ஒரு ஆளில்லா கிராமம்..
இருந்த ஒரேயொரு வரும் காலமானதால்.. காலமான ஊர் தூத்துக்குடி மாவட்டம் மீனாட்சிபுரம் ஊரில் வசித்து வந்த ஒரேயொரு முதியவர் கந்தசாமி (75) உயிரிழந்ததால் ஆளில்லா கிராமமானது செக்காரக்குடி அருகே உள்ள மீனாட்சிபுரம். இங்கே 75 வயது கந்தசாமி இத்தனை காலம் தனியாக வசித்து வந்தார். தண்ணீர் பஞ்சம் காரணமாக இந்த கிராமத்தை மக்கள் பலரும் காலி செய்த நிலையில் கடந்த 10 வருடங்களாக இவர் இந்த கிராமத்தில் தனியாக வசித்து வந்தார். தமிழ்நாட்டிற்கு உள்ளே வருது.. மிகப்பெரிய எக்ஸ்பிரஸ் வே! சென்னை- தூத்துக்குடி இடையே.. மெகா ப்ராஜெக்ட் கந்தசாமியின் கதை மனதை நொறுக்க கூடிய ஒன்றாகும். அவரது முழு வாழ்க்கையும் இந்த மீனாட்சிபுர கிராமத்தின் தூசி நிறைந்த, தனிமையான வறண்ட வயல்களுடன் பிணைக்கப்பட்டது ஆகும். அவர் இங்குதான் பிறந்தார். இங்குதான் படித்தார். இதே ஊரை சேர்ந்த பெண்ணையும் திருமணம் செய்து கொண்டார். இப்போது யாரும் இல்லா இதே மண்ணில் மரணமும் அடைந்துவிட்டார். 20 வருடங்களுக்கு முன்பு இவர் மனைவி வீரலட்சுமி இறந்த அதே அறையில் இவர் கடைசி நாட்களைக் கழித்து வந்த நிலையில், அதே அறையில் இன்று அவர் வயோதிகம் காரணமாக மரணம் அடைந்தார்....