கோதி (Godi) மீடியா
தேர்தலுக்கு முன்பு கேஜ்ரிவாலை கைது செய்தது ஏன்? - அமலாக்கத் துறைக்கு நீதிமன்றம் கேள்வி.
மனவளர்ச்சி குன்றிய சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தவருக்குகேரள நீதிமன்றம் 106 ஆண்டுகள் சிறை தண்டனை.“தேவகவுடா பேரன் பிரஜ்வல் 3000 ஆபாசவீடியோவைநான்தான்கொடுத்தேன்...” - ரேவன்னா கார் ஓட்டுநர்.
தேர்தல் ஆணையர் தயக்கம்?
நாடு முழுவதும் 7 கட்டங்களாக நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது. இதில் முதற்கட்டமாக தமிழ்நாடு, புதுச்சேரி, மேற்கு வங்கம், திரிபுரா உள்ளிட்ட 21 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் மொத்தம் 102 தொகுதிகளுக்கு கடந்த ஏப்.19-ம் தேதி நடைபெற்றது. இதையடுத்து கடந்த ஏப்.26-ம் தேதி 88 தொகுதிகளுக்கு 2-ம் கட்டமாக தேர்தல் நடைபெற்றது.
வழக்கமாக தேர்தல் நடந்து முடிந்த சில மணி நேரங்களிலோ அல்லது 24 மணி நேரத்திற்குள்ளே இத்தனை சதவீதம் வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது என்று தேர்தல் ஆணையம் தெரிவிக்கும். ஆனால் முதற்கட்ட தேர்தல் நடைபெற்று 11 நாட்களும், 2-ம் கட்ட தேர்தல் நடைபெற்று 4 நாட்களும் ஆன நிலையில், இறுதிக்கட்ட வாக்குப்பதிவு விவரங்களை தேர்தல் ஆணையம் தனது இணைய பக்கத்தில் தெரிவிக்கவில்லை.
ஏற்கனவே திரிபுராவில் உள்ள ஒரு சில வாக்குச்சாவடிகளில் 100%-க்கும் மேலாக வாக்குப்பதிவு நடைபெற்றதாக அறிவிக்கப்பட்டது நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த சூழலில் தேர்தல் ஆணையம், வாக்குப்பதிவு விவரங்களை வெளியிடாமல் காலம் தாழ்த்துவது அனைவர் மத்தியிலும் சந்தேகத்தை எழுப்பியுள்ளது.
இதனால் எதிர்க்கட்சிகள் தேர்தல் ஆணையத்தை கடுமையாக விமர்சித்து வந்ததோடு, கால தாமதத்திற்கான காரணங்கள் குறித்து கேள்வியும் எழுப்பியது. தொடர்ந்து எழுந்த வந்த விமர்சனங்களின் எதிரொலியாக தொகுதி வாரியாக வாக்கு சதவீத முழு விவரங்களை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.
தேர்தல் ஆணையம் வெளியிட்ட விபரங்களின்படி முதற்கட்ட வாக்குபதிவில் 66.14% என்றும், இரண்டாம் கட்டத்தில் 66.71% என்றும் வாக்குகள் பதிவாகியிருக்கிறது. இதில் முதற்கட்டத்தில் ஆண்கள் 66.22%-மும், பெண்கள் 66.07%-மும், மூன்றாம் பாலினத்தவர் 31.32%-மும் வாக்களித்துள்ளனர். அதே போல் இரண்டாம் கட்டத்தில் ஆண்கள் 66.99%-மும், பெண்கள் 66.42%-மும், மூன்றாம் பாலினத்தவர் 23.86%-மும் வாக்களித்துள்ளனர்
இதில் தமிழ்நாட்டில் 69.72% வாக்கு பதிவாகியுள்ளது. தமிழ்நாட்டில் கடந்த 2019-ம் ஆண்டு தேர்தலின்போது 72.44% வாக்குகள் பதிவாகியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது
கோதி (Godi) மீடியா
மோடியின் பத்தாண்டு கால ஆட்சியில் பல்வேறு பொதுத்துறை நிறுவங்கள் தனியார்வசம் சென்றுள்ளன, திட்டமிட்டு அவை திவாலும் ஆக்கப்பட்டு வருகின்றன.
அமலாக்கத்துறை, சிபிஐ, வருமான வரித்துறை, தேர்தல் ஆணையம், நீதித்துறை என அனைத்தும் பா.ஜ.க வுக்கு ஆதரவாக மாறிவிட்டன. இவற்றின் வரிசையில் சில இந்திய ஊடகங்களும் வந்துள்ளன. இந்த செய்தி எவராலும் மறுக்க முடியாத உண்மையாக தற்போது மாறியுள்ளது.
