மிரட்டல்,உருட்டல்!


மோடி எப்போதும் இந்து-முஸ்லிம் அரசியலை செய்யமாட்டார்.." - பாஜக.


நெல்லை:-எச்சரித்தும் நிற்காமல் சென்ற ஓட்டுநர்..வெள்ளத்தில் சிக்கிய அரசு பேருந்து.



மிரட்டல்,உருட்டல்!

நாடாளுமன்ற மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வரும் நிலையில், பா.ஜ.க முன்னிறுத்தியுள்ள வேட்பாளர்களில் 4-ல் ஒரு பங்கு வேட்பாளர்கள், கடந்த 10 ஆண்டுகளில் பா.ஜ.க.வில் இணைந்தவர்கள் என்பது அம்பலப்பட்டுள்ளது.

அதாவது, பா.ஜ.க முன்னிறுத்தியுள்ள 435 வேட்பாளர்களில் 106 வேட்பாளர்கள் கடந்த 10 ஆண்டுகளில், மற்ற கட்சிகளிலிருந்து பா.ஜ.க.வில் இணைந்தவர்கள் அல்லது இணைக்கப்பட்டவர்கள்.

இது மொத்தத்தில் 24% ஆக இருக்கிறது. இந்த 106-ல் 90 வேட்பாளர்கள் கடந்த 5 ஆண்டுகளில் பா.ஜ.க.வில் இணைந்தவர்கள்.இவர்களில் பலர், பா.ஜ.க.வின் கருத்தியலை ஏற்றுக்கொண்டு இணைந்தவர்களோ, சரியான அரசினை நிறுவிட வேண்டும் என்ற ஆசையிலோ இணைந்தவர்கள் அல்ல என்பது பல ஆய்வுகளின் அம்பலப்பட்டுள்ளது.


அதன்படி, கடந்த காலங்களில் பா.ஜ.க.வை கடுமையாக விமர்சித்தவர்களும், பா.ஜ.க.வால் கடுமையாக விமர்சிக்கப்பட்டவர்களும், தற்போது பா.ஜ.க.வில் தான் இருக்கிறார்கள் என்பது Indian Express, Times of India உள்ளிட்ட ஊடகங்கள் நடத்திய ஆய்வுகள் வழி அம்பலப்பட்டுள்ளது.

அவ்வாறு ஓரிரு மாதங்களுக்கு முன், Indian Express நாளிதழ், மகாராஷ்டிர மாநிலத்தின் துணை முதல்வர் அஜித் பவார் உள்ளிட்ட 23 பேர் தங்கள் மீது உள்ள ஊழல் வழக்கிலிருந்து தப்பித்துக்கொள்ளவே, பா.ஜ.க.வில் இணைந்ததை புள்ளிவிவரத்துடன் வெளிக்காட்டியது.

அவ்வரிசையில் தற்போது, Times of India நாளிதழ், உத்தரப் பிரதேசத்தில் பா.ஜ.க.வினால் முன்னிறுத்தப்பட்ட 23 வேட்பாளர்கள், தெலங்கானாவின் 11 பா.ஜ.க வேட்பாளர்கள் மற்றும் மேற்கு வங்கத்தின் 10 வேட்பாளர்கள் உள்ளிட்ட வேட்பாளர்கள் மற்ற கட்சிகளிலிருந்து பா.ஜ.க.வில் இணைக்கப்பட்டவர்கள் என தெளிவுபடுத்தியுள்ளது.

குறிப்பாக, பஞ்சாப்பில் முன்னிறுத்தியுள்ள பாதிக்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் மற்றக் கட்சியிலிருந்து அண்மையில் பா.ஜ.க.வில் இணைந்தவர்களே.தமிழ்நாட்டில் முன்னிறுத்தப்பட்ட வேட்பாளர்களில் 26% பேர் மற்றக் கட்சியிலிருந்து இணைந்தவர்களே.இவ்வாறு, மற்ற கட்சியினருக்கு பதவி ஆசையைக் காட்டி அல்லது மிரட்டி, தனது கட்சிக்குள் சேர்க்கப்படும் தலைவர்கள், வெகுகாலம் கட்சியில் நீடிக்கப்போவதில்லை என்பதை பா.ஜ.க உணரவேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர்கள் தங்களது கண்டனங்களை முன்வைத்து வருகின்றனர்.


