வெறுப்புரையும்-ஆணையமும்

குஜராத், கர்நாடகா உள்பட 11 மாநிலங்களில் 3ம் கட்ட தேர்தல் 93 தொகுதிகளில் 63% வாக்குப்பதிவு.

ஏர் இந்தியா ஊழியர்களின் திடீர் வேலை நிறுத்தப் போராட்டத்தால் நாடு முழுவதும் விமான சேவை பாதிப்பு.

தமிழ்நாட்டில் இன்றும், நாளையும் 8 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்.

சென்னை ஆலந்தூர் அருகே வளர்ப்பு நாய் கடித்ததில் சிறுவனுக்கு காயம்; உரிமையாளர் மீது வழக்கு.

அரசியல்ஆதாயத்துக்காகவெறுப்புணர்வை ஊக்குவிக்கும் பா.ஜ.க" : சோனியா காந்தி !

மோடி வெறுப்புரை.

கண்டு கொள்ளா தேர்தல் ஆணையம்.

கடந்த 73 ஆண்டுகளில் இல்லாத அளவில், தற்போதைய தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைகள், ஒன்றிய அரசிற்கு மிகவும் சார்புடைய நடவடிக்கைகளாக அமைந்திருக்கிறது.

அதற்கு, மோடியின் வெறுப்பு மற்றும் பொய் பிரச்சாரங்களே, தவிர்க்க முடியாத எடுத்துக்காட்டுகளாகவும் இருக்கின்றன.

அவ்வகையில், காங்கிரஸ் அறிக்கைகளை இடம்பெறாத கருத்துகள், காங்கிரஸ் தலைவர்களால் முன்மொழியப்படாத கருத்துகள், கடந்த காலங்களில் நிகழாத நடவடிக்கைகள் என தேர்தல் பிரச்சாரங்களில் பேசி வருவது பலவும் பொய்யென ஊடகங்கள் தெளிவுபடுத்திட்டும்,


இஸ்லாமியர்களை குறிவைத்து, மதத்தின் அடிப்படையிலான பிளவுகளை உண்டாக்குகிற கருத்துகளை மோடி பேசி வருவதற்கு, சுமார் 20,000-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் புகார் அளித்தும்,

மோடி அவ்வாறு எதுவும் செய்யாதது போல, தட்டிக்கழித்து வருகிறது தேர்தல் ஆணையம். 

தேர்தல் ஆணையத்தின் இந்நடவடிக்கைக்கு எதிரான வழக்கு டெல்லி உயர்நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்டபோது கூட, அவ்வழக்கினை தள்ளுபடி செய்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது உயர்நீதிமன்றம்.

இவ்வாறு, குற்றங்கள் அம்பலமானாலும், தண்டனைகளிலிருந்து தப்பித்து வரும் மோடிக்கு தேசிய அளவில் கண்டனங்கள் எழுந்து வருகிறது.

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, “மக்களவைத் தேர்தல் நடந்து கொண்டிருக்கும் சூழலில், அமலில் இருக்கும் தேர்தல் நடத்தை விதிமுறை (Model Code of Conduct), மோடியின் தேர்தல் நடத்தை விதிமுறையாக (Modi Code of Conduct) மாற்றம் கண்டுள்ளது” என பா.ஜ.க.வின் தேர்தல் நடத்தை விதிமீறல்களுக்கு தேர்தல் ஆணையம் தகுந்த நடவடிக்கை எடுக்காதது குறித்து தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

விதிமீறல்களுக்கு பெயர்போன பா.ஜ.க! : நடவடிக்கை எடுக்காத தேர்தல் ஆணையம்!

மம்தா பானர்ஜி கூற்றை, பா.ஜ.க.வின் பிரச்சாரங்களில் குழந்தைகளை ஈடுபடுத்துவது, மதத்தின் அடிப்படையில் வாக்கு கேட்பது உள்ளிட்ட பல்வேறு தேர்தல் நடத்தை விதிமீறல்கள் உறுதி படுத்தி வருகின்றன.

இந்நிலையில், இன்று (07.05.24) நடந்து முடிந்த, 3ஆம் கட்ட மக்களவைத் தேர்தலின் போது கூட, குஜராத் மாநிலத்தின் காந்திநகர் தொகுதியில் உள்ள ஒரு வாக்குச்சாவடியில் பா.ஜ.க சின்னம் பொறித்த தூவள் (பேனா) பயன்படுத்தப்பட்டதை, ஆதரத்துடன் வெளிக்காட்டியுள்ளார் குஜராத் மாநில காங்கிரஸ் தலைவர் சக்திசிங்.

எனினும், இதற்கு தற்போது வரை தேர்தல் ஆணையத்திடமிருந்து, எவ்வித அதிகாரப்பூர்வ கண்டனமும் வெளியாகவில்லை.

இதுகுறித்து திரிணாமுல் கட்சியின் மக்களவை வேட்பாளர் மஹுவா மொய்த்ரா, “தேர்தல் ஆணையத்திற்கு எதுவும் தெரியாமல் ஒன்றும் இல்லை.

