பருவமழை

 "வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகிறது வடகிழக்கு பருவ மழை 2 நாளில் துவங்கும்" வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.

சங்கரய்யாவுக்கு டாக்டர் பட்டம் .கோப்பில் கையெழுத்திட மறுப்பு. ஆளுநர் ஆர் யன். ரவி செயலால் கொதித்த அமைச்சர் பொன்முடி!

அரபிக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்றது!

சுத்தமான, சூடான குடிநீர் முக்கியம் பருவ மழைக்காலத்தில் நோய் அதிகரிக்கும்: பொதுமக்களுக்கு பொதுசுகாதாரத் துறை எச்சரிக்கை.

தடை உத்தரவால் பாதிப்பு எதிரொலி லேப்டாப், கம்ப்யூட்டர் இறக்குமதிக்கு ஆன்லைன் அங்கீகார நடைமுறை.

"நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி தமிழகம் முழுவதும் நாளைமுதல் கையெழுத்து இயக்கம்"-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.

மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தின் முதல்கட்ட ஆளில்லா சோதனை.24 மணி நேர கவுண்ட்டவுன் தொடங்கியது.

வெளிநாட்டு மதுபான கொள்கை." தமிழ்நாடு அரசின் கொள்கை முடிவில் தலையிட முடியாது" -உச்ச நீதிமன்றம் .

பேரிடர் காலத்தில் அவசரகால தகவல்தொடர்புகளை மேம்படுத்தவும், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் “செல் ஒலிபரப்பு எச்சரிக்கை” சோதனை  இன்று நடைபெறுகிறது.

அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் நிறைவடைகிறது. முன்னதாக சட்டவிரோத பணப் பரிவர்த்தனை வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறை அதிகாரிகள் கடந்த ஜூன் 14ஆம் தேதி கைது செய்தனர்.

வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடுவதை முன்னிட்டு அனைத்துக்கட்சி கூட்டம் அக்.25ம் தேதி நடக்கிறது .தமிழ்நாடு தேர்தல் அலுவலர் அறிவிப்பு.


ஆளுநராகத் தகுதியற்ற ஆர் யன். ரவி

முது­பெ­ரும் தலை­வர் என். சங்­க­ரய்யா அவர்­க­ளுக்கு கெள­ரவ டாக்­டர் பட்­டம் வழங்க மதுரை காம­ரா­சர் பல்­க­லைக்கழக ஆட்சி மன்­றக் குழு­வில் நிறை­வேற்­றப்­பட்ட தீர்­மா­னத் திற்கு அனு­மதி வழங்க ஆளு­நர் மறுப்­ப­தற்கு உயர் கல்­வித்துறை அமைச்­சர் க.பொன்­முடி அவர்­கள் கண்­ட­னம் தெரி­வித்­துள்­ளார்.

இது குறித்து உயர் கல்­வித் துறைஅமைச்­சர் க.பொன்­முடி அவர்­க­ளின் அறிக்கை வரு­மாறு: –

1922 ஜூலை 15ல் பிறந்த மிகச் சிறந்த சுதந்­தி­ரப் போராட்­டத் தியா­கி­யும், இந்­திய சுதந்­தி­ரப் போராட்­டத்­தில் கிட்­டத்­தட்ட 8 ஆண்­டு­களை சிறை­யில் கழித்­த­வ­ரும், நூறு வய­தைக் கடந்­த­வ­ரும், ஏழை எளிய மக்­க­ளுக்­காக தம் வாழ்­நாளை அர்ப்­ப­ணித்­த­வ­ரும், தமி­ழி­னத்­தின் வளர்ச்­சிக்­காக உழைத்­த­வ­ரும், மாண­வத் தலை­வ­ரும், சிறந்த சட்­ட­மன்ற உறுப்­பி­ன­ரு­மான என். சங்­க­ரய்யா அவர்­கள், நம் தமிழ் சமூ­கத்­திற்கு ஆற்­றி­யுள்ள ஒப்­பு­யர்­வற்ற சேவையை அங்­கீ­க­ரிக்­கும் வித­மாக 18.08.2023 அன்று நடை­பெற்ற மதுரை காம­ரா­சர் பல்­க­லைக்­க­ழக ஆட்­சிக் குழு (Syndicate) கூட்­டத்­தில் அவ­ருக்கு கௌரவ முனை­வர் பட்­டம் (D.Litt) வழங்­கப்­ப­டும் எனத் தீர்­மா­னம் நிறை­ வேற்­றப்­பட்டு, பின்­னர் 20.09.2023அன்று நடை­பெற்ற மதுரை காம­ரா­சர் பல்­க­லைக்­க­ழக ஆட்­சிப் பேர­வைக் (Senate) கூட்­டத்­தில் எதிர்­வ­ரும் பட்­ட­ம­ளிப்பு விழா­வில் திரு.என்.சங்­க­ரய்யா அவர்­க­ளுக்கு கௌரவ முனை­வர் பட்­டம் (D.Litt) வழங்­கப்­ப­டும் என­வும் தீர்­மா­னம் நிறை­வேற்­றப்­பட்­டது.

மேற்­படி கௌரவ முனை­வர் பட்­டம் வழங்­கும் அதி­கா­ரம் மதுரை காம­ரா­சர் பல்­க­லைக்­க­ழ­கச் சட்­டம், 1965, அத்­தி­யா­யம் XX, தொகுதி I ல் ஆட்­சிப் பேர­வைக்கு வழங்­கப்­பட்­டுள்­ளது. 

அத்­து­டன் அவ்­வத்­தி­யா­யத்­தில் கௌரவ முனை­வர் பட்­ட­யம் அல்­லது சான்­றி­த­ழில் பல்­க­லைக்­க­ழக வேந்­தர் கையொப்­ப­மிட வேண்­டும் என்­றும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

எனவே, ஆட்­சிக்­குழு மற்­றும் ஆட்­சிப் பேர­வை­யில் நிறை­வேற்­றப் பட்ட தீர்­மா­னத்­தின் அடிப்­ப­டை­யில் திரு.என். சங்­க­ரய்யா அவர்­க­ளுக்கு கௌரவ முனை­வர் பட்­டம் (D.Litt) வழங்க அனு­மதி கோரும் கோப்பு பல்­க­லைக்­க­ழ­கத்­தால் ஆளு­நர் - வேந்­தர் அவர்­க­ளுக்கு சமர்ப்­பிக்­கப்­பட்ட போது, அவர் அதில் கையொப்­ப­மிட மறுத்­துள்­ளார்.

மேற்­காண் நிலை­யில் 02.11. 2023 அன்று மதுரை காம­ரா­சர் பல்­க­லைக்­க­ழ­கத்­தில் நடை­பெற உள்ள பட்­ட­ம­ளிப்பு விழா­வில், மதுரை காம­ரா­சர் பல்­க­லைக்­க­ழக ஆட்­சிக்­குழு (Syndicate) மற்­றும் ஆட்­சிப் பேர­வை­யில் (Senate) நிறை­ வேற்­றப்­பட்ட தீர்­மா­னத்­தின்­படி என்.சங்­க­ரய்யா அவர்­க­ளுக்கு கௌரவ முனை­வர் பட்­டம் (D.Litt) வழங்­கு­மாறு ஆளு­நர் – வேந்­தர் அவர்­கள் கேட்­டுக் கொள்­ளப்­ப­டு­கி­றார்.

இவ்­வாறு அமைச்­சர் க.பொன்­முடி தமது அறிக்­கை­யில்கூறியுள்­ளார்.

------------------------------------



இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?

ரூ360 கோடிகள் வீணா?