விஷமத்தனமான அறிக்கை.

இறு­தி­யாக மதத்தை கையில் எடுத்­துக் கொண்டு மாநி­லம் மாநி­ல­மாக சுற்­றிக் கொண்டு இருக்­கி­றார் பிர­த­மர் மோடி. அவ­ரைக் காப்­பாற்ற விஷ­மத்­த­ன­மான அறிக்கை ஒன்­றை­யும் வெளி­யிட்டு இருக்­கி­றார்­கள். இந்து மதப் பிரிவு மக்­கள் பிறப்பு சத­வி­கி­தம் சரிந்­து­விட்­ட­தாம். முஸ்­லீம்­க­ளின் எண்­ணிக்கை உயர்ந்து விட்­ட­தாம். இதன் மூல­மாக என்ன சொல்ல வரு­கி­றார்­கள். ‘பா.ஜ.க.வுக்கு வாக்­க­ளி­யுங்­கள்’ என்றா?!

இந்­தி­யா­வில் கடந்த 1950 முதல் 2015 வரை­யி­லான 65 ஆண்­டு­களில் இந்­துக்­க­ளின் எண்­ணிக்கை 7.8 சத­வி­கி­தம் சரிந்­து­விட்­டது.

முஸ்­லீம்­க­ளின் எண்­ணிக்கை 43.15 சத­வி­கி­த­மாக உயர்ந்­து­விட்­டது என்று பிர­த­ம­ரின் பொரு­ளா­தார ஆலோ­ச­னைக் குழு­வின் ஆய்வு அறிக்கை சொல்­கி­ற­தாம். அதனை பா.ஜ.க.வின் செய்­தித் தொடர்­பா­ளர் வெளி­யிட்டு இருக்­கி­றார்.

‘மக்­கள் தொகை­யில் மதச் சிறு­பான்­மை­யி­ன­ரின் பங்கு : நாடு தழு­விய பகுப்­பாய்வு ( 1950 -– 2015) என்று இந்த அறிக்­கைக்­குப் பெயர். பொரு­ளா­தார ஆலோ­ச­னைக் குழு உறுப்­பி­ன­ரான ஷாமிகா ரவி என்­ப­வர் இந்த அறிக்­கையை தயா­ரித்­துள்­ளார். இதனை பா.ஜ.க. செய்தி தொடர்­பா­ளர் சுதான்ஷூ திரி­வேதி வெளி­யிட்டு விட்டு என்ன சொல்­கி­றார் தெரி­யுமா?

“முஸ்­லீம்­க­ளின் எண்­ணிக்கை வேக­மாக அதி­க­ரிப்­பது கவலை அளிக்­கும் வகை­யில் உள்­ளது. காங்­கி­ர­சின் மதச்­சார்­பின்மை என்ற மறைப்­பைப் பயன்­ப­டுத்தி ஊடு­ரு­வல் மற்­றும் மத­மாற்­றத்­தின் மூலம் அவர்­க­ளின் எண்­ணிக்கை அதி­க­ரித்­துக் கொண்டே இருக்­கும்” என்று சொல்லி இருக்­கி­றார் அவர். ஒன்­றிய அமைச்­சர் ராஜீவ் சந்­தி­ர­சே­கர், “நாட்­டில் ஒரு குறிப்­பிட்ட மதத்­தி­ன­ரின் எண்­ணிக்கை மட்­டும் அதி­க­ரித்து வரும் விதத்­தில் சட்­ட­வி­ரோத ஊடு­ரு­வல் மற்­றும் மத­மாற்­றத்­தால் ஏற்­பட்ட அதி­க­ரிப்பு எவ்­வ­ளவு?” என்று கேட்­டி­ருக்­கி­றார். பிர­த­ம­ரின் பொரு­ளா­தார ஆய்­வுக்­கு­ழு­வின் ஆய்­வ­றிக்­கை­யை­யும், இவர்­கள் இரு­வ­ரது பேட்­டி­க­ளை­யும் ஊட­கங்­க­ளில் பெரிய அள­வில் வர வைத்­துள்­ளார்­கள். இதன் நோக்­கம் என்ன?

