எல்லாமும் அவரே..!


 மாயமான வங்கதேச எம்.பி.அன்வருல் கொல்கத்தாவில் கொலை.உடலத்தை தேடும் காவல்துறை.வங்கதேசத்தை சேர்ந்த 3 பேர்கள் கைது.

ஈரான் அதிபர் ரைசியின் உடல் இன்று அடக்கம் .

தமிழ்நாடு மின்வாரியத்திற்கு அதிமுக ஆட்சியில் நிலக்கரி இறக்குமதியில் முறைகேடு அதானி ஊழல் குறித்து விசாரணை:- ராகுல்காந்தி .

நான் மனிதப்பிறவியே இல்லை.கடவுள் தான் என்னை பூமிக்கு அனுப்பினார்; மோடி பரபரப்பு பேச்சு.

ஆந்திராவில் தேர்தலின்போது வன்முறை வாக்குப்பதிவு இயந்திரத்தை உடைத்த எம்எல்ஏ கைது.

நிதிப் பற்றாக்குறை ஒன்றிய அரசுக்கு ரூ.2.11 லட்சம் கோடி அள்ளிக் கொடுத்த ரிசர்வ் வங்கி .திவாலாகும் நிலை.


ஆயிரம்,இரண்டாயிரம் கொடுத்து கால் கடுக்க வரிசையில் நின்று டிக்கெட் வாங்கும்  கிறுக்கன்களுக்கு பத்து ரூபாய் கொடுத்து பஸ் டிக்கெட் எடுக்க வக்கத்தவனுங்களா?கிரிக்கெட் பைத்தியத்தை ஊக்குவிக்கக கூடாது அரசு.





எல்லாமும் அவரே..!

நாடாளுமன்ற தேர்தல் மும்முரமாக நடந்து வரும் சூழலில், கடந்த மார்ச் 31 முதல் மே 14 வரை, 41 நேர்காணல்களை தந்துள்ளார் மோடி.

ஆனால், 41 நேர்காணல்களில் இடம்பெற்றிருப்பது, நாட்டை முன்னேற்றி செல்கிற கருத்துகளோ, மக்கள் சந்தித்து வரும் சிக்கல்களை மீட்டெடுக்கும் திட்டங்களோ, அல்லது மோடியால் முன்மொழியப்படும் வெறுப்பு பேச்சுகள் குறித்த கேள்விகளோ இல்லை.

மாற்றாக, பிரச்சார மேடைகளில் பேசுவது போன்ற மோடியின் பொய்களும், சில பல நாடகங்களும் மட்டுமே நேர்காணல்களின் உட்கருத்தாய் அமைந்துள்ளன.

கேமரா ரோல் என்றதும், கண்ணீர் விடுவதும், ‘இஸ்லாமியர்களை வேறுபிரித்து பேசினால், நான் பொது வாழ்வில் இருக்கவே தகுதியவற்றவன்’ என்ற வாய்க்கூசாத பொய்களுமே அதிகளவில் காணப்பட்டு வருகிறது.

கேள்வியும்  நானே, பதிலும் நானே : மோடியின் ஜோடிக்கப்பட்ட நேர்காணல்கள், வெற்று பேச்சுகள்!

இதனை சகித்துக்கொள்ளும் பத்திரிகையாளர்களுக்கு மட்டுமே, நேர்காணல் தந்து வருகிறார் மோடி.

காரணம், அவர்கள் தான் உண்மை சரிபார்த்து முறையிட மாட்டார்கள். மோடியின் நாடகங்களை கலைக்கும் வகையில் அடுக்கடுக்கான கேள்விகளை முன்வைக்க மாட்டார்கள். கேள்விகளுக்கு விடை கிடைக்காவிட்டாலும், கேள்விக்கு சற்றும் தொடர்பில்லாத விடையை மோடி தந்தாலும், கண்டுகொள்ள மாட்டார்கள் என்பதே.

அதில் வெகு சிலர் மட்டுமே, மணிப்பூர் கலவரம், தேர்தல் பத்திரம், இஸ்லாமியர்கள் மீதான வெறுப்பு குறித்து கேள்வி எழுப்பினர். ஆயிரக்கணக்கான பெண்களுக்கு பாலியல் வன்கொடுமை செய்த, பா.ஜ.க கூட்டணி மக்களவை வேட்பாளர் பிரஜ்வல் ரேவண்ணா குறித்து, மூன்றே நேர்காணலில் தான் கேள்விகள் எழுப்பப்பட்டன.

