பார'தீய' (தேர்தல் )ஆணையம்?







பார'தீய' தேர்தல் ஆணையம்?

தேர்தல் ஆணையர்களே, தற்போதைய தேர்தல் ஆணைய அதிகாரிகளை விமர்சிக்கும் அளவிற்கு, தேர்தலின் போது பல்வேறு வகையான அட்டூழியங்கள் தலைவிரித்து ஆடுகின்றன.

குழந்தைகளாலும், வில்லத்தனமான ஆட்களாலும், வாக்கு இயந்திரங்கள், விளையாட்டுப் பொறிகளாக கையாளப்படுகின்றன.

ஆளும் கட்சி என்ற ஒற்றை காரணத்திற்காக, தாங்கள் என்ன வேண்டுமானாலும் செய்து விடலாம் என்ற மனநிலையை எட்டியுள்ளனர் பா.ஜ.க.வினர்.

அதன் ஒரு பகுதியாகவே, பா.ஜ.க நிர்வாகிகள், தனது சிறுவயது மகன்களை, வாக்குச்சாவடிக்குள் கூட்டி சென்று வாக்களிக்க வைப்பது; 16 வயது சிறுவன் தானாகவே மற்றவர் அடையாளத்தை எடுத்துக்கொண்டு, பா.ஜ.க வேட்பாளருக்கு 8 முறை கள்ளத்தனமாக வாக்களிப்பது;

வாக்களிக்க உதவுகிறேன் என இயலாதவர்களை கூட்டிச்சென்று, வாக்காளர்கள் விருப்பத்திற்கு மாற்றாக பா.ஜ.க.விற்கு வாக்களிப்பது; வாக்குச்சாவடிகளை சூறையாடுவது; சிறுபான்மையினர்களை வாக்களிக்க விடாமல் தடுப்பது; வாக்கு இயந்திரங்களுக்கு வழிபாடு செய்வது
 என ஜனநாயகத்தை சீரழிக்கின்ற அனைத்து செயல்களும் ஒன்றன் பின் ஒன்றாக அம்பலப்பட்டு வருகிறது.

பா.ஜ.க.விற்கு எதிராக ஆதாரங்கள் குவிந்தாலும், நடவடிக்கைகளில் மந்தமே : தேர்தல் ஆணையத்தின் ஏளன போக்கு!

இவை அம்பலப்பட காரணமாய் இருப்பது கூட, குற்றம் செய்தவர்களாக தான் இருக்கின்றனர். ஏனென்றால், குற்றம் செய்து சிக்கியவர்கள் அனைவரும், தாங்கள் செய்ததை தாங்களே காணொளியாக படம் பிடித்து, இணையத்தில் பீத்திக் கொள்ள நினைத்தவர்கள்.

இதனால், விளம்பரப்படாத குற்றங்கள் எத்தனை அரங்கேறியிருக்கிறதோ என்ற கேள்வியும் வெகுவாக பெருகத்தொடங்கியுள்ளது.

அவ்வாறு கேள்விகள் பெருகும் வகையில் தான், தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைகளும் அமைந்துள்ளன. அதற்கு ஒன்றிய பா.ஜ.க அரசின் அதிகாரத்துவ அழுத்தமும் பல வகையில் காரணம்.

12ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் எழுதும், நீட் நுழைவுத் தேர்விற்கே, சோதனை என்கிற வகையில், பல அரக்கத்தனங்கள் காணப்படுகிற நாட்டில்,

தேர்தலின் போது, 18 வயது கூட நிறைவுறாத பலரை வாக்களிக்க வாக்குச்சாவடிக்குள் அனுமதிப்பது, கடும் பேச்சுப்பொருளாகியுள்ளது.

