ஊழலை ஒ(ழி)ளிக்கும்

 27 மீனவர்கள் சிறைபிடிப்பு இலங்கை கடற்படையை கண்டித்து இன்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்.

தரை-வான்-கடல் வழியாக முழு தாக்குதலுக்கு தயார் நிலையில் இஸ்ரேல் . காசா எல்லைகளில் அணிவகுத்து நிற்கும் பீரங்கிகள், எந்நேரமும் தாக்குதல் நடத்தப்படலாம் . பதற்றம்.இஸ்லாமிய நாடுகள் அவசர ஆலோசனை

டெல்லியில் 3.1 ரிக்டர் அளவில் #லேசான நிலநடுக்கம்.பீதியால் வீதிகளுக்கு வந்த மக்கள் -

மேட்டூர் அனல் மின்நிலையத்தில் 560 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு.

முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் கில் காலமானார்.

தொடர் மழையால் திண்டுக்கல், கரூர் மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு.

சேலம் விமான நிலையத்திற்கு எடப்பாடி பழனிசாமி பெயரை சூட்ட வேண்டும் என அதிமுக தொண்டர்கள் என்ற பெயரில் அதிமுக ஒன்றிய அரசுக்கு கடிதம் 

திருவண்ணாமலையில் நடந்த சாலை விபத்தில் 7 பேர் உயிரிழப்பு - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல், நிவாரணத்தொகை அறிவிப்பு.

------------------------------------------------

ஊழலை ஒழிளிக்கும் மோடி அரசு.

பிரதமர் நரேந்திர மோடியின் நெருங்கிய கூட்டாளியான கௌதம் அதானி மீதான குற்றச் சாட்டுக்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வரு கின்றன. 

இந்த நிலையில் அதானி குழுமத்திற்கு சொந்தமான மும்பையில் உள்ள  இரண்டு விமான நிலையங்களின் கணக்கு வழக்குகள் குறித்து கார்ப்பரேட் விவகாரங்கள் துறை அதி காரிகள் விசாரணை நடத்தியதாக செய்தி வெளி யாகியுள்ளது. 

இது வெறும் கண்துடைப்பு நாடகமே ஆகும்.  நிதி ஆயோக் மற்றும் பொருளாதார விவகா ரங்கள் துறையின் கடும் ஆட்சேபணையையும் மீறி ஆறு விமான நிலையங்களை அதானிக்கு தூக்கி கொடுத்தது மோடி அரசு. அதானிக்கு விமான நிலையங்களை தர விரும்பாத உரிமை யாளர்கள் மத்திய புலனாய்வுத்துறை மற்றும் அமலாக்கத்துறையினரின் சோதனைக்குள்ளா க்கப்பட்டு மிரட்டப்பட்டனர்

.மும்பை விமான  நிலையங்களை மிரட்டி பறித்து அதானிக்கு கொடுத்தது மோடி அரசு. ஆனால் இப்போது அதானி குழுமத்தின் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில், பெய ரளவுக்கு விசாரணை என்ற பெயரில் திசைத் திருப்பும் உத்தியில் மோடி அரசு ஈடு பட்டுள்ளது. 

அதானி நிறுவனத்தின் மோசடிகள் குறித்து ஹிண்டன்பர்க் நிறுவனம் வெளியிட்ட ஆய்வ றிக்கை குறித்து நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை நடத்த வேண்டும் என எதிர்க்கட்சி கள் வலியுறுத்தின. 

நாடாளுமன்றத்தில் இதுபற்றி விவாதிக்கக்கூடாது என்பதற்காகவே ஆளும் கட்சியினர் நாடாளுமன்றத்தை திட்ட மிட்டு முடக்கினர். 

அரசியல் எதிரிகளை பழிவாங்குவதற்காக ஒன்றிய ஆட்சியாளர்களால் அமலாக்கத் துறை மற்றும் வருமான வரித்துறை ஏவிவிடப்படு கிறது. ஆனால் ஹிண்டன்பர்க் மோசடி குறித்து அமலாக்கத்துறை விசாரிக்க வேண்டும் என எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் அம லாக்கத்துறை அதிகாரிகளிடம் மனு கொடுப்ப தைக் கூட மோடி அரசு தடுத்துவிட்டது.  

இப்போது வேறு வழியில்லாமல் அதானி குழு மத்தின் மீது நடவடிக்கை எடுப்பது போல காட்டிக் கொள்வதற்காகவே மும்பை விமான நிலையங் களில் விசாரணை நடைபெற்றுள்ளது.

