பட்டினி தேசம்111.

 உலகளாவிய பசி குறியீட்டு அறிக்கையில் 125 நாடுகளில் இந்தியா 111 வது இடத்தைப் பிடித்துள்ளது. 

கடந்த ஆண்டை விட இந்தியா 4 இடங்கள் சரிந்துள்ளது. 

தைமூர், மொசாம்பிக், ஆப்கானிஸ்தான், ஹைத்தி, கினியா, லைபீரியா, நைஜர்,  காங்கோ, ஏமன், தெற்கு சூடான், சோமா லியா ஆகிய நாடுகள் மட்டுமே இந்தியாவை விட குறைந்த தரவரிசையில் உள்ளன. 

இந்தியாவை விட சிறப்பாக செயல்பட்ட பல நாடுகள் இந்தியாவுடன் ஒப்பிடும்போது மிகச் சிறிய பொருளாதாரங்களை கொண்டவை. ஆனால் உலகப் பொருளாதாரத்தில் வேகமாக வளர்ந்து வரும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று  என்று ஒன்றிய அரசு பெருமிதப்பட்டுக் கொண் டாலும் பசி, வறுமை ஒழிப்பு, ஊட்டச்சத்து குறை பாடு உள்ளிட்ட மக்களின் ஆரோக்கியம் தொடர்பு டையவற்றில் மிகவும் பின்தங்கி கவலைக்கிடமா கவே உள்ளது.

 உலகளவில் பட்டினியின் அளவு ‘தீவிரமானது’ என்று அழைக்கப்படும் 40 நாடு களின் குழுவில் இந்தியா உள்ளது.

இந்த அறிக்கையின்படி, உலக அளவில் குறைந்த எடை உடைய குழந்தைகளின் விகிதம் இந்தியாவில் 18.7 விழுக்காடாக உள்ளது. 

இது கடுமையான ஊட்டச்சத்து குறைபாட்டை பிரதி பலிக்கிறது. பொதுவாக 15 விழுக்காட்டிற்கு மேல் உள்ள நாடுகள் மிகவும் கவலைக்குரியதாக உள்ளதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

இதில் ‘மிக அதிகம்’ என்ற பிரிவில் சேர்க்கப் பட்டுள்ள ஒரே நாடு இந்தியா மட்டுமே.

இந்தியாவில் 35விழுக்காட்டிற்கும் அதிக மான குழந்தைகள் வளர்ச்சி குன்றியுள்ள தாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.  

ஒட்டுமொத்த மக்கள் தொகையில் சுமார் 16.6விழுக்காட்டினர் ஊட்டச்சத்து குறைபாடுகளுடன் உள்ளனர். ஐந்து வயதை எட்டுவதற்குள் இறக்கும் குழந்தை களின் எண்ணிக்கை 3.1 விழுக்காடாக உள்ளது. 

15 முதல் 24 வயதுடைய பெண்களில்50 விழுக் காட்டிற்கும் அதிகமானோர் ரத்த சோகையால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது உலகில் உள்ள மற்ற நாடுகளுடன் ஒப்பிடும்போது மிக மிக அதிக அள வாகும்.  

கடுமையான ஊட்டச்சத்து குறைபாடு உள்ள குழந்தைகள், வயிற்றுப்போக்கு, நிமோ னியா மற்றும் மலேரியா போன்ற குழந்தை பருவ நோய்களால் இறப்பதற்கான அதிக ஆபத்து உள்ளது.

 5 வயதுக்குட்பட்ட குழந்தை களின் இறப்புகளில் சுமார் 45 விழுக்காடு ஊட்டச் சத்து தொடர்பானவை  என்று உலக சுகாதார நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.

வழக்கம் போல் இந்த  அறிக்கையையும் மோடி அரசு நிராகரித்துள்ளது. 

உலகநாடுகள் அமைப்புகளின் தரவுகளை மட்டுமல்ல தனது நிர்வாகத்தின் கீழ் இயங்கும் தேசிய புள்ளியியல் அமைப்பின் தரவுகளையும் ஏற்க மறுத்து அதிகாரிகளை பந்தாடிய ஒரு அரசாங்கம், இந்த அறிக்கையை நிராகரித்திருப்பதில் ஆச்சரியம் எதுவுமில்லை.

---------------------------------

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?

ரூ360 கோடிகள் வீணா?