அக்னிபாத்

 உ.பி, ஷாஜகான்பூரில் சாலையோரம் நின்றிருந்த பேருந்து மீது லாரி மோதி கவிழ்ந்ததில் 11 பேர் பலி.

வங்கதேசத்துக்கும் மேற்கு வங்கத்துக்கும் இடையே இன்று நள்ளிரவு கரையைக் கடக்கிறது 'ரெமல்' புயல்.
டெல்லி குழந்தைகள் நல மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் 6 குழந்தைகள் பலி.
டாஸ்மாக் கடைகளும் கணினிமயம் அக்டோபர் மாதம் முதல் மதுபாட்டில்களுக்கு ‘பில்’: அதிகாரிகள் தகவல்.
குடும்ப பிரச்னையில் தீர்வு கேட்ட ஐடி ஊழியர் தம்பதியிடம் 85 சவரன் நகைகளை சுருட்டிய இன்ஸ்பெக்டர்: அடகு வைத்து ரூ.42 லட்சம் வாங்கியதால் பணியிடைநீக்கம்.

தொழில் நிறுவனங்களை மிரட்டி   ரூ.1 கோடி வசூல்ஆட்டைய போட்ட பாலியல் வழக்கில் கைதான பாஜ நிர்வாகி மகுடீஸ்வரன்கட்சிவங்கிகணக்கில்செலுத்தும்படிதலைமைநோட்டீஸ்.(கட்சிக்கு கொடுக்க வேண்டிய பங்கை கொடுக்கவில்லையா?)

திருப்புவனம் பாமக பிரமுகர் கொலை வழக்கு.குற்றவாளிகள் குறித்து தகவல் கொடுத்தால் ரூ.25 லட்சம் பரிசு: போஸ்டர் ஒட்டிய என்ஐஏ.

அரசுப்பள்ளிகளில் இணையதளம் பயன்பாடுக்கு 3 மாதத்திற்கு ரூ.12 கோடி ஒதுக்கீடு.

அக்னிபாத்


கடைசி ஏழாம் கட்ட வாக்குப்பதிவுக்கு இன்னும் ஒருவாரமே உள்ள நிலையில் உத்தரப்பிரதே சம், பீகார், மேற்குவங்கம், பஞ்சாப், இமாச்சலப் பிரதேசம், உள்ளிட்ட 7 மாநிலங்களில் பிரச்சாரம் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. 


இந்த மாநிலங்க ளில் அக்னிபாத் திட்டம் தேர்தல் பிரச்சாரத்தில் முக்கிய விவாதப் பொருளாக மாறியுள்ளது.

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் இந்த திட்டம் ரத்து செய்யப்படும்  என்று அக்கட்சி வாக்குறுதி அளித்துள்ளது. இது ராணுவத்தில் சேரவேண்டும் என்ற ஆர்வத்தில் உள்ள இளைஞர்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்றுள் ளது. காரணம்  அக்னிபாத் திட்டத்தின் மூலம் ராணுவத்திலும் ஒப்பந்த பணிமுறையை மோடி அரசு புகுத்தியது. 

தற்போது பணிபுரியும் வீரர்களுக்கு வழங்கப்படுவதைபோல் எந்த ஒரு சலுகையும் இல்லாமல் 4 ஆண்டுகளுக்கு பின்னர் ராணுவத்தில் இருந்து கழற்றிவிடும் திட்டம்தான் அக்னிபாத்.  

இந்த திட்டம் இந்திய ராணுவத்தை பலவீனப்படுத்தி விடும் என்று எதிர்க் கட்சிகள் மட்டுமல்ல, முன்னாள் ராணுவ அதிகாரிகளும் சுட்டிக்காட்டினர். 

மோடி அரசு இந்த திட்டத்தை அறிமுகப் படுத்திய போது எங்களால் ஒன்றும் செய்ய  முடியவில்லை என்று ராணுவத் தளபதி ஜெனரல் எம்.எம். நரவனே ஓய்வுபெற்ற பின்னர் தமது சுயசரிதையில் குறிப்பிட்டுள்ளார். 

இந்த நிலையில் காங்கிரஸ் எம்.பி., ராகுல் காந்தி அக்னிபாத் திட்டம் குறித்து  தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் பேசுவது, மாதிரி நடத்தை விதிமுறைகளை மீறுவதாகும் என்று ஆணையம் கூறுவது வியப்பளிக்கிறது. 

முப்ப டையினர் குறித்துப் பேச மாதிரி நடத்தை விதி முறைகள் அனுமதிப்பதில்லை என்று ஆணை யம் சொல்கிறது. அக்னிபாத் திட்டம் பாஜக அரசின் கொள்கை முடிவு. அப்படியிருக்கையில் அதுபற்றி கேள்வி எழுப்ப எதிர்க்கட்சிகளுக்கு உரிமை உண்டு.

 தொழில்முறை ஆயுதப் பயிற்சி பெற்ற 21 வயது இளைஞர்களை 4 ஆண்டுகளுக்கு பிறகு  ராணுவத்தில் இருந்து திருப்பி அனுப்பினால், வேலை வாய்ப்பற்ற அவர்கள் எந்தத் திசையில் பயணிப்பார்கள்;  அதன் சமூக விளைவு எப்படி இருக்கும் என்பது ஆபத்தானது. ஆபத்தான இந்த திட்டம் குறித்து எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பக்கூடாதா?

தேர்தல் அறிவிக்கப்பட்டதில் இருந்து  ஆணையத்தின் செயல்பாடுகள் சந்தேகத்திற்கு உரியதாக உள்ளது. மத ரீதியாக மக்களைப் பிளவு படுத்தும் கருத்துக்களை யாரும் தெரிவிக்கக் கூடாது என்பதும் மாதிரி நடத்தை விதிகளில் ஒன்றாகும். ஆனால் பிரதமர் நரேந்திர மோடி ஒரு குறிப்பிட்ட மதத்தினரை தொடர்ந்து இழிவு படுத்திப் பேசி வருகிறார்.

 அவருக்கு வாய்ப்பூட்டு போட வக்கற்ற தேர்தல் ஆணையம், அரசின் கொள்கை முடிவுகளை கேள்விகேட்கும் எதிர்க்கட்சிகளுக்கு வாய்ப்பூட்டு போட முயற் சிப்பது நியாயமல்ல. ஆணையத்தின் உத்தரவு ஜனநாயக விரோதமானது.  

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வினேஷ் போகத் வென்றார்!

2025ல் தங்கம் விலை

முடிவுக்கு வருகிறதா?