எதிர்க்கட்சிகள் மீது அவதூறு

 தமிழ்நாடு அரசுக்கு அவப்பெயரை ஏற்படு த்தும் சதித் திட்டத்தின் ஒருபகுதியாகவே, ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு  வீசப்பட்ட சம்பவம் நடந்துள்ளதாக சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி குற்றம் சாட்டியுள்ளார். 

இந்த சம்பவத்தை வைத்து, பாஜக அரசியல் செய்ய முயன்றால் அது தமிழ்நாடு மக்களிடம் எடுபடாது என்றும் எஸ். ரகுபதி தெரிவித்துள்ளார். கிண்டியிலுள்ள ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசியதாக சென்னை நந்தனம் எஸ்.எம். நகரை சேர்ந்த பிரபல ரவுடி கருக்கா வினோத் (42) கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். 

 இவர்மீது ஏற்கெனவே 4 கொலை முயற்சி வழக்கு உள்பட 14 வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், வியாழனன்று (அக்.26) ஆளுநரைச் சந்தித்த சென்னை காவல்துறை ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர், பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் குறித்தும், அதைத் தொடர்ந்து காவல்துறை தரப்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் விரிவாக ஆளுநரிடம் விளக்கம் அளித்தார்.

 பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், ராஜ்பவனில் நடைபெற்ற ஆளுநர் மீதான தாக்குதல் முயற்சி அல்ல என்று தெரிவித்தார்.

எனினும், பெட்ரோல் குண்டு வீச்சை வைத்து, தமிழ்நாட்டில் சட்டம் - ஒழுங்கு சீர்குலைந்துவிட்டது போன்ற தோற்றத்தை ஏற்படுத்த ஆளுநர் மாளிகையும், பாஜகவும் தீவிர முயற்சியில் இறங்கியுள்ளன.

 “கடந்த சில மாதங்களாகவே தமிழகத்தில் நடைபெறும் அவதூறு பிரச்சாரங்களால் பொதுவெளியில் ஆளுநருக்கு எதிரான அச்சுறுத்தல் அதிகரித்துள்ளது. 

வாய்மொழி தாக்குதல், அச்சுறுத்தல் போன்றவை எல்லாம்  கடந்து தற்போது பெட்ரோல் குண்டு ஆளுநர் மாளிகையில் வீசப்பட்டுள்ளது. 

ஆளுநர் தொடர்ந்து அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் பணி யாற்ற முடியாது” என்று ஆளுநர் மாளிகையின் துணைச் செயலாளரே நேரடி யாக மாநில அரசுக்கு எதிராக பிரச்சாரத்தில் இறங்கியுள்ளார்.

 “ஆளுநர் மாளிகைக்கே பாதுகாப்பு இல்லாததால், இந்த விவகாரத்தை தேசிய புலனாய்வு முகமை (NIA) விசாரிக்க வேண்டும்”  என்று பாஜக-வைச் சேர்ந்த வானதி சீனி வாசன் கூக்குரல் எழுப்பியுள்ளார்.

இந்நிலையில்தான், தமிழக அரசுக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் சதித் திட்டத்தின் ஒருபகுதியாகவே, ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் நடந்துள்ளதாக தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி குற்றம் சாட்டியுள்ளார்.

 வியாழனன்று புதுக்கோட்டையில் நடை பெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட சட்டத் துறை அமைச்சர் எஸ். ரகுபதியிடம்  செய்தியா ளர்கள் பல்வேறு கேள்விகளை எழுப்பினர். 

குறிப்பாக, ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவத்தில், குற்றவாளியை தப்பவிட்டு விட்டதாக ஆளுநர் மாளிகை, அதன் ‘எக்ஸ்’ சமூகவலைதள பக்கத்தில் பதிவிட்டிப்பது குறித்து செய்தி யாளர்கள் கேட்டனர். 

