(முனைவர்)சங்கரய்யா .

 மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான என். சங்கரய்யா, இந்திய சுதந்திரப் போராட்டத்தில் மிகத் தீவிரமாக ஈடுபட்ட மாணவர் தலைவர்களில் ஒருவர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஆத்தூரில் 1921ஆம் ஆண்டு ஜூலை 15ஆம் தேதி பிறந்தவர் சங்கரய்யா.

 பிறகு இவரது குடும்பம் மதுரைக்குக் குடிபெயர்ந்தது. மதுரையில் உள்ள அமெரிக்கன் கல்லூரியில் வரலாற்றில் இளங்கலைப் பட்டம் பெறச் சேர்ந்தார்.

இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகும் கம்யூனிஸ்ட் கட்சி தொடர்புக்காக பல முறை சிறை சென்றிருக்கிறார் சங்கரய்யா.

 மதுரை மேற்குத் தொகுதியில் இருந்து மூன்று முறை சட்டமன்ற உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்.

இடதுசாரிக் கொள்கைகளால் ஈர்க்கப்பட்ட அவர், 17 வயதிலேயே இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்தார். 

1941இல் இறுதித் தேர்வு நெருங்கிய போது அண்ணாமலை பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாணவி ஒருவர், பிரிட்டிஷாருக்கு எதிரான போராட்டத்தில் கலந்துகொண்டதால் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து, சங்கரய்யா உள்ளிட்ட மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில் சங்கரய்யாவும் கைது செய்யப்பட்டார். தனது பி.ஏ. தேர்வை எழுத முடியவில்லை. அதோடு அவருடைய படிப்பு முடிவுக்கு வந்தது.

 1942இல் பல மாணவர்கள் விடுவிக்கப்பட்ட நிலையில், சங்கரய்யா மட்டும் விடுவிக்கப்படவில்லை.

தேசத்துரோகம், கம்யூனிஸ்ட் கட்சி ஈடுபாடு போன்றவற்றைக் காரணம் காட்டி அவருடைய தடுப்புக் காவல் நீட்டிக்கப்பட்டுக்கொண்டே வந்தது.

இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகும் கம்யூனிஸ்ட் கட்சி தொடர்புக்காக பலமுறை சிறை சென்றுள்ளார் சங்கரய்யா. 

மதுரை மேற்குத் தொகுதியிலிருந்து மூன்று முறை சட்டமன்ற உறுப்பினராகத் தேர்வுசெய்யப்பட்டிருக்கிறார்.

கடந்த 2021ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு நிறுவிய தகை சால் தமிழர் விருது முதல் முறையாக என். சங்கரய்யாவுக்கு வழங்கப்பட்டது.அதற்கு வழங்கப் பட்ட பணத்தை மக்கள் நலத் திட்ங்களுக்கென முதல்வரிடமே வழங்கிவிட்டார் சங்கரய்யா.

தமிழ்நாட்டைச் சேர்ந்த சுதந்திரப் போராட்டத் தியாகியும் மூத்த இடதுசாரி தலைவருமான என். சங்கரய்யாவுக்கு கௌரவ முனைவர் பட்டம் வழங்க வேண்டும் என மதுரை காமராசர் பல்கலைக்கழகம் முடிவெடுத்திருக்கும் நிலையில், அது தொடர்பான கோப்புகளில் கையெழுத்திட ஆளுநர் ஆர்.யன். ரவி மறுத்திருக்கிறார்.

இந்த விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு உயர் கல்வித் துறை அமைச்சர் க.பொன்முடி வியாழக்கிழமையன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். 

அந்த அறிக்கையில், என். சங்கரய்யா தமிழ் சமூகத்திற்கு ஆற்றியுள்ள ஒப்புயர்வற்ற சேவையை அங்கீகரிக்கும் விதமாக கடந்த ஆகஸ்ட் மாதம் 18ஆம் தேதி நடைபெற்ற மதுரை காமராஜர் பல்கலைக்கழக ஆட்சிக் குழு - சிண்டிகேட் - கூட்டத்தில் அவருக்கு கௌரவ முனைவர் பட்டம் (D. Litt) வழங்கப்படும் எனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது, என்று கூறப்பட்டிருக்கிறது.

அந்த அறிக்கை மேலும், “இதற்குப் பின்னர் செப்டம்பர் 20ஆம் தேதியன்று நடைபெற்ற மதுரை காமராஜர் பல்கலைக்கழக ஆட்சிப் பேரவை -செனட்- கூட்டத்திலும் இதே தீர்மானம் நிறைவேற்றப்பட்டது,” என்று கூறுகிறது.

ஆளுநர் கையெழுத்திடுவார் என்ற விதி வைக்கப்பட்டுள்ளது. அந்த விதியை வைத்துக் கையெழுத்திட மறுக்கிறார் ஆர்யன்.ரவி.. இதுபோலச் செய்வது எல்லாவற்றையும் சீர்குலைக்கும்," என்கிறார் அந்த செனட் உறுப்பினர்.

அந்தக் கோப்பில் கையெழுத்தைப் பெற மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த அதிகாரிகள் வியாழக்கிழமை மாலை வரை முயன்றும் நடக்காத நிலையில்தான் உயர்கல்வித் துறை அமைச்சரின் அறிக்கை வெளியானதாகத் தெரிகிறது.

தமிழ்நாடு ஆளுநர் மாளிகை இந்த விவகாரம் குறித்து இதுவரை எந்த விளக்கத்தையும் அளிக்கவில்லை.

நாட்டின் விடுதலைக்காகப் போராடியவர் சங்கரய்யா.

விடுதலைப் போராளிகளைக் காட்டிக் கொடுத்து பணம் பெற்ற,மன்னிப்புக் கடிதப் புகழ்சாவர்கர் சீடர் , வலதுசாரி ஆர் யன்.ரவி.

பின் எவ்வாறு முனைவர் பட்டம் கையெழுத்திடுவார்?

---------------------------------------

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?