ஆனால், குடியுரிமை திருத்தச் சட்டம், அக்னிபாத் திட்டம் உள்ளிட்ட பல தேசிய சிக்கல்களுக்கு எதிராக கேள்விகளே எழுப்பப்படவில்லை.

எனினும், கேட்கப்பட்ட கேள்விகளுக்காவது சரியான விடை கொடுத்தாரா மோடி என்றால், அதுவும் இல்லை.

கேட்டது ஒன்று, கிடைத்தது மற்றொன்று என்பது போல, தனக்கேற்ற வகையில், வழக்கம் போல இல்லாத பல சிக்கல்களை பேசி, அதற்கு காங்கிரஸ் தான் காரணம் என்று பழிசூட்டும் வேலையையே செய்தார் மோடி.

இதற்கு நேர்காணல் செய்த பத்திரிகையாளர்களும், இடைமறித்து, மோடியின் பேச்சை உண்மையுடன் ஒப்பிட்டு தருக்கமிடவில்லை. கேட்கப்பட்ட கேள்விகளுக்கு விடை கிடைக்காவிட்டாலும், அது குறித்து கவலை கொள்ளாமல், மோடி கூறுவது தான் விடை, மோடி பேசுவது தான் உண்மை என்பது போல நேர்காணல் செய்பவர்கள் என்பதை மறந்து பார்வையாளர்களாக தங்களை அமைத்து கொண்டனர்.

இதனால், மணிக்கணக்கில் பதிவான மோடியின் காணொளிகள், பொய்களால் மட்டுமே நிரம்பியிருந்ததால், அதனை காணவும் மக்கள் ஈடுபாடு கொள்ளவில்லை.

இதன் வழி, மோடியின் சராசரி பார்வையாளர்களும், தற்போது வெகுவாக குறையத் தொடங்கியுள்ளது.

அதே சூழலில், சுமார் 41 நேர்காணல் தர நேரம் இருக்கிற மோடிக்கு, ராகுல் காந்தியிடம் தருக்கமிட நேரமில்லையா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

சலிக்காமல் பேசப்படும் பொய்கள் அம்பலப்பட்டுவிடும் என்ற பயம் தான் காரணமா என்ற கேள்வியும் மறுபக்கம் வலுக்கத்தொடங்கியுள்ளது.

எத்தனை கேள்விகள், கண்டனங்கள் எழுந்தாலும், ராகுல் காந்தியுடன் தருக்கமிடுவது குறித்து, தெரியாமல் கூட வாய் திறக்க மறுத்து அல்லது பயந்து வருகிறார் மோடி.


ரூ. 6 ஆயிரம் கோடி கூட்டுக் கொள்ளை!


தமிழ்நாடு மின்சார வாரி யத்திற்கு தரம் குறைந்த நிலக்கரி யை 3 மடங்கு கூடுதல் விலைக்கு விற்பனை செய்து, அதானி நிறு வனம் ரூ. 6 ஆயிரம் கோடியை கொள்ளையடித்திருப்பது தெரிய வந்துள்ள நிலையில், அதானி நிறு வனம் மீதும், இந்த பகல் கொள்ளையில் மாநில அதிமுக - ஒன்றிய பாஜக அரசுகளுக்கு இருந்த கூட்டு குறித்தும் விசார ணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் ..

பாஜக ஆசியுடன், தமிழ் நாட்டில் அதிமுக ஆட்சி நடைபெற்ற காலத்தில், இந்தோனேசியாவில் இருந்து இறக்குமதி செய்த தரம் குறைந்த நிலக்கரியை, மூன்று மடங்கு அதிக விலைக்கு வாங்கி யதன் மூலம் தமிழ்நாடு மின்வாரி யத்திற்கு பல ஆயிரம் கோடிகள் இழப்பு ஏற்பட்டிருப்பது புதிய  ஆவணங்களின் மூலம் அம்பல மாகியுள்ளது.

குஜராத் மாநில முதல்வராக மோடி இருந்தபோது அதானி யின் துறைமுகத்திற்கு ஒரு ச.மீ.,  1 ரூபாய் என மிகக் குறைந்த விலை யில் ஏராளமான நிலம் அள்ளித் தரப்பட்டது. 

2014 ஒன்றிய ஆட்சி யில் பிரதமர் மோடி அமர்ந்த பின்னர் கள்ளக்கூட்டு முத லாளித்துவ நடவடிக்கைகள் புதிய உச்சத்தை தொட்டன. உலக பணக்காரர்களில் 650-ஆவது இடத்தில் இருந்த அதானி ஏராள மான சொத்துக்களை குவித்து உலகின் முதல் பணக்காரர்கள் பட்டியலுக்கு சென்றார். 

