பா.ஜ.க'வின் ஊழல் ஒழிப்பு
மீண்டும் பீகாரில் எக்ஸ்பிரஸ் ரயில் 6 பெட்டிகள் தடம் புரண்டு விபத்து .4 பேர் பலி.60க்கும் மேற்பட்டோர் காயம்.
வரி பகிர்வில் வஞ்சிக்கும் ஒன்றிய அரசு தமிழ்நாடு அரசு ரூ.1 செலுத்தினால் திரும்ப கிடைப்பது 29 பைசா மட்டுமே.உ.பி.க்கு ஒரு ரூபாய்க்கு கிடைப்பது 2 ரூபாய் 73 பைசா.அமைச்சர் தங்கம் தென்னரசு குற்றச்சாட்டு -
சோழவரம் அருகே காவலர்களை தாக்கிவிட்டு தப்பிச் செல்ல முயன்ற 2 ரவுடிகள்காவல்நுறையால்சுட்டுக்கொலை.தமிழ்நாட்டு தாதாக்கள் உயிர்பயம்.பலர் தலைமறைவு.
அதிமுக ஆட்சியில் பள்ளி மாணவர்களுக்கு இலவச சீருடை வழங்கும் திட்டத்தில். ரூ.4.81 கோடி முறைகேடு.கணக்கு தணிக்கை ஆணையர் அறிக்கை தகவல் .
ஓ.பன்னீர்செல்வம் இருக்கையை மாற்றக்கோரி சபாநாயகர் இருக்கை முன்பு அதிமுகவினர் கடும் அமளி.அதிமுகஙினர் வெளியேற்றம்.
ஊழல் மீது உடனடி நடவடிக்கை.
பாரத்மாலா,துவாரகா விரைவுச்சாலை திட்டம் மற்றும் ஆயுஷ்மான் பாரத் திட்டம் ஆகியவற்றில் நடைபெற்ற ஊழலை அம்பலப்படுத்திய இந்திய தணிக்கை மற்றும் கணக்கு சேவை (IA&AS) அதிகாரிகள் 3 பேர் பணி இடமாற்றம் செய்யப்பட்டிருக்கின்றனர்.
ஒன்றிய பாஜக அரசின் பாரத்மாலா திட்டம், துவாரகா விரைவு பாதை கட்டுமான திட்டம், சுங்க சாவடி கட்டணங்கள், ஆயுஷ்மான் பாரத் திட்டம், அயோத்தியா மேம்பாட்டு திட்டம், கிராமப்புற அமைச்சகத்தின் ஓய்வூதியத் திட்டம், எச்.ஏ.எல். விமான வடிவமைப்புத் திட்டம் என இந்த 7 திட்டங்களிலும் பல கோடி ரூபாய் ஊழல் நடந்திருக்கிறது என்று சி.ஏ.ஜி அறிக்கையின் மூலம் தெரியவந்தது.
இந்த நிலையில், துவாரகா விரைவுச்சாலை திட்டம் மற்றும் ஆயுஷ்மான் பாரத் திட்டம் ஆகியவற்றில் நடைபெற்ற ஊழலை அம்பலப்படுத்திய இந்திய தணிக்கை மற்றும் கணக்கு சேவை (IA&AS) அதிகாரிகள் 3 பேர் பணி இடமாற்றம் செய்யப்பட்டிருக்கின்றனர்.
ஒன்றிய அரசின் நலத் திட்டங்களில் நடந்த முறைகேடுகளை அம்பலப்படுத்திய 12 சி.ஏ.ஜி அறிக்கைகள், கடந்த ஆகஸ்ட் மாதம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து செப்டம்பர் 12-ஆம் தேதி 3 அதிகாரிகளும் பணி இடமாற்றம் செய்யப்பட்டிருக்கின்றனர்.
இதுதான் மோடி அரசின் ஊழல் ஒழிப்பு நடவடிக்கை.
ஊழல் நடந்நுள்ளது என்பவர்களை பழிவாங்கினால் ஊழல் குற்றசாட்டுவோர் இருக்க மாட்டார்கள்.
ஊழல் என்ற பேச்சு இராது.
இதுதான் பா.ஜ.க,ஊழல் ஒழிப்பு.
--------------------------------------------