவர் ‘கலாச்சார மார்க்சிஸ்ட்டுகள்’ (‘cultural Marxists’) அல்லது ‘விழித்தெழு’ (‘woke’) இயக்கத்தைச் சேர்ந்தவர்கள், அல்லது ‘விழிப்படைந்திருக்கும்’ (‘awakened ones’) இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் வர்ணித்தி ருக்கிறார். 

“அவர்கள் செயல்படும் முறை (modus operandi) என்பது கல்வி, கலாச்சாரம், அரசியல் மற்றும் சமூக சூழலை குழப்பத்திற்கும், ஊழலுக்கும் உட்படுத்தி, ஊடகங்களையும், கல்வித்துறையையும் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதென்ப தாகும்,” என்றுகூறி இந்த சக்திகள் எப்படிச் செயல்படு கின்றன என்பதற்கு ஒரு கருப்புச் சித்திரத்தையும் வரைந்திருக்கிறார்

மோகன் பகவத் நகலெடுத்து பின்பற்றி இருக்கிறார். மேலும், கல்வி முறையை காவிமயப்படுத்துவதற்கும், ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகம் போன்ற பல்கலைக் கழகங்களைக் குறி வைத்துத் தாக்குவ தற்கும் ஆர்எஸ்எஸ் மேற்கொண்டுவரும் முயற்சி களை நியாயப்படுத்துவதற்காகவும் இவ்வாறு பேசி யிருக்கிறார்.  

கல்வித்துறையைப் போலவே, ஊடகங்களையும் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்து ஒடுக்கு முறைக்கு உட்படுத்த வேண்டும் என்பதையே ‘நியூஸ்கிளிக்’ தாக்கப்பட்ட விதத்திலிருந்து பார்க்கிறோம்.

ஆர்எஸ்எஸ் தலைவரின் உண்மையான இலக்கு இடதுசாரிகள்தான். சமீபத்தில் புனேயில் ஒரு புத்தக வெளியீட்டுவிழாவில் அவர் பேசும்போது, கல்வி அமைப்புமுறைக்குள்ளும், மற்றும் பல நிறுவனங்க ளுக்குள்ளும் ஊடுருவியிருக்கின்ற ‘இடதுசாரி சுற்றுச் சூழல் அமைப்பு’ (“Left ecosystem”)க்கு எதிராகப் போராட வேண்டும் என்று அறைகூவல் விடுத்தி ருக்கிறார்.

ஆண்டாண்டு காலமாய் ஒடுக்குமுறைக்கு ஆளாகியிருந்த பல்வேறு சமூகக் குழுக்கள் தற்போது சமூக நீதிக்காகப் போராட முன்வந்திருப்பது குறித்து ஆர்எஸ்எஸ் கவலைப்படுவது அதிகரித்துக் கொண்டி ருக்கிறது.

 மேலும் அது, எந்த மாநில அரசாங்கமாவது அல்லது மாநிலக் கட்சியாவது தங்கள் மாநிலத்தின் அபிலாசைகளை வெளிப்படுத்தினால் அதனைப் பிளவுவாத சிந்தனை (divisive) என்ற முறையில் பார்க்கிறது. 

அதனால்தான் மணிப்பூரில் நடைபெற்ற வன்முறை மற்றும் சச்சரவுகளுக்கு, வட கிழக்கு இந்தியாவில் பாஜக-வும் சங்கிகளும் மேற்கொண்டு வந்த குறுகிய அடையாள அரசியல் காரணம் அல்ல, மாறாக வெளிப்புற மற்றும் சீர்குலைவு (external and disruptive) சக்திகளே காரணம் என்று மோகன் பகவத் கூறியதில் ஆச்சரியப்படுவதற்கு எதுவும் இல்லை.

இவ்வாறு மோகன் பகவத் கூறிய அதே கருத்துக்க ளைத்தான் அவர் கூறிய அதே நாளன்று தில்லியில் தசரா பொதுக்கூட்டம் ஒன்றில் பேசும்போது நரேந்திர மோடியும் எதிரொலித்திருக்கிறார்.

 ‘சாதியம்’ (‘casteism’) என்ற பெயராலும் ‘பிராந்தியவாதம்’ (regionalism) என்ற பெயராலும் நாட்டைத் துண்டாட முயற்சிக்கும் சக்திகளைத் தோற்கடிப்பது பற்றி  அவர் பேசியிருக்கிறார். 