நாடாளுமன்றத் தேர்தலை ஒட்டி நடந்த முக்கியான விவதாங்களில் எந்த மாதிரியான செய்திகள் பேசுபொருளாக இருந்தன என்பதைப் பற்றியது தான் அந்த ஆய்வு.
இந்த ஆய்வுக்கட்டுரையின் தொடக்கத்தில், ஊடக சுதந்திரத்தைப் பற்றிய 180 நாடுகளின் பட்டியலில் இந்தியா 161-வது இடத்தில் இருப்பது குறிப்பிடப்பட்டுள்ளது.
பிப்ரவரி 1 ஆம் தேதியில் இருந்து ஏப்ரல் 12 ஆம் தேதி வரையில் ஆறு சேனல்களையும், அதில் இருந்து ஆறு நெறியாளர்களையும் தேர்வு செய்து, அவர்கள் நடத்திய விவாதங்கள் ஆய்வு செய்யப்பட்டன. ”கோதி மீடியாக்களில்” (GODI MEDIA) நடந்த விவாதங்களை ஆறுவகையாக பிரித்துள்ளனர்.
- எதிர்க்கட்சிகளுக்கு எதிரான விவாதங்கள்
- அரசுக்கு ஆதரவான விவாதங்கள்
- இந்து-முஸ்லீம்கள் பற்றியது
- பிரிவினைவாத அரசியல்
- அரசுக்கான கேள்விகள்
- கல்வி மற்றும் வேலைவாய்ப்பு
இந்த ஆய்வுக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட கோதி மீடியாக்களின் (GODI MEDIA) நெறியாளர்கள்
- ரிப்ப்ளிக் டிவியின் அர்னாப் கோஸ்வாமி
- நியூஸ் 18 இந்தியாவில் இருந்து அமிஷ் தேவ்கன்
- ஆஜ் டக் சேனலில் இருந்து சுதிர் சௌத்ரி
- டைம்ஸ் நவ் பாரத் என்ற சேனலில் இருந்து சுசாந்த் சின்கா
- சிஎன்என் நியூஸ் 18 சேனலில் இருந்து ராகுல் சிவ்சங்கர்
- டைம்ஸ் நவ் சேனலில் இருந்து நவிகா குமார்
இவர்களின் செயல்பாடுகள் கீழே விளக்கப்பட்டுள்ளன.
- ரிபப்ளிக் டிவியின் அர்னாப் கோஸ்வாமி, ரிபப்ளிக் வோல்ட் ஷோ என்ற விவாத நிகழ்வில் 137 விவாதங்களை நடத்தியுள்ளார். அதில் 73 விவாதங்கள் எதிர்க்கட்சிகளுக்கு எதிராகவும், அரசுக்கு ஆதரவாக 32 விவாதங்களும் நடத்தியுள்ளார். 12 விவாதங்கள் பாகிஸ்தானை மையப்படுத்தி செய்துள்ளார். அதில் பாகிஸ்தானில் நடக்கும் தேர்தல் முறையைப் பற்றியும், அந்நாட்டு இராணுவத்திற்கு குண்டு வைக்க வேண்டும் என்றும் கூட தனது வெறுப்பை கக்கியுள்ளார்.
- நியூஸ்18 இந்தியாவில் நடைபெற்ற, ஆர் பார் (Aar Paar) நிகழ்ச்சியில், அமிஷ் தேவ்கன் 49 விவாதங்களை நடத்தினார். அதில் 25 விவாதங்கள் எதிர்க்கட்சிகளுக்கு எதிராகவும், 15 விவாதங்கள் மோடி அரசுக்கு ஆதரவாகவும், 4 விவாதங்கள் மதவாத பிரச்சனைகளைப் பற்றியும், 2 விவாதங்களில் எதிர்க்கட்சியைப் பாராட்டியும், 3 விவாதங்கள் மற்ற பொதுவான விசயங்கள் குறித்தும் நடத்தியுள்ளார்.
- சுதிர் சௌத்ரி, தனது ஆஜ் டக் (Aaj Tak) நிகழ்ச்சியில் பிளாக் அண்ட் ஒயிட் நிகழ்ச்சியில், எதிர்க்கட்சிகளுக்கு எதிராக 27 விவாதங்களையும், மோடி அரசுக்கு ஆதரவாக 15 விவாதங்களையும், மதப் பிரச்சினைகள் தொடர்பாக 2 விவாதங்களையும், பாகிஸ்தானைப் பற்றி ஒரு விவாதத்தையும், மற்ற தலைப்புகளில் 8 விவாதங்களையும் நடத்தியுள்ளார்.
