அரசியலமைப்புச் சட்டம்
இந்தி தான் நளினமான மொழி. தமிழெல்லாம் வேஸ்ட் என கிண்டல் செய்யும் சங்கி இளையராஜா.
தமிழ்நாட்ல இருந்தும் கலவரக்காரர்கள் மணிப்பூர்'லஊடுருவியிருக்காங்கவிஜயதரணி.(சங்கியானதற்காக உளறலா?)
தமிழ்நாட்டில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் 397 அரசுப் பள்ளிகளில் 100% மாணவர்கள் தேர்ச்சி .
மீண்டும் 6 ஆண்டு பதவிக்காலம் மீண்டும் ரஷ்ய அதிபராக புடின் நாளை பதவியேற்பு.
தமிழ்நாட்டில் பொறியியல் படிப்புகளுக்கான விண்ணப்பம் வழங்கல் தொடங்கியது.
ஏ.ஐ- ஏ.ஜி.ஐ வேறுபாடு என்ன?
ஏ.ஜி.ஐ என்பது ஒரு மனிதனால் செய்யக்கூடிய எந்தவொரு அறிவுசார் பணியையும் செய்யக்கூடிய ஒரு இயந்திரம் அல்லது மென்பொருள் ஆகும்.
எளிமையான வார்த்தைகளில், AGI மனித அறிவாற்றல் திறன்களைப் பின்பற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது, இது அறிமுகமில்லாத பணிகளைச் செய்ய அனுமதிக்கிறது, புதிய அனுபவங்களிலிருந்து கற்றுக்கொள்ளவும், புதிய வழிகளில் அதன் அறிவைப் பயன்படுத்தவும் அனுமதிக்கிறது.
மனிதர்கள் தங்கள் அனுபவங்கள் மூலம் கற்றுக்கொள்கிறார்கள் - பள்ளியில், வீட்டில் அல்லது வேறு இடங்களில்; மக்களுடன் பேசுவதன் மூலம் அல்லது விஷயங்களைக் கவனிப்பதன் மூலம்; புத்தகங்களைப் படிப்பதன் மூலம், தொலைக்காட்சியைப் பார்ப்பதன் மூலம், கட்டுரைகளைப் படிப்பதன் மூலம், மனித மூளையானது எந்த ஒரு சிக்கலையும் தீர்க்க அல்லது புதிய ஒன்றைக் கொண்டு வர முடிவெடுக்க (பெரும்பாலும் ஆழ் மனதில்) சேகரிக்கப்பட்ட தகவலைப் பயன்படுத்துகிறது.
AGI மூலம், ஆராய்ச்சியாளர்கள் இதையெல்லாம் செய்யக்கூடிய ஒரு மென்பொருள் அல்லது கணினியை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளனர் -
ஒரு மனித கணினி செய்யும் அனைத்தையும். நீங்கள் சொல்வதை எல்லாம் புரிந்து கொள்ளவும், நீங்கள் செய்யும் வழியில் புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்ளவும், தீர்வுகளைக் கண்டறிவதற்கான சிக்கல்களைப் பற்றி சிந்திக்கவும் கூடிய சூப்பர் புத்திசாலித்தனமான ரோபோ நண்பரைப் பற்றி சிந்தியுங்கள்.
ஏ.ஐ- ஏ.ஜி.ஐ வேறுபாடு
ஏ.ஐ- ஏ.ஜி.ஐ-ல் உள்ள பொதுவான வேறுபாடு narrow AI ஆகும். இது அவற்றின் நோக்கம் மற்றும் திறன்களில் வேறுபடுகிறது.
படத்தை அறிதல், மொழியாக்கம் அல்லது சதுரங்கம் போன்ற விளையாட்டுகளை விளையாடுவது போன்ற குறிப்பிட்ட பணிகளைச் செய்ய குறுகிய AI வடிவமைக்கப்பட்டுள்ளது—அதில் அது மனிதர்களை விஞ்சிவிடும், ஆனால் அது அதன் செட் அளவுருக்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
மறுபுறம், AGI ஒரு பரந்த, மிகவும் பொதுவான நுண்ணறிவு வடிவத்தை கற்பனை செய்கிறது, எந்தவொரு குறிப்பிட்ட பணியிலும் (மனிதர்களைப் போல) மட்டுப்படுத்தப்படவில்லை.
