பொய்ப் பிரமாணம்

  எடுத்துள்ள ஆளுநர் 

ஆர் யன்.ரவி.

வாயைத் திறந்­தாலே பொய்­யும் புளு­கும்­தான் ஆளு­நர் ஆர்.என்.ரவிக்கு வரு­கி­றது.

இந்தத் திறமையில் பாஜக தமிழ்நாடு தலைவரையே புறங்காண வைத்திடுவார் போல் இருக்கிறது.

 ஒரு சம்­ப­வத்தை வைத்து அவர் நூற்­றுக்­க­ணக்­கான பொய்­க­ளைச் சொல்­லத் தொடங்கி விட்­டார்.

ஆளு­நர் மாளிகை இருக்­கும் சாலை­யில் கடந்த 25 ஆம் தேதி என்ன நடந்­தது?

25.10.2023 அன்று மதி­யம் 3 மணி­ய­ள­வில், கருக்கா வினோத் (42 வயது – - E-–3 தேனாம்­பேட்டை காவல் நிலை­யத்­தின் வழக்­க­மான குற்­ற­வாளி) என்­ப­வர் ஆளு­நர் மாளிகை அருகே தனி­யாக சாதா­ர­ண­மாக நடந்து வந்­தார். பெட்­ரோல் நிரப்­பிய நான்கு பாட்­டில்­க­ளைக் கொண்டு வந்து, அவற்றை ஆளு­நர் மாளிகை அமைந்­துள்ள சர்­தார் படேல் சாலை­யில் எதிர்ப்­பு­றத்­தில் இருந்து எறிய முயன்­றார். ஆளு­நர் மாளி­கை­யின் வெளிப்­பு­றத்­தில் பாது­காப்­புப் பணி­யில் இருந்த தமிழ்­நாடு காவல்­துறை போலீ­சா­ரால் தடுக்­கப்­பட்­டார். அப்­போது சம்­பவ இடத்­திற்கு எதிரே சற்று தூரத்­தில் இருந்து இரண்டு பாட்­டில்­களை வீசி­னார். அவை ஆளு­நர் மாளி­கை­யின் அருகே சர்­தார் படேல் சாலை­யில் வைக்­கப் பட்­டி­ருந்த தடுப்­ப­ரண்­­களுக்கு அருகே விழுந்­தது. பாது­காப்பு போலீ­சா­ரால் உட­ன­டி­யாக கைது செய்­யப்­பட்­டார். காவல் நிலை­யத்­திற்கு அழைத்­துச் செல்­லப்­பட்டு விட்­டார். இச்­சம்­ப­வத்­தால், பொருட்­க­ளுக்கோ அல்­லது எந்த நப­ருக்கோ எவ்­வித சேதமோ, காயமோ ஏற்­ப­ட­வில்லை.

-– இவ்­வ­ள­வு­தான் நடந்­தது. ஆனால் ஆளு­நர் மாளிகை சொல்­லும் பொய், பெட்­ரோல் பாட்­டில்­களை விடப் பெரிய பொய் பாட்­டில்­க­ளாக இருக்­கின்­றன.

•பொய் 1:ராஜ்­ப­வன் மெயின் கேட் எண் 1 வழி­யாக பெட்­ரோல் குண்­டு­களை ஏந்­திய மர்ம நபர்­கள் சிலர் உள்ளே நுழைய முயன்­ற­னர்.

உண்மை:குண்­டு­களை ஏந்­திய மர்ம நபர்­கள் ஏரா­ள­மா­ன­வர்­கள் என அப்­படி யாரும் வர­வில்லை. வினோத் என்ற ஒரே ஒரு நபர் மட்­டும்­தான் வந்­தார். அவ­ரும் சாலை­யின் அந்­தப் பக்­கம் இருந்து வாசலை நோக்­கித்­தான் வீசி­னாரே தவிர, உள்ளே நுழைய முயற்­சிக்­க­வில்லை.

