குண்டு வீச்சு.

 "தமிழ்நாடு அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு 4% அகவிலைப்படி உயர்வு.இது ஜூலை முதல் கணக்கிடப்பட்டு நிலுவைத்தொகை வழங்கப்படும் .இதனால்16 லட்சம் பேர் பயனடைவார்கள்"

-முதல்வர் மு.க.ஸ்டாலின் 

விதிமுறைகளை மீறியதற்காக பறிமுதல் செய்யப்பட்ட 120 ஆம்னி பேருந்துகளில் வரி செலுத்தப்பட்ட பேருந்துகளை மட்டும் இன்று (அக்.26) விடுவிக்க போக்குவரத்து ஆணையா் சண்முக சுந்தரம் உத்தரவிட்டுள்ளார்.

குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு இன்று (அக்.26) சென்னைக்கு வருகை தருவதையொட்டி, 5,000 போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனா்.

சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்ட விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ள ரவுடி கருக்கா வினோத் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் லூயிஸ்டனில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 16 பேர் உயரிழந்துள்ளனர். 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

கனடாவில் இருந்து இந்தியா வர இன்று முதல் மீண்டும் விசா சேவை தொடங்குகிறது. செப்டம்பர் மாத இறுதியில் நிறுத்தப்பட்ட விசா சேவையை இந்தியா மீண்டும் தொடங்குகிறது.

ஆப்கானிஸ்தானில் ஒரே மாதத்தில் 4-வது முறையாக நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இன்று அதிகாலை ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டரில் 4.3 அலகுகளாக பதிவாகி இருக்கிறது.

ஹமாஸ் தீவிரவாதிகள், கடந்த 7-ம் தேதி காசா எல்லையை கடந்து இஸ்ரேலில் புகுந்து தாக்குதல் நடத்தினர்.இதில் இஸ்ரேலியர்கள் 1,400 பேர் உயிரிழந்தனர். இதற்கு பதிலடியாக காசாவின் வடக்கு பகுதியில் இஸ்ரேல் குண்டு வீச்சு தாக்குதல் நடத்தியது.

அமெரிக்காவின் மெய்னி மாகாணம் லீவின்ஸ்டன் நகரில் மர்மநபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 16 பேர் உயிரிழப்பு.

மத்தியபிரதேசத்தில் வெற்றி பெற்றால் இலங்கையில் சீதைக்கு கோயில் கட்டப்படும்: காங்கிரஸ் வாக்குறுதி.

ஆளுநர் மாளிகை முன் குண்டு வீச்சு.

ஆளுநர் மாளிகையின் நுழைவு வாயில் முன்பு வீசப்பட்ட பெட்ரோல் நிரப்பிய பாட்டில் பேரிகார்டு அருகே விழுந்து உடைந்ததுவிட்டதால், அதிலிருந்து தீ வரவில்லை” என்று சென்னை தெற்கு கூடுதல் காவல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்ஹா விளக்கம் அளித்துள்ளார்.

சென்னை வேப்பேரியில் உள்ள காவல் ஆணையர் அலுவலகத்தில், சென்னை தெற்கு கூடுதல் காவல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்ஹா  செய்தியாளர்களைச் சந்தித்தார். 

அப்போது அவர் கூறியது: "இன்று நண்பகல் 3 மணிக்கு, சர்தார் படேல் சாலையில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர், ராஜ்பவன் நுழைவு வாயில் பகுதியை குறிவைத்து, பெட்ரோல் நிரப்பிய பாட்டிலை வீசுவதற்கு முயற்சித்தார். அப்போது அங்கு முன்னெச்சரிக்கையுடன் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல் துறையினர் அந்த நபரை பார்த்துவிட்டதால், அந்த நபர் எதிர் திசையில் உள்ள ஹைவே ரிஸர்ச் சென்டர் என்ற பகுதியில் இருந்து அந்த பாட்டிலை வீச முயற்சித்தார். 

அப்போது பிரதான நுழைவு வாயில் பகுதியிலும், வெளியிலும் இருந்த காவலர்கள் அந்த நபரை சுற்றி வளைத்தனர்.

அந்த நபரை போலீஸார் பிடித்தபோது, ஒரு பாட்டிலை வீசினார். அதிலிருந்து எந்தவிதமான தீயும் வரவில்லை. அந்த பாட்டில் அப்படியே உடைந்து கிடக்கிறது. அவரை பிடித்தபோது, மேலும் 4 பாட்டில்கள் அவரிடம் இருந்தது. அதனை போலீஸார் பறிமுதல் செய்துவிட்டனர். 

இந்தச் சம்பவம் சர்தார் படேல் பிரதான சாலையில் நடந்தது. அங்கிருந்து வீசும்போது, ஆளுநர் மாளிகையின் நுழைவு வாயில் முன்பிருந்த பேரிகார்டு முன்பாக விழுந்தது. 

இதில் யாரும் பாதிக்கப்படவில்லை. எந்தவிதமான சேதமும் ஏற்படவில்லை.

அந்த நபரை பிடித்து போலீஸார் விசாரித்தபோது, அந்த நபர், 42 வயதுடைய கருக்கா வினோத் என்பது தெரியவந்தது. தேனாம்பேட்டையைச் சேர்ந்தவர். இவர் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக இதே மமோன்று பாஜக கட்சி அலுவலகத்தின் மீது, இதேபோன்ற பாட்டிலை வீசியுள்ளார். 

அதற்கு முன்னதாக, தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் இதே மாதிரியான சம்பவம் செய்துள்ளார்.அண்மையில் ஜாமீனில் சிறையில் இருந்து வெளியே வந்திருக்கிறார். இன்று காலை 10-11 மணிக்கு மது அருந்தியுள்ளார்.

 சம்பவத்தின்போது அவர் நிதானத்தில் இல்லை. எனவே, அவரை மிகுந்த எச்சரிக்கையுடன் பிடித்து, அவரிடமிருந்த பாட்டில்களை பறிமுதல் செய்தோம். 

காவல் நிலையத்தில் வைத்து அவரிடம் விசாரணை நடத்தி வருகிறோம். 

முதற்கட்ட விசாரணையில், கருக்கா வினோத் தமிழக பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் கடந்த 2022 ஆம் ஆண்டு பெட்ரோல் குண்டு வீசி சிறை சென்றுள்ளதும், ஓராண்டாக சிறையில் இருந்த நிலையில், விடுதலை செய்ய ஆளுநர் ஒப்புதல் அளிக்கவில்லை. 


அதன் காரணமாக ஆத்திரத்தில் தற்போது ஆளுநர் மாளிகையின் மீது பெட்ரோல் குண்டு வீசியதாக வாக்குமூலத்தில் தெரிவித்திருந்தார். மேலும் அவர் மொத்தமாக, பெட்ரோல் நிரப்பிய நான்கு பாட்டில்களைக் கொண்டு வந்ததும் விசாரணையில் தெரியவந்தது.

இந்த விசாரணைக்குப் பின்னர், முழு விவரம் தெரியவரும்" என்று அவர் தெரிவித்தார்.

---------------------------------------



இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?