உருட்டுகளும், உண்மைகளும்.
‘ ஆளுநர்கள் யாரும்தேவையே இல்லாமல் அரசியல் செய்யாமல் இருப்பது நல்லது...’ யாரோ ஒருத்தன் ராஜ் பவன் முன்னாடி பெட்ரோல் குண்டு போட்டதை சதி, கிதினு பேசிட்டு இருக்காங்க. தமிழ்நாட்டில் பாஜக பூஜ்ஜியம்; அண்ணாமலை ஒரு வேஸ்ட்" - எஸ்.வி.சேகர் .
"இந்திய ஒன்றிய அரசின் மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் இணையத் தளத்தில் இருந்து 81 கோடி இந்தியர்களின் தரவுகள் வெளியானதாக-" அதிர்ச்சி தகவல்.
மாநிலங்களை ஒழிக்க நினைக்கிறது பாஜக.. Speaking4India podcast மூலமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சனம்!
12000 கோடிகளில் மோடியால் கட்டப்பட்ட புதிய நாடாளுமன்றத்தில் பழுதான தரைத்தளஓடுகள்,இருக்கைகள்,அறைகலன்களை பழுதுபார்க்க,மாற்ற ஒப்பந்தபுள்ளிகள் வெளியானது.கட்டிடம் இன்னமும் முழுமையான உபயோகத்திற்கு வராதநிலையில் ஒப்பந்தபுள்ளிகள் வெளியானது அதிர்ச்சி!
திமுக செலவில் இடிந்தகரை கடற்கரையில் மீனவர்களுக்கு சாலை வசதி
கார்பரேட்கள் தேர்தல் பத்திரங்கள் மூலம் பாஜகவிற்கு மூவாயிரம் கோடிகள் அள்ளி வழங்கியது தொடர்பான தகவல்களை வெளியிடத்தேவையில்லை.உச்சநீதிமன்றத்தில் ஒன்றிய அரசு வாதம்.
திருவாரூர் வெடிக்கடைகளில் விற்பனைக்கு வைத்திருந்த வெடிகள் வெடித்து விபத்து.
ஆந்திரா ரயில் விபத்துக்கு மனித தவறே காரணம் என ரயில்வே அறிவிப்பு. சிக்னலை கவனிக்காமல் ரயிலை ஓட்டியதயதே விபத்து உண்டானது? விசாரணை .
"குஜராத் முதலமைச்சராக மாநில உரிமைகள் குறித்து பேச்சு. பிரதமரானதும் மாநில உரிமைகள் பறிப்பு" - ஸ்பீக்கிங் பார் இந்தியா குரல்வழிப் பதிவில் முதலமைச்சர் ஸ்டாலின் .
காவிரியிலிருந்து 2600 கன அடி தண்ணீர் தமிழகத்திற்குத் திறக்க கர்நாடக அரசுக்குக் காவிரி நீர் ஒழுங்காற்று குழு பரிந்துரை!
முதல் முறையாக பாப்பிரெட்டி பாளையம் கிராமத்திற்கு வந்த அரசுப் பேருந்து.பட்டாசு வெடித்து கொண்டாடிய மலைவாழ் மக்கள்.
ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க காலதாமதம் செய்து வருவதற்கு எதிராக வழக்கு தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு உரிய நேரத்தில் ஒப்புதல் அளிக்க ஆளுநருக்கு உத்தரவிட வேண்டும் என கோரிக்கை
--------------------------------------------
இணையமே போதுமா இளைஞர்களுக்கு?
பிரதமர் நரேந்திர மோடி 2014 மக்களவைத் தேர்தலின்போது ஆண்டுக்கு 2 கோடிப் பேருக்கு வேலை தருவோம் என்று வாக்குறுதி அளித்தார்.
அவர் ஆட்சிக்கு வந்து 10 ஆண்டுகள் ஆகி றது. அவர் வாக்களித்தபடி இளைஞர்களுக்கு வேலை கொடுத்திருந்தால் 20 கோடிப் பேருக்கு வேலை கிடைத்திருக்க வேண்டும். ஆனால் இந்தியாவில் வேலையில்லாதோரின் எண் ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருவது மட்டுமல்ல, வேலையில் இருந்தவர்களும் வீதிக்கு விரட்டப்பட்டுள்ளனர்.