நந்­த­னம் சிக்­ன­லில் இருந்து நடந்தே வரு­கி­றார் வினோத். நந்­த­னம் கலைக் கல்­லூரி, சைதாப்­பேட்டை பாலம், சின்­ன­மலை வரை நடந்தே வரு­கி­றார். அவர் தனி ஆளா­கத் தான் நடந்து வரு­கி­றார். அங்­கி­ருந்து சைதை நீதி­மன்­றம் வழி­யாக நடந்து சென்­றுள்­ளார். இது ஆளு­நர் மாளி­கைக்கு எதிர்­பு­றம் உள்ள சாலை­யா­கும். இந்த சாலை­யைக் கடந்­தால்­தான் ஆளு­நர் மாளிகை வாச­லுக்கு செல்ல முடி­யும். சாலையை வினோத் கடக்­க­வில்லை. ஆளு­நர் மாளி­கைக்கு எதிரே நின்று ஆளு­நர் மாளிகை முன்பு வீச முயற்­சித்­துள்­ளார். அங்கு பணி­யில் இருந்த ஐந்து காவ­லர்­கள் உடனே அவரை தடுத்து அப்­பு­றப்­ப­டுத்­தும் பணி­யில் ஈடு­பட்­டுள்­ள­னர். இவை அனைத்­தும் வீடியோ காட்­சி­க­ளாக உள்­ளன.

•பொய் 2:பாது­காப்­புப் பணி­யா­ளர்­கள் தாக்­கு­த­லைக் கட்­டுப்­ப­டுத்த முயன்ற போதும், மற்­றொரு பெட்­ரோல் குண்டு வீசப்­பட்­டது. இத­னால் பிர­தான நுழை­வா­யி­லுக்கு பலத்த சேதம் ஏற்­ப­டுத்­தப்­பட்­டது.

உண்மை:பிர­தான நுழை­வா­யி­லில் பலத்த சேத­மும் ஏற்­படவில்லை. சிறு சேத­மும் ஏற்­ப­ட­வில்லை. பாட்­டில் வீசப்­பட்­டது பிர­தான வாச­லில் இருந்து 30 மீட்­டர் தூரத்­தில் -– பேரி­காட் தாண்டி சாலை­யில்­தான் விழுந்­துள்­ளது. எனவே நுழை­வா­யி­லில் எந்த சிறு சேத­மும் கிடை­யாது.

•பொய் 3 :வினோத்­து­டன் நிறை­யப் பேர் வந்­துள்­ளார்­கள்.

உண்மை:கண்­கா­ணிப்­புக் கேமரா பதி­வு­களை ஆராய்ந்­த­தில், மேற்­படி நபர் நந்­த­னத்­தில் இருந்து சம்­பவ இடம் வரை தனி­யா­கவே வந்­துள்­ளார்.

•பொய் 4: அந்த நபரை தப்­பிக்க விட்டு விட்­டார்­கள்.

உண்மை:உட­ன­டி­யாக அவர் கைது செய்­யப்­பட்­டார். சரி­யா­கச் சொல்­வ­தாக இருந்­தால் சம்­பவ இடத்­தி­லேயே கைது செய்­யப்­பட்­டார்.

•பொய் 5: அவர் மீது வழக்கு பதி­யவே இல்லை.

உண்மை:அன்­றைய தினமே J--–3 கிண்டி காவல் நிலை­யத்­தில் அவர் மீது வழக்­குப் பதிவு செய்­யப்­பட்டு, புலன் விசா­ரணை மேற்­கொள்­ளப்­பட்­டது. உட­ன­டி­யாக அவர் IV-–வது பெரு­ந­கர குற்­ற­வி­யல் நடு­வர் அவர்­கள் முன்பு ஆஜர்­ப­டுத்­தப்­பட்டு, 09.11.2023 வரை சிறை­யில் வைக்­கப்­பட்­டார்.

•பொய் 6: ஆளு­நர் அவர்­க­ளுக்கு எதி­ராக பகி­ரங்க மிரட்­டல், அவ­தூ­றுப் பேச்சு மற்­றும் தாக்­கு­தல் போன்ற பல்­வேறு சம்­ப­வங்­கள் நிகழ்ந்­துள்­ள­தால் இந்த பாட்­டில் வீச்சு சம்­ப­வம் தொடர்­பாக காவல்­து­றையி­னர் நியா­ய­மான முறை­யில் முதல் தக­வல் அறிக்­கையை பதிவு செய்­ய­வில்லை.

