"மூன்றாவது இன்டிஃபாடா"

 தமிழக சட்டப்பேரவை இன்று கூடுகிறது: காவிரி விவகாரம் தொடர்பாக தீர்மானம் தாக்கலாகிறது .

தெலங்கானா, மிசோரம், ராஜஸ்தான் உள்ளிட்ட 5 மாநில சட்டப்பேரவைகளுக்கான தேர்தல் தேதியை இன்று பகல் 12 மணிக்கு  அறிவிக்கிறது இந்திய தேர்தல் ஆணையம்.

ஆப்கனில் நிலநடுக்கம்.12 கிராமங்கள் முற்றிலும் அழிவு.தோண்ட தோண்ட உடலங்கள்.. எங்கும் மரண ஓலம்.ஆப்கனில் நிலநடுக்கத்தால் 2,400 பேர் உயிரிழப்பு.

ஜெகத்ரட்சகன் எம்.பி. தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறை 5வது நாளாக சோதனை.

இஸ்ரேல் - பாலஸ்தீன போர் . கச்சா எண்ணெய் விலை 5% ஏற்றம்.

  • இஸ்ரேல் போர்.இந்தியா விமான சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.
  • மேகாலயாவில் நிலச்சரிவு: வீடு இடிந்து விழுந்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழப்பு
  • இந்திய விமானப்படையின் புதிய கொடியை விமானப்படை தளபதி அறிமுகப்படுத்தினார்.
  • உத்தரகாண்டில் பள்ளத்தில் கவிழ்ந்த பேருந்து : 3 பேர் உயிரிழப்பு; 18 பேர் காயம்

----------------------------------

இந்தியாவில் வறட்சி?

இந்திய வானிலை ஆய்வு மையம் கண்காணித்துவரும் நாட்டின் 718 மாவட்டங்களில் 500 க்கும் மேற்பட்ட மாவட்டங்கள் தீவிரமான வறட்சியில் உள்ளன. மேலும் இந்தியாவின் 53% மாவட்டங்கள் மிதமான வறட்சி நிலையைக் கொண்டுள்ளன என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஜூன் 1 முதல் செப்டம்பர் 25, 2023 வரை, இந்தியாவின் ஐந்து மாநிலங்களில் மழைப் பொழிவு குறைவாகவே பதிவாகியுள்ளது. 20 மாநிலங்களில் மழைப்பொழிவு சராசரியைவிடக் குறைவாக இருந்துள்ளது. இதனால் விவசாய உற்பத்தி பாதிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

இது குறித்து மத்திய புவி அறிவியல் அமைச்சகத்தின் முன்னாள் செயலாளர் ராஜீவன் கூறுகையில், “நிச்சயம் இது நல்ல சூழல் இல்லை. இவை பயிர் உற்பத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தும். இதனை நாம் விவசாயத்துடன் பொருத்திப் பார்க்க வேண்டும்” என்று குறிப்பிடுகிறார்.

 இதற்கிடையில் 2023இல் குறைவாக மழைப்பொழிந்ததுதான் பயிர் உற்பத்தி குறைவுக்குக் காரணம் என்று நிபுணர்களும் கூறியுள்ளனர்.

காலநிலை மாற்றம்: விலங்குகள் இடப்பெயர்வு - தென் ஆப்பிரிக்க நாடான ஜிம்பாப்வேயில் காலநிலை மாற்றத்தினால் நிலவும் கடும் வறட்சியினால் நீர், இரைத் தேடி யானைகள் பெரும் எண்ணிக்கையில் இடப்பெயர்வில் ஈடுபட்டுள்ளன. 

யானைகள் மட்டுமல்ல எருமைகள், காட்டெருமைகள், வரிக் குதிரைகள் போன்ற விலங்குகள் பலவும் அங்குள்ள தேசியப் பூங்காவிலிருந்து வெளியேறி அண்டை நாடான போட்ஸ்வானாவுக்குச் செல்வதாக அந்நாட்டின் வனவிலங்கு ஆணைய செய்தித் தொடர்பாளர் டினாஷே ஃபராவோ வருத்தத்துடன் பகிர்ந்துள்ளார்.

வறட்சி காலத்தில் இடப்பெயர்வுகள் பொதுவானவை என்றாலும், முந்தைய மழைக்காலங்களில் ஏற்பட்ட மோசமான வறட்சியினால் இந்த ஆண்டு விலங்குகளின் இடப்பெயர்வு முன்னதாகவே நடைபெற்றுவருவதாக விலங்கியல் ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

---------------------------------------------

டாஸ்மக் கடையை திறங்க.