ஆனால் பிரதமர் மோடி வாய்ப்பந்தல் போடுவதில் மட்டும் ஒன்றும் குறைவில்லை. ‘மனதின் குரல்’ 106ஆவது நிகழ்ச்சியில் பேசிய அவர், ‘மேரா யுவபாரத்’ என்ற பெயரில் இளை ஞர்களுக்கான பிரத்யேக இணையதளம் உரு வாக்கப்படும் என்றும் இதில் இளைஞர்கள் பதிவு செய்து கொள்ள வேண்டுமென்றும் நாட்டை கட்டியெழுப்பும் பணியில் அவர்கள் பயன்படுத்திக் கொள்ளப்படுவார்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.இந்த இணையதளத்தில் இணைபவர்க ளுக்கு வேலைவாய்ப்பு வழங்குவது குறித்து பிர தமர் மோடி எதுவும் குறிப்பிடவில்லை.
மாறாக, வழக்கம்போல வெற்று அலங்கார வார்த்தைக ளையே இப்போதும் உதிர்த்திருக்கிறார்.
பண்டிகைக் காலம் நெருங்குவதால் உள்ளூர்ப் பொருட்களை வாங்குமாறும், அதற்கு பணத்தை பயன்படுத்தாமல் யுபிஐ முறையில் பணம் செலுத்துமாறும் பிரதமர் கேட்டுக் கொண்டுள்ளார்.
உள்ளூர்ப் பொருட்களை வாங்க வேண்டும் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் நாட்டின் அனைத்து துறைகளையும் அந்நியருக்கு அகல திறந்துவிடும் போக்கை பின்பற்றும் ஒன்றிய அரசு மக்களுக்கு மட்டும் இலவச உபதேசம் வழங்குவதில் அர்த்தம் உண்டா?
பணமதிப்பிழப்பு நடவடிக்கையை அறிவித்த போது, யுபிஐ முறையை ஊக்குவிப்பதும் அரசி னுடைய நோக்கம் என்று கூறப்பட்டது. பண மதிப்பிழப்பு, ஜிஎஸ்டி வரி, விலைவாசி உயர்வு போன்றவற்றால் மக்களிடம் பணப் புழக்கம் குறைந்துள்ளது.
அதை அதிகரிக்க ஒன்றிய அரசு எதுவும் செய்வதில்லை. ஆனால் டிஜிட்டல் கரன்சியை ஊக்குவிக்க வேண்டும் என்ற பெயரில் தொடர்ந்து மக்களுக்கு அறி வுரை வழங்கப்படுகிறது.
தங்களிடம் இல்லாத பணத்தை எந்த முறையில் பயன்படுத்துவது என்பதுதான் மக்களின் கேள்வி?
நவம்பர் 15ஆம் தேதி பிர்சா முண்டாவின் பிறந்தநாளை பழங்குடி மக்கள் பெருமை தின மாகக் கொண்டாடவுள்ளதாகவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
பழங்குடி மக்களின் வன நிலங்களை கார்ப்பரேட் கொள்ளையர்களுக்கு கைமாற்றி விடும் ஒன்றிய அரசு அவர்களை பெருமைப்படுத்துவதாகக் கூறுவது வெறும் ஏமாற்று வேலையே ஆகும்.
அண்ணாமலையின் அடுக்கடுக்கான"எனக்குத் தெரிந்த ஒரே வீரலட்சுமி ஆங்கிலேயர்கள் இருக்கும்போது சாதியை எதிர்த்துப் போராடிய கோவில்பட்டி வீரலட்சுமிதான்" என்று கூறியிருந்தார்.
உண்மை :
கோவில்பட்டி வீரலட்சுமி 1961 ஆம் ஆண்டு பிறந்து, 1990 ஆம் ஆண்டு மறைந்தவர். 1947 ஆம் ஆண்டே இந்தியா சுதந்திரம் பெற்றுவிட்டது.
உருட்டு 2 : மருதமலை கோயிலும் மின்சாரமும்:
சென்ற மாதம் கோயம்பத்தூரில் நடந்த பொதுக் கூட்டத்தில் பேசும்போது, "1962 ஆம் ஆண்டு வரை மருதமலை கோயில் முருகனைப் பார்க்க வேண்டும் என்றால் அதற்கு மின்சாரம் இருக்காது. மருதமலை முருகன் கோயிலுக்கு மின்சாரம் கொடுக்கக் கூடாது என திமுக கொள்கையாகக் கொண்டிருந்தது. அதை உடைத்து மின்சாரம் கொடுத்தவர் சின்னப்பா தேவர். திமுக சனாதன தர்மத்திற்கும் இந்து தர்மத்திற்கும் எதிராக இருக்கும் என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு" என்று அண்ணாமலை பேசியிருந்தார்.
உண்மை : : 1967 இல் தான் தி.மு.க முதன்முறையாக ஆட்சியைப் பிடித்தது. 1962 இல் காமராஜர் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்றது.
உருட்டு 3 : மருத்துவ படிப்பில் முதுநிலைக்கான இடங்கள்.
