முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

வரலாறு தெரியாமல் பொய்கள்

 ரூ.2000 தாள்களை வங்கிகளில் மாற்றுவதற்கான கால அவகாசம் இன்றுடன் முடிவடைகிறது.

"திமுகவுக்கு யார் போட்டி என்பதில்தான் அதிமுக, பாஜ இடையே மிகப்பெரிய போட்டி"- அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேட்டி .

"தமிழ்நாட்டில் சிறந்த மருத்துவ கட்டமைப்பு" குஜராத் மருத்துவ குழு பாராட்டு.

பேச்சுவார்த்தைக்கு பின்னர் இடைநிலை ஆசிரியர்களின் 12 நாள் போராட்டம் நுறுத்தம்.

பட்டியலின தலைவர் பதவியேற்பு விவகாரம் ஆர் யன் ரவிக்கு திமுக கண்டனம்."வரலாறு தெரியாமல் தவறாகப் பொய் பேசக்கூடாது."

தமிழ்நாட்டில் 15 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புசென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.

ஆசிய விளையாட்டுப் போட்டி.கபடி பிரிவில் தங்கம் வென்ற இந்தியா - மொத்தமாக 100 பதக்கங்களை குவித்தது.

  • திமுக எம்.பி. ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான இடங்களில் 2வது நாளாக தொடர்ந்த வருமான வரித்துறையினர் சோதனை - முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக தகவல் 
  •  பட்டியலின பெண்ணுக்கு நீதி மறுக்கப்படுவதாக ஆளுநர் ஆர்.என்.ரவி குற்றச்சாட்டு ."ஆளுநர் பதவி விலகிவிட்டு “அரசியல் தலைவராக” தன்னை மாற்றிக் கொண்டு பேசட்டும்" என அமைச்சர் துரைமுருகன் கண்டனம்
  •  பள்ளிக் கல்வித்துறை செயலாளர், தொடக்கக் கல்வி இயக்குநர், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ஆகியோர் பேச்சுவார்த்தை - போராட்டத்தை வாபஸ் பெறுவதாக இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர்கள் சங்கம் அறிவிப்பு 
  • செமஸ்டர் தேர்வு கட்டணம் உயர்வு எதிரொலி - திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தை கண்டித்து திருவண்ணாமலையில் 2000 மாணவர்கள் போராட்டம்
  • நாகையில் இருந்து இலங்கைக்கு கப்பல் போக்குவரத்து வரும் அக்டோபர் 10ம் தேதி தொடக்கம் - ஒரு நபருக்கு 6500 ரூபாய் கட்டணம் நிர்ணயம் 
  • சனாதனம் பற்றி தொடர்ந்து பேசிக்கொண்டே இருப்பேன் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திட்டவட்டம்.
  • டாஸ்மாக் கடைகளுக்கு புதிதாக மதுபானம் வாங்க வருபவர்களை தடுத்து நிறுத்தும் விற்பனையாளர்களுக்கு பரிசு - அமைச்சர் முத்துசாமி அறிவிப்பு 
  • தண்டவாள பராமரிப்பு பணி காரணமாக நாளை (அக்டோபர் 8) சென்னை கடற்கரை - தாம்பரம் வரையிலான 44 மின்சார ரயில் சேவைகள் ரத்து
  • கணக்கெடுப்பு தொடர்பான விவரங்களை வெளியிட்ட பிகார் அரசு விளக்கம் அளிக்குமாறு மாநில உயர்நீதிமன்றம் நோட்டீஸ்.
  • வெள்ளத்தால் சிக்கி தவிக்கும் சிக்கிம் - உயிரிழப்பு மற்றும் காணாமல் போனவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிப்பு 
  • 4வது முறையாக ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை  - ரிசர்வ் பேங்க் ஆஃப் இந்தியா அறிவிப்பு
  • மும்பை அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து.. 7 பேர் உயிரிழப்பு, 40க்கும் மேற்பட்டோர் படுகாயம்
  • 5 மாநில சட்டமன்ற தேர்தலை நடத்துவது தொடர்பாக, தலைமை தேர்தல் ஆணையம் ஆலோசனை
  • எதிர்க்கட்சிகளை அச்சுறுத்த பொய் வழக்குப் போடுவதாக டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் குற்றச்சாட்டு 
  •  குர்திஷ் கிளர்ச்சியாளர்கள் முகாம் மீது துருக்கி ராணுவம் வான்வழி தாக்குதல் - 15 பேர் உயிரிழப்பு 
  • இங்கிலாந்தில் ராணி எலிசபெத்தை கொல்ல முயன்ற இந்தியருக்கு 9 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை விதிப்பு
  • நியூசிலாந்தில் உள்ள குயின்ஸ்டவுன் விமான நிலையத்தில் வெடிகுண்டு இருப்பதாக மிரட்டல் - தாமதமாக புறப்பட்ட விமானங்களால் பயணிகள் அவதி 
  • சிங்கப்பூரில் கடந்த இரு வாரங்களில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றால் பாதிப்பு - கட்டுப்பாடுகளை கடைபிடிக்குமாறு சுகாதாரத்துறை எச்சரிக்கை.
  • --------------------------------------------------------------------•

