பின்னடைவு
ஸ்டாலின் ஆட்சிதான் காமராஜர் ஆட்சி - ஈவிகேஎஸ் இளங்கோவன்.
போதை பொருள் ஒழிப்பு தீவிர நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு முதல்வர் உத்தரவு.
பின்னடைவு
மக்களவைத் தேர்தலில் பாஜக பின்னடைவைச் சந் திக்கும் என்று இந்தியப் பங்குச் சந்தைகள் மூலம் சூசகமா கத் தெரிகின்றது.
ஏப்ரல், மே மாதங் களில் வரலாறு காணாத உச்சத் தைத் தொட்ட சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி கடந்த வாரம் கடும் சரிவைச் சந்தித்தன. வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்களும் கடந்த சில நாட்க ளாக இந்திய சந்தைகளில் இருந்து பெருமளவில் வெளியேறி வரு கின்றன.
மே மாதம் முதல் 10 நாட்க ளில் ரூ.25,700 கோடி வெளிநாட்டு முதலீடுகள் திரும்பப் பெறப்பட்டுள்ளன.
ஏப்ரல் மற்றும் மே மாத தொடக்கத் தில் மோடி மூன்றாவது முறையாக பதவியேற்கும் வாய்ப்பு உள்ள தாக ஊடகங்களால் கருதப்பட்ட நிலையில் இந்திய சந்தைகள் பெரிய ஏற்றத்தை சந்தித்தன. ஏப் ரல் 10 அன்று சென்செக்ஸ் அதிக பட்சமாக 74,998.11 ஐ எட்டியது.
மே 3 அன்று நிஃப்டி 22,794.7 என்ற வர லாறு காணாத உச்சத்தை எட்டியது. சென்செக்ஸ் விரைவில் 75,000ஐத் தாண்டும் என்றும், நிஃப்டி 23,000ஐத் தாண்டும் என்றும் பரவ லாக நம்பப்பட்டது. இந்த நேரத் தில்தான், அம்பானியையும், அதா னியையும் பண மோசடி செய்பவர் கள் என்று மோடி குறிப்பிட்டார்.
மூன்று கட்ட தேர்தலுக்கு பின், பின்னடைவு ஏற்படுமோ என, பாஜக கவலை கொண்டுள்ளது. இது அடுத்த நாளே சந்தையில் எதிரொலித்தது. மே 9 அன்று, நிஃப்டி மற்றும் சென் செக்ஸ் 1000 புள்ளிகளுக்கு மேல் சரிந்தன.
தொடர்ந்து வந்த நாட்க ளில் சந்தை ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டது. பிப்ரவரி, மார்ச் மாதங்களில் இந்திய சந்தையில் அதிக முதலீடு செய்த வெளிநாட்டு நிறுவனங்கள், ஏப்ரல், மே மாதங்க ளில் முதலீடுகளை திரும்பப் பெறு வதில் மும்முரமாக உள்ளன.
பிப்ர வரியில் ரூ.1,539 கோடியும், மார்ச் மாதத்தில் ரூ.35,098 கோடியும் முத லீடு செய்த வெளிநாட்டு நிறுவனங் கள், ஏப்ரலில் ரூ.8,700 கோடியை திரும்பப் பெற்றுள்ளன. மே மாதம் முதல் 10 நாட்களில் மட்டும் இந்திய பங்குச் சந்தையில் இருந்து ரூ. 17,000 கோடியை வெளிநாட்டு முத லீட்டாளர்கள் திரும்பப் பெற்றுள்ளனர்.