AGI இன் யோசனை முதன்முதலில் 20 ஆம் நூற்றாண்டில் ஆலன் டூரிங் எழுதிய ஒரு கட்டுரையில் தோன்றியது, இது கோட்பாட்டு கணினி அறிவியல் மற்றும் செயற்கை நுண்ணறிவின் தந்தை என்று பரவலாகக் கருதப்படுகிறது.
கோட்பாட்டில், AGI எண்ணற்ற நேர்மறையான தாக்கங்களைக் கொண்டுள்ளது. உதாரணமாக, சுகாதாரப் பராமரிப்பில், மனிதர்களின் திறன்களுக்கு அப்பாற்பட்ட பரந்த தரவுத்தொகுப்புகளை ஒருங்கிணைத்து பகுப்பாய்வு செய்வதன் மூலம் நோயறிதல், சிகிச்சை திட்டமிடல் மற்றும் தனிப்பயனாக்கப்பட்ட மருத்துவம் ஆகியவற்றை மறுவரையறை செய்யலாம்.
நிதி மற்றும் வணிகத்தில், AGI ஆனது பல்வேறு செயல்முறைகளை தானியக்கமாக்குகிறது மற்றும் ஒட்டுமொத்த முடிவெடுப்பதை மேம்படுத்துகிறது,
நிகழ்நேர பகுப்பாய்வு மற்றும் சந்தை கணிப்புகளை துல்லியத்துடன் வழங்குகிறது.
----------------------------------------
அரசியலமைப்புச் சட்டத்தை மதிக்காதவர்கள்!
பா.ஜ.க. மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அரசியலமைப்புச் சட்டத்தையே மாற்றி விடுவார்கள் என்று ‘இந்தியா’ கூட்டணித் தலைவர்கள் சொல்வதற்கு இதுவரை பதில் சொல்லாத பிரதமர் மோடி, இப்போதுதான் வாய் திறந்து பதில் சொல்லி இருக்கிறார்.
‘அம்பேத்கரால் உருவாக்கப்பட்ட அரசியலமைப்புச் சட்டத்தை யாராலும் மாற்ற முடியாது. அரசியலமைப்புச் சட்டத்தை மாற்ற நினைக்கவில்லை’ என்றும் பிரதமர் மோடி இப்போது சொல்லி இருக்கிறார்.
“400 இடங்களில் வெற்றி பெற வேண்டும் என்று பிரதமர் மோடி ஏன் சொல்கிறார் என்றால், அரசியலமைப்புச் சட்டத்தை நாம் மாற்றி அமைக்க வேண்டும் என்பதற்காகத்தான்” என்று பா.ஜ.க. எம்.பி.யும் முன்னாள் அமைச்சருமான அனந்த குமார் சொன்னார்.
‘இந்திய அரசியலமைப்புச் சட்டம் முழுமை பெறாத ஆவணம்’ என்று தமிழ்நாட்டு ஆளுநர் ரவியும் அவ்வப்போது சொல்லிக் கொண்டு இருக்கிறார்.
அரசியலமைப்புச் சட்டத்தை இவர்கள் மதிக்காதவர்கள் மட்டுமல்ல, மாற்ற நினைப்பவர்கள் என்பதை இவர்களது பழைய கால வரலாறுகளே சொல்லும்.
ஆர்.எஸ்.எஸ். தலைவர்களில் மிக மூத்தவரான குருஜி என அழைக்கப்படும் கோல்வார்க்கர், ‘ஆர்கனைசர்’ இதழில் (30.11.1949) என்ன எழுதினார் என்றால்...