 இதனால் எந்தப் பலனும் ஏற்படப் போவ தில்லை. ஒருவேளை விசாரணையில் ஈடுபட்ட  அதிகாரிகள் வேண்டுமானால் மாற்றப்படலாம். மோடி அரசின் முறைகேடுகளை வெளிப்படு த்திய சிஏஜி அதிகாரிகள் பழிவாங்கப்பட்டுள் ளது இதற்கு சாட்சியாகும். 

உண்மையை வெளிக் கொணர்வதில் மோடி அரசுக்கு துளி கூட அக்கறை இல்லை. தன்னுடைய கூட்டாளி களை ஒளித்துவைப்பதிலேயே ஒன்றிய அரசு குறியாக இருக்கிறது.

---------------------------------------------

 

ஆக்கிரமிப்பாளருக்கும்-ஆக்கிரமிப்பை எதிர்ப்­ப­வ­ருக்­கும் 

இடையே நடக்­கும் போர்!

புலம்­பெ­யர்ந்து வந்­தி­ருந்த யூதர்­கள் நல­னுக்­காக உரு­வாக்­கித் தரப்­பட்ட நாடு இஸ்­ரேல். அது­வும் பாலஸ்­தீ­னத்­தில் இருந்து பிரித்து உரு­வாக்­கித் தரப்­பட்­டது. 

எப்­போ­துமே சும்மா கிடைத்த மாட்­டைத் தானே பல்­லைப் பிடித்­துப் பார்ப்­பார்­கள். இருக்க இடம் கொடுத்­தால், படுக்க இடம் கேட்­பார்­கள். அப்­படி, எந்த பாலஸ்­தீ­னத்­தில் இருந்து ஒரு நாட்டை உரு­வாக்­கிக் கொடுத்­தார்­களோ, அந்த பாலஸ் தீனத்­தையே ஆக்­கி­ர­மித்­தது இஸ்­ரேல். 

ஆக்­கி­ர­மிப்­பையே தொழி­லாக வைத்­துக் கொண்­டும் வரு­கி­றது இஸ்­ரேல். இதனை அமை­தி­யாக அல்ல, அச்­சு­றுத்­தும் வகை­யில் செய்து வரு­கி­றது அந்த நாடு.

பாலஸ்­தீ­னத்­தில் யூதர்­க­ளுக்கு தனி­நாடு என்ற பிரிட்­ட­னின் திட்­டத்­துக்கு சர்­வ­தேச நாடு­க­ளின் கூட்­ட­மைப்­பும் 1922-–ல் ஒப்­பு­தல் வழங்க, ஐரோப்­பிய நாடு­க­ளில் இருந்த யூதர்­க­ளில் 90 ஆயி­ரம் பேர் பாலஸ்­தீ­னத்­துக்கு அழைத்­துச் செல்­லப் பட்டு அங்கே குடி­ய­மர்த்­தப்­ப­டு­கி­றார்­கள்.

­­­ இரண்­டாம் உல­கப் போருக்­குப் பின் உரு­வாக்­கப்­பட்ட ஐக்­கிய நாடு­கள் சபை பாலஸ்­தீ­னத்தை மூன்­றா­கப் பிரித்து அரபு நாடு, யூத நாடு, ஜெரூ­ஸ­லம் தனி என 1947 நவம்­பர் 29-–ல் அறி­வித்­தது. 

இதன்­படி பாலஸ்­தீ­னில் 70 சத­வி­கி­தம் உள்ள முஸ்­லிம்­க­ளுக்கு 43 சத­வி­கித இட­மும், 30 சத­வி­கி­தம் உள்ள யூதர்­க­ளுக்கு 56 சத­வி­கி­தம் இட­மும் சொந்­தம் என பிரி­வினை செய்­யப்­பட்­டது.

1948 வரை பாலஸ்­தீ­னம் பிரிட்­டன் கட்­டுப்­பாட்­டில் இருந்­தது. 1948-–ஆம் ஆண்டு மே 14–-ஆம் தேதி பிரிட்­டன் அதி­கா­ர­பூர்­வ­மாக பாலஸ்­தீ­னி­லி­ருந்து வெளி­யே­றி­யது. 

இஸ்­ரேல் என்­கிற தேசம் உரு­வா­கி­விட்­ட­தாக யூதர்­கள் அறி­வித்­து­விட்­டார்­கள். ஆம், ஒரு தனி­நா­டாக இஸ்­ரேல் உரு­வாகி விட்­டது. பாலஸ்­தீ­னத்­தில் இசு­லா­மி­யப் படு­கொ­லை­கள், அக­தி­க­ளா­கத் துரத்­தப்­ப­டு­தல் என .. இப்­படி அந்த நிலப்­ப­ரப்பே ரத்­தச் சக­தி­யாக இருப்­ப­தற்கு இஸ்­ரேல் தான் முக்­கி­யக் கார­ணம்.

