போரை நிறுத்துங்கள்
ககன்யான் திட்டம் மாதிரி விண்கலம் சோதனை ஓட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.-இஸ்ரோ தலைவர் சோம்நாத் தகவல்.
சிவகங்கை மாவட்டத்திற்கு வரும் 23ம் தேதி முதல் 31ம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிப்பு.
தரைவழி தாக்குதலை தொடங்கியது இஸ்ரேல் காசா மீது மீண்டும் இஸ்ரேல் குண்டுமழை.அல் குவாத் மருத்துவமனை மீது விரைவில் தாக்குதல் நடத்தப்படும் என இஸ்ரேல் ராணுவம் அறிவித்துள்ளது.
தீவிரமடையும் இஸ்ரேல் - காஸா போர்.போரை நிறுத்த ஏற்பாடு செய்ய மோடியிடம் ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை மனு.
அப்படியே மணிப்பூர்கலவரத்தையும் நிறுத்த கோரிக்கை வைத்திருக்கலாமே ஓ.பி.எஸ்.
தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை நாளை (22)தொடங்குகிறது.
சிவகாசியில் அடுத்தடுத்து விபத்தால் அதிரடி சோதனை ரூ.50 லட்சம் பட்டாசுகள் பறிமுதல்: 30 பேர் மீது வழக்கு ஆலைகளுக்கு சீல் .
சென்னையை அடுத்த பனையூரில் பாஜக தலைவர் அண்ணாமலை வீட்டின் அருகே அனுமதி இன்றி புதிய கொடி கம்பம் அமைக்கப்பட்டதற்கு எதிர்ப்பு எழுந்துள்ளது. தேவையற்ற மோதல் போக்கு உருவாகும் மக்கள் முற்றுகை போராட்டம்.தொடர்ந்து கொடி கம்பம் அகற்றப்பட்டுள்ளது.
மேல்மருவத்தூர் பங்காரு உடல் உட்கார்ந்த நிலையில் அடக்கம்.
---------------------------------------
நமோ அரசு
2014ல் பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு கடுமையான தொழில், வேளாண் நெருக்கடி, கிராமப்புற நெருக்கடி நிலவுகிறது. வேலையின்மை அதிகரித்துள்ளது. ஊழலின் ஊற்றுக் கண்ணாக உள்ள கார்ப்பரேட்-இந்துத்துவா மோடி ஆட்சியில் மக்கள் எண்ணற்ற துன்பங்களை சந்திக்கின்றனர். கார்ப்பரேட் - இந்துத்துவாவை இணைக்கிற புள்ளியாக அதானி-மோடி உறவு உள்ளது. பெருமுதலாளிகளுக்கு சேவை செய்வதே அரசின் நோக்கமாக உள்ளது. அதானி, அம்பானி, டாடா போன்ற பெருமுதலாளிகளும் இந்துத்துவா கொள்கையை ஏற்றுக் கொண்டு அரசுக்கு ஆதரவு தருகின்றனர்” என்றார்.
அதானி குழுமத்தின் வரலாறு, மோசடி, விஸ்வரூப வளர்ச்சி போன்ற வற்றை பட்டியலிட்ட ஆத்ரேயா, “2002 குஜராத் கலவரத்திற்கு பிறகு தனிமைப்பட்ட இந்துத்துவா ஊழியரான மோடியை பாதுகாத்து, பிரதமராக்கியதில் அதானிக்கு பெரிய பங்குண்டு. அதானி - மோடிக்கு இருப்பது நீண்டகால ஊழல் உறவு. இதற்கு கைமாறாக, விமான நிலையங்கள், துறைமுகங்கள், சுரங்கங்கள், மின்உற்பத்தி, பாதுகாப்புதுறை, தானிய கிடங்குகள் என இந்திய நாட்டின் கேந்திரமான அனைத்தும் அதானியிடம் கொடுக்கப்பட்டுள்ளது” என்று குறிப்பிட்ட அவர், “தற்போது, இஸ்ரேலில் உள்ள ஹைபா துறைமுகத்தின் மீது அதானி குழுமம் கண் வைத்துள்ளது. அதற்காகவும், ஹமாஸ் தாக்குதல் நடத்தியவுடன் இஸ்ரேலை பிரதமர் ஆதரிக்கிறார்” என்பதை சுட்டிக்காட்டினார்.
