தன்மானம்(?)கொண்ட
ஆவடியில் மின்சார ரயில் தடம் புரண்டு விபத்து.கவனக்குறைவாக ரயிலை இயக்கிய ஓட்டுநர் பணியிடை நீக்கம்.
"தன்மானம்(?)கொண்ட அதிமுகவை பார்த்து பாதந்தாங்கிகள் என்பது நகைச்சுவையானது"-எடப்பாடி பழனிசாமி.
மக்கள் வரிப்பணத்தில் ஊர் ஊராக சுற்றி, நிகழ்ச்சிகளை நடத்தி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு எதிராக பேசுவதா? ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு திமுக கடும் கண்டனம்.
பாஜ பட்டியல் அணி மாவட்ட தலைவரான பிரபல ரவுடி மதன் பள்ளிக்கரணை வீட்டில் மண்ணெண்ணெய் குண்டு வீச்சு.
காசாவில் 18வது நாளாக நீடிக்கும் இஸ்ரேல் தாக்குதல் உணவு,குடிநீர் இல்லாமல் 23 லட்சம் மக்கள் தவிப்பு.இஸ்ரேல் குண்டுவீச்சால் ஒரேநாளில் 700 பேர் பலி.இதுவரை 5087பேர்கள் இஸ்ரேல் குண்டுகளுக்குப் பலி.
தீவிர புயலான ஹாமூன் வலுவிழந்து வங்கதேசம் அருகே கரையைக் கடந்தது -
பெரியாரின் கேள்விகள்?
கிருஸ்துவமதத்தலைவர் ஏசு கிருஸ்து
என்பவர் 2000 ஆண்டுகளுக்கு முன் தகப்பனில்லாமல்,
பரிசுத்த ஆவிக்குப் பிறந்தாராம்.
ஆகவே
அவர் கடவுளுக்கு மகனாம்
(தேவகுமாரனாம்) ஆகவே அவர்
சிலுவையில்
அறையப்பட்டுக்) கொல்லப்பட்டாராம்.செத்தவர் மறுபடியும் பிழைத்தாராம்.
பல
அற்புதங்களைச் செய்தாராம்.
வியாதிகளைப் பார்வையால்
சவுகரியப்படுத்தினாராம். ஒரு
ரொட்டித் துண்டை ஆயிரக்கணக்கான
பேர்களுக்குக் கொடுத்துப்
பசியாற்றினாராம். குருடர்களுக்கு
கண்ணைக்
கொடுத்தாராம். இப்படி பல
காரியங்கள் செய்தாராம்.
இவற்றையெல்லாம்
நம்பினால் தான் கிருஸ்தவ மதம் இருக்க
முடியும். அறிவைக் கொண்டு
பார்த்தால் தேவனுக்கு, கடவுளுக்குக்
குமாரன் எதற்கு? கடவுள் ஒருவனை
மாத்திரம் குமாரனாக ஆக்குவது ஏன்?
கடவுள் தோன்றி எத்தனையோ காலம்
ஆனபிறகு
அப்போது (2000 வருடங்களுக்கு முன்)
மாத்திரம் எதற்காக மகனை
உண்டாக்கினார்? அதற்கு முந்தின
காலத்தில் ஏன் உண்டாக்கவில்லை?
அப்போதெல்லாம் செத்தவர்கள்
இல்லையா? குருடர்கள் இல்லையா?
பசித்தவர்கள்
இல்லையா? அந்த (கி.பி. 1 – ஆவது)
வருஷம் மாத்திரம் என்ன சிறந்தது?
கடவுள்
செய்யவேண்டியதை – சொல்ல
வேண்டியதை ஒரு மனிதனைக்
கொண்டு மாத்திரம் ஏன்
சொல்ல வேண்டும்? அதுவும் ஒரு
சிலருக்கு மாத்திரம் (நம்பும்படி) ஏன்
சொல்ல
வேண்டும்? அந்தக் காரியங்கள்
இப்போது ஏன் நடப்பதில்லை?
