தேர்தலை கேலிக்கூத்தாக்கும்


நாடாளுமன்ற தேர்தல் குறித்து பொதுவெளியில் நேருக்கு நேர் விவாதத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி மற்றும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஆகியோருக்கு உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி எம்பி லோகூர்முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி ஏபி ஷா மற்றும் மூத்த பத்திரிகையாளர் இந்து ராம் ஆகியோர் அழைப்பு.


ஆபத்தான 23 நாய் இனங்களுக்கு தடை விதித்து தமிழக அரசு உத்தரவு.


இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்ததும், வரும் ஆகஸ்ட் 15-ம் தேதி சுதந்திர தினத்திலிருந்து 30 லட்சம் அரசு காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும்!- ராகுல் காந்தி.





தேர்தலை கேலிக்கூத்தாக்கும்

 சங்கிகள்!

நாடு முழுவதும் தற்போது நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்று வரும் நிலையில், முதல் 3 கட்டங்கள் நிறைவடைந்து விட்டது. மீதமிருக்கும் தொகுதிகளுக்கு இன்னும் 4 கட்டங்களாக தேர்தல் நடைபெறவுள்ளது.

 இதனை முன்னிட்டு அனைத்து கட்சிகளுக்கு தேர்தல் பிரசாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

 இந்த சூழலில் கடந்த மே 7-ம் தேதி நடைபெற்ற 3-ம் கட்ட வாக்குப்பதிவில் பாஜக பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளது அம்பலமாகியுள்ளது.

நாடாளுமன்ற தேர்தல் தொடங்குவதற்கு முன்பு இருந்தே பாஜக முறைகேடுகளில் ஈடுபட்டு வருகிறது. இதற்கு தேர்தல் ஆணையமும் எதுவும் செய்யாமல் இருந்து வருகிறது.

 மேலும் தேர்தல் பிரசாரங்களில் கூட விதிமுறைகளை மீறி செய்லபடும் மோடி உள்ளிட்ட பாஜகவினர் மீது தேர்தல் ஆணையம் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் வேடிக்கை பார்த்து வருகிறது.

எல்லை மீறும் பாஜக : குழந்தையை வாக்களிக்க வைத்த பாஜக நிர்வாகி - வேடிக்கை பார்க்கும் தேர்தல் ஆணையம் ?

அந்த வகையில் தற்போது பெரிய ஒரு குற்றச்சம்பவம் அரங்கேறியிருக்கிறது. இதற்கும் தேர்தல் ஆணையம் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் இருக்கிறது. பாஜக நிர்வாகியின் மகன் கள்ள ஓட்டு போடுவது தொடர்பான வீடியோ வெளியான நிலையில், தற்போது மற்றொரு பாஜக நிர்வாகி வினய் மெஹார் தனது குழந்தையை கூட்டி சென்று வாக்களிக்க வைத்துள்ளார்.

மத்திய பிரதேசத்தின் போபால் தொகுதியில் உள்ள வாக்குச்சாவடி ஒன்றில் , மாவட்ட பஞ்சாயத்து உறுப்பினர் ஒருவர் தனது சிறு வயது மகனை வாக்குச்சாவடி மையத்திற்குள் அழைத்து சென்றுள்ளார்.

 மேலும் அந்த சிறுவனை வாக்குப்பதிவு இயந்திரத்தில் வாக்களிக்கவும் வைத்து, அதனை வீடியோவாகவும் பதிவு செய்துள்ளார்.

எல்லை மீறும் பாஜக : குழந்தையை வாக்களிக்க வைத்த பாஜக நிர்வாகி - வேடிக்கை பார்க்கும் தேர்தல் ஆணையம் ?

அதோடு இந்த வீடியோவை தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தற்போது இந்த வீடியோ வைரலாகி பலர் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. பலரும் இந்த நிகழ்வுக்கு தங்கள் கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர்.

 மேலும் சிறு குழந்தையை வாக்குச்சாவடி மையத்திற்குள் அதிகாரிகள் எப்படி அனுமதித்தார்கள் என்றும் கேள்விகள் எழுந்து வருகிறது.

கள்ள ஓட்டுப்போட்ட பா.ஜ.க நிர்வாகி மகன்
கள்ள ஓட்டுப்போட்ட பா.ஜ.க நிர்வாகி மகன்

தொடர்ந்து இதுபோன்ற சம்பவங்கள் பாஜக ஆளும் மாநிலங்களில் அரங்கேறி வருகிறது. இதற்கு அதிகாரிகளும் உறுதுணையாக இருக்கின்றனர். ஏற்கனவே குஜராத்தின் தாக்கோட் தொகுதிக்குட்பட்ட வாக்குசாவடி ஒன்றில், பாஜக நிர்வாகி ஒருவரின் மகன் கள்ள ஓட்டு போட்டு, அதனை வீடியோவாக பதிவு செய்து வெளியிட்டார்.

இந்த விவகாரத்தில் 2 பேர் கைது செய்யப்பட்டு, விசாரணை மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், தற்போது மேலும் ஒரு பாஜக நிர்வாகி தனது சிறுவயது மகனை அழைத்து வாக்களிக்க வைத்துள்ளது பெரும் கண்டனங்களுக்கு உள்ளாகியுள்ளது. இது போன்ற சம்பவங்கள் பாஜக ஆளும் மாநிலங்களில் மிகவும் சாதாரணமாக அரங்கேறி வருவது, ஜனநாயகத்தை கேள்விக்குள்ளாக்கியுள்ளது.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?