இதற்கு, தி.மு.க, காங்கிரஸ், சி.பி.ஐ.எம், சி.பி.ஐ, திரிணாமுல் காங்கிரஸ், சமாஜ்வாதி, இராஷ்டிரிய ஜனதா தளம், ஆம் ஆத்மி, ஜம்மு - காஷ்மீர் மக்கள் ஜனநாயக கட்சி என அதிகாரத்துவம் வாய்ந்த கட்சிகள் கண்டனம் தெரிவித்து வந்தாலும்,

ஒன்றியத்தில் ஆட்சிபுரிந்து வரும் பா.ஜ.க, ஒற்றை நேரத்தில் பல சிக்கல்களை உண்டாக்கி, ஒரு சிக்கலுக்கு, மற்றொரு சிக்கல் என தீர்வு கண்டு வருவதும், அவை அனைத்திற்கும் தேர்தல் ஆணையம் மறைமுகமாக துணை போவதும் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது.

இதற்கு இன்று (20.05.24) நடந்து முடிந்துள்ள, 5ஆம் கட்ட மக்களவை தேர்தல் வாக்குப்பதிவும் விலக்கல்ல என்பது, உத்தரப் பிரதேசத்தில் அரங்கேறிய சிக்கல்கள் வழி உறுதியாகியுள்ளது.

அவ்வகையில், 5ஆம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது முதலே, சிக்கல்களும் தொடங்கின. அதற்கு எடுத்துக்காட்டுகளே,

காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி போட்டியிடும் உத்தரப் பிரதேசத்தின் ரேபரேலி தொகுதியில், சுமார் 43 வாக்கு இயந்திரங்களில் கோளாறு ஏற்பட்டு, 3 மணிநேரத்திற்கும் மேல் மக்கள் கடும் வெயிலில் காத்திருக்க வேண்டிய சூழல் உருவாகியது.

அதே தொகுதியில் அமைந்துள்ள 312ஆவது வாக்குச்சாவடியில் பா.ஜ.க.வினர் கும்பலாக சென்று, காங்கிரஸ் வாக்குச்சாவடி முகவரை வெளியேற்றிய புகாரும் எழுந்தது.

உத்தரப் பிரதேசத்தின் பதேபூர் பகுதியில், சைக்கிள் சின்னத்திற்கு வாக்களிக்க சென்றபோது, தனக்கு உதவுவதாக கூறி, பா.ஜ.க சின்னத்தில் வாக்களித்ததாக பெண் வாக்காளர் ஒருவர் புகார் அளித்துள்ளார்.

மும்பையில், 2000 வாக்காளர்களுக்கு ஒதுக்கப்பட்ட வாக்குச்சாவடியில் ஒரே ஒரு வாக்கு இயந்திரமே இருந்ததால், 2 - 3 மணிநேரம் வரிசையில் காத்திருந்து வாக்களிக்க வேண்டிய சூழல் உருவானது
 ஆகியவை.

இந்த குளறுபடிகள் அனைத்தும், இந்தியா கூட்டணிக்கு ஆதரவு அதிகமுள்ள இடங்களில் இடம்பெற்றதும் குறிப்பிடத்தக்கது. 

இதனால், தனக்கு சாதகமான பல செயல்களை செய்து வரும் பா.ஜ.க.விற்கு கண்டனங்கள் குவிந்து வருவதோடு, தேர்தல் ஆணையத்திற்கும் அதற்கிணையான கண்டனங்கள் குவிந்து வருகின்றன.

--------------------------------------------------

கார்டியன் கட்டுரை.

இங்­கி­லாந்­தில் இருந்து வெளி­யா­கும் ‘கார்­டி­யன்’ இதழ் அமித்­ஷா­விற்கு மக்­களை பய­மு­றுத்­து­வது பிடிக்­கும் என­வும் மோடி­யின் வல­து­க­ர­மாக உள்ள அவர் இந்­தி­யாவை எவ்­வாறு கொண்டு செல்­கி­றார் என­வும் கட்­டுரை ஒன்றை வெளி­யிட்­டுள்­ளது.