இன்று ஏன்
அவர்
வரவில்லை? இப்போது கிருஸ்துவை
ஏற்காதவர்கள், நம்பாதவர்கள்,
வழிபடாதவர்கள்
ஏனிருக்கிறார்கள்? தேவகுமாரனுக்கு
இவ்வளவு தான் சக்தியா? இது
போலத்தானே
இஸ்லாம் மதம் என்பதும்
சொல்லப்படுகிறது? முகம்மது
கடவுளுக்கு (கடவுளால்
அனுப்பப்பட்ட) தூதராம். கடவுளுக்குத்
தூதர் எதற்கு? குரான் கடவுளால்
தூதரருக்கு (நபிக்கு)ச் சொல்லப்பட்ட
செய்தியாம்.கடவுள் மக்களுக்குச்
செய்தி சொல்லவேண்டுமானால் ஒரு
மனிதர் (தூதர்) வாயினால் தான்
சொல்லச்
செய்யவேண்டுமா? கடவுளால் எல்லா
மனிதருக்கும் ஏககாலத்தில்
தெரியும்படிச்
செய்ய முடியாதா? உலகில் மனிதன்
தோன்றி எத்தனையோ இலட்சம்
ஆண்டுகளுக்குப்
பிறகு ஒரு ஊரிலே, யாரோ ஒரு
சிலருக்கு மாத்திரம் சொல்லும் படி ஏன்
சொல்லுகிறார்? மற்றவர்களுக்கு ஏன்
தெரிவிக்கவில்லை? முகமது நபி
என்பதை
ஏற்றுக் கொண்டு, அவரை
நம்பினவர்களுக்குத்தானே குரான்?
மற்றவர்கள் அதை
ஏற்பதில்லையே! மற்றவர்களுக்குப்
பயன்படுவதில்லையே! ஏன்? கடவுள்
சொல்,
அப்படி ஏன் நம்பச் செய்தவர்களுக்கு
மாத்திரம் தெரிய வேண்டும்? இன்னும்
எத்தனை மக்கள் நம்பியாக வேண்டி
இருக்கிறது! இதுதான் கடவுள்
தன்மையா?
இவையெல்லாம் மனிதத் தன்மையா?
மனிதக் கற்பனையா?
தெய்வத்தன்மையா? ஒரு
சர்வசக்தியுள்ள தெய்வம், தெய்வத்தால்
அனுப்பப்பட்ட அவதாரம், அம்சம்,
மகன், குமாரன், தூதர், வேதம் ஏன்
உண்டாக்க வேண்டும்? இருந்தால்
இத்தனை
வேதங்கள், குமாரர், தூதர், வேதம் ஏன்
உண்டாக்க வேண்டும்? இருந்தால்
இத்தனை வேதங்கள், குமாரர், அவதாரம்,
தூதர்கள், சமயங்கள், மதங்கள்,
போதகர்கள் இருக்க வேண்டிய
அவசியமென்ன என்பதைச் சிந்தித்தால்
இவையெல்லாம்
மூட நம்பிக்கை, அதாவது அறிவைக்
கொண்டு சிந்திக்காமல்
கண்முடித்தனமாய்
நம்ப வேண்டியவை ஆகின்றனவா
இல்லையா? இது மனிதர்
என்பவர்களுக்கு ஏற்றதா
என்று கேட்கிறேன். இதற்காகக்
கோபிப்பதில் பயன் என்ன?
மூடநம்பிக்கை ஒழிய வேண்டுமானால்
மக்களிடம் உள்ள இப்படிப்பட்ட
கருத்துக்கள் ஒழியாமல் எப்படி ஒழிய
முடியும்? அறிவுள்ளவர்களே!
பகுத்தறிவாதிகளே!
சிந்தித்துப்பாருங்கள்! இது சந்திர
மண்டலத்திற்கு
மனிதன் போய் வரும் காலம்;
காட்டுமிராண்டிக் காலமல்ல. எனவே
சிந்தித்துப்பாருங்கள்! பின் சந்ததி
மக்களை மடையர்களாக்காதீர்கள்!
14-06-1971 "உண்மை" இதழில்
தந்தை பெரியார் அவர்கள் எழுதிய
தலையங்கம். "பெரியார் களஞ்சியம்" -
தொகுதி: 2 … பக்கம்:57-62.