கடையடைப்பு போராட்டம்

கொத்தமங்கலத்தில் டாஸ்மாக் கடையை மீண்டும் திறக்க வேண்டும் என வலியுறுத்தி வணிகர்கள் நேற்று கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 புதுக்கோட்டை மாவட்டம் கொத்தமங்கலம் கடைவீதியில் செயல்பட்டு வந்த 2 டாஸ்மாக் கடைகள் பொதுமக்களின் எதிர்ப்பால் 2017-ல் மூடப்பட்டன. 

அதன்பிறகு கடந்த 6 மாதங்களுக்கு முன்பு முத்துமாரியம்மன் கோயில் பகுதியில் டாஸ்மாக் கடை திறக்கப்பட்டது. அதற்கு எதிர்ப்பு கிளம்பியதால் அன்றைய தினமே கடை மூடப்பட்டது.

பின்னர், அதே கடை கடந்த 2 வாரங்களுக்கு முன்பு திறக்கப்பட்டது.

 இக்கடையை பொதுமக்கள் முற்றுகையிட முயன்றதால் தற்காலிகமாக கடை மூடப்பட்டது. தொடர்ந்து, காந்தி ஜெயந்தியையொட்டி நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் டாஸ்மாக் கடையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி தீர்மானம் கொண்டுவரப்பட்டது.

இந்நிலையில், டாஸ்மாக் கடையை மீண்டும் திறந்து செயல்படுத்த வேண்டும் என வலியுறுத்தி வணிகர்கள் நேற்று கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இப்போராட்டத்தால், மருந்து, பால் பொருட்கள் விற்பனை செய்யும் கடை உள்ளிட்ட ஒரு சில கடைகளைத் தவிர ஏனைய கடைகள் மூடப்பட்டன.

 கடைகள் மூடப்பட்டதால் கடைவீதி வெறிச்சோடி காணப்பட்டது.

இதுகுறித்து வணிகர்கள் கூறியபோது,“இக்கிராமத்தில் டாஸ்மாக் கடை மூடப்பட்டிருந்தாலும் சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்யப்படுகிறது. இதனால், கூடுதல் விலை கொடுத்து வாங்கி, போலியான மதுபானங்களை மக்கள் பயன்படுத்துகின்றனர். 

இதைத் தடுப்பதற்காகவே டாஸ்மாக் கடையை திறக்க வலியுறுத்துகிறோம்” என்றனர்.
இதைத்தொடர்ந்து, ஆலங்குடி வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்டாட்சியர் விஸ்வநாதன் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. 

அதில், கொத்தமங்கலத்தைச் சேர்ந்த இரு தரப்பினரும் கலந்துகொண்டு, கருத்துகளை தெரிவித்தனர். அப்போது, “15 நாட்கள் டாஸ்மாக் கடை தொடர்ந்து மூடியே இருக்கும்.
அதற்குள் டாஸ்மாக் கடை தேவையில்லை என்போர் நீதிமன்றத்தை நாட வேண்டும். நீதிமன்றம் பிறப்பிக்கும் உத்தரவை செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்” என வட்டாட்சியர் உத்தரவிட்டார்.

---------------------------------

நம்ப முடியாத செயல்.

பாலஸ்தீனத்தின் காஸா முனையிலிருந்து வான், நிலம், கடல் வழியாக என ஹமாஸ் அமைப்பு நடத்திய பலமுனைத் தாக்குதல் இஸ்ரேலை நிலைகுலைய வைத்திருக்கும் நிலையில், இந்தத் தாக்குதலை முன்கூட்டியே கண்டறிய தவறியது .


இஸ்ரேல் உளவு அமைப்புகளின் முழுமையான தோல்வி என சா்வதேச ஊடகச் செய்திகளும், நிபுணா்களின் கருத்துகளும் தெரிவிக்கின்றன.
காஸா முனை பகுதியை தங்களது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஹமாஸ் அமைப்பு, அங்கிருந்து சனிக்கிழமை காலை சுமாா் 5,000-க்கும் மேற்பட்ட ராக்கெட்டுகளை இஸ்ரேலை நோக்கி ஏவினா்.

