சட்டம் ஒழுங்கை கெடுப்பதே

 பாலஸ்தீனம் மீதான இஸ்ரேல் தாக்குதலை உலக நாடுகள் உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்.

"அதானிக்கு இந்தியாவில் 'பூர்த்தி செய்யப்படாத காசோலை'(பிளாங் செக்) வழங்கப்பட்டுள்ளது.அதானி, நாட்டில் மின்சாரம், துறைமுகம்,  என எதையும் செய்ய முடியும். அதானி மீது எந்த விசாரணையும் இருக்காது. நான்ஒரே ஒரு கேள்வியைமட்டும் கேட்கிறேன் - அதானி வழக்கை ஏன் பிரதமர் மோடி விசாரிக்கச் சொல்லவில்லை?---ராகுல்காந்தி.

மதவெறிஅரசியலுக்காக நீதிமன்றத்தை தவறாக பயன்படுத்துகிறார்கள்: சனாதன வழக்கில் உதயநிதி ஸ்டாலின் பதில் மனு .

ஜிஎஸ்டியால் 25 %.அதனால் விலை உயர்வு ரூ.1000 கோடி மதிப்பிலான ஜவுளிகள் தேக்கம்.

 பள்ளி வளாகத்தில் தேக்கு மரங்களை வெட்டி கடத்திய தலைமை ஆசிரியர் பணியிடைநீக்கம்.

திருமங்கலம் அருகே கோழிக்கறி சாப்பிட்ட கரூரை சேர்ந்த தந்தை, மகள் அடுத்தடுத்து சாவு.

பாஜகவில் இணைந்த ரவுடிகளின் பட்டியல்....சி.பி.எம்.கனகராஜ் வெளியிட்டார்.தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கை கெடுப்பதே பாஜக,RSS,இந்துமுன்னணி சங்கிக் கூட்டம்தானே?


மெட்ரோ ரயில் பணிகள் காரணமாக நாவலூரில் உள்ள சுங்கச்சாவடியில் இன்று முதல் கட்டணம் வசூலிக்கப்படாது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

தேர்தல் பத்திரம்- ஜனநாயகம் பத்திரமா?

தேர்தல் பத்திரங்கள் மூலம் பாஜக கார்ப்பரேட் முதலாளிகளிடம் தேர்தல் நிதியாக பெரும் தொகையை சுருட்டி வருகிறது. 

இந்த முறை கூடாது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. 

தேர்தல் பத்திர முறையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்ட போது, இதை விசாரிக்க அவசரம் இல்லை என உச்சநீதிமன்றம் கூறிவிட்டது.

தற்போது சில மாநில சட்டமன்றத் தேர்தல்களும், நாடாளுமன்றத் தேர்தலும் நெருங்குகிற நிலையில் இந்த வழக்கை உடனடியாக விசாரிக்க வேண்டும் என மனுதாரர்கள் கேட்டுக் கொண்டதால் இந்த வழக்கை அரசியல் சட்ட அமர்வு விசாரிக்கும் என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.

 இப்போதாவது விசாரிக்க முன்வந்திருப்பது வரவேற்கத்தக்கது. 

தேர்தல் பத்திரம் மூலம் நிதி கொடுத்தவர்கள் யார் என்பது வெளியில் தெரிவிக்கப்படமாட்டாது. 

ஆனால் ஒன்றிய அரசு இந்த விபரத்தை பெற்று எதிர்க்கட்சிகளுக்கு நிதி கிடைக்காமல் பார்த்துக் கொள்ள முடியும்.

 அரசியல் கட்சிகள் ரூ.12 ஆயிரம் கோடி தேர்தல் பத்திரம் மூலம் நிதி பெற்றிருப்பதாகவும் இதில் மூன்றில் ஒரு பங்கை ஒரே கட்சி பாஜக மட்டுமே பெற்றிருப்பதாகவும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

2024 தேர்தலுக்கு முன்பாக இந்த வழக்கு விசாரிக்கப்பட்டு நல்ல சரியான தீர்ப்பளிக்கப்படுமானால் ஜனநாயகத்திற்கு அது நல்லதாக அமையும்.  

-------------------------------------------------


இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?