“இந்­துக்­கள் தொகை குறைந்து விட்­டது, இசு­லா­மி­யர்­கள் தொகை அதி­க­மாகி விட்­டது, அத­னால் பா.ஜ.க.வுக்கு வாக்­க­ளி­யுங்­கள்” என்று

கத­று­கி­றது பா.ஜ.க. தோல்­வி­யின் முகட்­டில் இருப்­ப­வர்­கள் அதில் இருந்து தப்­பிக்க ஏதா­வது கிடைக்­குமா என்று பார்க்­கி­றார்­கள். அதற்­காக இது போன்ற போலித்­த­ன­மான புள்­ளி­வி­ப­ரங்­களை எடுத்து வரு­கி­றார்­கள்.

மத­ரீ­தி­யாக நாட்­டை­யும் நாட்டு மக்­க­ளை­யும் பிள­வு­ப­டுத்­து­வ­தற்­கான முயற்­சி­தான் இது போன்ற செய்­தி­கள் ஆகும். நாம் நேர­டி­யா­கக் கேட்­கும் கேள்வி என்­பது, ‘இந்­துக்­க­ளுக்­காக கண்­ணீர் விடும் நீங்­கள் இந்த

பத்­தாண்டு காலத்­தில் இந்­துக்­க­ளுக்­கா­கச் செய்­தது என்ன?’ என்­ப­து­தான்.

இந்­துக்­க­ளுக்­காக விலை­வாசி குறைக்­கப்­பட்­டதா? இந்­துக்­க­ளுக்கு பெட்­ரோல் விலையை குறைத்­தீர்­களா? இந்­துக்­க­ளுக்கு டீசல் விலையை குறைத்­தீர்­களா? இந்து விவ­சா­யி­க­ளின் வரு­மா­னம் இரண்டு மடங்கு ஆனதா? பத்­தாண்டு காலத்­தில் 20 கோடி இந்து இளை­ஞர்­க­ளுக்கு வேலைவாய்ப்பை கொடுத்­தீர்­களா? இந்து மாண­வர்­க­ளின் கல்­விக் கடன் அனைத்­தும் ரத்து செய்­யப்­பட்­டதா? கோடிக்­க­ணக்­கான இந்­துக்­க­ளுக்கு இல­வ­ச­மாக வீடு கட்­டிக் கொடுத்­தீர்­களா? என்ன நன்­மையை இந்­துக்­களுக்­குச் செய்­தீர்­கள்?

பா.ஜ.க. ஆட்சி அதா­னிக்­கும், அம்­பா­னிக்­கும் குறிப்­பிட்ட 50 தொழி­ல­தி­பர்­க­ளுக்­கும் மட்­டுமே நன்மை செய்த ஆட்சி என்­பதை இன்று இந்­திய நாட்டு மக்­கள் அனை­வ­ரும் உணர்ந்து விட்­டார்­கள். இது இன்று படித்­த­வர்­கள் மத்தி­யில் மட்­டு­மல்ல, கிரா­மப்­புற மக்­கள் மத்­தி­யி­லும் போய்ச் சேர்ந்த தகவலாக மாறி­விட்­டது. இதற்கு பா.ஜ.க. தலை­மை­யால் பதில் சொல்ல முடி­ய­வில்லை. உடனே, இந்து –- முசு­லீம் என்று பேசத் தொடங்கி விட்­டார்­கள்.

