யாருடைய நாக்கு?

 தேர்தல் பணம் பங்குவைப்பதில் தகராறில் பாஜக பிரமுகருக்கு வெட்டு திருவாரூர் மாவட்ட பாஜ நிர்வாகி கைது: மேலும் 8 பேருக்கு காவல்துறை வலை.

கிழக்கு கடற்கரை சாலை விரிவாக்கத்திற்கு வெட்டப்பட்ட மரங்கள் மறுநடவு செய்து மீண்டும் துளிர்க்க வைப்பு: 1:10 என்ற விகிதத்தில் 7,580 மரங்கள் நடவு, நெடுஞ்சாலைதுறை தகவல்.

சாதி,மதக்கலவரம் செய்ய யாரையாவது கடவுள் அனுப்புவாரா?: மோடிக்கு மம்தா கேள்வி .

கோடை விடுமுறை முடிந்து ஜூன் 6ம் தேதி பள்ளிகள் திறப்பு: பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு.

போக்குவரத்துதொழிலாளர்கள்,போக்குவரத்து காவல் துறையினர் இடையே ஏற்பட்டுள்ள பிரச்சினைக்கு தீர்வு: முதல்வருக்கு போக்குவரத்து தொழிற்சங்கங்கள் கடிதம்.
பாம்பன் துறைமுகத்தில் 1ம் எண் புயல் கூண்டு ஏற்றம்.
அதானி குழுமத்தின் மீது உடனடி முறைகேடுகள் தொடர்பான விசாரணை தேவை.21 பன்னாட்டு அமைப்புகள் கோரிக்கை.


RSS நாக்கு


ஜூன் 4 அன்று வாக்கு எண்ணிக்கையின் முடிவு, தனது பிரதமர் பதவியின் காலத்தை முடிவிற்கு கொண்டு வருவ தாக இருக்கும் எனும் உண்மையை மோடி உணர்ந்து கொண்டு விட்டார் போலும். 


ஆனால் அத்தகையதொரு முடிவை அவரால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. எனவே தான் அவர் பங்கேற்கும் தேர்தல் பிரச்சார கூட்டங்களில் மேலும் தீவிரமாக வெறுப்பை உமிழ்வ தும், பிளவை உருவாக்குவதுமாக அவரது உரைகள் உள்ளன.  முக்கியமாக மூன்று அம்சங்களை அடிப்படை யாகக் கொண்டு அவரது பிரச்சார உத்தி இருக்கி றது. 


மதவெறி பிரச்சாரம்,  கோவில் அரசியல், இட ஒதுக்கீடு சர்ச்சை ஆகியவையே அவை. தேர்தலில் தோற்று, ஆட்சி அதிகாரத்தை இழந்து விட்டாலும் கூட,  தங்கள் பிரச்சாரங்களின் வாயிலாக இந்திய சமூகத்தில் ஒரு ஆழமான பிளவை உருவாக்கி அதை தங்கள் எதிர்கால அரசியல் நிகழ்ச்சி நிரலுக்கு பயன்படுத்திக் கொள்ளும் உத்தி தான் அது. 

ஆர்.எஸ்.எஸ்., பாஜக வின் கடந்த கால வரலாறும் கூட அதைத்தான் நினை வூட்டுகிறது. 

l தேர்தல் பிரச்சாரத்தின் போது சாவர்க்கரின் பெரு மைகளை கொண்டாடுகிறார் பிரதமர். காந்தி படு கொலையின் போது பதிவு செய்யப்பட்ட குற்றப் பத்திரிக்கையில் அது ஒரு கூட்டுச்சதி (Conspira cy) என்றே குறிப்பிடப்பட்டுள்ளது. 

கூட்டுச் சதியால் நிகழ்த்தப்படும் எந்தவொரு குற்றத்திலும், சதி ஆலோசனையில் ஈடுபடும் அனைவரும் குற்றவாளி கள் தான். 

ஆனால் முதலில் குற்றவாளி பட்டியலில் சேர்க்கப்பட்டு, பிறகு போதுமான ஆதாரங்கள் இல்லை எனக் கூறி தண்டனையிலிருந்து விடு விக்கப்பட்டவரே இந்த சாவர்க்கர் என்பதை நினை வில் கொள்ள வேண்டும்.  

l மதப் பகைமையை உருவாக்கும் வகையில் நான் பேசியிருக்கிறேன் என நிரூபித்தால்  அரசியலில் இருந்தே விலகி விடுகிறேன் என சவால் விட்ட பிரதமர் மோடி தான், பிறகு புல்டோசரை எங்கு, எப்படி பயன் படுத்த வேண்டும் என யோகியிடம் கற்றுக் கொள் ளுங்கள் என கொக்கரித்தார்.  

