நீதித் துறைக்கு தேவை நீதி?
பிரதமர் மோடியால் ரஷ்ய போரை நிறுத்த உதவ முடியும்: உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி நம்பிக்கை?(முதல்ல காஷ்மீர்,மணிப்பூர்.வன்முறைகளை நிறுத்த மோடியால் முடியுதான்னு பாருங்க!)
”பல இலட்சம் பேர் முன்னிலையில் நடந்த படப்பிடிப்புதான் நடிகர் விஜய்யின் மாநாடு” - திருமாவளவன் .
நீதித் துறைக்கு தேவை நீதி?
நீதிமன்றங்களில் வழக்குகளின் எண்ணிக்கை அதிகரிப்பது நீதித்துறை மீதான மக்களின் நம்பிக் கையை வெளிப்படுத்துகிறது என்று உச்சநீதிமன்ற நீதிபதி சி.டி.ரவிக்குமார் கூறியுள்ளார்.
தென் மண்டல நீதிபதிகளுக்கான இரண்டு நாள் மாநாடு கோவையில் நடைபெற்றுள்ளது. இந்த மாநாட்டில் பேசிய அவர், நீதிமன்றத்தை நாடி வரும் மக்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு காண வேண்டியது நீதித்துறையின் முக்கிய கடமை.
இந்த பொறுப்பை நிறைவேற்ற நீதித்துறையினர் இணைந்து செயல்பட வேண்டும் என்று கூறி யுள்ளது வரவேற்கத்தக்கது.
இதே நிகழ்வில் பேசிய தேசிய நீதித்துறை அகாடமி இயக்குநர் அனிருத்தா போஸ், இது போன்ற மாநாடுகள் நிலுவையில் உள்ள வழக்கு களுக்கு விரைந்து தீர்வு காண உதவும் என்று கூறி யுள்ளதும், சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம் பேசுகையில், வழக்குகள் அதிகமாக இருப்பதால் அதிகப் பணிச்சுமையை எதிர்கொள்ள வேண்டியுள்ளது என்று கூறியுள்ளதும் ஒன்றோடொன்று இணைத்து பார்க்கத்தக்கவை.
இந்தாண்டு ஜனவரியில் உச்சநீதிமன்றத்தில் 80,439 வழக்குகள் நிலுவையில் உள்ளதாக கூறப்பட்டுள்ளது. பல்வேறு உயர்நீதிமன்றங்களில் 62ஆயிரம் வழக்குகள் நிலுவையில் உள்ளதாக வும், இதில் 3 வழக்குகள் 1952லிருந்தே நிலுவையில் உள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதுதவிர மாவட்ட மற்றும் சார்நிலை நீதிமன்றங்கள் என மொத்தம் 58.59 லட்சம் வழக்குகள் நிலுவையில் உள்ளன.
வழக்குகள் நிலுவையில் இருப்பது என்பது வெறும் புள்ளி விபரம் அல்ல.
நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வழக்குகளால் விசாரணைக் கைதிகளின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து கொண்டே வருகிறது.
வழக்கை விசாரித்து தண் டனை அளிக்கப்படாமல் சிறையில் விசாரணை கைதியாக அடைத்து வைத்திருப்பது என்பதும் ஒரு வகையில் அநீதியே ஆகும்.
பாதிக்கப்பட்ட மக்களின் கடைசிப் புகலிட மாக நீதித்துறையே உள்ளது. மக்களுக்கு சட்டப் படியான நீதி, சரியான நேரத்தில் கிடைப்பதை உறுதி செய்வது அவசியம்.
நரேந்திர மோடி அரசு தன்னுடைய கெடு நோக்கத்திற்கேற்ப சட்டங்க ளை மாற்றுகிறது.
அரசியல் சட்டத்தை பாது காக்கும் வகையிலும், நீதித்துறையின் சுயேச்சைத் தன்மையை பாதுகாக்கும் வகையிலும் பாதிக் கப்பட்டவர்களுக்கு விரைந்து நீதி கிடைக்கும் வகையிலும் உரிய சீர்திருத்தங்கள் செய்யப் படுவது அவசியமாகும்.
ஜி.எஸ்.டி யால்
முடங்கிய தொழில்கள்!
மூலப்பொருட்களுக்கு 18 சதவீத ஜிஎஸ்டி விதிப்பு, பிளாஸ்டிக் பயன்பாடு அதிகரிப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் பாத்திர உற்பத்தி மற்றும் விற்பனை பாதிக்கப்பட்டு தொழில் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக உற்பத்தியாளர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். திருப்பூர் வடக்கு பகுதியில் பாத்திர உற்பத்தி மற்றும் விற்பனை ஆகியவை பிரதானமானதாக இருந்து வருகிறது. அனுப்பர்பாளையம், ஆத்துப்பாளையம், தண்ணீர்பந்தல், அம்மாபாளையம் சுற்று வட்டார பகுதிகளில் 300க்கும் அதிகமான பாத்திர தாயாரிப்பு பட்டறைகள் இருக்கின்றன.
இங்கு சில்வர், பித்தளை, காப்பர் ஆகியவற்றின் மூலம் பாத்திரங்கள் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. அண்டா, பானை, செம்பு, அரிக்கன் சட்டி, பொங்கல் பானை உள்ளிட்டவை இங்கு உற்பத்தி செய்யப்பட்டு தமிழ்நாட்டின் பிற மாவட்டங்களுக்கும், அண்டை மாநிலங்களான கேரளா, ஆந்திரா, கர்நாடகா, தெலங்கானா உள்ளிட்ட பகுதிகளுக்கும் அனுப்பப்பட்டு வந்தது.
கடந்த சில வருடங்களுக்கு முன்பு வாரம் சராசரியாக ரூ.1 கோடி வரை வர்த்தகம் நடைபெற்று வந்ததாக கூறும் பாத்திர உற்பத்தியாளர்கள், 2017ம் ஆண்டு ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்ட பிறகு பாத்திர தொழில் பாதிப்பை சந்தித்து வருவதாக வேதனை தெரிவித்துள்ளனர்.
பிளாஸ்டிக் பொருட்களின் உபயோகம் அதிகரிப்பு, மறைந்து வரும் தீபாவளி சீர்வரிசை முறை, மூலப்பொருட்கள் விலையேற்றம், ஜிஎஸ்டி வரி விதிப்பு உள்ளிட்ட காரணங்களால் பாத்திர உற்பத்தி மற்றும் விற்பனை பாதிக்கப்பட்டு வருகின்றது.