மதவாத குரல் எழுப்பியது அறிவீனம்."
சுங்கத்துறை ஓட்டுநர், கேண்டீன் உதவியாளர் தேர்வில் முறைகேடு விவகாரத்தில் ப்ளூடூத் பொருத்தி தேர்வு எழுதி கைதான உ.பி.யைச் சேர்ந்த 28 பேர் கைது.
தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய லட்சத்தீவுகள் பகுதியில் வரும் 17ம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளது.
கொரோனா காலத்தில் ஆன்லைன் வகுப்புக்காக மாணவர்களுக்கு டேட்டா சிம் கார்டு வழங்குவதாக அ.தி.மு.க அரசு ரூ.4.93 கோடி வீண் செலவு. கணக்கு தணிக்கை ஆணையர் அறிக்கை தகவல்.
வாச்சாத்தி வன்கொடுமை வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக குற்றவாளிகள் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு.ஏற்கனவே 31ஆண்டுகளுக்குப் பிறகு தீர்ப்பு வந்தது.மறுபடியும் முதலில் இருந்தா?
சமூகநீதியைக் காவு வாங்கி விடுவார்கள். எந்தச் சூழலிலும் சமூகநீதியை நாம் விட்டுக் கொடுத்துவிடக் கூடாது - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
இந்தியாவில் வாழ விரும்பினால் பாரத் மாதா கி ஜே சொல்ல வேண்டும் - மத்திய அமைச்சர் கைலாஷ் சவுத்ரி பேச்சு.
கலைஞர் கருணாநிதி பிறந்தநாள் நூற்றாண்டு விழா நினைவு நாணாயம் . கோரிக்கைக்கு ஒன்றிய அரசு ஒப்புதல்
பாக். கிரிக்கெட் வீரர்களுக்கு எதிராக குஜராத்தில் “ஜெய்ஸ்ரீராம்” முழக்கம்."அதைஏற்றுக்கொள்ள முடியாதது.விளையாட்டை விளையாட்டகத்தான் பார்க்க வேண்டும்.நம்நாட்டிற்க்கு வந்தவர்கள் நம் ஙிருந்தினர்கள்.மதவாத குரல்கள் எழுப்பியது அறிவீனம்."உதயநிதி ஸ்டாலின் கண்டனம்.
எல்லையைக் கடந்து சென்று பாலஸ்தீனத்தின மக்களுக்கு இஸ்ரேல் தடை செய்த தண்ணீர் மற்றும் உணவுப் பொருட்களை வழங்கும் எகிப்தியர்கள்.
------------------------------------
வாயைக்கொடுத்து முழித்தவர்
அண்ணாமலை என்றாலே பொய் மட்டுமே பேசுவார் என்று நாளுக்கு நாள் அவரே உறுதிப்படுத்தி வருகிறார்.
தினமும் ஒரு பொய்யை சொல்லி மாட்டி கொள்ளும் அண்ணாமலை, சமீபத்தில் அண்ணா குறித்து சர்ச்சை, முதுகலை மருத்துவ படிப்பு சீட், தி.மு.க. ஆட்சியில் கட்டப்பட்ட அணைகள் விவரம் என அடுத்தடுத்து வாயில் வடை சுட்டு மாட்டிக்கொண்டார்.
அவர் பிறக்காத காலத்தில் நடந்த சம்பவங்கள் மற்றும் அவர் பார்க்காத சம்பவங்களை நேரில் நின்று பார்த்ததுபோல் ஒரு கதையை சொல்வதில் அவருக்கு நிகர் அவரே.தமிழ்நாடு குறித்தும், தலைவர்கள் குறித்தும் அண்ணாமலை அடித்துவிடும் பொய்க்கு ஆதாரங்கள் வெளிவந்தால் கப்சிப் என ஆகிவிடுவார்.
இதுகுறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி கேட்டால், அதுக்கு விளக்கமளிக்காமல் ஒரே கேள்வியை அந்த நிருபரிடமே ரிப்பீட் மோடில் கேட்டு அவர்தான் புத்திசாலி என்று நினைத்துக் கொள்வார்.
ஆனால் நேற்று முன்தினம் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற அண்ணாமலை மிகப்பெரிய பொய்யை சொன்னார்.
அதற்கு மேடையிலேயே அவரது முகத்திரை கிழிக்கப்பட்டதால் வாய் ஜோக் கொடுத்தவர் கை கட்டி வேடிக்கை மட்டும் பார்த்தார்.
இந்தியாவில் வருகிற 2024ல் நடைபெற உள்ள நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் வெற்றி பெறப்போவது யார்? என்ற தலைப்பில் சென்னையில் நேற்று முன்தினம் ஒரு விவாத மேடை நிகழ்ச்சி நடந்தது.