"இந்தியாவில் மொத்தம் 1,80,000 க்கும் மேல் முதுநிலை மருத்துவ படிப்புக்கான இடங்கள் இருக்கிறது. அவற்றில் கடந்த ஆண்டு ஏகப்பட்ட சீட் நிரம்பவில்லை" என்று செய்தியாளர் சந்திப்பில் அண்ணாமலை கூறினார்.
உண்மை : இந்தியாவில் மருத்துவ படிப்பிற்கான இடங்கள் மொத்தமே 1,07,948 மட்டுமே உள்ளன. அவற்றில் 67,802 முதுநிலை இடங்கள் உள்ளன. அடுத்ததாக, 2022-23 ஆம் கல்வியாண்டில் 4,400 முதுநிலை மருத்துவ இடங்கள் மட்டுமே நிரப்பப்படாமல் இருக்கிறது. இந்தப் புள்ளி விபரங்கள் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் சார்பில் ஒன்றிய அரசின் இணையதளத்தில் பதிவேற்றப்பட்டவை.
உருட்டு 4 :
சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்ட வீரர்களைப் பட்டியலிட்ட அண்ணாமலை, "வீரபாண்டிய கட்டபொம்மன் அவர்கள், பூலித் தேவன் அவர்கள், வல்வில் ஓரி அவர்கள்.." என்று வல்வில் ஓரியையும் சேர்த்து சொன்னார்.
உண்மை :
வல்வில் ஓரி சுதந்திரப் போராட்ட வீரர் அல்ல. அவர் சங்க காலத்தைச் சேர்ந்த கடையேழு வள்ளல்களில் ஒருவர். அவருக்கும் சுதந்திரப் போராட்டத்துக்கும் எந்தச் சம்பந்தமும் கிடையாது.
உருட்டு 5 :
'1967 ஆம் ஆண்டு சத்ரபதி சிவாஜி மன்னர் சென்னையில் உள்ள காளிகாம்பாள் கோயிலுக்கு வந்தார்' என்றார் அண்ணாமலை.
உண்மை : சத்ரபதி சிவாஜி 1630 ஆம் ஆண்டு பிறந்து, 1680 ஆம் ஆண்டு மறைந்தவர்.
உருட்டு 6 : பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினர்.
'பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினருக்கான (EWS) 10 சதவீத இட ஒதுக்கீடு இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கும் பொருந்தும்' என்றார் அண்ணாமலை
உண்மை : முன்னேறிய பிரிவினருக்கு (FC) மட்டும்தான் பொருளாதார ரீதியிலான இந்த இட ஒதுக்கீடு கிடைக்கும்.
உருட்டு 7 :
1956 ஆம் ஆண்டு மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் மணிமேகலை என்ற சிறுமி மிக அருமையாக தமிழ் சங்க இலக்கியப் பாடலை பாடினார். உடனே மைக்கை எடுத்த அண்ணாதுரை, இந்த பெண் அழகாக பாடினார். இதுவே கற்காலமாக இருந்தால் என்ன சொல்லிருப்பார்கள் தெரியுமா, உமையவளின் பாலை குடித்துதான் இந்த மணிமேகலை பாட்டு பாடினார் எனக் கட்டுக்கதையை கட்டி விட்டு இருப்பார்கள். நல்லவேளை பகுத்தறிவு வந்து விட்டது. மக்கள் இதையெல்லாம் நம்ப மாட்டார்கள் என அண்ணா பேசுகிறார்.
6 ஆம் நாள் அக்கூட்டத்தில் பேச வேண்டிய முத்துராமலிங்கத் தேவர், ஒரு நாள் முன்பாக 5 ஆம் நாளே மேடைக்கு வந்து பேசுகிறார். 'சிவபுராணம் இயற்றப்பட்ட மதுரை மீனாட்சி அம்மன் கோவில் வளாகத்தில், யார் இங்கு வந்து உமையவள் பற்றி தவறாகப் பேசியது. மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இதுவரை பாலில் அபிஷேகம் நடந்து இருக்கிறது, இன்னொரு முறை கடவுள் இல்லை என்று சொல்பவன் கடவுளை நம்புகின்றவர்களை பற்றி தவறாக பேசினார்கள் என்றால், இதுவரை பாலில்தான் மீனாட்சி அம்மனுக்கு அபிஷேகம் நடந்திருக்கிறது. இனி இரத்தத்தில் அபிஷேகம் நடத்தப்படும் என்று சொன்ன பிறகு, பி.டி.ராஜன், அண்ணாதுரை ஆகியோர் மன்னிப்பு கேட்டு விட்டு ஓடி வந்தார்கள் ” என்று அண்ணாமலை பேசினார்.