அதேவேளையில், நிலம், கடல் வழியாகவும், பாராகிளைடா்களைப் பயன்படுத்தி வான் வழியாகவும் தெற்கு இஸ்ரேலுக்குள் ஹமாஸ் படையினா் நுழைந்தனா். எல்லைப் பகுதிகளில் இருந்த ஏராளமான இஸ்ரேல் வீரா்களையும் ஹமாஸ் படையினா் சிறைபிடித்துச் சென்றனா்.

ஹமாஸின் தாக்குதலில் ராணுவ வீரா்கள் உள்பட 350 இஸ்ரேலியா்கள் கொல்லப்பட்டனா். 1,900-க்கும் மேற்பட்டோா் காயமடைந்துள்ளனா். 

கடந்த 50 ஆண்டுகளில் இஸ்ரேலுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்திய தாக்குதல் இது. இஸ்ரேலின் பதிலடி தாக்குதலில் காஸா முனையில் சுமாா் 300 போ் கொல்லப்பட்டனா். 1,500 போ் காயமடைந்துள்ளனா்.

இஸ்ரேல் தனது உள்நாட்டு உளவு அமைப்பான ஷின் பெட், வெளிநாடுகளுக்கான உளவு அமைப்பான மொசாத் ஆகியவை மீது எப்போதுமே சுயபெருமை கொண்டிருக்கும். ஆனால், இந்த உளவு அமைப்புகளின் கண்ணில் மண்ணைத் தூவிவிட்டு ஹமாஸ் நடத்திய பலமுனைத் தாக்குதல் இஸ்ரேலை அதிா்ச்சியடைய வைத்துள்ளது.

இந்த பிராந்தியத்தில் இஸ்ரேல் வலிமையான ராணுவத்தைக் கொண்டுள்ளது. எல்லைப் பகுதியில் கண்காணிப்பு கேமராக்கள், தொ்மல் இமேஜிங்/மோஷன் சென்சாா் போன்ற அதிநவீன தொழில்நுட்பங்கள், வலுவான எல்லை வேலி போன்றவற்றையும் மீறி ஹமாஸ் படையினா் இஸ்ரேலுக்குள் புகுந்துள்ளனா்.

காரணம் என்ன?: ஈரானை எதிா்கொள்வதிலும், ஈரானின் அணுசக்தித் திட்டத்தை முறியடிக்கும் முயற்சிகளிலும் இஸ்ரேல் முழுமையாக மூழ்கிவிட்டதால், பாலஸ்தீனத்தின் ஹமாஸ் மீதான கண்காணிப்பைத் தவறவிட்டுவிட்டதாக நிபுணா்கள் சிலா் தெரிவித்துள்ளனா்.
‘ஹமாஸ் மற்றும் பிற இஸ்லாமிய அமைப்புகள் அடுத்த தாக்குதலுக்கு தங்களை வலுப்படுத்திக் கொள்ள ஒவ்வொரு முறையும் சண்டைநிறுத்தத்தைப் பயன்படுத்திக் கொள்கின்றன என எச்சரித்த பின்னரும், அண்மையில் ஹமாஸுடன் இஸ்ரேல் சண்டைநிறுத்தம் செய்துகொள்ள ஒப்புக்கொண்டது. 

உள்நாட்டு அரசியல் நிா்ப்பந்தங்கள் காரணமாக இந்த எச்சரிக்கையை இஸ்ரேல் அரசு புறந்தள்ளியது’ என வேறுசில நிபுணா்கள் கூறியுள்ளனா்.
ஹமாஸ் தாக்குதலைத் தொடா்ந்து சனிக்கிழமை இரவு நடைபெற்ற பாதுகாப்புக்கான அமைச்சரவைக் கூட்டத்தில், இஸ்ரேல் உளவு அமைப்புகளின் தோல்வி தொடா்பாக ராணுவ தலைமைத் தளபதி ஹொ்ஷி ஹலேவியை அமைச்சா்கள் விமா்சனம் செய்ததாக இஸ்ரேலின் ஒய்நெட்நியூஸ் இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.

‘ஹமாஸின் தாக்குதல் திட்டத்தை முன்கூட்டியே கண்டறியத் தவறியது எவ்வாறு எனத் தெரிந்துகொள்ளஒவ்வொரு இஸ்ரேலிய குடிமகனும் விரும்புகின்றனா்’ என அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சா் ஓஃபிா் அகுனிஸ் கூறியதாக அந்த இணையதளம் தெரிவித்துள்ளது.

