என்றும் அமைதியாகட்டும்
மத்தியப்பிரதேசத்தில் உள்ள பாந்தவ்கர் புலிகள் காப்பகத்தில் 8 காட்டு யானைகள் உயிரிழப்பு. பரமக்குடி தேவர்குரு பூசைக்கு கட்டப்பட்ட இடைஞ்சலான கொடிகள்,பேனர்களை அகற்றும் போது மின்சாரம் தாக்கி காவல் உதவி ஆய்வாளர் சரவணன் உயிரிழப்பு. மதுரையில் வெள்ள பாதிப்பை தடுக்க ரூ.11.9 கோடி நிதி : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு. என்றும் அமைதியாகட்டும்! இந்திய - சீன எல்லையில் இருநாட்டுப் படைகளும் தங்களது நாடு களுக்குள் நகரத் தொடங்கி இருப்பது மகிழ்ச்சிக்குரிய செய்தியே ஆகும். இதன் மூலமாக உலகுக்கு ‘அமைதியே சூழ்க’ என்று இரு நாடுகளும் சொல்லும் உயரத்தைப் பெற்றுள்ளன. கடந்த நான்காண்டு காலமாக இருந்த மோதல் போக்குக்கு முற்றுப்புள்ளி வைப்பதாக இந்த நகர்வு அமைந்துள்ளது. ரஷ்யாவில் நடைபெற்ற பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் இந்தியப் பிரதமர் மோடி அவர்களும், சீன அதிபர் ஷி ஜின் பிங் அவர்களும் நடத்திய பேச்சுவார்த்தையில் எடுக்கப்பட்ட இறுதி முடிவின்படி இந்த நகர்வு நடைபெற்றுள்ளது. ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்ற பேச்சுவார்த்தை இது. கடந்த அ...