சங்கிஅரசியல்
வங்கக்கடலில் ஹாமூன் புயல் உருவாகியுள்ள நிலையில் 9 துறைமுகங்களில் 2ஆம் எண் புயல் கூண்டு ஏற்றம்.
ஆவடி இரயில் நிலையத்தில் புறநகர் ரயிலின் 4 பெட்டிகள் தடம் புரண்டது.
காஸா மீதான இஸ்ரேலின் தொடர் தாக்குதலால் 10 லட்சம் குழந்தைகளின் உயிருக்கு பாதுகாப்பற்ற சூழல் நிலவி வருவதாக குழந்தைகள் பாதுகாப்பு அமைப்பு எச்சரித்துள்ளது.
நேபாளத்தின் காத்மாண்டுவில் ஏற்பட்ட திடீர் நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.1 ஆக பதிவாகி இருக்கிறது.
ரூ.83 ஆயிரம் கோடியில் டிஸ்னி ஹாட்ஸ்டாரை விலைக்கு வாங்குவதில் ரிலையன்ஸ் அம்பானி தீவிர முயற்சி.
அதிகப்பணம் வாங்கி மோசடி செய்த ஆம்னி பேருந்துகள் பறிமுதல் செய்ததை விடுவிக்கப்கோரி.இன்று 6 மணி முதல் ஆம்னி பேருந்துகள் இயங்காது.உரிமையாளர் சங்கம் அறிவிப்பு.
"மக்கள் நலன் சட்டங்கள் தொடர்மாக எந்தவொரு அரசுவேலையும் பார்க்காமல்.கிடைக்கும் மேடைகளில் சங்கிஅரசியல்பேசுகிறார்ஆளுநர் ஆர்.யன்.ரவி "-செல்வப்பெருந்தகை
"அறநிலையத் துறையும்
சங்கிகளும்."
கோவில் உண்டியலில் சேகரிக்கப்படும் பணம், தனி வங்கிக் கணக்கில் இருக்கும்.
அந்தந்த மாதம் கோவிலுக்குத் தேவையான செலவுக்கு இந்த தனி வங்கிக் கணக்கில் இருந்து கோவிலுக்கான அன்றாட நடைமுறை வங்கிக் கணக்கிற்கு மாற்றப்படும். உண்டியல் பணத்தை கோவில் அதிகாரி நிரந்தர வங்கிக் கணக்கிலேயே வைத்திருப்பார்.
•வடபழநி ஆண்டவர் திருக்கோவில் உண்டியல் காணிக்கை நிதி தனி வங்கிக் கணக்கில் பல கோடி ரூபாய் இருக்கிறது. தமிழ்நாட்டிலுள்ள சில பெரிய கோவில்களின் வங்கிக் கணக்கில் பல நூறு கோடி ரூபாய் வரை நிரந்தர வைப்பு நிதியாக இருப்பதையும் நானறிவேன்.
இப்பணத்தை யாரும் எடுக்கவோ, வேறு பயன்பாட்டிற்கு மாற்றவோ முடியாது. அதற்கு வழியுமில்லை.
•உண்டியலில் சேகரிக்கப்படும் உலோகங்கள் தனித்தனியாக மதிப்பிடப்பட்டு, தங்கம் தனியாக கட்டப்பட்டு கோவில் லாக்கரில் பாதுகாக்கப்படுகின்றன.
இவையும் மூன்று அதிகாரிகள் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டு அதற்கான சாவிகள் வெவ்வேறு அலுவலகங்களில் தனித்தனியாக பராமரிக்கப்படுகின்றன. லாக்கரை தனியாகச் சென்று யாரும் திறக்க முடியாது. சாவி பெறுவதற்கே கடும் விதிகளும் நடை முறைகளும் உள்ளன.
•ஒரு பக்தர் குறிப்பிட்ட வேண்டுதலுக்காக, அதாவது வேல், கிரீடம் செய்ய தங்கமோ வெள்ளியோ காணிக்கையாக கொடுத்திருந்தால் அவற்றை வேறு காரணங்களுக்காக பயன்படுத்த முடியாது.