உள்நாட்டுக் குழப்பம்: பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகு தலைமையிலான அரசு கொண்டுவந்த நீதித் துறை சீா்திருத்தச் சட்டம் காரணமாக ஏற்பட்ட உள்நாட்டுக் குழப்பத்தை ஹமாஸ் அமைப்பு பயன்படுத்திக் கொண்டதாக நிபுணா்கள் சிலா் தெரிவித்துள்ளனா். 

காஸா மற்றும் மேற்குக் கரை தகவல் தொடா்பில் தாங்கள் ஊடுருவி தகவல்களைப் பெறுகிறோம் என இஸ்ரேல் பாதுகாப்பு அதிகாரிகள் பெருமை பேசி வரும் நிலையில், இப்படி ஒரு பெரிய தாக்குதல் திட்டத்தைக் கண்டறிய தவறியது வியப்பை அளிக்கிறது. ஹமாஸ் அமைப்பினா் இந்த அளவுக்கு ஆயுதங்களைச் சேகரிக்க முடிந்ததும், பலமுனைத் தாக்குதல் நடத்த முடிந்ததும் பாலஸ்தீனா்கள் மற்றும் ஹமாஸ் தரப்பில் கூட நம்ப முடியாத வாய்ப்பு .

---------------------------------------------


 "மூன்றாவது இன்டிஃபாடா"

இஸ்ரேலின் தெற்குப் பகுதியில், யூதர்களின் முக்கிய விடுமுறை நாளான சனிக்கிழமையன்று, பாலஸ்தீனிய போராளி அமைப்பான ஹமாஸின் முன்னெப்போது இல்லாத அளவுக்கு ஊடுருவி, அதன்  ‘ஆபரேஷன் அல்-அக்ஸா’ பாய்ச்சலின் ஒரு பகுதியாக எழுந்தது.

 ஹமாஸ் இஸ்ரேலிய எல்லைக்குள் 5,000 ராக்கெட்டுகளை ஏவியது. இஸ்ரேல் தனது குடிமக்களை வீட்டிற்குள்ளேயே இருக்குமாறும் ஆலோசனைகளை வழங்குமாறும் உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து ஹமாஸுடன் போரில் ஈடுபட்டதாக கூறிய இஸ்ரேல், பதிலடித் தாக்குதல்களை நடத்தியது. 

தற்போதைய நிலவரப்படி, குறைந்தது 563 இஸ்ரேலியர்கள் மற்றும் பாலஸ்தீனியர்கள் உயிர் இழந்தனர். மேலும், பல இஸ்ரேலியர்கள் ஹமாஸால் கடத்தப்பட்டுள்ளனர் என்று செய்தி நிறுவனமான ராய்ட்டர்ஸ் தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், லெபனானில் இருந்து ஏவப்பட்ட எறிகணைகள் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை இஸ்ரேலிய ஆக்கிரமிக்கப்பட்ட ஷெபா பண்ணைகளில் உள்ள இஸ்ரேலிய இராணுவ நிலைகளைத் தாக்கியதாக மூன்று பாதுகாப்பு வட்டாரங்கள் ராய்ட்டர்ஸிடம் தெரிவித்தன. 

மேலும், இஸ்ரேலிய பீரங்கித் தாக்குதல்கள் லெபனான் பிரதேசத்தைத் தாக்கத் தொடங்கியதாக அவர்கள் தெரிவித்தனர்.

பாலஸ்தீனியப் போராளி அமைப்பான ஹமாஸின் ஆயுததாரிகள் சனிக்கிழமையன்று இஸ்ரேல் தெற்குப் பகுதியில் உள்ள இஸ்ரேலிய நகரங்களில் ஒரு கொடிய வெறித்தனமான தாக்குதலை நடத்தி குறைந்தது 250 இஸ்ரேலியர்களைக் கொன்றனர். 

அரை நூற்றாண்டுக்கு முன்பு நடந்த யோம் கிப்பூர் போருக்குப் பிறகு இஸ்ரேலில் நடந்த மிகக் கொடிய வன்முறை நாள் இதுவாகும். இதற்கு பதிலடியாக, இஸ்ரேல் பேரழிவுகரமான பதிலடி தாக்குதல்களை நடத்தியது, இதன் விளைவாக காசாவில் 313 பேர் கொல்லப்பட்டனர்.