உலகில் மூன்றாவது மிகப் பெரிய பொருளாதார நாடாக இந்தியாவை தான் மாற்ற முயற்சித்துக் கொண்டிருக்கும் சமயத்தில், நாட்டை சாதியத்தின் மூலம் பிளவுபடுத்துவதற்கு ஒரு கருவி யாக சாதிக் கணக்கெடுப்பு (caste census) கோரிக்கை வந்திருப்பதாக மோடி பார்க்கிறார்.  

மோகன் பகவத் மற்றும் நரேந்திர மோடி ஆகிய இருவருக்குமே, ராமர் கோவில் திறக்கப்படுவ தென்பது தேசிய மறுமலர்ச்சியின் சின்னமாகும். சீர்குலைவு சக்திகளுக்கு எதிராக, ‘கலாச்சார ஒற்றுமை’யின் சின்னமாக இதனை அவர்கள் முன்வைக்கின்றனர்.

மோகன் பகவத் மற்றும் நரேந்திர மோடி ஆகிய இருவரின் பேச்சுக்களுமே, இந்தியாவை இந்துத்துவா எதேச்சதிகார அரசாக நிறுவ வேண்டும் என்பதற் கான நடவடிக்கைகளின் ஒரு பகுதியே என்பதும், அதற்காகத்தான் அவர்கள் நாட்டில் தற்போதுள்ள கல்வி முறையையும் பன்முகக் கலாச்சார வலைப் பின்னலையும் ‘அன்னிய சிந்தனைகள்’ என்று கூறி அவற்றைக் களையெடுத்திட வேண்டும் என்றும் கூறி குறிவைத்திருக்கிறார்கள் என்பதும் தெளிவாகும். 

இத்தகைய நாசகர நோக்கத்தை நிறைவேற்றிட வேண்டும் என்பதற்காகவே ஆர்எஸ்எஸ் மற்றும் மோடி அரசாங்கம் இறங்கியிருக்கிறது என்பது இப் போதுமுழுமையாகவேவெளிப்படுத்தப்பட்டுள்ளது.  

--------------------------------------------

காவலர்களுக்கு பாராட்டு

பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம்: விரைந்து செயல்பட்ட காவலா்களுக்கு பாராட்டு
சென்னை கிண்டியில் ஆளுநா் மாளிகை முன் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவத்தில் சிறப்பாகச் செயல்பட்டு குற்றவாளி கருக்கா வினோத்தை மடக்கிப் பிடித்து, கைது செய்த போலீஸாரை காவல் ஆணையா் சந்தீப் ராய் ரத்தோா் பாராட்டினாா்.


நந்தனம் பகுதியைச் சோ்ந்த ரெளடி கருக்காக வினோத், சென்னை கிண்டி சா்தாா் படேல் சாலையில் உள்ள ஆளுநா் மாளிகை முதலாவது நுழைவு வாயில் பகுதியில் அக்.25-ஆம் தேதி இரு பெட்ரோல் குண்டுகளை வீசினாா். இதைப் பாா்த்த அங்கிருந்த போலீஸாா், கருக்கா வினோத்தை மடக்கிப் பிடித்து கைது செய்து, அவரிடமிருந்து பெட்ரோல் குண்டுகளை பறிமுதல் செய்தனா்.
இது தொடா்பாக கிண்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, கருக்கா வினோத்தை கைது செய்து சிறையில் அடைத்தனா்.
இந்தச் சம்பவத்தில் துணிச்சலாகச் செயல்பட்டு, குற்றவாளியை மடக்கிப் பிடித்த சென்னை காவல் துறையின் மத்திய குற்றப்பிரிவு உதவி ஆய்வாளா்கள் கனகராஜ், ராஜி, தலைமைக் காவலா்கள் எஸ்.பஞ்சாட்சரமூா்த்தி, மோகன், முதல்நிலைக் காவலா் சங்கா், ஆயுதப்படை காவலா்கள் எஸ்.சில்வானு, எஸ்.அஜித், சுரேஷ்குமாா் ஆகியோரை சென்னை பெருநகர காவல் துறை ஆணையா் சந்தீப் ராய் ரத்தோா் சனிக்கிழமை நேரில் அழைத்து பாராட்டினாா். மேலும் அவா்களுக்கு வெகுமதியும், பாராட்டுச் சான்றிதழ்களையும் அவா் வழங்கினாா்.



இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?