 யோகியின் புல்டோசர் பயன்பாட்டிற்கு பின்னால் இருக்கும் தீவிரமான மத வெறி, நாடு அறியாததா? “எனக்கு நன்கு அறி முகமானவர்களும், எங்கள் தெருவில் வளையல்,  புடவை உள்ளிட்ட பொருட்களை விற்பனை செய்த வர்களும் தான் என் மீதான மோசமான பாலியல் கொடு மைகளை இழைத்தார்கள்” என பில்கிஸ் பானு வாக்குமூலம் அளித்த போது மோடிதான் குஜராத் முதல்வர். சாவர்க்கரை கொண்டாடுவதும், புல்டோ சரை புகழ்வதும் மதவெறியல்லாமல் வேறென்ன? 

l ராமர் ஆலயத்தை பாதுகாக்க வேண்டுமெனில் மீண்டும் பாஜக ஆட்சிக்கு வருவது தேவை எனவும், மீண்டும் ஆட்சி அமைத்தால் சீதைக்கும் ஆலயம் கட்டுவோம் எனவும் கோவில் அரசிய லை வேறொரு கண்ணோட்டத்தில் முன்வைக்க துவங்கியிருக்கிறார்கள். ராமர் ஆலயத்தை கட்டு வதற்காக ஏற்கனவே அங்கிருந்த பதிமூன்று இந்து ஆலயங்களை இவர்களே இடித்து விட்டார்கள் எனும் குற்றச்சாட்டு  இப்போது அயோத்தியில் எழுந்தி ருக்கிறது. 

ராமர் ஆலயத்திறப்பு விழாவின் போது  சீதை பிறந்த நேபாளத்திலிருந்து சீதனம் வந்ததாக  சொன்னார்கள். இப்போது சீதைக்கு கோவில் எனில் நேபாளத்தில் எப்படி இவர்களால் கோவில் கட்ட முடியும்? 

கொள்கைகள் உதவாத போது, கோவில் களை கட்டுவது அவர்களின் வழக்கமான பாணி தான். அதைத்தான் மீண்டும் முயற்சித்துப் பார்க்கிறார்கள்.

l இட ஒதுக்கீடு பிரச்சனையை மீண்டும் கையில் எடுப்ப தோடு, மதரீதியில் வழங்கப்படும் இடஒதுக்கீட்டை முழுமையாக ரத்து செய்வோம் எனவும் பேசத் துவங்கியிருக்கிறார்கள்.

 பிற்படுத்தப்பட்டோருக் கான இடஒதுக்கீடு பரிந்துரையை அளித்த மண்டல் கமிஷன் அமலாக்கத்தின் போது அதற்கெதிராக  “இது மண்டலுக்கும், கமண்டலத்திற்குமான யுத்தம் – இந்த யுத்தத்தில் மண்டலை வீழ்த்தி கமண்டலமே வெற்றி பெறும்”  என பகிரங்கமாக சவால் விடுத்ததோடு, நாடு முழுவதும் கலக நெருப்பையும் பற்ற வைத்தவர்கள் தான் இவர்கள்.

 இப்போது இடஒதுக்கீடு ரத்து எனும் ஆபத்தான அரசியலை  இவர்கள் கையில் எடுப் பதன் விளைவாக மீண்டும் ஒரு மோசமான விளைவை உருவாக்கவும் திட்டமிடுகிறார்கள்.

தேர்தல் எனும் ஜனநாயகப் போராட்டத்தில் வெற்றி தோல்வி என்பது இயல்பான ஒன்று தான். ஆனால் பாசிசத் தன்மை கொண்ட பிளவுவாத சித்தாந்த வாதிகள் எளிதில் தங்கள் தோல்வியை ஒப்புக் கொள்ள  மாட்டார்கள். அரசியல் அதிகாரத்தை இழந்தாலும் குடிமைச் சமூகத்தை தங்கள் பிடியில் எப்போதும் வைத்திருக்க வேண்டுமென முயற்சிப்பார்கள். 

ஆர்பத்ரி

மோடி உள்ளிட்ட பாஜகவினரின் பேச்சுக்கள் அதைத்தான் உணர்த்துகிறது.  பாஜக நாக்கு என்றால் அதன் மூளை ஆர்.எஸ்.எஸ்  ஆகும். எனவே, பாஜகவை தேர்தல் அரசியலில் தோற் கடிப்பதைப் போலவே, ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தத்தை முறியடிப்பதும் மிக முக்கியமானதாகும். ஆட்சி அதிகா ரம் இல்லாவிட்டாலும் இவர்கள் ஆபத்தானவர்களே. தேசப்பிதா மகாத்மா காந்தி படுகொலை செய்யப்பட்ட போதும், பாபர் மசூதி இடிக்கப்பட்ட போதும் இவர்களி டம் ஆட்சியதிகாரம் இல்லை என்பதையும் எப்போதும் நாம் நினைவில் கொள்ள வேண்டும். 

கட்டுரையாளர்: சிபிஐ(எம்) மாநிலக்குழு உறுப்பினர்


இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வினேஷ் போகத் வென்றார்!

2025ல் தங்கம் விலை

முடிவுக்கு வருகிறதா?