ஊடகத்திற்கு பாஜக மிரட்டல்

பிர­பீர் புர்­கா­யஸ்தா - அவ­சர நிலைக்­கா­லத்­தில் ( 1975) 18 மாதங்­கள் சிறை­யில் இருந்த போராளி ஆவார். 

இட­து­சா­ரிச் சிந்­தனை கொண்­ட­வர். அமித் சக்­ர­வர்த்தி – ஒரு மாற்­றுத்­தி­ற­னாளி. இவர்­கள் இரு­வ­ரும்­தான் கைது செய்­யப்­பட்­டுள்­ளார்­கள்.

டெல்­லி­யில் உள்ள நியூஸ் கிளிக் இணை­ய­தள செய்தி நிறு­வன அலு­வ­ல­கத்­தில் தீவிர சோதனை நடத்தி பூட்டி சீல் வைத்த டெல்லி காவல்­து­றை­யி­னர், இந்த கைது நட­வ­டிக்­கை­யை­யும் தொடர்ந்­துள்­ள­னர்.

என்ன குற்­றச்­சாட்டு அடிப்­ப­டை­யில் இந்த நட­வ­டிக்­கை­யைச் செய்­துள்­ளார்­கள் தெரி­யுமா? 

அமெ­ரிக்க நாளி­த­ழான ‘நியூ­யார்க் டைம்ஸ்’ ஒரு செய்­தியை வெளி­யி­டு­கி­றது. அதில், ‘நியூஸ் கிளிக் நிறு­வ­னம், சீனா­வி­ட­ மி­ருந்து நிதி பெறு­கி­றது’ என்று குற்­றச்­சாட்டு சொல்லி இருந்­தார்­க­ளாம். 

இதை வைத்து இந்த கைது நட­வ­டிக்­கை­யாம்!

நியூஸ் கிளிக் ஊடக நிறு­வ­னம் வெளி­யிட்­டுள்ள அறிக்­கை­யில், “எங்­க­ளது இணை­ய­த­ளம் சுதந்­தி­ர­மா­னது.

 சீன நிறு­வ­னங்­க­ளி­டம் இருந்து நிதி பெற்­றுக் கொண்டு செய்­தி­களை வெளி­யிட்­ட­தா­கக் கூறப்­ப­டும் புகார்­க­ளுக்கு எந்த அடிப்­ப­டை­யும் இல்லை. சீனா­வுக்­காக பிரச்­சா­ரம் செய்­யும் எந்த செய்­தி­யும் எங்­கள் இணை­ய­த­ளத்­தில் வெளி­யி­டப்­பட வில்லை. 

2021ஆம் ஆண்டு முதல் நியூஸ் க்ளிக் நிறு­வ­னத்­தின் வங்­கிக் கணக்­கு­கள், வரவு – செல­வு­கள், வெளி­நாட்­டுத் தொடர்­பு­கள் குறித்து ஒன்­றிய அர­சின் பல்­வேறு விசா­ரணை அமைப்­பு­கள் ஆய்வு நடத்தி உள்­ளன. இந்த ஆய்­வு­க­ளில் எந்த முறை­கே­டு­க­ளும் கண்­டு­பி­டிக்­கப்­ப­ட­வில்லை.

