அக்­னி­பத்’ ஆபத்து

 மோட்டார் வாகன சட்ட திருத்தம் அமல் தனியார் நிறுவனங்கள் மூலம் ஓட்டுநர் உரிமம்: 18 வயதுக்குட்பட்டவர்கள் வாகனம் ஓட்டினால் வாகனப் பதிவு ரத்து .

அரசுப் பணிக்கான தேர்வில் தமிழில் 40% மதிப்பெண் பெற வேண்டும் என்ற அரசாணை சரிதான்: -உயர் நீதிமன்றம் .
கேரளா, லட்சத்தீவு பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தொடங்கியது: தமிழ்நாட்டில் ஒரு சில இடங்களில் மழைக்கு வாய்ப்பு.
கடந்த நிதியாண்டில் வங்கி மோசடிகள் அதிகரிப்பு: -ரிசர்வ் வங்கி.
மிசோரமில் கனமழை, பாறை சரிவு: பலி எண்ணிக்கை 28ஆக உயர்வு.
நிரந்தர ஓய்வு ?

நாமக்கல் ,கருமண் செட்டிதோட்டம் பகுதியை சேர்ந்தவர் தனபால் (60). 

இவருக்கு சகுந்தலா என்ற மனைவியும், ரம்யா என்ற மகளும், சூரியகுமார் என்ற மகனும் உள்ளனர். 


தனபால் ஊட்டியில் உள்ள நீலகிரி மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் மாவட்ட குற்ற ஆவண காப்பக இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தார். 

இவருக்கு உயர் ரத்த அழுத்த பாதிப்பு இருந்ததால் தினமும் மாத்திரை சாப்பிட்டு வந்துள்ளார். நேற்று முன்தினம் மாலை 6 மணியளவில் ஊட்டி ஹில்பங்க் பகுதியில் உள்ள டீக்கடையில் தனபால் டீ குடித்துள்ளார்.


அப்போது, அவர் திடீரென மயங்கி விழுந்தார். அருகில் இருந்தவர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் ஊட்டி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 


அங்கு தனபாலை பரிசோதித்த மருத்துவர்கள் மாரடைப்பால் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதனை தொடர்ந்து உறவினர்களிடம் உடல் ஒப்படைக்கப்பட்டது. 


மாரடைப்பால் உயிரிழந்த இன்ஸ்பெக்டர் தனபால், இன்றுடன் பணி ஓய்வு பெற இருந்தது குறிப்பிடத்தக்கது.


அக்­னி­பத்’ ஆபத்து

பா.ஜ.க. அர­சால் கொண்டு வரப்­பட்ட ‘அக்­னி­பத்’ திட்­டம் இந்­திய நாட்­டின் பாது­காப்­புக்கே எத்­த­கைய அச்­சு­றுத்­த­லாக அமைந்து விட்­டது என்ற செய்­தி­கள் இப்­போ­து­தான் வெளி­வ­ரத் தொடங்கி இருக்­கி­றது.

வட­மா­நி­லங்­க­ளில் பா.ஜ.க. அர­சுக்கு கடு­மை­யான எதிர்ப்பை உரு­வாக்­கி­யது ‘அக்­னி­பத்’ திட்­டம் ஆகும். ‘இந்­தியா கூட்­டணி ஆட்சி அமைந்­த­தும்

அக்­னி­பத் திட்­டத்தை திரும்­பப் பெறு­வோம்’ என்று ராகுல் காந்தி, அகி­லேஷ், தேஜஸ்வீ ஆகி­யோர் பரப்­புரை செய்து வரு­கி­றார்­கள்.

‘’அக்­னி­பத் திட்­டம் இந்­திய ராணு­வத்­தை­யும் நாட்­டை­யும் காக்க வேண்­டும் என்று கனவு காணும் துணிச்­ச­லான இளை­ஞர்­களை அவ­ம­திக்­கும் செய­லா­கும். 

இது இந்­திய ராணு­வத்­தின் திட்­டம் அல்ல, நரேந்­தி­ர­மோ­டி­யின் அலு­வ­ல­கத்­தில் செய்­யப்­பட்ட திட்­டம் ஆகும். அது ராணு­வத்­தின் மீது திணிக்­கப்­பட்­டுள்­ளது. தியா­கி­களை வித்­தி­யா­ச­மாக நடத்த முடி­யாது. 

இந்­தியா கூட்­டணி அரசு அமைந்த உடன், இந்த திட்­டம் ரத்து செய்­யப்­ப­டும். பழைய நிரந்­தர ஆட்­சேர்ப்பு முறையை அமல்­ப­டுத்­து­வோம்” என்று ராகுல் காந்தி பரப்­புரை செய்து

வரு­கி­றார். இதற்கு அதி­கப்­ப­டி­யான ஆத­ரவு வட மாநில இளை­ஞர்­க­ளி­டம்

ஏற்­பட்­டுள்­ளது. இதைப் பார்த்து பல்டி அடித்து விட்­டார் உள்­துறை அமைச்­சர் அமித்ஷா.