உண்மை:குற்­ற­வாளி கைது செய்­யப்­ப­டு­கி­றார். நீதி­மன்­றத்­தில் நிறுத்­தப்­ப­டு ­கி­றார். சிறை­யில் அடைக்­கப்­பட்­டு­கி­றார். ஆளு­நர் மாளி­கைக்­கான பாது­காப்பு அதி­க­ரிக்­கப்­ப­டு­கி­றது. இதற்கு பின்­னால் சதி ஏதா­வது இருக்­குமா என காவல் துறை விசா­ரிக்­கி­றது. இதற்கு மேல், மேல் நட­வ­டிக்கை என்ன எடுக்க முடி­யும் என்று எதிர்­பார்க்­கி­றார்­கள்.

•பொய் 7: உட­ன­டி­யாக நட­வ­டிக்கை எடுக்­க­வில்லை.

உண்மை:உட­ன­டி­யா­கவே நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டது.

•பொய் 8: ஏப்­ரல் 19, 2022 அன்று மயி­லா­டு­துறை சென்ற போது ஆளு­ந­ரின் வாக­னம் தாக்­கப்­பட்­டது. இது சம்­பந்­த­மாக காவல்­து­றை­யில் புகார் தெரி­விக்­கப்­பட்­டும் முதல் தக­வல் அறிக்கை பதிவு செய்­யப்­ப­ட­வில்லை.

உண்மை:ஆளு­ந­ரின் வாக­னம் மற்­றும் கான்­வாய் அப்­ப­கு­தியை கடந்து சென்ற பின்­னர் அங்கு கூடி­யி­ருந்­த­வர்­க­ளில் சிலர் கருப்­புக்­கொ­டி­களை சாலை­யில் வீசி­னர். அக்­கொ­டி­கள் ஆளு­ந­ரின் வாக­னம் மற்­றும் கான்­வாய் முழு­மை­யாக சென்­ற­பின் பின்­னால் வந்த வாக­னங்­கள் மீது விழுந்­தன. இச்­சம்­ப­வம் தொடர்­பாக மயி­லா­டு­துறை காவல் நிலை­யத்­தில் வழக்­குப் பதிவு செய்­யப்­பட்டு 73 பேர் கைது செய்­யப்­பட்­ட­னர். மேற்­படி வழக்கு புலன் விசா­ர­ணை­யில் உள்­ளது.

ஆளு­ந­ரின் கான்­வாய் மீது கற்­கள் மற்­றும் கட்­டை­கள் வீசப்­பட்­டன என்­பது முற்­றி­லும் உண்­மைக்கு புறம்­பா­ன­தா­கும்.

பொய் 9:ராஜ்பவன் காவலர்கள்தான் ஆபத்து ஏற்படாமல் தடுத்தனர்.

உண்மை:இவர்கள் வானத்தில் இருந்து குதித்தவர்கள் அல்ல. ஆளுநர் மாளிகை பாதுகாப்புக்காக சர்தார் படேல் சாலையில் பணியில் இருந்தவர்கள் சென்னை பெருநகர காவல்துறையின் பாதுகாப்புக் காவலர்கள்தான். வினோத்தை கைது செய்தவர்கள் தமிழ்நாடு காவல்துறை போலீஸார்தான்.

•பொய் 10:ஆளுநர் மீதான தாக்குதல் போன்ற அனைத்து வழக்குகளிலும் காவல் துறை உண்மையான வழக்குப் பதிவு செய்யவில்லை, சாதாரண சிறிய குற்றங்களாக போலீஸ் மாற்றியது.

உண்மை:J3 Guindy PS Cr. no 735/2023 u/s 436, 353,506(ii) IPC Act 3 of Explosive Substances Act and 4 of TNPPDL Act -– ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதியப்பட்டுள்ளது.

•பொய் 11:ஆளுநர் மாளிகை நுழைவில் உள்ள நபர்கள் அவரை மடக்கி பிடித்ததாக ஆளுநர் மாளிகை புகாரில் உள்ளது.