அதற்கு பதிலளித்த அமைச்சர் ரகுபதி, “அவர்கள் (ஆளுநர் மாளிகை) எந்த அடிப்படை யில் அவ்வாறு கூறுகின்றனர் என்று தெரிய வில்லை. குற்றவாளியை காவல்துறை கைது  செய்துவிட்டது. அனைத்து பத்திரிகை மற்றும்  ஊடகங்களிலும் இந்த செய்தி வந்திருக் கிறதே” என்று கூறியுள்ளார்.

திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் தொடர்ந்து ஆளுநருக்கு எதிராக வெறுப்புணர்வை தூண்டுவதால்தான் இதுபோன்ற சம்பவங்கள் நிகழ்வதாக காவல்  நிலையத்தில் ஆளுநர் மாளிகை புகார் அளித்துள்ளதே என்ற மற்றொரு கேள்விக்கு, “தமிழக மக்கள் மற்றும் தமிழக அரசின் மீது  தொடர்ந்து வெறுப்புணர்வை பரப்பிக் கொண்டி ருக்கின்ற முதல் நபர் மரியாதைக்குரிய ஆளுநர்தான். எனவே, நாங்கள் எப்போதுமே ஆளுநருக்கு எதிராக வெறுப்புணர்வைப் பரப்பவில்லை. இதை தொடங்கியது யார்?     ஆளுநர்தான். 

ஊர் ஊராகச் சென்று பிரச்சாரம் செய்கிறார். ஒரு கட்சியினுடைய மூன்றாந்தரப் பேச்சாளரைப் போல், எதிர்க்கட்சித் தலைவரைப் போல அவர்தான், பிரச்சாரங்கள் செய்கிறார். 

ஆளுநருடன் நாங்கள் மோதல் போக்கை கடைபிடிக்கவில்லை. அவர் மாநில பாஜக தலைவர் போல குற்றச்சாட்டுகளை கூறும் போது, அதற்கு பதில் அளிக்க வேண்டிய கடமை எங்களுக்கு உள்ளது.

 ஆனால் ஒன்று, நாங்கள் ஆட்சி செய்கிற இந்த மாநிலத்திலேயே, பெட்ரோல் குண்டு வீசவேண்டிய அவசியம் எங்களுக்கு கிடையாது. இந்தநேரத்தில், சட்டம் - ஒழுங்கு பிரச்சனை எல்லாம் வந்து விட்டதாகக் கூறுவார்கள். எனவே, திமுகவோ,  அதன் தோழமை கட்சிகளோ இந்த சம்பவ த்துக்கு பொறுப்பல்ல. 

இது ஒரு சம்பவம்.  இந்த சம்பவத்தை உடனடியாக தடுத்திருக் கிறோம். உடனடியாக சம்பந்தப்பட்ட குற்ற வாளியை கைது செய்திருக்கிறோம். அவர் மீது விசாரணை நடைபெறுகிறது. குற்றவாளி சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார். இதில் நாங் கள் எந்தவிதமான தவறும் செய்யவில்லை” என்று எதிர்க்கேள்வி எழுப்பியுள்ளார்.

 ஆளுநர் மாளிகைக்கே பாதுகாப்பு இல்லை என்று கூறப்படும் குற்றச்சாட்டு குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், “தமிழக முதல்வரின் ஆட்சியில் ஆளுநர் மாளிகைக்கு முழு பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளது. எனவே, பாதுகாப்பு இல்லை என்று கூறுவது முழுக்க முழுக்க தவறான ஒன்று.

 சட்டம் - ஒழுங்கைப் பேணி பாதுகாப்பதில், இந்த அரசு எந்த தவறையும் செய்யாது. தமிழக முதல்வர் ஸ்டாலின், எதிரியாக இருந்தாலும் அவரை பாதுகாக்கும் தலைவராகத்தான் இருப்பார்” என்றும் அமைச்சர் எஸ். ரகுபதி கூறியுள்ளார்.

ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. இ

துகுறித்து கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:  அக்டோபர் 25 அன்று ஆளுநர் மாளிகை முன்பு  பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் கடும் கண்டனத்திற்குரி யது.

 இதற்கு காரணமான குற்றவாளி மீது கடுமையான நடவடிக்கை எடுத்து தண்டிக்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது.  