•உண்மை நிலை இவ்வாறு இருக்க ... ஒரு சிலர் அவரவர் கற்பனைச் சிந்தனைக்கு ஏற்றாற்போல உண்டியல் காணிக்கைகள் இந்த அமைச்சருக்கு பத்து சதவிகிதம் போகிறது -அந்த அமைச்சருக்கு 10 சதவிகிதம் போகிறது எனச் சொல்வது -அவர்களின் அறியாமையன்றி வேறில்லை.
•ஒரு சிலர் சொல்வதைப் போல கோவில் பணம் வேறு எங்கும் போய்விடாது.
- இவை அனைத்தும் ‘தினமலர்’ நிர்வாகி ஆதிமூலத்தின் வாக்குமூலங்கள் தான். உண்டியல் பணம் எவ்வளவு பாதுகாப்பாக கையாளப்படுகிறது என்ற 15 வழிமுறைகளையும் அவர் வரிசைப்படுத்தி இருக்கிறார். இதன்பிறகும் ஒரு கூட்டம், கோவில் நிதிகள் முறையாகப் பயன்படுத்தப்பட வில்லை என்று கூக்குரல் இடுவது அவர்களது சுயநலமே தவிர வேறல்ல.
‘‘கோவிலை விட்டு அரசே வெளியேறு என்று சொல்லும் மூன்று பேர் கோவில் நிலத்தை ஆக்கிரமித்திருந்தார்கள். அவர்களிடம் இருந்து நிலத்தை மீட்டுள்ளோம்’’ என்று அறநிலையத் துறை அமைச்சர் சொல்லி இருந்தார். இது தான் இந்த பொய் பிரச்சாரத்துக்கு பின்னால் இருக்கும் உள் நோக்கம் ஆகும்.
கோவிலை சுத்தம் செய்வது சிலருக்குப் பிடிக்கவில்லை. அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்பதும், கோவில் ஓதுவார்களாக பெண்கள் வருவதும், தமிழில் வழிபாடு செய்யலாம் என்பதும் சிலருக்கு எரிச்சலாக இருக்கிறது.
ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுவதும், கோவில்கள் அனைத்திலும் கேமராக்கள் பொருத்துவதும், அனைத்து ஆவணங்களையும் இணையத்தில் வெளியிடுவதும் சிலரை கோபம் கொள்ள வைக்கிறது. யாரெல்லாம் கோவில் சொத்துகளை ஆக்கிரமித்திருந்தார்கள், யாரிடம் இருந்தெல்லாம் மீட்டுள்ளோம் என்பதை புத்தகமாகப் போட்டு வழங்கி வருகிறார் அமைச்சர் சேகர்பாபு. இது பா.ஜ.க. தலைமை நிலையத்துக்கும் அனுப்பி வைக்கப் பட்டுள்ளது.
இதனால் பாதிக்கப்பட்டவர்கள் தான், ‘கோவிலைவிட்டு அரசே வெளியேறு’ என்று கிளம்புகிறார்கள்.
கோவிலை விட்டு அரசே வெளியேறு என்பதைப் போல - மருத்துவ மனைகளை விட்டு அரசே வெளியேறு - கல்லூரிகளை விட்டு அரசே வெளியேறு - என்று சிலர் கிளம்பினால் என்ன ஆகும்?
கோவில்களை அரசு தான் நிர்வாகம் செய்யவேண்டும் என்று கோரிக்கை வைத்தவர்களும் பக்தர்கள்.
மதுரையைச் சேர்ந்த தரும இரண்டன சபை அல்லது அறக்கட்டளை பாதுகாப்புச் சங்கம் என்ற அமைப்பு 1907 முதல் வலியுறுத்திவந்த கருத்து இது. பெரும்பாலும் பார்ப்பன வழக்கறிஞர்கள் இருந்த அமைப்பு இது. இந்த கோரிக்கையைத் தான் பழுத்த பக்தரான அன்றைய முதலமைச்சர் பனகல் அரசர் அவர்கள் 1927 ஆம் ஆண்டு நிறைவேற்றினார்கள்.