- சுஷாந்த் சின்ஹா (டைம்ஸ் நவ் பாரத்) தனது நியூஸ் கி பாத்ஷாலா நிகழ்ச்சியில், 50 விவாதங்களை நடத்தியிருக்கிறார். அதில், காங்கிரஸிலிருந்து விஜேந்தர் சிங் வெளியேறியதை “முக்கா-மார் ஜாட்கா” என்று வர்ணித்து, எதிர்க்கட்சிகளைத் தாக்கி பேசியுள்ளார்.
- ராகுல் ஷிவ் சங்கர் (CNN News18) தனது ஹார்ட் ஃபேக்ட்ஸ் (Hard Facts) நிகழ்ச்சியில் 90 விவாதங்களை நடத்தியுள்ளார். இதில், 37 விவாதங்கள் எதிர்க்கட்சிகளுக்கு எதிராகவும், 27 விவாதங்கள் அரசுக்கு ஆதரவாகவும், 12 விவாதங்கள் இந்து-முஸ்லிம் மதப் பிரச்சினைகள் பற்றியும், 12 விவாதங்கள் மற்ற தலைப்புகளைப் பற்றியும் இருந்தன. ஒரே ஒரு நிகழ்ச்சியில் மட்டுமே அவர் பாஜக அரசை கேள்வி எழுப்பி, தேர்தல் பத்திரங்கள் தொடர்பாக வெளிவந்துள்ள செய்திகள் பா.ஜ.க கட்சிக்கு பின்னடைவை ஏற்படுத்தும் என்று பேசினார்.
- நவிகா குமார் (டைம்ஸ் நவ்) தனது நிகழ்ச்சியான தி நியூஷூரில் (The Newshour) மொத்தம் 51 விவாதங்களை நடத்தியுள்ளார். அதில் 33 விவாதங்கள் எதிர்க்கட்சிகளுக்கு எதிராகவும், 12 விவாதங்கள் மோடி அரசாங்கத்தை பாராட்டியும் இருந்தன.
- பிப்ரவரி 1 முதல் ஏப்ரல் 12 வரை மொத்தம் 429 விவாதங்கள் நடத்தப்பட்டுள்ளன. இதில் 52 சதவீத விவாதங்கள் எதிர்க்கட்சிகளுக்கு எதிராகவும், 1.1 சதவீத விவாதங்கள் கல்வி மற்றும் வேலைவாய்ப்பை பற்றியும், 27 சதவீத விவாதங்கள் மோடியை பாராட்டுவதாகவும், 5.6 சதவீத விவாதங்கள் மத பிரிவினைவாதத்தைப் பற்றியும், 12.5 சதவீத விவாதங்கள் பிற விசயங்களைப்பற்றியும், 1.4 சதவீத விவாதங்கள் மோடி அரசை கேள்வி எழுப்புவதாக அமைந்துள்ளன.
எதிர்க்கட்சிகளுக்கு எதிராக நடைபெற்ற 52 சதவீத விவாதங்களில் இந்தியா கூட்டணியில் உள்ள பிரச்சினைகளையும், மதுபான முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பற்றியும், ராகுல் காந்தியின் கருத்தை திரித்தும் பேசப்பட்டுள்ளன.
பா.ஜ.க என்ற ஒரு கட்சி மட்டுமே 6000 கோடி மதிப்பிலான தேர்தல் நிதிப்பத்திரங்களை கார்ப்பரேட்டுகளிடமிருந்து பெற்றுள்ளதைப் பற்றி பேசாமல், எதிர்க்கட்சிகள் வாங்கியுள்ள தேர்தல் பத்திரங்களைப் பற்றி மட்டுமே திட்டமிட்டு இந்த ஊடகங்கள் பேசியுள்ளன. இந்த ஊடகங்கள் ஞானவாபி மசூதி பற்றிய முஸ்லீம்களுக்கு எதிரான நீதிமன்ற தீர்ப்பை வரவேற்றும், சனாதன தர்மத்திற்கு எதிராக எதிர்க்கட்சிகள் இருக்கின்றன என்றும் கூறியும் தனது ”கோடி மீடியா“ பட்டத்தை நிலைநாட்டியுள்ளன.
ஆக மொத்தத்தில் கோதி மீடியாக்கள், எதிர்க்கட்சிகளுக்கு எதிராகவும் மோடி அரசுக்கு ஆதரவாகவும் செயல்பட்டு வருகிறார்கள் என்பதை இந்த ஆய்வு ஆணித்தனமாக நிரூபிக்கிறது. நாட்டின் நான்காவது தூண் என்று கருதப்படும் ஊடகமானது எந்த அளவிற்கு மோடி அரசுக்கு ஆதரவாக செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன என்பதை இந்த ஆய்வு திரைகிழித்து நமக்கு காட்டியுள்ளது.