நியூ­யார்க் டைம்ஸ் பத்­தி­ரி­கை­யில் உள்­நோக்­கத்­து­டன் வெளி­யான கட்­டு­ரையை மட்­டும் அடிப்­ப­டை­யா­கக் கொண்டு, எந்த ஆதா­ர­மும் இல்­லா­மல் ‘உபா’ போன்ற கடு­மை­யான சட்­டங்­க­ளின் கீழ் எப்­படி வழக்­குப் பதிவு செய்ய முடி­யும்?” என நியூஸ் கிளிக் கேள்வி எழுப்­பி­யுள்­ளது.


“சீன நிறு­வ­னங்­க­ளி­டம் இருந்து பெரு­ம­ள­வில் நிதி பெற்ற ‘பி.எம்.கேர்ஸ்’ ஐ நிர்­வ­கிப்­ப­வர் மீது ஏன் ஒரு நட­வ­டிக்­கை­யும் இல்லை?” என உச்­ச­நீ­தி­மன்ற வழக்­க­றி­ஞர் பிர­சாந்த் பூஷன் கேள்வி எழுப்­பி­யுள்­ளார். 

“சீனாக்­கா­ரர் ஒரு­வ­ரி­ட­மி­ருந்து கொஞ்­சம் நிதி வந்த ஒரே கார­ணத்­துக்­காக, நியூஸ் க்ளிக் மீது தேசத் துரோக வழக்கு. அந்த நிறு­வ­னத்­தோடு தொடர்பு கொண்­ட­வர்­க­ளின் வீடு­க­ளில் ரெய்டு, அவர்­க­ளின் செல்­பே­சி­க­ளும் லேப்­டாப்­க­ளும் பறி­மு­தல். ஆனால் சீன நிறு­வ­னங்­க­ளி­ட­மி­ருந்து பெரு­ம­ள­வில் நிதி பெற்ற PM CARES-–ஐ நிர்­வ­கிப்­ப­வர் மீது ஏன் ஒரு நட­வ­டிக்­கை­யும் இல்லை?” என கேள்வி எழுப்­பி­யுள்­ளார்.

2021 ஆம் ஆண்டு இந்த நிறு­வ­னத்­தில் அம­லாக்­கத்­துறை சோதனை நடத்­தி­யது. இதன் முதன்மை ஆசி­ரி­யர் பிர­பீ­ருக்­குச் சொந்­த­மான வீட்டை முடக்­கி­யது. 

அவ­ரது நிரந்­தர வைப்­புத் தொகையை முடக்­கி­யது. பெரி­தாக ஆதா­ரம் இல்­லா­த­தால், நியூஸ் கிளிக் மற்­றும் அதன் உரி­மை­யா­ளர் மீது எந்­த­வி­த­மான நட­வ­டிக்­கை­யும் எடுக்­கக்­கூ­டாது என உச்­ச­நீ­தி­மன்­றம் உத்­த­ர­விட்­டது.

இதன் தொடர்ச்­சி­யாக இந்த இணைய ஊட­கத்­தைக் குற்­றம் சாட்டி ஒன்­றிய அமைச்­சரே நாடாளு மன்­றத்­தில் பேசி­னார். இதைத் தொடர்ந்து கடந்த அக்­டோ­பர் 3 அன்று சோதனை நடத்தி கைதும் செய்து விட்­டார்­கள்.

 ‘நியூஸ் கிளிக்’ ஊடக ஊழி­யர்­கள் அனை­வ­ரும் விசா­ர­ணைக்கு உள்­ளாக்­கப்­பட்டு இருக்­கி­றார்­கள். மூத்த பத்­தி­ரி­கை­யா­ளர் ஊர்­மி­ளேஷ், விசா­ர­ணைக்கு அழைத்­துச் செல்­லப்­பட்­டுள்­ளார். ராஜ்­ய­சபா டிவி­யின் முன்­னாள் ஆசி­ரி­யர் இவர்.