அதுல் தேவ் என்­ப­வர் எழு­தி­யுள்ள அந்த கட்­டு­ரை­ யில் மிகப்­பெ­ரும் தாதா­வாக இருந்த சோரா­பு­தீன் மற்­றும் அவ­ரது மனை­வியை கொலை செய்த வழக்­கில் குற்­றம் சாட்­டப்­பட்ட காவல்­துறை அதி­கா­ரி­க­ளு­டன் அமித்ஷா தொடர்­பில் இருந்­தார் என­வும் அவர்­களை கடத்­தி­யது முதல் கொலை­யான நாள்­வரை, கொலை­யில் தொடர்­­ புடைய காவல் அதி­காரி ஒரு­வ­ரு­டன் அமித்ஷா தொலை­பே­சி­யில் தொடர்ந்து உரையாட­லில் இருந்­துள்­ளார் என சி.பி.ஐ. சமர்ப்­பித்த குற்­றப் பத்­தி­ரி­கை­யை­யும் அந்த கட்­டு­ரை­யில் குறிப்­பிட்­டுள்ளது.

மேலும் அமித்ஷா 40 ஆண்­டு­க­ளாக மோடி­யின் நம்­பிக்­கைக்­கு­ரிய நப­ராக இருப்­ப­தோடு மோடி­யின் வலது கர­மா­க­வும் அனைத்­தை­யும் கண்காணிக்­கும் நப­ரா­க­வும் உள்­ளார். கட்சி உத்­த­ர­வு­களை அமல்­ப­டுத்­தும் நப­ராகவும், அவ­ரது உத்­த­ரவை அமல்படுத்­து­வ­தற்­காக ராணு­வம் போல அக்­கட்­சி­யின் தொண்­டர்­க­ளும் உள்­ள­னர். 2014 இல் ஆட்சி அமைத்­த­வு­டன் அவர் மீது இருந்த அனைத்து வழக்­கு­க­ளை­யும் அர­சி­யல் உள்­நோக்­கம் கொண்­டது என பா.ஜ.க. தள்­ளு­படி செய்­தது.

மேலும் தீவிர இந்­துத்­துவா அமைப்­பாக உள்ள ஆர்.­எஸ்.­எஸ்.–பா.ஜ.க. வின் இந்­துத்­துவா திட்­டங்­களை விரிவுபடுத்­தி­ய­ தி­லும், இந்­திய அர­சி­யல் சூழலை மாற்­றி­ய­தி­லும் அமித்ஷா வின் பங்கு முக்­கி­ய­மா­னது என குறிப்­பிட்­டுள்­ளார். மேலும் அரசை விமர்­சிக் ­கும் அனை­வ­ரும் அமித்­ஷா­வின் அர­சி­யல் செல்­வாக்கு மூலம் மிரட்­டப்­படு கின்­ற­னர் என்­றும் அவ­ரால் அனைவரும் தொடர்ந்து கண்­கா­ணிக்­கப்பட்டு வரு­கின்­ற­னர் என்­றும் ‘கார்­டி­யன்’ கட்­டு­ரை­யில் குறிப்­­பிடப்­பட்­டுள்­ளது.

கூட்­டணி அமைப்­பது, எதிர்க்­கட்­சி­க­ளின் வேட்­பா­ளர்­கள், உறுப்­பி­னர்­களை விலைக்கு வாங்கி எதிர்க்­கட்­சியை பல­வீ­னப்­ப­டுத்­து­வது என தந்­தி­ர­மா­கச் செயல்­­படு­வ­தில் அவர் முக்­கிய

நப­ராக உள்­ளார் என­வும் கூறப்­பட்­டுள்­ளது.

கட்சி நிதி!

