எல்லையே இல்லை

 திமுக எம்.பி. ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான இடங்களில் வருவமான வரித்துறையினர் சோதனை .ஒன்றிய பாஜக அரசின் பழிவாங்கும் அரசியலுக்கு எல்லையே இல்லை என முதலமைச்சர்மு.க. ஸ்டாலின் கண்டனம் .

"பிரதமரும், ஆளுநரும் மத வெறியை தூண்டிவிட்டு ஆதாயம் தேடுகிறார்கள் -" -அமைச்சர் பொன்முடி  

வார இறுதி நாட்களை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் 600 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்து கழகம் அறிவிப்பு 

பகுதி நேர ஆசிரியர்கள் சங்கத்தினர் மற்றும் டெட் தேர்வு ஆசிரியர்கள் சங்கத்தினர் போராட்டம் தற்காலிக நிறுத்தம் .இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் சங்கத்தினர் போராட்டம் தொடரும் .

டெல்டா மாவட்டங்களில் குறுவை பயிர் சாகுபடி பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு இழப்பீட்டு தொகை - முதலமைச்சர்மு.க. ஸ்டாலின் அறிவிப்பு 

டிடிஎஃப் வாசன் ஜாமீன் மனு ஜாமீன் மனு மீண்டும் தள்ளுபடி . பைக்கை எரித்துவிட வேண்டும் என நீதிபதி எச்சரிக்கை.

ஊழல் வழக்கில் கைதான சந்திரபாபு நாயுடுவுக்கு மேலும் இரண்டு வாரங்கள் காவலை நீடித்தது விஜயவாடா நீதிமன்றம் . 

5 மாநில தேர்தல் தேதி விரைவில் அறிவிப்பு .தலைமை தேர்தல் ஆணையம் இன்று  ஆலோசனை 

அமெரிக்காவின் மோர்கன் பல்கலைக்கழகத்தில் துப்பாக்கிசூடு ஐந்து மாணவர்கள் காயம் .

----------------------------------------------


பாஜகவில் சேர

8 கொலைகள்,48 வழக்குகளே தகுதி?


நெடுங்குன்றம் சூர்யாவை தொடர்ந்து பிரபல ரவுடி படைப்பை குணா பாஜகவில் இணைந்துள்ளார். 


அவருக்கு காஞ்சிபுரம் மாவட்ட ஓபிசி அணி தலைவர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம் மதுரமங்கலம் பகுதியைச் சேர்ந்த ரவுடி படைப்பை குணா மீது கொலை, கொள்ளை, ஆள் கடத்தல் என்று 48 வழக்குகள் விசாரணையில் உள்ளன. 


இதில் 8 கொலை வழக்குகளும் 11 கொலை முயற்சி வழக்குகளும் அடங்கும். வெள்ளை துறை தலைமையில் காவல்துறையினர் தம்மை தீவிரமாக தேடுவதை அறிந்து, படைப்பை குணா சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் சரண் அடைந்தார். பின் ஜாமீனில் வெளி வந்தார்.


அவரது மனைவி எல்லம்மாள் பாஜகவில் இணைந்து ஸ்ரீபெரும்புதூர் ஒன்றிய கவுன்சிலராக பதவி வகித்து வருகிறார். கடந்த சில மாதங்களாக எல்லம்மாள் கட்சி பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு இருந்ததால் விரைவில் படைப்பை குணாவும் பாஜகவில் இணைவார் என தகவல் வெளியானது. 


இந்த நிலையில், காஞ்சிபுர மாவட்ட பாஜக தலைவர் கே.எஸ்.பாபு வெளியிட்டுள்ள அறிவிப்பில், படைப்பை குணா என்கிற குணசேகரன் காஞ்சிபுர மாவட்ட ஓபிசி அணி தலைவராக நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


 சமீபத்தில் 50க்கும் மேற்பட்ட வழக்குகளில் சிக்கிய பிரபல ரவுடி நெடுங்குன்றம் சூர்யா பாஜகவில் இணைந்தார். 


அவருக்கு பாஜக மாநில பட்டியல் அணி மாநில செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டது. 


பிரபல ரவுடிகளை பாஜக தங்கள் கட்சியில் இணைத்து கொள்வதும்,பா.ஜ.கவினர் தொடர்ந்து கொலை,கொள்ளை,கஞ்சா,கடத்தல் போன்றவற்றில் கைதாவதும்,அடிதடி கலாட்டா செய்வதும் அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.வட மாநிலங்களில் துப்பாக்கியை கையில் வைத்து அரசியல் செய்யும் நிலைக்கு தமிழ்நாடும் தள்ளப்படுகிறதோ?

---------------------------------


இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?