உண்மை:அதுபோன்ற ஒன்று எங்கும் நடைபெறவில்லை. காவல் துறை சார்பில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ஐந்து காவலர்கள் மட்டுமே அதை தடுத்து அவர்களிடம் இருந்து பெட்ரோல் பாட்டிலை பிடுங்கி உள்ளனர். உடனடியாக ரோந்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அங்கிருந்து அப்புறப்படுத்தி காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

•பொய் 12:ஆளுநருக்கு வரும் கடுமையான அச்சுறுத்தலை காவல்துறை அலட்சியப்படுத்தியது.

உண்மை:ஆளுநர் மாளிகை என்பது மிகமிக பாதுகாப்பான இடம். 253 காவலர்கள், ஆளுநர் மாளிகைக்கு பாதுகாப்பாக இருக்கிறார்கள். கூடவே மோப்ப நாய் படை, வெடிகுண்டு நிபுணர்குழு, பேக்கேஜ் ஸ்கேனர் ஆகியவை உள்ளன. ஆளுநர் மாளிகைக்கு இரண்டடுக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. உள்பகுதியில் மத்திய பாதுகாப்புப் படையினரும், வெளிப்பகுதியில் தமிழக காவல் துறையினரும் பாதுகாப்புப் பணியில் உள்ளனர். ஆளுநர் வெளியில் செல்லும் இடங்களுக்கும் உரிய பாதுகாப்பு அளிக்கப்படுகிறது. இவ்வளவு பாதுகாப்பு வேறு எங்கும் இல்லை.

-– ஒரு சம்பவத்தில் எத்தனை பொய் சொல்கிறார் ஆளுநர் என்பதை இதன் மூலம் அறியலாம். ராஜ்பவனை FAKE பவன் ஆக்கிவிட்டார் ஆளுநர் ரவி.

“ஆளுநர் மாளிகை மீது இன்று பிற்பகலில் தாக்குதல் நடத்தப்பட்டது. வெடிகுண்டுகள் ஏந்திய விஷமிகள் பிரதான வாயில் வழியாக உள்ளே நுழைய முயன்றனர். எனினும் உஷாராக இருந்த காவலர்கள் தடுத்ததால், இரண்டு பெட்ரோல் குண்டுகளை ராஜ்பவனுக்குள் வீசிவிட்டு தாக்குதல் நடத்தியவர்கள் தப்பினர்” -– என்று 25.10.2023 இரவு 9.27 மணிக்கு ராஜ்பவன் செய்திக் குறிப்பு கூறுகிறது.

வெடிகுண்டுகள் ஏந்திய விஷமிகள் வரவுமில்லை. அவர்கள் பிரதான வாயில் வழியாக நுழைய முயற்சிக்கவுமில்லை. அவர்கள் பெட்ரோல் குண்டுகளை ராஜ்பவனுக்குள் வீசவும் இல்லை. அவர்கள் தப்பவும் இல்லை. மூன்று வரியில் மொத்தமும் பொய். சம்பவம் நடந்த மதியம் 3 மணிக்கே வினோத் கைது செய்யப்பட்டு விட்டார். ஆனால் இரவு 9.27 மணிக்கு ராஜ்பவன் சொல்கிறது, தாக்குதல் நடத்தியவர்கள் தப்பி விட்டார்கள் என்று. இதனை விட பொய் மூட்டை இருக்க முடியுமா?

26.10.2023 மதியம் 3.20 மணிக்கு ராஜ்பவன் ஒரு செய்திக் குறிப்பு வெளியிடுகிறது. “ராஜ்பவனின் தாக்குதல் குறித்த புகாரை காவல் துறை பதிவு செய்யவில்லை. தன்னிலையாக பதிவு செய்யப்பட்ட புகார், தாக்குதலை சாதாரண நாசகார செயலாக நீர்த்துப் போகச் செய்து விட்டது. அவசர கதியில் கைது மேற்கொள்ளப்பட்டு மாஸ்திரேட்டை நள்ளிரவில் எழுப்பி குற்றம் சாட்டப்பட்டவர் சிறையில் அடைக்கப்பட்டு விட்டதால் பின்னணியில் உள்ளவர்களை அம்பலப்படுத்தக் கூடிய விரிவான விசாரணை தவிர்க்கப்பட்டுள்ளது. நியாயமான விசாரணை தொடங்கும் முன்பே கொல்லப்படுகிறது” என்கிறது அந்த செய்திக் குறிப்பு. ஏதோ மர்ம சினிமாவைப் போல கதை எழுதுபவர்கள் ராஜ்பவனுக்குள் புகுந்து விட்டார்கள் போல. பி.டி.சாமி கதை மிஞ்சுவதாக இருக்கிறது மர்ம விவரிப்புகள் இருக்கிறது.