சனிக்கிழமை நடைபெற்ற முன்னெபோதும் இல்லாத அளவில் நடைபெற்ற ஊடுருவலின்போது, பல இஸ்ரேலிய பொதுமக்கள் மற்றும் வீரர்கள் ஹமாஸ் போராளிகளால் கடத்தப்பட்டதாக இஸ்ரேலின் உயர்மட்ட ராணுவ செய்தித் தொடர்பாளர் ரியர் அட்மிரல் டேனியல் ஹகாரி தெரிவித்தார். 

துப்பாக்கி ஏந்தியவர்கள் பொதுமக்களைத் தேடுவதாக இஸ்ரேலிய எல்லை நகரங்களில் வசிப்பவர்கள் செய்தி ஒளிபரப்பாளர்களிடம் கூறியுள்ளனர். ஹமாஸ் மற்றும் காசாவில் உள்ள மற்றொரு சிறிய போராளிப் பிரிவான இஸ்லாமிய ஜிஹாத் ஆகிய இரண்டும் இஸ்ரேலிய கைதிகள் இருப்பதாகக் கூறி அறிக்கைகளை வெளியிட்டன.

ஹமாஸ் தாக்குதல்களுக்கு ஒரு நாள் கழித்து, இஸ்ரேல்-லெபனான் எல்லையில் பதற்றம் அதிகரித்தது, எல்லையில் உள்ள ஹார் டோவ் பகுதியில் உள்ள ஹெஸ்புல்லா போஸ்ட் மீது இஸ்ரேலின் ஆளில்லா விமானம் ஒன்று தாக்கியதாக இஸ்ரேலிய ராணுவம் கூறியது. இதற்கிடையில், ஞாயிற்றுக்கிழமை இஸ்ரேலிய ஆக்கிரமிக்கப்பட்ட ஷெபா பண்ணைகள் மீதான ராக்கெட் மற்றும் பீரங்கித் தாக்குதலுக்கு ஹெஸ்பொல்லா பொறுப்பேற்றுள்ளது, இது பாலஸ்தீனிய மக்களுடன் "ஒற்றுமையுடன்" இருப்பதாகக் கூறியது. 

லெபனானில் இருந்து ஏவப்பட்ட எறிகணைகள் ஷெபா ஃபார்ம்ஸில் உள்ள இஸ்ரேலிய ராணுவச் சாவடியைத் தாக்கின.

ஹமாஸ் தாக்குதல்கள் தொடங்கிய பின்னர், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்த தனது முதல் கருத்துகளில்,  “நாம் போரில் இருக்கிறோம், நாம் வெற்றி பெறுவோம்” என்று கூறினார். 

நாட்டின் ராணுவ இருப்புக்களை பெருமளவில் அணிதிரட்டுவதாகவும் அவர் அறிவித்தார். பின்னர், அவர் எக்ஸ் பக்கத்தில் எழுதினார்: “ஹமாஸ் எந்தெந்த இடங்கள் நிறுத்தப்பட்டிருக்கிறதோ, எந்த பொல்லாத நகரத்தில் ஒளிந்துகொண்டு செயல்படுகிறதோ, அவற்றை நாம் இடிபாடுகளாக மாற்றுவோம். காசாவில் வசிப்பவர்களுக்கு நான் சொல்கிறேன்: இப்போதே வெளியேறுங்கள், ஏனென்றால் நாங்கள் எல்லா இடங்களிலும் வலுக்கட்டாயமாக செயல்படுவோம். 

இந்த நேரத்தில், இஸ்ரேல் பாதுகாப்பு படை (ஐ.டி.எஃப்) பயங்கரவாதிகளின் கடைசி சமூகம் வரை அழிக்கிறது. அவர்கள் சமூகம் சமூகமாக சமூகம், வீடு வீடாகச் சென்று நம்முடைய கட்டுப்பாட்டை மீட்டெடுக்கிறார்கள்.” என்று கூறினார்.

காசாவில் தொடங்கிய தாக்குதல் மேற்குக் கரை மற்றும் ஜெருசலேம் வரை பரவும் என்று ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியே கூறினார். 

ஜெருசலேமின் அல்-அக்ஸா மசூதிக்கு அச்சுறுத்தல், காஸா மீதான முற்றுகையின் தொடர்ச்சி மற்றும் பிராந்தியத்தில் உள்ள நாடுகளுடன் இஸ்ரேலிய இயல்புநிலை ஆகியவற்றை ஹனியே ஒரு உரையில் எடுத்துரைத்தார். 

