விவசாயிகளுக்கு அஞ்சி

நடுங்கிய மோடி

 7,500 மத்திய போலீஸ் பாதுகாப்புடன் பஞ்சாப்பில் பயணம்

வேளாண் சட்டம் ரத்து தொ டர்பாகவும், குறைந்த பட்ச ஆதார விலை உள்ளிட்ட 13 கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரியும் பஞ்சாப், ஹரியானா, உத்தரப்பிரதேச விவ சாயிகள் தில்லி எல்லையில் இரண்டு கட்டமாக போராட்டம் நடத்தினர். 


இந்த இரண்டு கட்ட போராட்டத்திலும் மோடி அரசு நடத்திய தாக்குதலில் 880க்கும் மேற் பட்ட விவசாயிகள் உயிரிழந்த நிலையில், பல ஆயிரம் விவசாயி கள் காயமடைந்தனர்.


 முதல் கட்டத்தை போன்றே இரண்டாம் கட்ட போராட்டத்திலும் ஒன்றிய மற்றும் ஹரியானா பாஜக அரசு கள் கொடூரத் தாக்குதல்கள் மூலம் தில்லி எல்லையில் நடைபெற்ற விவசாயிகள் போராட்டத்தை ஒடுக்க முயன்றன. 

ஆனால் பஞ்சாப் விவ சாயிகள் உறுதியாக தில்லி - ஹரி யானா எல்லைப் பகுதியான ஷம்பூ எல்லையில் கடந்த 3 மாதத்திற்கு மேலாக போராடி வருகின்றனர். 

இந்நிலையில், ஷம்பூ எல்லை யில் விவசாயிகளின் போராட்டம் 100ஆவது நாளை எட்டியுள்ளது. 

இதனையொட்டி பஞ்சாப் மாநிலத் தில் (மே 23 - பாட்டியாலா, மே 24 - குர்தாஸ்பூர் மற்றும் ஜலந்தர்) மக்க ளவை தேர்தல் பிரச்சாரத்திற்கு வரும் பிரதமர் மோடிக்கு எதிராக கருப்புக் கொடி போராட்டம் நடத்தப் போவதாக விவசாயிகள் அறிவித்தனர். 

விவசாயிகளின் அறி விப்பால் பிரதமர் மோடி உள்ளிட்ட  பாஜகவினர் அதிர்ச்சியடைந்த நிலையில், 2022 ஜனவரி 5 அன்று  பஞ்சாப் எல்லையில் வந்த வழியி லேயே விரட்டியடிக்கப்பட்ட சம்ப வம் மீண்டும் அரங்கேறக் கூடாது என்பதால் சுமார் 7,500 மத்தியப் படைகளுடன்  பஞ்சாப் சென்றார். 

இதுபோக பஞ்சாப் போலீசாருக்கும் மோடிக்கு பாதுகாப்பு அளிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.


மே 23 அன்று (வியாழன்) மாலை பாட்டியாலா நகருக்கு பிரதமர் மோடி வருகை தருவதாக அம் மாநில பாஜகவினர் அறிவித்த நிலையில், வியாழனன்று மாலை முதலே பஞ்சாப் மாநில எல்லை, பாட்டியாலா நகரின் எல்லை, சுங்கச்சாவடிகள், நகரின் உள்பகுதி என அனைத்து இடங்களிலும் விவ சாயிகள் கருப்புக் கொடிகளுடன் குவிந்தனர்.

 ஆனால் பாட்டியாலா பகுதி முழுவதும் மத்தியப் படை களின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டதாலும், உள்பகுதியில் பஞ்சாப் போலீசாரின் தனிப்பட்ட பாதுகாப்பாலும் விவசாயிகள் அனைத்து இடங்களிலும் தடுத்து நிறுத்தப்பட்டனர். மேலும் பாட்டியா லாவில் அனைத்து வகை போக்கு வரத்துகளும் துண்டிக்கப்பட்டன. இதனால் பாட்டிலா தனித் தீவாக மாறியது.  


பஞ்சாப்பில் பிரதமர் மோடிக்கு ஆதரவாக வந்த பாஜகவினரை விட மத்திய மற்றும் மாநில போலீ சாரின் தலைகள் தான் அதிகம் காணப்பட்டன.

 பஞ்சாப் எல்லை முதல் பாட்டியாலா வரை மத்திய படைகள் மற்றும் பஞ்சாப் போலீ சார் என சுமார் 10,000 பேர் இருந் தனர். இந்த எண்ணிக்கை பாட்டி யாலாவில் உள்ள பாஜகவில் உள்ள உறுப்பினர்களை விட அதிகம் ஆகும். 

குறிப்பாக பிரச்சா ரக் கூட்டங்களில் மோடிக்கு ஆதர வாக திரண்டவர்களை விட போலீ சாரே அதிகமாக இருந்தனர்.


மேலும், தேர்தல் காலம் என்ப தால் பிரதமர் மோடி செல்லும் இடங்களிலெல்லாம் வாகனத்தை மெதுவாக இயக்கி, மக்கள் கூட் டத்திற்கு கை காட்டி செல்வார். 

ஆனால் பஞ்சாப்பில் ஹெலிகாப் டரில் இருந்து இறங்கியவுடன் பிரத மர் மோடியின் வாகனம் விவசாயி களுக்கு அஞ்சி மின்னல் வேகத்தில் பாய்ந்து பிரச்சார மேடைக்குச் சென்றது. 

இந்தியதேர்தல்ஆணையம்.இதுவரை நடந்த ஐந்து கட்ட மக்களவைத்தேர்தல் வாக்குப்பதிவு விழுக்காடு விபரங்களை வெளியிட்டுள்ளது.

--->இங்கே சொடுக்கிப் பார்க்லாம்.<---


இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?