“நமது அரசியல் அமைப்பில் பழம் பாரதத்தில் இருந்த தனித்துவமான சட்ட ஒழுங்குகள் பற்றி ஏதும் குறிப்பிடப்படவில்லை. மனுவின் நீதிச் சட்டங்கள் காலத்தால் ஸ்பார்ட்டாவின் லைக்கர்ஸ், பெர்ஷியாவின் சோலோன் என்பவர்களுக்கெல்லாம் முந்தியது.
இன்னும் மனுஸ்மிருதியில் கூறப்பட்டுள்ளவை மீது உலகமே புகழ் மாலை சூட்டுகிறது. அவை வெகு இயல்பாகக் கீழ்ப்படியும் தன்மையையும், ஒத்து வாழ்வதையும் உயர்த்திப் பிடிக்கின்றன.
ஆனால் நம் அரசியலமைப்பை எழுதிய மேதாவிகளுக்கு இந்த சிறப்பு பெரிதாகத் தெரியவில்லை” என்று சொன்னார் கோல்வார்க்கர்.
அதாவது மனுஸ்மிருதியை இந்திய நாட்டின் சட்டமாக ஆக்க வேண்டும் என்று சொன்னவர்கள் இவர்கள்.
மனுவில் ஒடுக்கப்பட்ட மக்கள் குறித்தும், பெண்கள் குறித்தும் உள்ள பகுதிகளை இங்கு விவரிக்கத் தேவையில்லை.
இந்திய அரசியலமைப்புச் சட்டம் குறித்த வெள்ளை அறிக்கை ஒன்றை 1993 ஆம் ஆண்டு சனவரி 1 ஆம் நாள் சங் பரிவார அமைப்புகள் வெளியிட்டன.
“நாட்டின் கலாச்சாரம், குணநலன்கள், சூழ்நிலைகள் ஆகிய எல்லாவற்றுக்கும் விரோதமான முறையில் தற்போதைய அரசியலமைப்புச் சட்டம் உள்ளது.
அது அன்னியக் கண்ணோட்டத்தின் அடிப்படையில் அமைந்துள்ளது” என்று அந்த அறிக்கை சொன்னது. “இந்த அரசியலமைப்புச் சட்டம் விளைவித்துள்ள தீங்குடன் ஒப்பிடும் போது 200 ஆண்டு பிரிட்டிஷ் ஆட்சி நாட்டுக்கு ஏற்படுத்திய சேதாரங்கள் மிகவும் குறைவானதே” என்று அந்த அறிக்கை சொன்னது.
பட்டியலின, பழங்குடியின, பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீட்டை இந்த அறிக்கை எதிர்க்கிறது. சிறுபான்மையினர் நலனைப் புறக்கணிக்கிறது.இத்தகைய சட்டத்தைதான் அவர்கள் புதிய அரசியலமைப்புச் சட்டம் என்கிறார்கள்.
இதைத் தொடர்ந்து அன்றைய ஆர்.எஸ்.எஸ். தலைவராக இருந்த ராஜேந்திர சிங், “இந்தியா பன்முகத் தன்மை கொண்டது என்று அரசியல் சட்டம் சொல்கிறது.
நமது கலாச்சாரம் பன்முகத்தன்மை கொண்டது அல்ல. இந்த நாட்டின் உயர் பண்புகளுக்கும் அறிவுத் திறனுக்கும் ஏற்ற ஒரு அரசியலமைப்புச் சட்டம் எதிர்காலத்தில் உருவாக்கப்பட வேண்டும்” என்று சொன்னார். இதையே அன்றைய பா.ஜ.க. தலைவரான முரளி மனோகர் ஜோஷியும் சொன்னார்.
‘அரசியலமைப்புச் சட்டத்தை புதிதாகப் பரிசீலிக்க வேண்டும்’ என்று ஆந்திர மாநிலம் அனந்தபூர் பொதுக்கூட்டத்தில் வலியுறுத்தினார் ஜோஷி.
“மனு தர்ம சாஸ்திரத்தை அடிப்படையாகக் கொண்ட புதிய அரசியலமைப்புச் சட்டம் வகுக்கப்பட வேண்டும்” என்று ஆர்.எஸ்.எஸ். தலைவர்களில் ஒருவரான சுதர்சன் தெளிவாகவே சொன்னார்.