வலுக்­கட்­டா­ய­மாக பாலஸ்­தீ­னர்­கள் கட்­டுப்­பாட்­டில் உள்ள பகு­தி­களை இஸ்­ரேல் விழுங்­கி­யது. அங்கு தங்­கள் மக்­க­ளைக் கொண்டு போய் குடி­யேற்­றி­னார்­கள்.

 இந்­தச் சூழ­லில் பாலஸ்­தீ­னத்­தின் வரை­ப­டம் என்­பதே கடுகு போலத் தேய்ந்­தது. இஸ்­ரே­லின் வரை­ப­டம் கொழுத்­தது. இன்­றைய இஸ்­ரே­லின் பரப்­ப­ளவு 21 ஆயி­ரம் சதுர கிலோ மீட்­டர். பாலஸ்­தீ­னத்­தின் பகுதி என்­பது 6 ஆயி­ரம் சதுர கிலோ மீட்­டர்­தான்.

இஸ்­ரே­லின் ஆக்­கி­ர­மிப்­புக்கு எதி­ராக அமைப்பு ரீதி­யாக எதிர்க்­கு­ரல் கொடுத்­தார் யாசர் அரா­பத். 1958 ஆம் ஆண்டு ‘அல் – பத்தா’ என்ற அமைப்பை அவர் உரு­வாக்­கி­னார். பின்­னர் பாலஸ்­தீன விடு­தலை இயக்­கத்­தின் தலை­வ­ரா­க­வும் அவர் ஆனார். 


இஸ்ரேல்,பாலஸ்தீனத்தை முழுங்கிய ஙிபரப் படம்.

1974 ஆம் ஆண்டு ஐ.நா. சபை­யில் புகுந்து உரை­யாற்­றும் அள­வுக்கு அவ­ரது செல்­வாக்கு உயர்ந்­தது. ‘ஒரு கையில் ஒலி­ய­ம­ரக் கிளை­யும் இன்­னொரு கையில் விடு­த­லைப் போராட்­டத்­துக்­கான துப்­பாக்­கி­யும் உள்­ளன. எது வேண்­டும் என்­பதை உல­கம் தீர்­மா­னிக்க வேண்­டும்’ என்­றார் யாசர் அரா­பத். அவ­ரா­லும் மிக நீண்ட காலம் தாக்­குப் பிடிக்க முடி­ய­வில்லை. 

இஸ்­ரே­லு­டன் சம­ர­சம் செய்து கொண்­டார். அதன் பிற­கும் அவரை நிம்­ம­தி­யாக அவர்­கள் இருக்­க­வி­ட­வில்லை. 

இறு­திக்­கா­லத்­தில் மிகுந்த நெருக்­க­டியை இஸ்­ரேல் அவ­ருக்­குக் கொடுத்­தது. பின்­னர் உயிர் துறந்­தார் அரா­பத்.

இதற்­கி­டை­யில் இஸ்­ரே­லுக்கு எதி­ராக பாலஸ்­தீ­னத்­தில் உரு­வா­ன­து­தான் ‘ஹமாஸ்’ இயக்­கம் ஆகும். காசாவை தங்­க­ளது ஆளு­கை­யில் வைத்­துள்­ளார்­கள் ஹமாஸ் இயக்­கத்­தி­னர். இது தான் இப்­போது போர்க்­க­ள­மா­கக் காட்சி அளிக்­கி­றது. மிகத் தொடர்ச்­சி­யாக பாலஸ்­தீ­னத்­த­வர்­கள் மீது இஸ்­ரேல் தாக்­கு­தல் தொடுத்து வந்­தது.

கடந்த ஆண்டு கிழக்கு ஜெரு­ச­லே­மில் கூடி­யி­ருந்த பாலஸ்­தீ­னர்­களை நோக்கி இஸ்­ரேல் ராணு­வம் கொடூ­ர­மான தாக்­கு­தலை நடத்­தி­யது. இந்த ஆண்டு மட்­டும் 250க்கும் மேற்­பட்ட பாலஸ்­தீ­னர்­கள் கொல்­லப்­பட்­டார்­கள். 

அவர்­கள் மட்­டு­மல்ல, பத்­தி­ரி­கை­யா­ளர்­க­ளும் கொல்­லப்­பட்­ட­னர். அப்­போ­தும் உலக நாடு­கள் அமை­தி­யாக இருந்­தன. 

இஸ்­ரேல் போர் தொடுக்­கும் போதெல்­லாம் அமை­தி­யாக இருக்­கும் உல­க­நா­டு­கள், ஹமாஸ் போர் தொடுத்­த­தும் அறி­வுரை சொல்ல வந்து விடு­கின்­றன, ,‘வலி­மை­யா­ன­வன் சொல்­வதே வேதம்’ என்ற அடிப்­ப­டை­யில்!