இந்த காலகட்டத்தில் அதானி தொடர்பாக வந்த ஏராளமான ஊழல்கள் முழுமையான விசார ணையின்றி உள்ளன. அதில் மிக முக்கியமான ஊழல், நிலக்கரி இறக்குமதி ஊழலாகும்.


புதிதாக வெளிவந்துள்ள ஆவணங்களின்படி, தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு நிலக்கரி விற்பனை செய்ததில் மெகா  ஊழல் நடந்திருப்பது அம்பல மாகியுள்ளது. 

2014 ஆம் ஆண்டில் மட்டும் தமிழ்நாடு மின்சார வாரி யத்திற்கு பல லட்சம் மெட்ரிக் டன் நிலக்கரியை அதானி வாங்கிக் கொடுத்துள்ளார். இடைத்தரக ராக மட்டும் இருந்துகொண்டு குறைந்த விலையில் வாங்கிய தரமற்ற நிலக்கரியை தரமானது என்று அதிக விலைக்கு விற்ப னை செய்திருக்கிறார். 

ஓ.சி.சி.ஆர்.பி என்ற இணையதளம் வெளியிட்டிருக்கும் விபரங் களின்படி இந்தோனேசியாவில் நிலக்கரி வாங்கப்பட்ட விலை மற்றும் அதன் தரம் தொடர்பான அனைத்தும் அம்பலத்திற்கு வந்துள்ளன.

அதன்படி 2014 ஆம் ஆண்டில் ஜான்லின் என்ற நிறுவனம் 3500 கிலோ கலோரி தரம் கொண்ட நிலக்கரியை இந்தோனேசிய சுரங்கங்களில் இருந்து  ஒரு மெட்ரிக் டன் 28 டாலர் என்ற விலையில் வாங்கியுள்ளது.

 அதே நிலக்கரியை அதானி நிறுவனம் 6000 கிலோ கலோரி என ஆவணங்களை மாற்றி தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு ஒரு மெட்ரிக் டன் 91 டாலர் விலைக்கு விற்றுள்ளது. 

இதன் மூலம் ஒரு டன்னுக்கு 60 டாலர் அதானி நிறுவனம் கொள்ளை யடித்துள்ளது.

2014 ஆம் ஆண்டில் மட்டும்  24 முறை இதுபோல கப்பல் களில் நிலக்கரி வந்திருப்பதாக ஓ.சி.சி.ஆர்.பி திரட்டிய ஆவ ணங்கள் காட்டுகின்றன.

 ஓராண்டில் 15 லட்சம் டன் அள விற்கு நிலக்கரி விற்பனையில் ரூ. 6 ஆயிரம் கோடி முறைகேடு நடந்துள்ளது. தொடர்ந்து பல ஆண்டுகளாக நடைபெறும் நிலக்கரி வியாபாரத்தில் பல லட்சம் கோடி ரூபாய் ஊழல் நடந்திருக்க வாய்ப்புள்ளது.

இந்த மெகா ஊழலால் தமிழ்நாடு மின்சார வாரியம் கடனில் மூழ்கி மீள முடியாமல் தத்தளித்து வருகிறது. 

மேலும் நஷ்டத்தை ஈடு செய்ய மின்சார கட்டணம் உயர்த்தப்பட்டு மக்கள் தலையில் தொடர்ந்து சுமை ஏற்றப் பட்டு வருகிறது. இதுமட்டுமின்றி தரம் குறைந்த நிலக்கரியை பயன் படுத்தியதால் ஏற்பட்ட சுற்றுச் சூழல் பாதிப்பால் பொதுமக்க ளுக்கு சுகாதார கேடுகளும் ஏராள மான உயிரிழப்புகளும் ஏற்பட்டு ள்ளதாக ஆவணங்கள் வெளிப்படுத்தியுள்ளன.

இத்தகைய தரம் குறைந்த நிலக்கரியை மூன்று மடங்கு அதிக விலை கொடுத்து வாங்கி யதற்கு அதிமுக – பாஜக ஆட்சி யாளர்கள் முழுமையான பொறுப் பேற்க வேண்டும். 

அதானியின் பகல் கொள்ளையில் அதிமுக – பாஜக ஆட்சியினர் பங்காளிகள் என்பதில் ஐயமில்லை.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வினேஷ் போகத் வென்றார்!

2025ல் தங்கம் விலை

முடிவுக்கு வருகிறதா?