‘தாக்குதல் நடத்தியவர்கள் தப்பிவிட்டார்கள்’ என்று முதல் நாள் அறிக்கை விட்டதும் ராஜ்பவன்தான். ‘அவசர கதியில் கைது செய்துவிட்டார்கள்’ என்பதும் ராஜ்பவன்தான். ஒருவரை அவசரமாகத்தான் கைது செய்ய முடியும். ஆர அமர கைது செய்ய முடியாது.



25 ஆம் தேதி மதியம் சம்பவம் நடந்துள்ளது. ஆளை சம்பவ இடத்திலேயே கைது செய்து விட்டது காவல் துறை. வழக்கு பதிந்து மாஜிஸ்திரேட்டிடம் அழைத்துச் சென்று ஆஜர் படுத்தி சிறைக்கு அனுப்பும் அனைத்து நடைமுறைகளும் நடந்து விட்டது. அதன்பிறகுதான் 25 ஆம் தேதி இரவு 9.30 மணிக்கு ஆளுநர் மாளிகையில் இருந்து புகாரே அனுப்புகிறார்கள். அதாவது அனைத்து முதல் கட்ட விசாரணையும் முடித்த பிறகு புகார் அனுப்புகிறார்கள். எவ்வளவு வேகம் இந்த மாஜி ஐ.பி.எஸ். அதிகாரியிடம்?!

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் கோவையில் ஒரு சம்பவம் நடந்தது. அதிலும் இப்படித்தான் தனது குதர்க்க விளையாட்டை ஆளுநர் செய்தார்.

‘கோவை வழக்கை என்.ஐ.ஏ.வுக்கு வழங்கியதில் ஏன் இந்த காலதாமதம் என்பதுதான் என்னுடைய கேள்வி’ என்று பொத்தாம் பொதுவாக பேசினார். ஒரு தனியார் நிறுவனம், தனது யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரியின் தங்கும் விடுதியை திறந்து வைப்பதற்காக இவரை அழைத்திருக்கிறது. அந்த இடத்தில் போய் இப்படி பேசினார். 2022 அக்டோபர் 23 அன்று காலையில் சம்பவம் நடந்துள்ளது. அக்டோபர் 26 அன்று காலையில் தேசிய புலனாய்வு முகமைக்கு வழக்கு மாற்றப்பட்டது. அதாவது மூன்றாவது நாளே மாற்றப்பட்டு விட்டது. இதனை பெரிய குறையைப் போல அன்று சொல்லி சர்ச்சை கிளப்பினார் ஆளுநர்.

மற்ற மாநிலங்களில் இதுபோல நடந்த சம்பவங்களை எல்லாம் மூன்று, நான்கு மாதங்கள் கழித்து என்.ஐ.ஏ.விடம் ஒப்படைத்துள்ளார்கள். ஆனால் இங்கே மூன்றாவது நாளே ஒப்படைத்தது அரசு. அதையே பெரிய தாமதம் போல பிரச்சாரம் செய்தார். அதாவது அரசுக்கு களங்கம் ஏற்படுத்துவதை தனது தொழிலாக வைத்துள்ளார் ஆர்.என்.ரவி.

அமைதியான மாநிலமாக இருக்கிறதே –- இந்த அமைதியைக் குலைக்க முடியவில்லையே என்று பா.ஜ.க. கும்பல் நினைப்பதைப் போலவே ஆளுநரும் நினைப்பது அவர் வகிக்கும் பதவிக்கு அழகல்ல. 

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?