இப்­போ­தும், ஹமாஸ் தாக்­கு­தல் நடத்­து­வ­தற்கு முன்­ன­தாக இஸ்­ரேல், பல்­வேறு சிறு­சிறு தாக்­கு­த­லைத் தொடுத்து வந்­துள்­ளது. 

இதற்கு எதிர்­வி­னை­யாக இவ்­வ­ளவு பெரிய தாக்­கு­தலை ஹமாஸ் தொடுக்­கும் என இஸ்­ரேல் எதிர்­பார்க்­க­வில்லை.

இஸ்­ரேல் பிர­த­மர் பெஞ்­ச­மின் நெதன்­யாகு, “இஸ்­ரேல் ராணு­வம் பதி­லடி கொடுத்து நாட்­டைப் பாது­காக்­கும். நாங்­கள் யுத்­தம் செய்­கி­றோம். அதில் நாங்­களே வெல்­வோம். எங்­க­ளின் எதிரி யோசித்­துக்­கூட பார்த்­தி­ராத

விலை­யைக் கொடுக்­கப்­போ­கி­றார்­கள். 

எங்­கள் முழு பலத்­தை­யும் பயன்­ப­டுத்தி, காசா நக­ரில் ஹமாஸ் தீவி­ர­வா­தி­கள் செயல்­ப­டும் அனைத்து இடங்­க­ளை­யும் அழிப்­போம். இந்­தப் போர் நீண்ட காலம் நடக்­கும்” என்று ஆவே­ச­மா­கச் சொல்லி இருக்­கி­றார். 

அமெ­ரிக்கா, கனடா, பிரிட்­டன், ஜெர்­மனி, இத்­தாலி, நார்வே, பிரான்ஸ், ஸ்பெயின், போலந்து, உக்­ரைன், பிரே­சில் உள்­ளிட்ட மேற்­கு­லக நாடு­கள் இஸ்­ரே­லுக்கு ஆத­ரவு தெரி­வித்­தி­ருக்­கின்­றன. 

இஸ்­ரே­லுக்கு ஆத­ர­வாக நிற்­கி­றோம் என்று இந்­தி­யப் பிர­த­ம­ரும் அறி­வித்­தி­ருக்­கி­றார்.

பாலஸ்­தீன அதி­பர் முகம்­மது அப்­பாஸ், “பாலஸ் தீனத்­துக்­குள் அத்­து­மீ­றிக் குடி­யே­று­ப­வர்­க­ளுக்கு எதி­ரா­க­வும், பாலஸ்­தீ­னத்தை ஆக்­கி­ர­மிக்­கும் இஸ்­ரே­லிய ராணுவ பயங்­க­ர­வா­தத்­துக்கு எதி­ரா­க­வும் தங்­க­ளைத் தற்­காத்­துக் கொள்­ளும் உரிமை என்­பது பாலஸ்­தீ­னி­யர்­க­ளுக்கு உண்டு” என்று தெரி­வித்­தி­ருக்­கி­றார்.

 இரான், சிரியா, சவுதி அரே­பியா, ஏமன், கத்­தார், தென்­னாப்­பி­ரிக்கா உள்­ளிட்ட நாடு­கள் இவர்­களை ஆத­ரித்­தி­ருக்­கி­றார்­கள்.

“பாலஸ்­தீன மக்­க­ளின் நிலம், சுய­ராஜ்­யம் மற்­றும் அவர்­கள் கண்­ணி­யத்­து­டன் வாழ்­வ­தற்­கான உரி­மைக்­கான நீண்ட கால ஆத­ரவை காங்­கி­ரஸ் அளித்­துள்­ளது. 

அதன்­படி எங்­கள் ஆத­ரவு தொட­ரும். இரு தரப்­பி­ன­ரும் தங்­க­ளது போரை உட­ன­டி­யாக நிறுத்த வேண்­டும்” என்ற காங்­கி­ரஸ் கட்­சி­யின் அகில இந்­தி­யக் குழுத் தீர்­மா­னம் மிக­மிக முக்­கி­ய­மா­னது. 

நேரு காலம் முதல் தொடர்ந்து பாலஸ்தீனத்திற்கு ஆதரவாகவே இந்தியா இருந்து வந்த நிலைப்பாட்டில் தற்போதுஒன்­றிய பா.ஜ.க. எடுத்­துள்ள முடிவு அதிர்ச்­சிக்­கு­ரி­ய­தாக இருக்­கி­றது.

------------------------------------------------------

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?