 “பலஸ்தீன மக்கள் 75 ஆண்டுகளாக அகதிகள் முகாம்களில் வாழ்கிறார்கள் என்று நாங்கள் எத்தனை முறை எச்சரித்தோம், நீங்கள் எங்கள் மக்களின் உரிமைகளை அங்கீகரிக்க மறுக்கிறீர்கள்?” என்று கூறினார்.

ஹமாஸின் ராணுவப் பிரிவின் தலைவரான முகமது டெய்ஃப், பதிவு செய்யப்பட்ட செய்தியில்,  “போதும் போதும்” என்றும், ஆபரேஷன் அல்-அக்ஸா புயலில் சேர பாலஸ்தீனியர்களுக்கு அழைப்பு விடுத்தார்.

 வெளியேற்றப்பட்ட ஹமாஸ் தலைவரான சலா அரூரி, “இந்த நடவடிக்கை  ஆக்கிரமிப்பு குற்றங்களுக்கு ஒரு பதிலடி” என்று கூறினார்.

இஸ்ரேலில் உள்ள இந்திய தூதரகம் சனிக்கிழமை நாட்டிலுள்ள அனைத்து இந்திய பிரஜைகளையும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் பாதுகாப்பு நெறிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளது.

தூதரகத்தின் இணையதளத்தில் உள்ள தரவுகளின்படி, இஸ்ரேலில் சுமார் 18,000 இந்தியர்கள் உள்ளனர். இஸ்ரேலிய பெரியவர்கள், வைர வியாபாரிகள், தகவல் தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் சுமார் 900 மாணவர்களால் பணியமர்த்தப்பட்ட பராமரிப்பாளர்கள் இதில் அடங்குவர். “இஸ்ரேலில் உள்ள அனைத்து இந்திய குடிமக்களும் விழிப்புடன் இருக்கவும், உள்ளூர் அதிகாரிகளின் ஆலோசனைப்படி பாதுகாப்பு நெறிமுறைகளை கடைபிடிக்கவும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

 தயவு செய்து எச்சரிக்கையுடன் செயல்படவும், தேவையற்ற நடமாட்டத்தை தவிர்க்கவும், பாதுகாப்பு தங்குமிடங்களுக்கு அருகில் இருக்க வேண்டும் என்றும் இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.

பாலஸ்தீனத்தில் உள்ள இந்தியப் பிரதிநிதி அலுவலகம், நாட்டிலுள்ள இந்தியப் பிரஜைகளை அவசரகாலத்தில் நேரடியாகத் தொடர்புகொள்ள கேட்டுக் கொண்டது.

 “தற்போதைய பாதுகாப்பு இல்லாத சூழ்நிலையில், பாலஸ்தீனத்தில் உள்ள இந்திய குடிமக்கள் 24 மணி நேர அவசர உதவி எண்ணில் அவசர அல்லது தேவையான உதவிகளை நிவர்த்தி செய்ய இந்திய பிரதிநிதி அலுவலகத்தை நேரடியாக தொடர்பு கொள்ளலாம்” என்று எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டு, இரண்டு தொடர்பு எண்களை வழங்கியது.

இந்த தாக்குதல் இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்திற்கும் இடையே பல தசாப்தங்களாக நீடித்த மோதலின் சமீபத்திய அத்தியாயமாகும், சில பார்வையாளர்கள் இதை "மூன்றாவது இன்டிஃபாடா"வின் ஆரம்பம் என்று அழைக்கின்றனர்.

'இன்டிஃபாடா' என்பது அரபு வார்த்தையாகும், இதை  மீண்டெழுந்து தாக்குதல்' என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இந்த வார்த்தை டிசம்பர் 1987-ல் பிரபலமாக பயன்பாட்டிற்கு வந்தது, பாலஸ்தீனியர்கள் மேற்குக் கரை மற்றும் காசாவில் இஸ்ரேலிய இருப்புக்கு எதிரான அவர்களின் எழுச்சியை விவரிக்க இதைப் பயன்படுத்தினர். 

