காமக் கொடூரனை தண்டிக்க வேண்டும்!
காரியாபட்டி ,கல் குவாரி வெடி விபத்து ஒருவர் கைது.
இஸ்ரேல் உடனான உறவை முறித்துக் கொள்வதாக கொலம்பிய அதிபர் குஸ்டாவோ பெட்ரோ அறிவிப்பு.
இந்தோனேசியாவில் எரிமலை வெடிப்பு: பள்ளிகள், விமான நிலையங்கள் மூடல்.
பாக்கிஸ்தானில் வரி ஏய்ப்பு செய்த 5லட்சம் பேரின் சிம்கார்டு முடக்கம்.
சீனாவில் மலைப்பாதை சரிந்து 24 பேர் பலி.
அதிமுக ஆட்சியில் காவிரி நீரை விவசாயத்திற்காக எடுக்க அதிக திறன் கொண்ட மின்மோட்டார்களை இபிஎஸ், குடும்பத்திற்கு வழங்கச் சிறப்பு அனுமதி.அரசாணையைநீக்கம்செய்யக்கோரி வழக்கு.
கொடைக்கானலில் 5வது நாளாக எரியும் காட்டுத்தீ.500 ஏக்கர் வனப்பகுதி நாசம்.
காமக் கொடூரனை தண்டிக்க வேண்டும்!
கர்நாடகாவில் நாடாளுமன்ற உறுப்பினர் பிரஜ்வால் ரேவண்ணா மீதான பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுகள் வழக்கமான sex scandal வகையானவை அல்ல.
ஒரு சைக்கோ மிக உயர் அதிகாரத்தில் இருந்துகொண்டு நடத்திய பாலியல் வன்முறை வெறியாட்டம் அது என தெரிய வருகிறது.
பிரஜ்வால் ரேவண்ணா முன்னாள் பிரதமர் தேவகவுடா பேரன். கர்நாடக முன்னாள் முதலமைச்சர் எச். டி. குமாரசாமி சகோதரர் மகன். முன்னாள் அமைச்சர் எச். டி. ரேவண்ணா மகன். இந்நாள் எம்.பி.
தன்னிடம் உதவி கேட்டு வந்தப் பெண்கள் மட்டுமல்லாமல், அவன் கண்பார்வையில் பட்ட பெண்கள் எல்லாம் அந்த மிருகத்தின் இரையாகியுள்ளனர். ஆக்கப்பட்டுள்ளனர்.
அதையெல்லாம் வீடியோ பதிவுசெய்து வைத்ததுதான் அவனுடைய மன வக்கிரத்தின் உச்சம்.
தனது 68 வயது வேலைக்காரம்மாவை கூட அந்த மிருகம் விட்டு வைக்கவில்லை. தன்னிடம் சிக்கும் பெண்களை வீடியோ பதிவு எடுத்து அதைக் காட்டி மிரட்டி அந்த வீட்டில் உள்ள சிறு பெண்களைக் கூட வரவழைத்துள்ளார்.
அந்த வீடியோ பதிவு செய்யும் இச்சை மட்டும் இல்லாமல் இருந்திருந்தால் இன்றுவரை அந்த மிருகம் தனது வேட்டையைத் தொடர்ந்து நடத்திக் கொண்டுதான் இருக்கும் எனும் நினைப்பே மனதை நடுங்கச் செய்கிறது.
இந்த செய்தி வெளியே வந்து சில மாதங்கள் ஆகிறதாம்! பா.ஜ.க.வின் மாவட்டத் தலைவர் அவரது கட்சித் தலைமைக்கு கடிதம் எழுதி எச்சரித்தும், இவருக்கு மீண்டும் சீட் தந்துள்ளனர். இவருக்காக மோடியே வந்து பிரச்சாரமும் செய்துள்ளார்.
மேலும், இச்செய்தி முற்றி கைது செய்யப்படலாம் எனும் நிலை வரும்போது, பா.ஜ.க.வின் கூட்டாளி என்பதால் நள்ளிரவில் நாட்டை விட்டு தப்பியோட அனுமதிக்கப் பட்டுள்ளார்.
இது சாதாரணக் குற்றச்செயல் அல்ல! ஒரு சைக்கோவின் படுபாதக செயல்கள். இவருக்கு இரையானவர்கள் அனைவரும் மிக எளிய குடும்பத்துப் பெண்கள். குரலற்றவர்கள். சமூகத்தில் அடையாளமற்றவர்கள்.
வழக்கமான குற்றவிசாரணை நடைமுறைப்படி விசாரித்தால் பாதிக்கப்பட்டப் பெண்கள் பலர் தத்தமது உயிரையே கூட மாய்த்துக் கொள்ளக்கூடும். பல நூறு பெண்களின் குடும்பங்கள் சீரழிந்து நிற்கும்.
எனவே, இதை உச்சநீதிமன்றத்தின் நேரடிப் பார்வையில் வெளிமாநில அதிகாரிகளைக் கொண்ட அதி உயர்மட்ட விசாரணைக் குழுவை அமைத்து விசாரித்திட வேண்டும்.
இவருடைய தந்தையும் இதே போன்ற பாலியல் குற்றத்தொடர்புகள் உள்ளவர் எனும் தகவல்கள் இப்போது வெளிவருகிறது. உடனடியாக அவரும் கைது செய்யப்பட வேண்டும்.
தாங்கள் மிக எளிதில் அணுகும்படியாக அரசியல்வாதிகள் இருக்க வேண்டும் என மக்கள் விரும்புகின்றனர்.
ஆனால், அரசியல்வாதிகளைக் கண்டாலே பதறி ஓடும்படியான சம்பவங்களே அதிகம் மக்களின் பார்வைக்கு வருகிறது.
எளிய மக்களின் கோபம் அளப்பரிய சக்தி கொண்டது. அவர்கள் சட்டத்தை கையில் எடுத்தால் எந்த சக்தியும் அவர்களை தடுத்து நிறுத்திட முடியாது.
அந்த நிலைக்கு போகாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது அரசுகளின் கடமை. நீதிமன்றங்களின் பொறுப்பு.