ராணு­வக் கட்­ட­மைப்­புக்கு நிரந்­த­ர­மான வீரர்­களை அமர்த்­தா­மல்

நான்­காண்டு வேலை­யைப் போல அத­னைச் சிதைத்­தது பா.ஜ.க. ஆட்சி. ராணு­வத்­துக்கு வேலைக்கு ஆள் எடுப்­ப­வர்­கள் நான்­காண்டு காலம் மட்­டுமே பணி­யில் இருப்­பார்­கள் என்று ராணு­வக் கட்­ட­மைப்பை சிதைத்­தது பா.ஜ.க. ஆட்சி. 

இதற்கு வட மாநி­லங்­க­ளில் கடு­மை­யான எதிர்ப்பு கிளம்­பி­யது. ஆனா­லும் இரும்பு மனத்­தோடு அசைந்து கொடுக்­கா­மல் இருந்­தது பா.ஜ.க. அரசு.

கடந்த 2022 ஆம் ஆண்டு ‘அக்­னி­பத்’ திட்­டத்தை பா.ஜ.க. அரசு கொண்டு வந்­தது. இதன்­படி பதி­னே­ழரை வயது முதல் 21 வயது வரை உள்­ள­வர்­கள் நான்கு ஆண்­டு­க­ளுக்கு ராணு­வம், விமா­னப்­படை, கப்­பற்­படை ஆகிய முப்­ப­டை­ க­ளில் சேர்க்­கப்­ப­டு­வார்­கள். 

அவ்­வாறு சேர்க்­கப்­ப­டு­ப­வர்­க­ளில் 25 சத­வி­கி­தம் பேருக்கு மட்­டும்­தான் தகுதி அடிப்­ப­டை­யில் முப்­ப­டை­க­ளில் தொடர்ந்து

பணி­யாற்ற பணி நீட்­டிப்பு வழங்­கப்­ப­டும்.


 மற்­ற­வர்­கள் வீட்­டுக்கு அனுப்­பப்­­ படுவார்­கள். ராணுவ வீரர்­க­ளின் உள­வி­யலை இது பாதிக்­கும் செயல் ஆகும்.

நான்­காண்டு காலத்­தில் வேலை போய்­வி­டும் என்ற பல­வீ­ன­மான உணர்­வு­டன் இருப்­பார்­கள் ராணுவ வீரர்­கள். ராணு­வத்­தில் பயிற்சி பெற்று வந்­த­வர்­கள், அடுத்து வெளி­யில் வந்­த­பி­றகு என்ன மாதி­ரி­யான வேலை­க­ளைப் பார்க்க முடி­யும் என்ற கேள்­வி­யும் எழுந்­தது. 

இதை எல்­லாம் சுட்­டிக் காட்­டிய பிற­கும் அதனை மறு­ப­ரி­சீ­லனை செய்­ய­வில்லை பா.ஜ.க. அரசு.

இந்­நி­லை­யில் சிம்­லா­வில் பேசிய அமித்ஷா, ‘‘ அக்­னி­பத் திட்­டத்­தின் கீழ் தேர்வு செய்­யப்­ப­டும் 25 சத­வி­கித வீரர்­க­ளுக்கு 4 ஆண்டு பணிக்­கா­லம் முடிந்­த­தும் நிரந்­த­ரம் செய்­யப்­ப­டு­வார்­கள்.

 எஞ்­சிய 75 சத­வி­கி­தம் பேருக்கு மாநில அர­சுத் துறை­கள் மற்­றும் துணை ராணு­வப் படை­க­ளில் இடஒதுக்­கீடு வழங்­கப்­ப­டும்” என்று சொல்லி இருக்­கி­றார். அமித்­ஷா­வின் இந்த மன­மாற்­றம் அர­சி­யல் பின் வாங்­கல் ஆகும்.

அதே­நே­ரத்­தில் இன்­னொரு அதிர்ச்­சிக்­கு­ரிய தக­வ­லும் வெளி­யாகி உள்­ளது. 

ராணு­வத்­தில் சேர முன்­வ­ரு­ப­வர்­க­ளின் எண்­ணிக்கை தொடர்ந்து சரி­வைச் சந்­தித்து வரு­கி­றது என்­ப­து­தான் அந்த அதிர்ச்­சிக்­கு­ரிய தக­வல் ஆகும்.

இந்­திய ராணு­வத்­தில் வீரர்­க­ளின் சேர்க்கை எண்­ணிக்கை தொடர்ந்து சரி­வைச் சந்­தித்து வரு­வ­தா­க­வும் இது இரா­ணு­வத்­துக்கு கவலை ஏற்­ப­டுத்தி உள்­ள­தா­க­வும் செய்தி நிறு­வ­னங்­கள் செய்­தி­களை வெளி­யிட்டு வரு­கின்­றன.