முதல் இன்டிஃபாடா 1987 முதல் 1993 வரையிலும், இரண்டாவது இன்டிஃபாடா 2000-2005 வரையிலும் நீடித்தது. இவை பாலஸ்தீனிய இளைஞர்களால் வழிநடத்தப்பட்ட மிகவும் பிரபலமான எழுச்சிகளாகும், அவர்கள் தங்கள் தாயகத்தில் மிகவும் சக்திவாய்ந்த இஸ்ரேலிய குடியேறியவர்களிடமிருந்து அவர்கள் எதிர்கொண்ட நடத்தையால் பாதிக்கப்பட்டனர். 

ஹமாஸ் மிகப் பெரிய பாலஸ்தீனிய போராளி இஸ்லாமியக் குழுவாகும், இப்பகுதியில் உள்ள இரண்டு பெரிய அரசியல் கட்சிகளில் ஒன்று. தற்போது, காசா பகுதியில் இரண்டு மில்லியனுக்கும் அதிகமான பாலஸ்தீனியர்களை அது ஆளுகிறது, அங்கிருந்து சனிக்கிழமையன்று இஸ்ரேலுக்குள் ஊடுருவல் தொடங்கப்பட்டது. 

இஸ்ரேலுக்கு எதிரான ஆயுதமேந்திய எதிர்ப்பிற்காக அறியப்பட்ட இந்த அமைப்பு, இஸ்ரேல், அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், இங்கிலாந்து மற்றும் பிற நாடுகளால் பயங்கரவாதக் குழுவாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

சில சந்தர்ப்பங்களில், ஒட்டுமொத்தமாக, மற்ற அதன் ராணுவப் பிரிவு ஆகியவையும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் இஸ்ரேலிய நிறுவனங்களுக்கு பாதுகாப்பு அதிகரிப்பு

இஸ்ரேல் மீது பாலஸ்தீனத்தின் ஹமாஸ் பயங்கரவாதிகள் போர் தொடுத்துள்ள நிலையில் தமிழ்நாட்டில் யூதர்களுக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. ஹமாஸ் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 400 இஸ்ரேலியர்கள் வரை கொல்லப்பட்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்துக்கும் இடையே நடைபெற்று வரும் போரை அடுத்து, யூதர்களின் குடியிருப்புகள் மற்றும் இஸ்ரேலிய நிறுவனங்களில் பாதுகாப்பை தமிழகம் பலப்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் அருகே மலைப்பகுதியில் உள்ள யூதர்கள் குடியிருப்பு மற்றும் மாநிலத்தில் உள்ள பிற இஸ்ரேலிய நிறுவனங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகளை அதிகரிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.

இதனை காவல்துறை தலைமை இயக்குநரும், காவல் படைத் தலைவருமான சங்கர் ஜிவால் உறுதிப்படுத்தினார்.

மாநிலத்தில் உள்ள இஸ்ரேலிய வணிக நிறுவனங்களிலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும் சென்னை மற்றும் மாநிலத்தில் உள்ள பிற விமான நிலையங்களில் சமீபத்திய நாட்களில் தரையிறங்கிய இஸ்ரேலிய பிரஜைகளின் எண்ணிக்கை மற்றும் அவர்களின் இருப்பிடங்களைக் கண்காணிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில்,  விமான நிலையம் மற்றும் குடியேற்ற அதிகாரிகளுடன் போலீசார் தொடர்பு கொண்டனர். தொடர்ந்து பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

இஸ்ரேலியர்கள் தங்களின் புனித நாளை அனுசரித்துக் கொண்டிருந்தபோது இந்த எதிர்பாராத தாக்குதல்கள் நடந்துள்ளன.

 இஸ்ரேலுக்குள் புகுந்த ஹமாஸ் பயங்கரவாதிகள் கிட்டத்தட்ட 400க்கும் மேற்பட்ட இஸ்ரேலியர்களை கொன்று குவித்தனர்.

இந்த நிலையில் தற்போது இஸ்ரேல் ராணுவத்தினர் பதில் தாக்குதல்கள் நடத்திவருகின்றனர். இந்தத் தாக்குதலில் இதுவரை 600க்கும் மேற்பட்ட ஹமாஸ் பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர்.

எனினும் இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்திவருகிறது. காசாவில் உள்ள பொதுமக்கள் வெளியேற வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளது.  இதற்கிடையில் இஸ்ரேல் நாட்டின் பிரதமர் நேதன்யாகு போர் நடப்பதாகவே அறிவித்துள்ளார்.

------------------------------------------------

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?