அச்­சம் நிறைந்த சூழ்­நி­லை

 டெல்லி மாநில துணை முத­ல­மைச்­ச­ராக இருந்­த­வ­ர் மணீஷ் சிசோ­டியா .இவர் கடந்த பிப்­ர­வரி மாதம் 23 ஆம் தேதி அன்று சி.பி.ஐ.–யால் கைது செய்­யப்­பட்­டார்.

இன்­ன­மும் சிறை­யில்­தான் இருக்­கி­றார். அவ­ருக்கு இடைக்­கா­லப் பிணை கூட வழங்­கப்­ப­ட­வில்லை.

 சிசோ­டி­யா­வின் ஜாமீன் மனு உச்­ச­நீ­தி­மன்ற நீதி­ப­தி­கள் சஞ்­சீவ் கண்ணா, எஸ்.வி.பாட்­டியா அமர்­வில் விசா­ர­ணைக்கு வந்­தது.

கூடு­தல் சொலி­சிட்­டர் ஜென­ர­லைப் பார்த்து உச்­ச­நீ­தி­மன்ற நீதி­ப­தி­கள் எழுப்பி இருக்­கும் கேள்வி மிக­மிக முக்­கி­ய­மா­னது ஆகும்.

“டெல்லி மது­பா­னக் கொள்கை விவ­கா­ரத்­தில் லஞ்­சம் கைமா­றி­ய­தா­கச் சொல்­கி­றீர்­கள்.

 யார் அதை வழங்­கி­னார்­கள்? 

சிசோ­டியா மீதான புகா­ருக்கு என்ன ஆதா­ரம் வைத்­தி­ருக்­கி­றீர்­கள்? 

இவர் மீது எந்த அடிப்­ப­டை­யில் குற்­றம் சாட்­டு­கி­றீர்­கள்? தினேஷ் அரோரா என்­ப­வ­ரின் வாக்­கு­மூ­லத்தை மட்­டும்

ஆதா­ர­மா­கக் காட்­டு­கி­றீர்­கள். வேறு என்ன ஆதா­ரம் வைத்­தி­ருக்­கி­றீர்­கள்?

 சிலர் பேசிக் கொண்­ட­தற்கு என்ன ஆதா­ரம் வைத்­துள்­ளீர்­கள்?

 ‘வாட்ஸ் அப்’ செய்­தி­களை ஆதா­ர­மா­கக் கொள்ள முடி­யுமா? 

ஒரு அப்­ரூ­வர் அனு­மா­ன­மா­கச் சொல்­வதை ஏற்­றுக் கொள்ள முடி­யுமா?

 குறுக்கு விசா­ரணை நடக்­கும் போது இந்­தப் புகார்­கள் எல்­லாம் இரண்டு நிமி­டம் கூட நிற்­காது” என்றுநீதி­ப­தி­கள் சொல்லி இருக்­கி­றார்­கள்.

சி.பி.ஐ. –- வரு­மா­ன­வ­ரித்­துறை -– அம­லாக்­கத்­து­றையை வைத்­துக் கொண்டு ஒன்­றிய பா.ஜ.க. அரசு நடத்­தும் உருட்­டல் மிரட்­டல்­கள்

அனைத்­தும் உச்­ச­நீ­தி­மன்­றம் எழுப்­பும் கேள்­வி­க­ளுக்கு முன்­னால் தலை­கு­னிந்து நிற்­கின்­றன.

ஒரு ரியல் எஸ்­டேட் அதி­பர் தொடர்­பு­டைய வழக்­கில் -– அவரை எதற்­காகக் கைது செய்­துள்­ளோம் என்­ப­தையே சொல்­ல­வில்லை. அவர் மீதான குற்­றத்தை ஒரு தாளில் எழுதி வாசித்­தி­ருக்­கி­றார்­கள். அவர் உச்­ச­நீ­தி­மன்­றம் சென்று பிணை வாங்கி இருக்­கி­றார். 

அம­லாக்­கத்­து­றை­யின் இந்த நட­வ­டிக்­கையை உச்­ச­நீ­தி­மன்­றம் கடந்த வாரம் கண்­டித்­துள்­ளது.

