என்றும் அமைதியாகட்டும்

 மத்தியப்பிரதேசத்தில் உள்ள பாந்தவ்கர் புலிகள் காப்பகத்தில் 8 காட்டு யானைகள் உயிரிழப்பு.

பரமக்குடி  தேவர்குரு பூசைக்கு கட்டப்பட்ட இடைஞ்சலான கொடிகள்,பேனர்களை அகற்றும் போது  மின்சாரம் தாக்கி காவல் உதவி ஆய்வாளர் சரவணன் உயிரிழப்பு.
மதுரையில் வெள்ள பாதிப்பை தடுக்க ரூ.11.9 கோடி நிதி : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு.



என்றும் அமைதியாகட்டும்!

இந்­திய - சீன எல்­லை­யில் இரு­நாட்­டுப் படை­க­ளும் தங்­க­ளது நாடு­ க­ளுக்­குள் நக­ரத் தொடங்கி இருப்­பது மகிழ்ச்­சிக்­கு­ரிய செய்­தியே ஆகும். 

இதன் மூல­மாக உல­குக்கு ‘அமை­தியே சூழ்க’ என்று இரு நாடு­க­ளும் சொல்­லும் உய­ரத்­தைப் பெற்­றுள்­ளன. கடந்த நான்­காண்டு கால­மாக இருந்த மோதல் போக்­குக்கு முற்­றுப்­புள்ளி வைப்­ப­தாக இந்த நகர்வு அமைந்­துள்­ளது.

ரஷ்­யா­வில் நடை­பெற்ற பிரிக்ஸ் உச்சி மாநாட்­டில் இந்­தி­யப் பிர­த­மர் மோடி அவர்­க­ளும், சீன அதி­பர் ஷி ஜின் பிங் அவர்­க­ளும் நடத்­திய பேச்­சு­வார்த்­தை­யில் எடுக்­கப்­பட்ட இறு­தி ­மு­டி­வின்படி இந்த நகர்வு நடை­பெற்­றுள்­ளது.

ஐந்து ஆண்­டு­க­ளுக்­குப் பிறகு நடை­பெற்ற பேச்­சு­வார்த்தை இது.

கடந்த அக்­டோ­பர் 21 ஆம் நாள் இரு­நா­டு­க­ளுக்­கும் ஒரு ஒப்­பந்­தம் நிறை­வே­றி­யது. கிழக்கு லடாக் எல்­லை­யில் டெம்­சோக், டெப்­சாங் சம­வெளி பகு­தி­யில் இருந்து படை­களை விலக்­கிக் கொள்­வது என இரு நாடு­க­ளும் ஒப்­புக் கொண்­டது. 

இந்த ஒப்­பந்­தத்­தின்­படி இரு நாட்டு படை­க­ளா­லும் அமைக்­கப்­பட்­டுள்ள கூடா­ரங்­களை அகற்ற வேண்­டும். 

ராணு­வக் கரு­வி­க­ளை­யும், பொருட்­க­ளை­யும் அங்­கி­ருந்து பின்­பு­ற­மாக எடுத்­துச் செல்ல வேண்­டும். மோத­லைத் தவிர்க்க இரு­நாட்டு ராணுவ வீரர்­க­ளும் கூட்­டாக கண்­கா­ணிப்­புப் பணி­க­ளைச் செய்ய வேண்­டும். 

அத­ன­டிப்­ப­டை­யில் அக்­டோ­பர் 25 முதல் படை­களை விலக்­கிக் கொள்­ளத் தொடங்கி இருக்­கி­றார்­கள்.

2014 முதல் இந்­திய எல்­லைக்­குள் சீன ஊடு­ரு­வல் அதி­க­மாகி வந்­தது. ஒரு பக்­கம் பேச்­சு­வார்த்­தை­களை நடத்­திக் கொண்டே இன்­னொரு பக்­கம் இது­போன்ற செயல்­க­ளும் நடை­பெற்று வந்­தன. 

கடந்த பத்­தாண்­டு ­க­ளில் 18 முறை இரு­நா­டு­க­ளுக்­கும் நேர­டிப் பேச்­சு­வார்த்தை நடை­பெற்­றும் உள்­ளது. அதே நேரத்­தில் மோத­லும் தொடர்ந்­தது.

2020 ஆம் ஆண்டு நடை­பெற்ற மோத­லில் இந்­திய தரப்­பில் 20 வீரர்­க­ளும், சீன தரப்­பில் 40 வீரர்­க­ளும் பலி­யா­ன­வர்­கள். கிழக்கு லடாக்­கில் கல்­வான் பள்­ளத்­தாக்­கில் இந்த மோதல் நடை­பெற்­றது. 

இதில் இருந்து இரு நாடு­க­ளும் எல்­லைப் பகு­தி­யில் ராணுவ வீரர்­க­ளைக் குவித்து வந்­தது. சீன நாட்டு செய­லி­க­ளுக்கு இந்­தியா தடை விதித்­தது.