குறிப்­பாக இதற்கு இரு உதா­ர­ணங்­க­ளை­யும் அந்த கட்­டு­ரை­யில் அதுல் தேவ் குறிப்­பிட்­டுள்­ளார். அதா­வது கடந்த 10 ஆண்­டு­க­ளில் மோடி 2019 ஆம் ஆண்டு மட்­டும் ஒரு முறை செய்­தி­யா­ளர் சந்­திப்பு நடத்­தி­யுள்­ளார். அதில் அவரை நோக்கி வந்த கேள்­வி­கள் பல­வற்­றுக்கு பெரி­தாக அலட்­டிக்­கொள்­ளா­மல் அமித்ஷா பக்­கம் திருப்­பி­ய­ தை­யும் அந்த கேள்­வி­களை அமித்ஷா கையாண்டு பதில் கொடுத்­த­தை­யும் குறிப்­பி­டு­கி­றார்.

மற்­றொன்று கார்ப்­ப­ரேட்­டு­க­ளுக்­காக அர­சு­டன் பேரம் பேசும் நபர் ஒரு­வர், மத்­திய அமைச்­சர் ஒரு­வ­ரி­டம் அவர்­க­ளது கட்­சிக்கு நிதி கொடுத்­த­தா­க­வும், அப்­போது அந்த அமைச்­சர் பணத்­தில் ஒரு பகு­தியை யாரும் கண்­டு­கொள்ள மாட்­டார்­கள் என எடுத்து வைத்­துக் கொண்­ட­தா­க­வும் சிறிது நேரத்­தி­லேயே அமித்ஷா விடம் இருந்து அழைப்­பு­வர உட­ன­டி­யாக அந்த பேரம் பேசும் நப­ரி­டமே பணத்தை கொடுத்து அதை­யும் கட்சி வங்­கிக்­க­ணக்­கில் செலுத்­தக் கூறி­ய­தா­க­வும் பெயர் சொல்ல விரும்­பாத ஒரு­வர் தெரி­வித்­ததை கட்­டு­ரை­யில் தேவ் குறிப்­பிட்­டுள்­ளார்.

2019 ஆம் ஆண்டு இரண்­டா­வது முறை மோடி ஆட்­சிக்கு வந்த பிறகு இந்­தி­யா­வின் சூழல் குறித்து சர்­வ­தேச மனித உரிமை அமைப்­பு­கள், ஊட­கங்­கள் உள்­ளிட்­டவை கவ­லைப் படத்­து­வங்­கின. இந்­தி­யா­வின் அந்த கவ­லை­க­ளுக்கு கார­ணமே அமித்ஷா தான் என்­றும் தெரி­வித்­துள்­ளார் கட்­டு­ரை­யா­ளர். 2021 ஆம் ஆண்டு ஒரு பிர­பல பத்­தி­ரிகை நிறு­வ­னம் அமித்­ஷா­வுக்கு எதி­ரான அனைத்து ஆதா­ரங்­க­ளை­யும் தனது பத்­தி­ரி­கை­யின் முகப்­பில் பட்­டி­ய­லிட்டு இன்­னும் இவர் ஏன் சுதந்­தி­ர­மாக இரு­கி­றார் என கேள்வி கேட்டு இருந்­தது. இன்று அவ்­வாறு எந்த பத்­தி­ரி­கை­யா­வது கேள்வி கேட்க முடி­யுமா என­வும் கேள்வி எழுப்­பி­யுள்­ளார்.

இந்­தி­யா­வில் பத்­தி­ரி­கை­யா­ள­ராக இருப்­ப­வ­ரால் ஒரு எல்­லைக்கு மேல் பணி­யாற்ற முடி­யாது. இது­வரை இந்­திய ஊட­கங்­கள் சந்­திக்­காத நெருக்­க­டியை இன்று சந்­திக்­கின்­றன என­வும் அவர் குறிப்­பிட்­டுள்­ ளார்.

மேலும் சில உச்­ச­நீ­தி­மன்ற நீதி­ப­தி­க­ளுக்கே உச்­ச­நீ­தி­மன்­றத்­தில் என்ன நடக்­கி­றது என தெரி­வ­தில்லை என பதிவு செய்­துள்­ளார்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?