ஆளுநர் மாளிகையின் பாதுகாப்பு அதிகாரிகள் விரைந்து செயல்பட்டு அசம்பாவிதம் ஏதும் நடைபெறாமல் தடுத்து நிறுத்தியதோடு  சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளியையும் உடனடியாக கைது செய்துள்ளனர்.

 இதுபோன்ற சம்பவங்கள் இனி நடைபெறாமல் தடுக்க விழிப்புடன் இருக்க வேண்டுமென காவல்துறையை சிபிஎம் வலியுறுத்துகிறது.

இச்சம்பவம் குறித்து ஆளுநர் மாளிகை அதிகாரி, சென்னை பெருநகர காவல் ஆணையரிடம் புகார் அளித்துள் ளார்.

 அந்தப் புகாரில் தமிழகத்தில் ஜனநாயகப்பூர்வமாக செயல்பட்டுக் கொண்டிருக்கிற அரசியல் கட்சிகள் மீது குறிப்பாக, மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகள் மீது அடிப்படை ஆதாரமற்ற குற்றச் சாட்டை முன்வைத்திருக்கிறார். 

“திமுக மற்றும் அதன்  கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் மற்றும் தொண்டர்களால் பொதுக் கூட்டங்களிலும், அவர்களது சமூக ஊடகங்களிலும் அச்சுறுத்தப்படுவதாக” புகாரில் தெரிவித்துள்ளார். 

இது  முழுக்க, முழுக்க புனையப்பட்டுள்ள கட்டுக்கதை. இப்படிப்பட்ட உள்நோக்கம் கொண்டிருக்கிற புகார் கடும் கண்டனத்திற்கு உரியதாகும். 

ஆளுநர் ஆர்.என். ரவி துவக்கத்திலிருந்தே மாநிலத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியை ஜனநாயக ரீதியில் செயல்படவிடாமல் அதிகார அத்துமீறல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருவது அனைவரும் அறிந்ததே. 

மாநில அரசின் அதிகாரங்களில் தலையீடு செய்வது, மாநில மக்களின் உரிமைகளை பாதுகாத்திடும் சட்டத்தின் ஆட்சிமுறைக்கு இடையூறு செய்வது போன்ற வகையில் ஆளுநரின் செயல்பாடுகள் அமைந்துள்ளன. ஆளுநரின் பேச்சுக்களும் நாடாளுமன்ற ஜனநாயக நெறிமுறைகளுக்கும் மாறாக இந்துத்துவ நிகழ்ச்சி நிரலை முன்னெடுத்துச் செல்லும் வகையில் உள்ளன. 

இதன் காரணமாக ஜனநாயக சக்திகளால் கடும் விமர்சனங்களுக்கு ஆளுநர் ஆட்பட்டு வருகிறார். 

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் மற்றும் ஜனநாயக சக்திகள் மீது உள்நோக்கத்துடன் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவத்தை பயன்படுத்தி  அரசியல் ஆதாயம் தேட ஆளுநர் முயற்சிக்கிறார். 

இந்த புகார் கடிதம் ஆளுநரின் தான்தோன்றித்தனமான பேச்சுக்களுக்கு எதிர்வினையோ, விமர்சனமோ வரக்கூடாதென்ற நோக்கத்துடன் எதிர்க்கட்சிகளின் மீது அவதூறுகளை அள்ளி வீசுவதாகும்.

மேலும், ஏப்ரல் 2022 இல் ஆளுநர் தருமபுரம் ஆதீனம் மடத்திற்கு சென்றபோது தடிகளாலும், கற்களாலும் தாக்கப்பட்டதாகவும் இது குறித்து ராஜ்பவன் காவல்துறை புகார் அளித்தும் எந்த  நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஆனால் இது எந்த விதத்திலும் உண்மை இல்லை. இது குறித்து 19.4.2022 மயிலாடுதுறை காவல் நிலையத்தில் எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டுள்ளது. 

எனவே, ஆளுநர் மாளிகை அதிகாரியின் புகாரில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சியினர் மீது எழுப்பப்பட்டுள்ள மிக மோசமான அடிப்படை ஆதாரமற்ற அவதூறு குற்றச்சாட்டை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது. 