கடந்த ஏப்­ரல் மாதம் அரு­ணாச்­சல பிர­தே­சத்­தில் 30 இடங்­க­ளுக்கு சீன மொழி­யில் பெயர்­கள் வைத்து அதிர்ச்­சி­யைக் கொடுத்­தது சீனா.

2017 ஆம் ஆண்டு 6 பகு­தி­க­ளுக்­கும்,

2021 ஆம் ஆண்டு 15 பகு­தி­க­ளுக்­கும்,

2023 ஆம் ஆண்டு 11 பகு­தி­க­ளுக்­கும்,

2024 ஆம் ஆண்டு 30

பகு­தி­க­ளுக்கு பெயர் வைத்­தது சீனா.

அரு­ணா­ச­லப் பிர­தே­சத்­துக்கு சீன நாடு வைத்­துள்ள பெயர் ‘ஷாங்­னான்’ என்­பது ஆகும். தெற்கு திபெத்­தின் ஒரு பகுதி இது என்­றும், சீனா­வின் ஒருங்­கி­ணைந்த பகுதி என்­றும் சீனா உரிமை கொண்­டாடி வரு­கி­றது. 

“சீனா­வின் பகு­தி­க­ளுக்கு உரி­மை­கள் கோரு­தல் மற்­றும் இறை­யாண்மை உரி­மை­க­ளுக்கு தீங்கு விளை­விக்­கும் நோக்­கத் ­தில் அந்­நிய நாட்டு மொழி­க­ளில் உள்ள இடங்­க­ளின் பெயர்­கள் நேர­டி­யாக மேற்­கோள் காட்­டப்­ப­டவோ அல்­லது அங்­கீ­கா­ர­மின்றி மொழி­பெ­யர்க்­கப்­ப­டவோ கூடாது” என்­பது சீனா­வின் அர­சி­ய­ல­மைப்­புச் சட்­டத்­தின் 13 ஆவது பிரி­வாம். அந்­தப் பிரி­வின்­படி இந்த பெயர் மாற்­றத்தை அந்த நாடு செய்­த­தாம்.

அப்­போது இந்­திய வெளி­யு­ற­வுத் துறை அமைச்­சர் ஜெய்­சங்­கர் கூலாக சொன்ன பதில் என்ன தெரி­யுமா?

 “உங்­கள் வீட்­டுக்கு நான் பெயரை மாற்­று­வ­தன் மூலம், அது எனக்­குச் சொந்­த­மாகி விடுமா? 

இந்த மாநில இடங்­க­ளுக்கு பெயரை மாற்­று­வ­தன் மூலம் எது­வும் நடந்­து­வி­டாது” என்று சொன்­னார்.

அதே­நே­ரத்­தில் இந்­திய – சீன பேச்­சு­வார்த்­தை­யும் மறு­மு­னை­யில் நடை­பெற்று வந்­தது. பாங்­காங் ஏரி­யின் வடக்கு, தெற்­குப் பகு­தி­யில் தங்கி இருந்த படை­கள் 2021 ஆம் ஆண்டு விலக்­கிக் கொள்­ளப்­பட்­டன. 

கோக்ரா பகு­தி­யில் இருந்த படை­கள் 2022 ஆம் ஆண்டு விலக்­கிக் கொள்­ளப்­பட்­டன. இப்­போது கிழக்கு லடாக்­கில் படை விலக்­கல் நடந்­துள்­ளது. இதன்­பி­றகு எல்­லை­யில் போர் பதற்­றம் தணி­யும் என்று இந்­திய வெளி­யு­றவு அமைச்­சர் ஜெய்­சங்­கர் சொல்லி இருக்­கி­றார்.

இந்­திய - – சீன எல்­லைப் பகு­தி­யில் அமைதி திரும்­பு­வ­தற்­கான முதல் நட­வ­டிக்­கை­யாக இதனை பார்க்க வேண்­டும். 

எல்­லை­யில் பதற்­றம் தணி­யும். இதன் பிறகு எல்­லை­களை எவ்­வாறு நிர்­வ­கிப்­பது என்­பது குறித்து விவா­திக்­கப்­ப­டும் என்று அமைச்­சர் ஜெய்­சங்­கர் சொல்லிஇருக்­கி­றார். 

இந்­தப் பேச்சு மீண்­டும் மோத­லுக்கு வழி­வ­குப்­ப­தாக அமை­யா­மல் பார்த்­துக் கொள்ள வேண்­டும். ‘பரந்த மனத்­து­டன் கருத்­தொற்­றுமை ஏற்­பட்­டுள்­ளது’ என்று பாது­காப்பு அமைச்­சர் ராஜ்­நாத் சிங் சொல்லி இருக்­கி­றார். அதனை செயல்­வ­டி­வத்­தில் நாம் பார்க்கவேண்­டும்.

2020ஆம் ஆண்­டுக்கு முந்­தைய சூழலை உரு­வாக்க வேண்­டும். எல்­லை ­யில் அமை­திக்கு முன்­னு­ரிமை அளிக்க இரு­நாட்­டுத் தலை­வர்­க­ளும்

ஒப்­புக் கொண்­டுள்­ளார்­கள். அதை செயல்­ப­டுத்­திக் காட்ட வேண்­டும்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?