 மோடியின் வெறுப்புணர்வு கொண்ட பேச்சை அவர்கள் தெரிந்துதான் அனுமதிக்கிறார்கள். மோடியின் விதிமீறல்களில் அவர்களும் கூட்டாளிகளாக இருக்கிறார்கள்” என விமர்சித்துள்ளார்.

இந்த சூழலில், ஜனநாயகத்தை நிறுவுகிற இடத்தில் இருக்கிற, தேர்தல் ஆணையமே, ஒன்றிய பா.ஜ.க.வுடன் கூட்டு சேர்ந்து, மக்களாட்சிக்கு எதிராக செயல்படுவது, தேர்தலை நம்பியிருக்கிற மக்களை அச்சப்படுத்தியுள்ளது. 

ஆண்டு கால பா.ஜ.க ஆட்சியில், வளர்ச்சிகள் என சொல்லும்படி எதுவும் இல்லாத காரணத்தால், வளர்ச்சியை எடுத்துக்கூறி, வாக்குகளை சேகரிக்க முடியாது என உணர்ந்த மோடியும், அவரது கட்சியும், பல புதிய சிக்கல்களை உருவாக்கி வருகிறது.

காங்கிரஸ் கட்சி, மதத்தின் அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்க இருக்கிறது. இஸ்லாமியர்கள் அதிக குழந்தைகளை பெற்றுக்கொண்டு, மக்கள் சொத்துகளை சூரையாடிவிடுவர் என்ற பொய் பிரச்சாரங்கள் அதற்கு எடுத்துக்காட்டுகளாகவும் அமைந்துள்ளன.

இந்நிலையில், உள்நாட்டில் செய்த கலவரங்கள் போதாது என்று, அண்டை நாடான பாகிஸ்தானை இழுத்து, வாக்குகளைப் பெற எண்ணும் பா.ஜ.க.வின் திட்டம், நேற்றைய நாள் (07.05.24) வெளியான நாளிதழில் இடம்பெற்ற பா.ஜ.க.வின் விளம்பரம் வழி அம்பலப்பட்டுள்ளது.

அவ்விளம்பரத்தில், நீங்கள் வாக்களிக்கப்போவது இந்தியாவிற்கா அல்லது பாகிஸ்தானிற்கா? என்ற கேள்வியுடன், பா.ஜ.க.விற்கு வாக்களிக்கவேண்டும் என்ற முன்மொழிவும் இடம்பெற்றது, தேர்தல் நடத்தை விதிமுறைகளுக்கு எதிராய் அமைந்தது சர்ச்சையாகியுள்ளது.

தேர்தல் நடத்தை விதி அமலில் இருக்கும் போது, சின்னத்தை வெளிப்படுத்தும் விளம்பரங்களும், இந்த குறிப்பிட்ட கட்சிக்கு வாக்களிக்க வேண்டும் என்ற பிரச்சாரங்களும் அறவே கூடாது என்ற நிலை உள்ள போதிலும், அத்தகைய தேர்தல் விதிமுறைகளை தொடர்ந்து மீறி வருகிறது பா.ஜ.க.

இது குறித்து, சிவசேனா (தாக்கரே) MP பிரியங்கா சதுர்வேதி, “சற்றும் பொருளற்ற வகையில், இந்திய மக்களவை தேர்தலுக்கு வாக்கு சேகரிக்க பாகிஸ்தானை பகடையாக பயன்படுத்துவது சர்ச்சைக்குரிய வகையில் அமைந்துள்ளது. குறிப்பாக, கடந்த காலங்களில்,

- யார் பாகிஸ்தான் பிரதமருடன் பிரியாணி உண்டது?

பாகிஸ்தான் உதவியை நாடும் பா.ஜ.க! : தேர்தல் விதிமுறைகளை தகர்க்கும் மோடி அரசு!

- யார் பாகிஸ்தான் பிரதமர் பிறந்தநாள் விழாவிற்கு விருந்தினராக சென்றது?

- யார் பதவி பிரமாணம் செய்யும் போது, பாகிஸ்தான் பிரதமரை வரவழைத்தது?” என மோடியின் கடந்த கால செயல்பாடுகளை விமர்சித்துள்ளார்.

காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ், “3ஆம் கட்ட மக்களவைத் தேர்தல் நடைபெறுவதற்கு ஒரு நாள் முன்பு, தேர்தல் விதிமுறைகளை மீறும் விதத்தில் செய்தித்தாளில் விளம்பரம் வெளியிட்டுள்ளது பா.ஜ.க. மராத்தியில் தரப்பட்டுள்ள இவ்விளம்பரத்திற்கு எதிராக தேர்தல் ஆணையம் தானாக முன்வந்து நடவடிக்கை எடுக்காதது ஏன்?” என கேள்வி எழுப்பியுள்ளார்.

இது போன்று, தேர்தல் நேரங்களில் அதிகாரத்தை பயன்படுத்தி, மோடி அரசு செய்யும் விதிமீறல்களையும், வெறுப்புரைகளையும் கண்டுகொள்ளாத தேர்தல் ஆணையம் நடுநியையற்ற செயல்பாடுகளும் அது நடத்தும் தேர்தலும் எப்படி நடுநிலையாக மக்களாட்சிக்கானதாக இருக்கும்?

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?