இந்த அவதூறு குற்றச்சாட்டை திரும்பப் பெற வேண்டுமெனவும் சிபிஎம் வலியுறுத்துகிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

----------------------------------------------

ராஜ்பவன்,ரவி சொல்வதெல்லாம் பொய .

பொய்யைத் தவிர வேறில்லை.

Governor's House incident Police description with evidence
சென்னை தேனாம்பேட்டையைச் சேர்ந்த பிரபல ரவுடி கருக்கா வினோத், நேற்று முன்தினம் ஆளுநர் மாளிகை வாசலில் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. 
இந்நிலையில் இது தொடர்பாக ஆளுநர் மாளிகை வைத்த குற்றச்சாட்டை தமிழக காவல்துறை மறுத்துள்ளது. இது தொடர்பாக தமிழக போலீஸ் டிஜிபி சங்கர் ஜீவால், சென்னை பெருநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர், தமிழக சட்ட ஒழுங்கு ஏடிஜிபி அருண் உள்ளிட்டோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். 
மேலும் ஆளுநர் மாளிகை முன் என்ன நடந்தது என்பது குறித்து சிசிடிவி காட்சிகள் மூலம் விளக்கம் அளிக்கப்பட்டது.
அப்போது சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சந்தீப் ராய் ரத்தோர், “கருக்கா வினோத் தேனாம்பேட்டையில் இருந்து ஆளுநர் மாளிகைப் பகுதிக்கு நடந்து வந்தார். அவரிடம் பெட்ரோல் நிரம்பிய நான்கு பாட்டில்கள் இருந்தன. 
முதலில் கவரில் பெட்ரோல் பாட்டிலை எடுத்துவந்தவர், பின்னர் சட்டையினுள் மறைத்து எடுத்து வந்தார். கருக்கா வினோத் ஆளுநர் மாளிகை உள்ளே நுழைய முயலவில்லை. அவர் மாளிகையின் எதிர்புறம் இருந்து வீசியிருக்கிறார். ராஜ்பவன் ஊழியர்கள் சம்பவத்தை தடுத்ததாக கூறப்படுவதில் உண்மையில்லை. அவரைக் கைதுசெய்தது காவல்துறைதான்” என்றார்.
கருக்கா வினோத் நடந்து வரும்,காவல்துறை கைது செய்வது கண்காணிப்பு காமிரா காட்சிகள் ஒளிபரப்பப் பட்டன.தரப்பட்டன.


மேலும் டிஜிபி சங்கர் ஜிவால், “ஆளுநர் மாளிகைப் பாதுகாப்பில் எந்தக் குறைபாடும் இல்லை. அங்கு 253 காவலர்கள் பணியில் இருக்கிறார்கள். 

உரிய பாதுகாப்பு வழங்கப்படுகிறது. முதலில் பலர் வந்து குண்டு வீசியதாகத் கூறப்பட்டது. ஆனால் அவர் தனியாகத்தான் வந்தார். ஆளுநர் மாளிகை பக்கத்தில்கூட வரவில்லை. 

எதிர்ப்புறத்தில் இருந்துதான் வீசினார். நான்கு பாட்டில்களை எடுத்து வந்தார், இரண்டு வெடித்தது. கருக்கா வினோத்தைக் காவலில் எடுத்து விசாரித்த பின்னர் முழுமையான தகவல் தெரியவரும். சென்னை பாதுகாப்பான நகரம் என ஆய்வு முடிவுகளில் தெரியவந்துள்ளது” என்றார்.


ஆளுநர் ஆர்யன்.ரவி தருமபுரம் சென்றபோது, கற்களாலும், தடியாலும் தாக்கப்பட்டதாக கூறியது பொய்.

 என அதற்கான ஆதாரங்களை வெளியிட்டு, ஆளுநர் வாகனம் தாக்கப்படவில்லை தமிழகம் அமைதி மாநிலமாக இருக்கிறது என காவல்துறை சார்பில் விளக்கமளிக்கப்பட்டது. 

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?