‘‘இந்­திய ராணு­வத்­தில் வீரர்­க­ளின் சேர்க்கை எண்­ணிக்கை தொடர்ந்து சரிந்து வரு­கி­றது. இது ராணு­வத்­துக்கு கவ­லையை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது. 2030 ஆம் ஆண்­டுக்­குள் இந்த எண்­ணிக்கை உச்­சத்­தைத் தொடும்.

 இந்­தப் பிரச்­சி­னைக்கு உரிய நட­வ­டிக்கை மேற்­கொள்­ளா­விட்­டால், ராணு­வத்­தில் மொத்­தம் எத்­தனை வீரர்­கள் இருக்­க­வேண்­டுமோ, அந்த எண்­ணிக்­கையை எட்ட 10 ஆண்­டு­கள் ஆகும்” என்று அந்­தச் செய்­தி­கள் கூறு­கின்­றன. 

2026 ஆம் ஆண்டு வரை ராணு­வத்­தில் குறிப்­பிட்ட எண்­ணிக்­கை­யில் மட்­டும் ஆள்­சேர்க்கை மேற்­கொள்­ளத் திட்­ட­மி­டப்­பட்­டுள்­ள­தால், ராணுவ வீரர்­க­ளின்

எண்­ணிக்கை சரி­வது உள்­பட எதிர்­கா­லத்­தில் ஏற்­ப­டக் கூடிய பிரச்­சி­னை­க­ளைக் களை­யும் வழி­களை பாது­காப்­புப் படை­கள் இப்­போது ஆராய்ந்து வரு­வ­தா­க­வும் அந்­தச் செய்­தி­கள் தெரி­விக்­கின்­றன.

‘அக்­னி­பத்’ திட்­டத்­தின் கீழ் ஒப்­பந்த காலம் முடிந்த பிற­கும் தொடர்ந்து ராணு­வத்­தில் பணி­யாற்ற அனு­ம­திக்­கப்­ப­டும் வீரர்­க­ளின் சத­வி­கி­தத்தை 25ல் இருந்து 50 சத­வி­கி­த­மாக ஆக்க ஆலோ­ச­னை­கள் நடத்­தப்­பட்டு

வரு­கி­றது. ‘அக்­னி­பத்’ திட்­டத்­தில் மாற்­றங்­கள் கொண்டு வரப் போவ­தாக பாது­காப்­புத் துறை அமைச்­சர் ராஜ்­நாத் சிங்­கும் அறி­வித்­துள்­ளார்.

பா.ஜ.க. அர­சின் மிக மோச­மான முடிவு இந்­திய ராணு­வத்­தின்

செயல்­பாட்­டையே எந்­த­ள­வுக்கு முடக்கி இருக்­கி­றது என்­பதை இதன்

மூல­மாக அறி­ய­லாம். ராணு­வத்­தில் சேர்­வது என்­பது பல இந்­தி­யர்­க­ளின் கனவு ஆகும். அப்­ப­டிச் சேர்ந்­தால் 15 முதல் 25 ஆண்­டு­களை நாட்­டுக்­காக ஒப்­ப­டைத்து ராணுவ வீரர்­க­ளாக தலை­நி­மிர்ந்து அவர்­கள் செயல்­ப­டு­வார்­கள். 

லட்­சக்­க­ணக்­கான இளை­ஞர்­க­ளின் கன­வைச் சிதைக்­கும் வகை­யில் அதனை நான்­காண்டுக­ளாக பா.ஜ.க. அரசு குறைத்­தது. நிரந்­த­ரப் பணி

என்­பதை நான்­காண்டு பணி­யாக ஆக்­கி­ய­தும் ராணு­வத்­தில் சேர்­வ­தற்­கான ஆட்­கள் குறைந்து போனார்­கள்.

அர­சின் முடி­வுக்கு எதி­ராக வட­மா­நி­லங்­க­ளில் இளை­ஞர்­கள் போரா­டி­னார்­கள். பல இடங்­க­ளில் அது வன்­மு­றை­யாக மாறி­யது. 2022 சூன் 20 அன்று ‘அக்­னி­பத்’ திட்­டத்­துக்கு எதி­ராக பாரத் பந்த் என்ற பொது­வேலை நிறுத்­தம் நடத்­தப்­பட்­டது. வட இந்­தி­யா­வில் பாரத் பந்த் வெற்றி பெற்­றது.

‘எங்­க­ளது முடிவு இன்று சரி­யா­ன­தாக இல்லை என்று சிலர் கரு­த­லாம். ஆனால் காலப்­போக்­கில் இது­தான் தேசத்தை கட்டி எழுப்­பும்’ என்று பிர­த­மர் மோடி அப்­போது சொன்­னார். 

தேசத்­தைக் கட்டி எழுப்­ப­வில்லை, ராணு­வத்­தில் கீறல் விழ வைத்­துள்­ளது பா.ஜ.க. அர­சின் முடிவு.

 

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வினேஷ் போகத் வென்றார்!

2025ல் தங்கம் விலை

முடிவுக்கு வருகிறதா?