“அதானி முறைகேடுகளை விசாரிக்க எதிர்க்கட்சிகள் நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணையை கோருகின்றன. ஆனால், அரசு மறுத்து வருகிறது. இந்த பின்புலத்தில், தற்போது சிஏஜி மூலம் 7 ஊழல்கள் வெளிவந்துள்ளன. ஒன்றிய அரசின் மக்கள் விரோத, பெரும் கார்ப்பரேட் ஆதரவான, இந்துத்துவா மதவெறி அரசியலை மக்களின் போராட்டங்களின் வாயிலாகவே முறியடிக்க முடியும்.
மகாராஷ்டிராவின் தலைநகர் மும்பையில் வான்கடே என்ற பெயரில் கிரிக்கெட் மைதானம் உள்ளது. பெரியளவில் பிரம்மாண்ட மைதானம் இல்லை என்றாலும், வான்கடே மைதானம் தொலைநோக்கு பார்வையுடன் கட்டப்பட்டுள்ளதால் சகல வசதிகளையும் கொண்டுள்ளது. மேலும் பாதுகாப்பு, அருகிலேயே நட்சத்திர ஹோட்டல்கள், சிக்கலின்றி வீரர்கள், ரசிகர்கள் சென்று வர இட வசதி, மைதானத்தில் இருந்து விரை வாக வெளியேற அகலமான பெவிலி யன் பாதை வசதிகள் என பல்வேறு வசதி கள் இருப்பதால் நாட்டின் முதன்மை யான கிரிக்கெட் மைதானமாக மும்பை வான்கடே மைதானம் உள்ளது. இதனால் உலகக்கோப்பை, முக்கியமான சர்வதேச தொடர், ஐபிஎல் தொடக்கம் மற்றும் இறுதி ஆட்டம் மும்பை வான்கடேவில்தான் காலங்கா லமாக நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையால், குஜராத் மாநில த்தின் அகமதாபாத் நகரில் உள்ள உல கின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதான மான நரேந்திர மோடி மைதானம் புழக்கத்தில் வந்ததில் இருந்து, கிரிக்கெட் உலகில் பிரசித்திப் பெற்ற மும்பை வான்கடே மைதானம் டம்மி யாக்கப்பட்டுள்ளது.
மும்பை வான்கடே மைதானம் டம்மி யாக்கப்பட்டது சாதாரண காரியத்திற் காக அல்ல. 4 சுயநலமிக்க காரணத்திற் காக, பல்வேறு சித்து விளையாட்டுகள் மூலம் அரங்கேற்றப்பட்டுள்ளது. 1.அகமதாபாத் மைதானம் மூலம் பிரதமர் மோடியின் சொந்த ஊரான குஜராத் மாநிலம் பிரபலமடைய வேண்டும். 2.அகமதாபாத் மைதானத்திற்கு வைக்கப்பட்டுள்ள பெயர் (நரேந்திர மோடி) மூலம் மோடியின் பெருமை உலகமெங்கும் ஒலிக்க வேண்டும். 3.மோடி - அமித் ஷா - ஜெய் ஷா (அமித் ஷா மகன்) கட்டுப்பாட்டில் உள்ள குஜராத் கிரிக்கெட் சங்கத்தின் கல்லா நிரம்ப வேண்டும். 4.மோடி முதல்வராக இருந்த பொழுது அவரது ஆட்சியில் நிகழ்ந்த கோத்ரா கலவரம் மட்டுமே குஜராத்தின் அடையாளமாக உள்ள நிலையில், அகமதாபாத் மைதானத்தை வைத்து ஆதாயம் தேட முயற்சிக்கப்படு கிறது. இந்த 4 காரணத்திற்காகவே அக மதாபாத் மைதானத்தை ஒன்றிய பாஜக அரசு பிரபலமடைய வைக்க முயற்சிக்கிறது. மும்பை மைதானத்தை டம்மி யாக்கி அகமதாபாத் மைதானம் பிரபல மாக்க பல்வேறு முயற்சி மேற்கொள்ள ப்பட்டாலும், அகமதாபாத் மைதா னத்தின் உண்மை நிலைமை படுமோச மானதுதான்.
-------------------------------------