என்ன செய்தார் மோடி? !

 குஜராத் பல்கலைக்கழகத்தில் எம்.ஏ படித்துள்ளேன் - பிரதமர் மோடி பிரமாணப் பத்திரத்தில் தகவல்.


400 சீட்களை வென்று ஞானவாபி மசூதி இருக்கும் இடத்தில் பாபா விஸ்வநாத் கோயிலை கட்டுவோம்” -ஹிமந்த பிஸ்வ சர்மா, (அசாம் முதலமைச்சர்)

230 தொகுதிகளுக்கு மேல் பாஜகவால் வெல்ல முடியாது! - டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்.

அடுத்து எந்த துண்டு மேடம்..?

கல்பாக்கம் அருகே வாயலூரில் கார் விபத்துக்குள்ளானதில் 5 பேர் உயிரிழப்பு.சாலையின் குறுக்கே வந்த மாடு மீது மோதிய கார், சாலையோர மரத்தின் மீதும் மோதி விபத்துக்குள்ளானதில் அப்பளம் போல் நொறுங்கியது. அதில் 3 இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில் 2 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு.
பொறியியல் படிப்புகளுக்கு இதுவரை 1.31 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.

சேலம் பெண்கள் சிறையில் முதன்முறையாக பிளஸ் 1, பிளஸ் 2 தேர்வெழுதி தேர்ச்சி பெற்ற பெண் கைதி: பரிசு வழங்கி அதிகாரிகள் பாராட்டு.

என்ன செய்தார் மோடி?

கடந்த 10 ஆண்டுகளாக உத்தரப் பிரதேசத்தின் வாரணாசி மக்களவை தொகுதியின் நிகராளியாக (பிரதிநிதி) விளங்கும் மோடி, அப்பகுதிக்கு என்ன செய்தார் என்ற கேள்வி வலுக்கத்தொடங்கியுள்ளது.

வாரணாசிக்கு என்ன செய்தார் மோடி? : வீண் வாக்குறுதிகளுக்கு வலுக்கும் எதிர்ப்புகள்!



10 ஆண்டுகால பா.ஜ.க ஆட்சிக்கு பின், தனியார்மயமாக்கல், வேலைவாய்ப்பின்மை, வறுமை, இடஒதுக்கீட்டில் பாகுபாடு ஆகியவை அதிகரித்துள்ளதே தவிர,

மோடியால் முன்மொழியப்பட்ட வாக்குறுதிகள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை. இந்திய அளவில் மட்டுமல்ல, மோடிக்கு கடந்த 10 ஆண்டுகளாக MP பதவி வழங்கி வருகிற வாரணாசிக்கும் அவர் செய்தது என்று சொல்லும் படி எதுவுமில்லை.

அவர் அதிகப்படியாக செய்தது, இன்று (14.05.24) வேட்பாளர் மனு தாக்கல் செய்வதற்கு முன் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் விட்ட முதலை கண்ணீர் மட்டுமே.

இது குறித்து காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது X தள பக்கத்தில்,

“கடந்த 10 ஆண்டுகளாக வாரணாசிக்கு செய்தது என்ன?

கங்கை நதியை தூய்மை செய்கிறோம் என ரூ. 20,000 கோடி செலவு செய்த நிலையிலும், கங்கை தூய்மையாக இல்லையே ஏன்?

மோடி, தான் தத்தெடுத்த மாநிலங்களை, கைவிட்டது எதற்கு?

வாரணாசியில் மகாத்மா காந்தியின் பெருமையை அழிக்க மோடி திட்டமிடுவது ஏன்?

வாரணாசி துறைமுகம் அதானிக்கு தாரைவார்க்கப்பட்டது எதற்கு?

வாரணாசியில் கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சி புரியும் மோடி, ஒரு பள்ளி அல்லது மருத்துவமனையை கூட திறக்காதது, ஏன்?

வாரணாசியில் 25 பேர், மனித கழிவு நீக்க வேலை செய்ததால் உயிரிழக்க நேர்ந்ததே, ஏன்?” என்ற கேள்விகளை முன்வைத்துள்ளார்.

எனினும், இவை எதற்கும் விடையளிக்காமல், அலங்காரங்களில் கவனம் செலுத்துவதும், ரோட் ஷோ நடத்துவதும் என முழுநேர வேலைபாட்டில் ஈடுபட்டு வருகிறார் மோடி.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?