-------------------------------------------------
ஷூநக்கிசாவர்கர், கோட்சே தியாகவரலாறைக் காணோம்?ஒரு மாநிலத்தில் ஆளுநர் பதவி என்பது அம்மாநில சட்டமன்றத்தின் முடிவுக்கு, அமைச்சரவையின் முடிவுக்கு ஒப்புதல் தருகிற பணி என்பதை மறந்துவிட்டு, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தன்னுடைய எஜமானர்களான ஆர்எஸ்எஸ் - பாஜகவினரின் கொள்கை விளக்கப் பிரச்சாரகராகவே நடந்து கொண்டு வருகிறார்.
இது மாநிலத்தில் தேர்ந்தெடுக்கப் பட்ட ஆட்சிக்கு இடையூறு விளைவிப்பது மட்டு மல்லாமல், தமிழ் மக்களுக்கு துரோகம் விளை விப்பதுமாகும்.
திருச்சியில் ஞாயிறன்று நடைபெற்ற விழா ஒன்றில் பேசிய ஆர்.என்.ரவி தமிழகத்தின் சுதந்திரப் போராட்டம் பற்றியும், ஆரியம்- திரா விடம் பற்றியும் கதைத்திருக்கிறார்.
நாட்டின் சின்னஞ்சிறிய மாநிலமான நாகாலாந்தில் ஆயி ரத்துக்கும் மேற்பட்ட போராளிகள் இருந்துள்ள னர் என்றும், தமிழ்நாட்டில் ஏராளமானோர் இருந்திருக்க வேண்டுமென்றும் அவர்களது வரலாறு மறைக்கப்பட்டிருப்பதாகவும், புதிதாக ‘கண்டு பிடித்து’ கூறியிருக்கிறார்.நாட்டின் முதல் சுதந்திரப் போர் என்று குறிப்பி டப்படுகிற 1857 சிப்பாய் எழுச்சிக்கு 50 ஆண்டு களுக்கு முன்னதாகவே 1806இல் தமிழகத்தின் வேலூரில் பிரிட்டிஷாருக்கு எதிரான சிப்பாய் கள் எழுச்சி நடைபெற்றது. அதற்கு முன்பிருந்தே சுதந்திரப் போராட்டம் நடைபெற்று வந்துள் ளது.
ஆனால் இதையெல்லாம் மறைக்கும் நோக் கத்துடன், இப்போதைய பாஜக ஆட்சியாளர் கள்தான் புதிய வரலாறு எழுதுவதாகக் கூறு கிறார்கள்; தங்களது துரோக வரலாற்றை மறைக் கப் பார்க்கிறார்கள்.
ஆனால் ஆர்.என்.ரவி அதை மறைத்துவிட்டு, மறந்துவிட்டு புதிதாக உளறிக் கொட்டுகிறார்.
இவரது குருபீடமான ஆர்எஸ்எஸ் பிரிட்டி ஷாருக்கு அடிமைச் சேவகம் செய்த வரலாற்றை மறைப்பதற்காகவே தீவிரமாக சுதந்திரப் போராட்ட தியாகிகள் பற்றி பேசுகிறார்.
இந்து மகாசபை, ஆர்எஸ்எஸ் பாரம்பரியத்தில் விடு தலைப் போராட்ட வீரர்கள் யாரும் இல்லை. கேட்டால் சாவர்க்கர் இல்லையா என்பார்கள். அவர் சிறையில் அடைக்கப்பட்டிருந்த போதும் மன்னிப்புக் கடிதம் எழுதிக் கொடுத்துவிட்டு வெளியே வந்தவர் என்பது மட்டுமல்ல, பிரிட்டிஷ் ஆட்சியாளர்களிடமே பென்சன் வாங்கி ‘பெருமை’ சேர்த்தவர்.
காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப் பட்ட சாவர்க்கரின் பிறந்த நாளில்தான் மோடி அரசு புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை திறந்தது என்பது காந்தி உள்ளிட்ட விடுதலைப் போராட்ட வீரர்களுக்கு பெருமை சேர்ப்பதா?
ஷூநக்கி சாவர்கர்,நாதுராம் கோட்சே தியாகவரலாறு காணோம் எனதான் அழுதிருப்பார் ஆர்யன்.ரவி.
------------------------------