உருட்டு 8 :
இதற்கு கண்டனங்கள் எழவே, "இரண்டு நாட்களுக்கு முன்பு, 1956 ஆம் ஆண்டு ஜூன் 4 ஆம் தேதி மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் நடந்த நிகழ்ச்சியில் நடந்ததைக் கூறினேன். அண்ணாமலை பேசியது தவறு என்கிறார்கள். தி ஹிந்து ஆங்கில நாளிதழில் ஜூன் 2,3,4 ஆகிய தேதிகளில் வெளியான செய்திகளில் பி.டி.ராஜன், அண்ணாதுரை, முத்துராமலிங்கத் தேவர் ஆகியோர் பேசிய பேச்சுகள் இடம்பெற்றுள்ளன. அதைப் படித்து பார்த்தால் உண்மை தெரியும்” என்று அண்ணாமலை விளக்கம் தந்தார்.
உண்மை :
இதையடுத்து, தி இந்து ஆங்கில நாளிதழானது 1956 ஆம் ஆண்டு மே 31 ஆம் தேதி முதல் ஜூன் 4 ஆம் தேதி வரை, மதுரை தமிழ் சங்க விழா குறித்து தான் வெளியிட்ட செய்திக் குறிப்புகளை 'முத்துராமலிங்க தேவரும் சி.என்.அண்ணாதுரையும் தொடர்புடைய 1956 மதுரை நிகழ்ச்சியில் என்ன நடந்தது?' என்ற தலைப்பில் மறுவெளியீடு செய்தது. அதில், அண்ணாதுரை மன்னிப்பு கேட்டதாக எந்தத் தகவலும் இல்லை என்று அக்கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் முன்னாள் மாநில தலைவர் வி.எஸ்.நவமணி இந்து தமிழ் திசை நாளிதழுக்கு அளித்த பேட்டியில், "அண்ணாவின் கருத்தில் முத்துராமலிங்கத் தேவர் அவர்களுக்கு மாற்றுக் கருத்து இருந்தது. ஆனால், அண்ணாவை மன்னிப்பு கேட்க வேண்டும் என்று தேவர் சொல்லவில்லை" என்று கூறியிருக்கிறார்.
உருட்டு 9 : இந்துக்களின் கோயில்களை இடித்த டி.ஆர்.பாலு !
"100 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த இந்துக்களின் கோயில்களை தான் இடித்ததை திமுக நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு பெருமையாகப் பேசுகிறார். இதற்காகத்தான் இந்து சமய அறநிலையத்துறை கலைக்கப்பட வேண்டும் என்று நாங்கள் கூறுகிறோம்" என்று அண்ணாமலை தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அதோடு, 40 நொடிகள் ஓடக்கூடிய டி.ஆர்.பாலுவின் காணொளி ஒன்றையும் அதோடு இணைத்திருந்தார்.
உண்மை : ஆனால், முழு காணொளியில் டி.ஆர்.பாலு என்ன பேசுகிறார் என்றால், “என்னுடைய தொகுதியில் உள்ள ஜிஎஸ்டி சாலையில் விரிவாக்கத்தின் போது மூன்று கோயில்களை இடித்தேன். சரஸ்வதி, லெட்சுமி, பார்வதி ஆகிய கோயில்களை இடித்தேன். பலர் வேண்டாம் என்றார்கள். வேறு வழியில்லை அப்பணிக்காக இடித்துதான் ஆக வேண்டும் என்று சொல்லி இடித்தேன். அதை விடச் சிறப்பானதாக அக்கோயில்களைக் கட்டிக் கொடுத்தேன். 100, 200 பேர் அமர்ந்து சாப்பிடக் கூடிய வகையில் மண்டபம் எல்லாம் வைத்து புதிய கோயில் கட்டிக் கொடுத்தேன்” என்று பேசியிருந்தார். அக்காணொளியில் ஒரு சிறிய பகுதியை மட்டும் வெட்டி எடுத்து, தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவேற்றியிருந்தார் அண்ணாமலை.
உருட்டு 10 : திமுக முன்னாள் அமைச்சர் ஆற்காடு வீராசாமி குறித்த பேச்சு !
கடந்த ஆண்டு ஜூன் 8 ஆம் தேதி, நாமக்கலில் நடந்த பொதுக் கூட்டம் ஒன்றில் பேசும்போது, "ஆற்காடு வீராசாமி அண்ணன் இப்ப இல்ல.. இறைவனடி சேர்ந்து விட்டார்.." என்று பேசியிருந்தார் அண்ணாமலை. அந்தக் காணொளி சமூக வலைதளங்களில் பாஜகவினரால் வைரலானது.
உண்மை : 87 வயதான ஆற்காடு வீராசாமி உயிருடன்தான் உள்ளார்.