இவர் சமஸ்கிருத பண்டிதர். இந்த சட்டமுன் வடிவை உருவாக்கிக் கொடுத்தவர் அன்றைய சட்ட மன்றத்தின் சிறப்பு உறுப்பினராக இருந்த என்.கோபாலசாமி அய்யங்கார் அவர்கள். இவர் பிற்காலத்தில் பிரதமர் நேருவின் அமைச்சரவையில் அமைச்சராக இடம்பெற்றார்.
நீதிக்கட்சி காலத்தில் இந்து சமய அறநிலையப் பாதுகாப்புக் குழுவுக்குத் தலைவராக இருந்தவர் சென்னை உயர்நீதி மன்றத்தின் நீதிபதியாக ( 1912–-21) இருந்த சர்.டி.சதாசிவ அய்யர்அவர்கள்.
இந்த சட்டத்தை 1948 ஆம் ஆண்டு செம்மைப்படுத்தியவர் அன்றைய முதலமைச்சர் ஓமந்தூர் ராமசாமி அவர்கள். இவர் ரமண மகரிஷியின் சீடர். ஒருநாளைக்கு ஆறு முறை வழிபாடு செய்பவர். பெருந்தலைவர் காமராசர் ஆட்சியில் தான் இச்சட்டத்தில் இருந்த ஒருசில ஓட்டைகள் கூட அடைக்கப்பட்டன.
பழுத்த ஆத்திகரான பெரியவர் பக்தவத்சலம் அவர்கள் அறநிலையச் சட்டத்தை கடுமையாகக் கடைப்பிடித்தார்.
இதன் தொடர்ச்சியாக தி.மு.க. அரசு செயல்பட்டு வருகிறது.
1927 ஆம் ஆண்டு முதல் இருக்கும் நடைமுறை இது. மாண்புமிகு முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் அவர்கள் பதவியேற்ற பிறகு தான் ஏதோ கோவில்களை அரசு எடுத்துக் கொண்டதைப் போல பிரதமர் நரேந்திரமோடி அவர்கள் பேசியது, ‘வாட்ஸ் அப்’ வதந்தி வரலாறே தவிர உண்மை வரலாறு அல்ல.
பழுத்த ஆத்திகர் - எப்போதும் குங்குமப் பொட்டுடன் காட்டியளித்தவர் - மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அறங்காவலராக இருந்தவர் மறைந்த மரியாதைக்குரிய பெரியவர் பி.டி.ஆர்.பழனிவேல் ராசன் அவர்களிடம், ‘‘இந்து கோவில்கள் மட்டும் இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் இருப்பது போல், சர்ச்சுகளும் பள்ளிவாசல்களும் ஏன் அரசின் வசம் இல்லை?’’ என்று கேட்டார்கள்.
அவர் சொன்னார்: ‘ராஜாங்கங்களும், சமஸ்தானமும் அரசுடமை ஆகியது போல அரசர்கள் கட்டிய கோவில்கள் அரசு வசம் வந்துள்ளது.
ஆதீனங்களும், மடங்களும் இன்றும் சுயமாக இயங்குவதைப் போல தனியார்களால் உருவாக்கப்பட்ட சர்ச்சுகளும் பள்ளிவாசல்களும் சுயமாக இயங்குகின்றன’ என்றார். இதை விட வேறு தீர்ப்பு இருக்க முடியுமா?
பகல் வேஷக்காரர்கள் .கோவில் பணம்,சொத்துக்களை தர்மகர்த்தா,கோவில் அர்ச்சகர்கள் எனக் கூறி கொள்ளையடித்துவந்தவர்கள் அதனால் தான் பயப்படுகிறார்கள்.