பட்­டி­ய­லின -– பழங்­கு­டி­யின – பிற்­ப­டுத்­தப்­பட்ட மக்­க­ளது இட­ஒ­துக்­கீட்டை எடுத்து சிறு­பான்­மை­யி­ன­ருக்கு கொடுத்து விடப் போகி­றார்­கள் என்று பொய்ப் பிரச்­சா­ரம் செய்து வரு­கி­றார் பிர­த­மர் மோடி. அதற்­குத்­தான் இப்­போது இந்த புள்­ளி­வி­ப­ரத்தை வெளி­யிட வைத்­துள்­ளார்­கள்.

சிறு­பான்­மை­யி­ன­ருக்கு இட­ஒ­துக்­கீட்டை தூக்கி கொடுத்து விடு­வார்­கள் என்று சொல்­லும் மோடி, தனது பத்­தாண்டு காலத்­தில் பட்­டி­ய­லின இட­ஒதுக்­கீட்டை முழு­மை­யாக கொடுத்­து­விட்­டாரா? பழங்­கு­டி­யி­ன­ருக்­கான இட­ஒ­துக்­கீட்டை முழு­மை­யா­கக் கொடுத்து விட்­டாரா? இத­ரப் பிற்­ப­டுத்­தப்­பட்ட மக்­க­ளுக்­கான சமூக நீதியை முழு­மை­யாக கொடுத்து விட்­டாரா? இது எதை­யும் ஒழுங்­கா­கச் செய்­யா­த­வர் தான் இப்­போது தேர்தல் நேரத்­தில் கண்­ணீர் விடு­கி­றார்.

இசு­லா­மி­யர் எண்­ணிக்கை அதி­க­மாகி விடும் என்­ப­து­தான் சங்­ப­ரி­வார் அமைப்­பு­கள் காலம் கால­மாக கிளப்பி வரும் பீதி ஆகும். அதைத்­தான் பா.ஜ.க. இப்­போது இந்த தேர்­த­லில் பயன்­ப­டுத்­து­கி­றது. இந்­தி­யா­வின் குடும்­பக் கட்­டுப்­பாட்டு முறையை இசு­லா­மி­யர்­கள் கடைப்­பி­டிப்­பது இல்லை என்­பது இவர்­க­ளது குற்­றச்­சாட்டு. குடும்­பக் கட்­டுப்­பாட்டு முறையை கடைப்­பி­டித்த கார­ணத்­தால் தமிழ்­நாடு உள்­ளிட்ட தென் மாநி­லங்­கள் தொகுதி இழப்பு முதல் நிதி இழப்பு வரை சந்­திக்­கப் போகி­றதே? இதற்கு பா.ஜ.க.வின் பதில் என்ன? இது இரட்டை அள­வு­கோல்

அல்­லவா?

‘இசு­லா­மி­யர்­கள் அதி­கக் குழந்தை பெற்­றுக் கொள்­கி­றார்­கள்’ என்­ப­தை­யும் புள்­ளி­வி­ப­ரங்­க­ளு­டன் மார்க்­சிஸ்ட் கம்­யூ­னிஸ்ட் மாநில செயற்­குழு உறுப்­பி­னர் கன­க­ராஜ் மறுத்து எழுதி இருக்­கி­றார். ஆண்­டுக்கு ஆண்டு முஸ்­லிம் குழந்­தை­கள் பிறப்பு விகி­தம் குறைந்து வரு­வதை 1998க்கும் 2021 ஆம் ஆண்­டுக்­கும் இடை­யி­லான புள்­ளி­வி­ப­ரங்­களை வைத்து அவர் எழுதி இருக்­கி­றார். (தீக்­க­திர், 11.5.2024, பக்­கம் 5)

ஆனால் பா.ஜ.க.வுக்கு தேவை ஆதா­ரங்­கள் அல்ல, அவ­தூறு அர­சி­யல்­தான் தேவை. தாலி­யைப் பறித்து விடு­வார்­கள், எரு­மை­யைப் பறித்­து­வி­டு­வார்­கள் என்­ப­தைப் போலத்­தான் இது­வும்!

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வினேஷ் போகத் வென்றார்!

2025ல் தங்கம் விலை

முடிவுக்கு வருகிறதா?