“பொரு­ளா­தா­ரக் குற்­றங்­க­ளைத் தடுக்­கும் கடு­மை­யான பொறுப்­பைக் கொண்ட முதன்மை விசா­ரணை நிறு­வ­ன­மாக இருப்­ப­தால் - – அம­லாக்­கத்­­துறை­யின் ஒவ்­வொரு நட­வ­டிக்­கை­யும் வெளிப்­ப­டை­யா­க­வும் -– நியா­ய­மா­க­வும் இருக்க வேண்­டும்” என்று நீதி­ப­தி­கள் சொன்­னார்­கள். இதன் மூல­மாக

அம­லாக்­கத் துறை­யின் நட­வ­டிக்­கை­கள் உள்­நோக்­கம் கொண்­ட­தாக அமைந்து வரு­வ­தையே அறிய முடி­கி­றது.

எதிர்க்­கட்சி ஆட்­களை மிரட்­டு­வ­தற்­கா­கவே இவை பயன்படுத்­தப்­­

படுகி­றது. இந்த நட­வ­டிக்­கைக்கு உள்­ளா­ன­தால் பயந்து போய் –- பா.ஜ.க.

ஆத­ர­வா­ளர்­க­ளாக மாறி­ய­வர்­கள் மீது –- நட­வ­டிக்­கை­கள் இருப்­பது இல்லை.

கடந்த 2021, அக்­டோ­பர் 7ஆம் தேதி, மகா­ராஷ்­டிரா மாநி­லத்­தின் துணை முதல்­வ­ராக இருந்த தேசி­ய­வாத காங்­கி­ரஸ் கட்­சி­யைச் சேர்ந்த அஜித் பவார் வீட்­டில் வரு­மான வரித்­துறை சோதனை நடத்­தி­யது. அவ­ரது மூன்று சகோ­த­ரி­க­ளின் வீட்­டி­லும் சோதனை நடத்­தப்­பட்­டது.

 மும்பை, புனே, கோவா, ஜெய்ப்­பூர் உள்­ளிட்ட நக­ரங்­க­ளில் உள்ள அஜித் பவா­ருக்­குச் சொந்­த­மான, நெருக்­க­மா­ன­வர்­க­ளின் வீடு­கள், அலு­வ­ல­கங்­கள் என 70 இடங்­க­ளில் வரு­மான வரித்­துறை சோதனை நடத்­தி­யது.

 சோத­னை­யின் முடி­வில், 180 கோடி ரூபாய் அள­வுக்கு வரு­மான வரிக்­க­ணக்­கில் காட்­டப்­ப­டாத கருப்­புப்­ப­ணம் கண்­ட­றி­யப்­பட்­ட­தா­க­வும், 2.13 கோடி ரூபாய் மதிப்­புள்ள நகை­கள், 4.32 கோடி ரூபாய் ரொக்­கப்­ப­ணம் கைப்­பற்­றப்­பட்­ட­தாகவும் அறி­விக்­கப்­பட்­டது. 

மேலும், அஜித் பவா­ருக்கு, அவர் பெய­ரி­லும் அவ­ரது பினா­மி­கள் பெய­ரி­லு­மாக மொத்­தம் 1,000 கோடி ரூபாய் அள­வுக்கு சொத்து மதிப்பு உள்­ள­தாக வரு­மான வரித்­துறை செய்­தியை கசி­ய­விட்­டது. ‘

என்னை மிரட்ட முடி­யாது’ என்­றார் அஜித் பவார். ஆனால் அஜித் பவார் இப்­போது பா.ஜ.க.வாக மாறி­விட்­டார். அவர் மீது ரெய்டு நடத்­திய பா.ஜ.க. கட்சி, அஜித் பவா­ருக்கு துணை முத­ல­மைச்­சர் பத­வியை வழங்கி உள்­ளது.

