முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கறுப்புபண டெம்போ.

 

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில நிர்வாகக் குழு உறுப்பினரும், நாகபட்டினம் நாடாளுமன்ற உறுப்பினருமான தோழர். எம்செல்வராசு, இன்று (13.05.2024) அதிகாலை 02.40  மணிக்கு  காலமானார்.

“மோடியால் எங்களை கவிழ்க்க முடியவில்லை - பாஜகவின் முழு திட்டமும் தோல்வியடைந்தது”: கெஜ்ரிவால்.

பணக்கட்டுகளை எண்ணுவதற்கு 10 ஆண்டுகள் செலவிட்ட மோடி : ராகுல் காந்தி.



.டெல்லி  மெட்ரோ ரயில் நிலைய சுவர்களில் காலிஸ்தானுக்கு  ஆதரவாகவும், பிரதமர் மோடிக்கு எதிராகவும் வாசகம்.




ஆக்கிரம்ப்பை அகற்ற.

ஒகேனக்கல் அருகே உள்ள பென்னாகரம் வனப்பகுதிக்கு உள்பட்ட பேவனூா் காப்புக்காடு பகுதியில் வேப்பமரத்துகொம்பு என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் 20க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. அப்பகுதியில் குடியிருந்து வருபவா்களை அங்கிருந்து வெளியேறுமாறு வனத்துறையினா் பலமுறை அறிவுறுத்தியுள்ளனர். இத்தகைய சூழலில் வேப்பமரத்துகொம்பு பகுதியைச் சோ்ந்த கிருஷ்ணன் என்பவருக்கு வனத்துறையின் மூலம் வனப் பகுதியை ஆக்கிரமித்து கட்டப்பட்ட தகர கொட்டகை மற்றும் சிறிய அளவிலான ஓட்டு வீட்டை விட்டு வெளியேறுமாறு நோட்டீஸ் வழங்கப்பட்டது. இதனையடுத்து தங்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டால் கிராம மக்கள் அனைவரும் வனப் பகுதியிலிருந்து வெளியேறுவதாக வனத் துறையினரிடம் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

அதனைத் தொடர்ந்து பென்னாகரம் வனச்சரக அலுவலா் செந்தில்குமார் தலைமையிலான வனத் துறையினா், ஒகேனக்கல் காவல் துறையினா் நேரடியாக வேப்பமரத்துகொம்பு கிராமத்திற்குச் சென்று கிருஷ்ணன் என்பவரின் வீட்டை அகற்றும் பணியில் ஈடுபட்டனா். கிராம மக்கள் அதைத் தடுக்க முயற்சித்த போது வனத் துறையினருக்கும் பொதுமக்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இது தொடர்பான  சர்ச்சைக்குரிய வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

இந்நிலையில் ஆக்கிரமிப்புகளை அகற்றியது தொடர்பாக தருமபுரி மாவட்ட வனத்துறை  சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதில், “பென்னாகரம் வனச்சரகம் பேவனூர் காப்புக்காட்டில் மணல் திட்டு பகுதியில் கிருஷ்ணன் என்பவர் அத்துமீறி நுழைந்து தகர கொட்டகை அமைத்துள்ளார். உச்சநீதிமன்ற வழிகாட்டுதல்படியும்,  தமிழ்நாடு வனச்சட்டப்படியும் தகர கொட்டகை, சிறிய ஓட்டு வீடு ஆகிய ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது. மேலும் கொட்டகை இருந்த இடம் யானை வலசை செல்லும் பாதை ஆகும். அதே சமயம் வனப்பகுதியை ஆக்கிரமிப்பு செய்த கிருஷ்ணன் பூர்வகுடிகள் அல்ல. கிருஷ்ணனுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் பென்னாகரம் பகுதியில் விளை நிலங்களும், வீட்டு மனையும் உள்ளன” என்று அதிகாரிகள்.கூறியுள்ளனர்.

மோடியின் 

 டெம்போ

நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்காக, அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் மும்முரமாக பிரச்சாரம் மேற்கொண்டு வரும் வேளையில்,மோடியின் வெறுப்பு பேச்சுகளும், பொய்களும் நாளுக்கு நாள் கூடிக்கொண்டே இருக்கின்றன. எனினும், மோடி கூறிவந்த பொய்களில், சிறிதளவு உண்மையும் கசிந்து விட்டதோ என்று எண்ணும் வகையில்,அதானி - அம்பானி போன்றவர்கள் தான் கருப்புப் பணத்தை டெம்போக்களில் அனுப்பி வருகிறார்கள் என்று மோடி தனது சகாக்கள் பற்றி பேசியது சர்ச்சையாகியுள்ளது.இதுவரை, அதானி - அம்பானி என்றால், பா.ஜ.க எதையும் செய்து வந்ததற்கான, பின்னணி இது போன்ற டெம்போக்கள் தானா என்ற கேள்வியும் எழத்தொடங்கியுள்ளது.அதற்கு எடுத்துக்காட்டுகளாக, மதுரை விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக மாற்றுவதற்கான கோரிக்கை ஆண்டுக்கணக்கில் கிடப்பில் போடப்பட்டு வரும் நிலையில்,அம்பானியின் மகன் திருமண கண்ணோட்ட நிகழ்ச்சிக்காக, குஜராத்தின் ஒரு உள்நாட்டு விமான நிலையத்தை, 10 நாட்களுக்கு சர்வதேச விமான நிலையமாக மாற்றியபா.ஜ.க.வின் நடவடிக்கை.

கருப்புப் பண டெம்போ குறித்து விசாரிக்க வேண்டும்! : ராஜஸ்தான் முன்னாள் முதல்வர் அசோக் கெலாட்!

அதானிக்காக, இந்திய அரசின் சொத்துகளையே விற்று வரும் தன்மை ஆகியவை உள்ளன.

எனினும், இடைவிடாது அம்பானி - அதானி போன்ற முதலாளிகளை விமர்சித்து வரும் காங்கிரஸ் கட்சிக்கு, அம்பானியும், அதானியும் கருப்புப் பணங்களை டெம்போக்களில் அனுப்பி வருகின்றனர் என பொருளற்ற ஒரு பரப்புரை செய்தார் மோடி.

இது குறித்து ராஜஸ்தான் முன்னாள் முதல்வர் அசோக் கெலாட், “ராகுல் காந்தி, அதானி - அம்பானி குறித்து தொடர்ச்சியாக விமர்சித்து வரும் நிலையிலும், ராகுல் காந்தி மீது பொய் குற்றச்சாட்டு வைத்துள்ளார் மோடி. எனினும், நாட்டின் பிரதமரே கருப்புப் பணங்கள் டெம்போக்களில் செல்கின்றன என தெரிவித்து விட்டார். இதற்கான உடனடி விசாரணையில் CBI மற்றும் அமலாக்கத்துறை ஈடுபட வேண்டும்” என கேட்டுக்கொண்டார்.

இவரைத் தொடர்ந்து பல தலைவர்களும், பிரதமர் பதவியில் இருக்கும் மோடியே, அனைத்தையும் கருப்புப் பண விவகாரங்களையும் தெரிந்து கொண்டு நடவடிக்கை எடுக்காதது ஏன்? என கேள்வி எழுப்பி வருகின்றனர்.


இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?