இந்த விவாத நிகழ்ச்சியில் காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம், தமிழக பா.ஜ. தலைவர் அண்ணாமலை, தெலங்கானா மாநில எம்.எல்.சி.யும், அம்மாநில முதல்வர் சந்திரசேகரராவ் மகளுமான கவிதா ஆகியோர் பங்கேற்றனர்.
இதில், பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை பேசுகையில், ‘இன்றைக்கு வாரிசு அரசியல் அதிகரித்து விட்டது.
பெற்ேறார் பின்புலமாக கொண்டு வாரிசாக பிள்ளைகள் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், எம்எல்சியாக உள்ளனர்.
ஆனால் நான் மிகவும் படிப்பறிவு குறைவாக உள்ள பெற்றோருக்கு மகனாக பிறந்து இந்த நிைலக்கு வந்துள்ளேன். தெலங்கானா மாநிலத்தில் பாரதிய ராஷ்டிரிய சமிதி (பி.ஆர்.எஸ்.) கட்சி ஆட்சியில் ஊழல் அதிகரித்து விட்டது.
உதாரணமாக போலாவரம் திட்டத்தில் ஊழல் மலிந்திருக்கிறது. அது உங்கள் கட்சிக்கு, பணத்தை கொட்டும் ஏ.டி.எம். போல திகழ்கிறது’ என்று தெரிவித்தார்.
இதற்கு பதிலளித்து கவிதா, அண்ணாமலையிடம் சரமாரியான கேள்விகளால் திக்குமுக்காட வைத்தார். கவிதா பேசியதாவது:
இதற்கு பதிலளித்து கவிதா, அண்ணாமலையிடம் சரமாரியான கேள்விகளால் திக்குமுக்காட வைத்தார்.
கவிதா பேசியதாவது:
தமிழகத்தில் மதுரையில் எய்ம்ஸ் இன்னும் நடைமுறைக்கு வரவில்லை உண்மையா?
இல்லையா?.
தெலங்கானாவுக்கு எந்த ஒரு சிறப்பு திட்டமும் வரவில்லை உண்மையா?
இல்லையா?
கார்ப்பரேட் நிறுவனங்களின் ரூ.12 லட்சம் கோடி கடனை தள்ளுபடி செய்தீர்கள்?. ஆனால், 10 ஆண்டுகளில் விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்ய வில்லையே ஏன்?.
மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் எனது தந்தையின் ஆட்சியில் தெலங்கானாவின் வளர்ச்சி விகிதம் அதிகமாக இருப்பதே அதற்கு சான்றாகும்.
2024 தேர்தலில் பா.ஜ.க. வுக்கு தென் மாநிலத்தில் ஒரு இடம் கூட கிடைக்காது. தெலங்கானாவில் கேசிஆர் செய்த வளர்ச்சி திட்டங் களை பா.ஜ.க 100 ஆண்டுகள் ஆனாலும் செய்யமுடியாது.
போலவரம் திட்டம் தெலங்கானாவில் இல்லை.
ஆந்திராவில் செயல்படுத்தப்படுகிறது. எந்த மாநிலத்தில் எந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது என்பது கூட தெரியாமல் பேசுகிறீர்கள்.
பா.ஜ.க எதற்கெடுத்தாலும் குடும்ப ஆட்சி என கூறுகிறது. இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக ஜெய்ஷா இருக்கிறார். அவர் கிரிக்கெட் வீரரும் கிடையாது.
ஒரு கட்சியின் தலைவர்.
அமித்ஷா மகன் தான் அந்த பதவியில் இருக்கிறார். ஆந்திர பிரதேச மாநில பா.ஜ.க. தலைவர் புரந்தரேஸ்வரி என்.டி.ராமாராவ் மகள் தானே.
அது உங்களுக்கு நினைவுக்கு வரவில்லையா?
ஜோதிராதித்ய சிந்தி யாவை பா.ஜ.க. எப்படி ஒன்றியஅமைச்சராக்கியது?
தமிழகத்தில் தி.மு.க.வுட னும், மகாராஷ்டிராவில் சிவசேனாவுடனும் கூட்டணி வைத்தபோது அவை குடும்ப கட்சிகள் என்பது உங்களுக்கு தெரியாதா?.
உங்களுக்கு தேவைப்பட்டால் வாரிசு அரசியலை விமர்சிப்பீங்க?.
உங்களுக்கு வசதிப்பட்டால் வாரிசு அரசியலை ஏற்று கொள்வீர்களா?
இவ்வாறு, அவர் பேசினார்.
கவிதா பதிலடிக்கு அண்ணாமலையால் ஒன்றும் மறுத்துப் பேசமுடியவில்லை.அசடு வழிய பரிதாபமாக அமைதியாக இருந்தார்.
----------------------------------