‘நியூஸ் கிளிக்’ என்­பது இட­து­சா­ரிச் சிந்­தனை கொண்ட ஊட­கம் ஆகும். பா.ஜ.க. அர­சின் போலி­யான முகத்தை தொடர்ந்து அம்­ப­லப்­ப­டுத்தி வந்­துள்­ளது. இது­வரை ஆங்­கி­லத்­தில் செய்­தி­களை வெளி­யிட்டு வந்­த­வர்­கள், சமீப கால­மாக இந்­தி­யில் செய்­தி­களை வெளி­யி­டத் தொடங்கி உள்­ளார்­கள். 

‘இந்தி’ பேசும் மாநி­லங்­கள் விழிப்­பு­ணர்வு பெற்­று­வி­டக் கூடாது என்­ப­தில் பா.ஜ.க. எப்­போ­தும் தெளி­வாக இருக்­கும். அந்த மாநில மக்­களை இருட்­டில் வைத்து, வாக்கு வேட்­டை­யா­டும் கட்சி அது. எனவே, ‘இந்­தி’­யில் செய்தி வெளி­யி­டு­வ­தைத் தடுக்க நினைத்­துள்­ளார்­கள்.

‘இந்­தியா’ கூட்­டணி சார்­பில் வெளி­யி­டப்­பட்­டுள்ள கூட்­ட­றிக்­கை­யில், “மோடி தலை­மை­யி­லான ஒன்­றிய பா.ஜ.க. அரசு, கடந்த ஒன்­பது ஆண்­டு­க­ளில், பிபிசி, நியூஸ் லாண்ட்ரி, டைனிக் பாஸ்­கர், பாரத் சமாச்­சார், காஷ்­மீர் வாலா, தி வயர் போன்ற ஊட­கங்­களை ஒடுக்க புல­னாய்வு அமைப்­பு­க­ளைப் பயன்­ப­டுத்­தி­யது. 

தற்­போது நியூஸ் கிளிக் செய்தி நிறு­வ­னத்தை ஒன்­றிய அரசு குறி­வைத்­துள்­ளது. மோடி அரசு ஊடக நிறு­வ­னங்­க­ளைக் கைய­கப்­ப­டுத்­து­வ­தன் மூலம் தங்­கள் கட்­சி­யின் கருத்­தி­ய­லுக்கு ஊட­கங்­களை ஊது­கு­ழ­லாக மாற்ற முயற்­சிக்­கி­றது.” என்று பகி­ரங்­க­மா­கக் குற்­றம் சாட்டி உள்­ளார்­கள்.

‘அழுத்­தத்­து­டன் பணி­பு­ரி­கி­றோம்’ –- என்று உச்­ச­நீ­தி­மன்ற தலைமை நீதி­ப­திக்கு, டிஜி­பப் நியூஸ் இந்­தியா ஃப்வுண்­டே­ஷன் (Digipub News India Foundation), இந்­தி­யன் வுமன்ஸ் பிரஸ் கார்ப்ஸ் (Indian Women’s Press Corps), பிரஸ் கிளப் ஆஃப் இந்­தியா (Press Club of India) உள்­ளிட்ட பல்­வேறு அமைப்­பு­கள் இணைந்து கடி­தத்தை எழு­தி­யுள்­ளன.

 “சட்­ட­வி­ரோ­தச் செயல்­கள் தடுப்­புச் சட்­டத்­தின் கீழ் வழக்­குப்­ப­திவு செய்ய, பத்­தி­ரி­கைப் பணி ஒன்­றும் தீவி­ர­வா­தப் பணி அல்ல. எனவே, பத்­தி­ரி­கைத்­து­றைக்கு ஏற்­பட்­டி­ருக்­கும் அச்­சு­றுத்­தல்­களை உச்­ச­நீ­தி­மன்­றம் தலை­யிட்டு தடுக்க வேண்­டும்” என அவை வலி­யு­றுத்தி உள்­ளன.

“மக்­க­ளுக்கு நன்­மை­கள் எது­வும் செய்ய மாட்­டோம், இதை யாரா­வது குறை சொன்­னால் அவர்­களை விட­வும் மாட்­டோம்” -– இது­தான் பா.ஜ.க. பாணி ஆட்சி முறை­யா­கும். 

இவைகளுக்கு உறுதியாக எதிர் வினை பலன் கிடைக்கும்.

-------------------------------------------------------

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?