இப்­போது அவர் மீது எந்த நட­வ­டிக்­கை­யும் இல்லை. நட­வ­டிக்கை எடுக்­க­வும் மாட்­டார்­கள். இப்­படி புனி­தர்­க­ளாக ஆகி­விட்ட பல பேரின் பட்­டி­யலை சசி­த­ரூர் முன்பு வெளி­யிட்டு இருந்­தார்.

* 300 கோடி மோசடி வழக்­கில் குற்­றம் சாட்­டப்­பட்ட நாரா­யண் ரானே, பா.ஜ.க.வில் சேர்ந்­த­தும் விசா­ரணை நிறுத்­தப்­ப­டு­கி­றது.

* நாரதா ஊழல் வழக்­கில் சிக்­கிய சுவெந்து அதி­காரி, பா.ஜ.க.வில் இணைந்­த­தும் விசா­ரணை நிறுத்­தம்.

* லஞ்ச வழக்­கில் சிக்­கிய ஹிமந்த பிஸ்வ சர்மா, பா.ஜ.க.வில்

இணைந்­த­தும் விசா­ரணை நிறுத்­தம்.

* அம­லாக்­கத்­து­றை­யால் ரெய்டு நடத்­தப்­பட்ட ஏக்­நாத் ஷிண்­டே­வின்

ஆத­ர­வா­ளர் பிர­தாப் சர்­னாய் மீதான வழக்கு மூடப்­பட்­டது.

* லஞ்ச வழக்­கில் லோக் ஆயுக்­தா­வால் வழக்­குப் பதி­யப்­பட்ட எடி­யூ­ரப்பா, மீண்­டும் பா.ஜ.க.வில் சேர்க்­கப்­பட்­டார். –- இது­தான் பா.ஜ.க.வின் கறை படிந்த விசா­ரணை வர­லா­று­கள் ஆகும்.

ராகுல்­காந்­தி­யின் எம்.பி. பத­வியை பறிக்க நடத்­தப்­பட்ட சதியை அனை­வ­ரும் அறி­வோமே. 07.02.2023 அன்று அதா­னி­யும் மோடி­யும் இருக்­கும் புகைப்­ப­டத்­தைக் காட்டி நாடா­ளு­மன்­றத்­தில் ராகுல் கடு­மை­யாக விமர்­சித்­தார். 

ராகுல் மீது வழக்கு போட்டு திரும்­பப் பெற்­றுக் கொண்­ட­வர் 16.2.2023 அன்று திடீ­ரென்று குஜ­ராத் உயர்­நீ­தி­மன்­றம் சென்று தான் பெற்ற தடை உத்­த­ரவை திரும்­பப் பெறு­கி­றார். இதை­ய­டுத்து, 17.03.2023 வாதங்­களை தொடர சூரத் மாவட்ட நீதி­பதி அனு­ம­திக்­கி­றார். 

ஐந்தே நாளில் அதா­வது 23 ஆம் தேதியே தீர்ப்பு வரு­கி­றது. ராகு­லுக்கு 2 ஆண்டு சிறை விதிக்­கப்­ப­டு­கி­றது. அதற்­கா­கவே காத்­தி­ருந்­தது போல, மறு நாளே –- 24 ஆம் தேதி அன்று அவ­ரது எம்.பி. பதவி பறிக்­கப்­ப­டு­கி­றது. ராகுல் காந்­தி­யின் பத­வி­யைப் பறிப்­ப­தற்­கா­கவே இவை அனைத்­தும் நடத்­தப்­பட்­டது. 

இவை தான் இப்­போ­தும் விசா­ரணை அமைப்­பு­கள் மூல­மாக நடத்­தப்­ப­டு­கின்­றன.

Don’t Create Atmosphere of Fear -– என்­பது அம­லாக்­கத்­து­றைக்கு முன்பு உச்­ச­நீ­தி­மன்­றம் சொன்ன அறி­வுரை ஆகும். அதா­வது ‘அச்­சம் நிறைந்த சூழ்­நி­லையை உரு­வாக்க வேண்­டாம்’ என்­பது ஆகும். ஆனால் அச்­சம் நிறைந்த சூழ்­நி­லை­யையே உரு­வாக்கி வரு­கி­றார்­கள்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?

ரூ360 கோடிகள் வீணா?