2017 ஆம் ஆண்டு ஹைதராபாத்தில் நடந்த இந்திய வழக்கறிஞர்கள் கூட்டத்தில் பேசிய இன்றைய ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத், “நமது அரசியலமைப்புச் சட்டம், அயல்நாட்டுத் தரவுகளை வைத்து எழுதப்பட்டது என்பதை நாம் முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.
நமது அரசியலமைப்பு, நமது நாட்டின் விழுமியங்களைக் கொண்டே அமைய வேண்டும்” என்று சொல்லி இருந்தார்.
இந்தியாவின் அரசியல் நிர்ணய சபையானது மூவர்ணக் கொடியை இந்தியாவின் தேசியக் கொடியாக அறிவித்த போது ஆர்.எஸ்.எஸ். அமைப்பு அதனை ஏற்கவில்லை.
இந்தியாவில் சுதந்திரப் போராட்டம் நடைபெற்ற போது வேடிக்கை பார்த்தவர்கள் இவர்கள். இந்துக்களும் இசுலாமியர்களும் இணைந்து பிரிட்டிஷாருக்கு எதிராகப் போராடுவதை - இது போன்ற கூட்டு தேசிய நடவடிக்கைகளை எதிர்த்தவர்கள் இவர்கள்.‘வேர் வரை செல்லும் வேறுபாடுகள் கொண்ட இனங்களும் கலாச்சாரங்களும் முழுமையாக ஒன்றிணைக்கப்படுவது முற்றிலும் இயலாத ஒன்று என்பதை ஜெர்மனி நமக்குக் காட்டியுள்ளது” என்று கோல்வார்க்கர் சொன்னது இதனைத் தான்.
ஜனநாயகம் என்பதையே மேலை நாட்டுக் கருத்தாக்கம் என்று நினைக்கக் கூடியவர்கள் இவர்கள். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களாட்சி, நாடாளுமன்ற உறுப்பினர்களது சிந்தனையில் உருவாக்கப்படும் சட்டங்கள் ஆகியவற்றுக்கு மரியாதை தராமல் ‘ஏகசாலக் அனுவர்தித்வா’ என்று சொல்லப்படும் ஒற்றைத் தலைவரின் அதிகாரத்துக்கு கேள்விக்கு இடமின்றி அடிபணியும் கொள்கையை அரசியல் – - ஆட்சியியல் கோட்பாடாக மாற்றுவதுதான் இவர்களது நடைமுறையாகும்.
இன்றைக்கு பா.ஜ.க. அப்படித்தான் இருக்கிறது. மோடிக்கு அடிபணிந்து கிடக்கிறது ஜனநாயகமற்று. இதேபோல இந்திய நிர்வாகத்தையும் மாற்ற நினைக்கிறார்கள். மூன்றாவது முறை ஆட்சிக்கு வந்தால் இதனைத்தான் செய்வார்கள்.
மொழிவழி மாநிலங்களைக் கலைத்து விடுவார்கள். மத்தியில் ஒரே ஒரு ஆட்சி இருக்கும். இந்தியாவை பல்வேறு ‘சனபாதங்க’ளாகப் பிரித்துவிடுவார்கள்.
சமஸ்கிருதம் ஆட்சி மொழியாக அறிவிக்கப்பட்டு விடும். அனைத்து தேசிய இனங்களின் மொழியும், பண்பாடும் அழிக்கப்பட்டு விடும்.இத்தகைய அழிவை உருவாக்கத் துடிக்கிறது பா.ஜ.க.. ஆனால் அது நடக்காது.
அண்ணல் அம்பேத்கரால் உருவாக்கப்பட்ட அரசியலமைப்புச் சட்டம் வலிமையானது, அதனை யாராலும் மாற்ற முடியாது என்பதை இந்திய நாட்டு மக்கள் இந்தத் தேர்தலில் மெய்ப்பிப்பார்கள்.
சட்டத்தை மாற்ற நினைப்பவர்களை மாற்றுவார்கள் மக்கள்!