சனி, 30 நவம்பர், 2013

"மின் உற்பத்தி தடங்கல்" உண்மையில் யார் காரணம்?

தமிழகமெங்கும் மின்தடை தலையை விரித்துப்போட்டு ஆடுகிறது. ஊர் முழுக்க 12 மணி நேரம் இந்த ஆட்டம் நடந்தாலும் சென்னையில் மட்டும் 2 மணி நேரம்.ஆனால் ஏற்காட்டில் மின்வெட்டு என்றால் என்னவென்று கேட்கும் நிலையில் ஏற்காடு தொகுதியே ஒளிர்கிறது.அதுவும் வரும் 4ம் தேதி வரைதான்.
suran
தமிழக மின் வெட்டுக்கு திமுக-காங் கூட்டணிதான் காரணம் என்று ஜெயலலிதா கண்டு பிடித்துள்ளார்.
அதற்கே அவருக்கு மூன்றாண்டுகள் ஆகியுள்ளது.பொறுப்புடன் குற்றம் சாட்டத்தான் இந்த கால அவகாசம்.
ஸ்டாலின் மேயாராக இருந்ததுதான் இன்றைய டெங்கு கொசுக்கடிக்கு காரணம் என்ற சைதை துரை சாமியாரின்
அதிரடி குற்றசாட்டுக்கு அம்மாவின் குற்றசாட்டு கொஞ்சம் குறைவான மதிப்பெண்தான்.
சரி.
திமுக ஆட்சி அலங்கோலத்தை சீராக்கத்தானே மக்கள் உங்களை கோட்டையில் அமர்த்தியுள்ளார்கள்?
மூன்றாண்டுகளாக திமுக ஆட்சியையும்,கலைஞரையும்  குற்றம் சாட்டுவதிலும்.அவர்கள் மீது நிலபகரிப்பு வழக்கு போட்டதையும்,அவதூறு வழக்கை போட்டதையும் தவிர வேறு சாதனையை இந்த ஜெயா அரசு செய்துள்ளதாகத் தெரியவில்லையே.
திட்டுவதை தவிர தமிழக முன்னேற்றத் திட்டங்களை இதுவரை ஒன்றையும் போட்டதாக கண்ணுக்கெட்டிய தூரம் வரை காணோம் .
இதுவரை பத்திரிகைகளில் ஒரு பக்க விளம்பரங்களாக தந்து திறந்து வைத்த பாலங்கள்,கல்லுரிகள்,கூடங்க்கள்,சாலைகள்,காவல்துறை கட்டிடம் போன்றவை அனைத்துமே திமுக ஆட்சிக்கால திட்டங்கள் மட்டுமின்றி அந்தைய ஆதிகாலத்திலேயே 90% பணிகள் முடிந்தவை என்பதுதானே கசப்பான உண்மை.
அதை விடுங்கள்.ஏற்காட்டில் முன்னாள் துணை முதல்வர்  மு.க.ஸ்டாலின் பேசிய பேச்சுக்களை தருகிறோம்.அதற்கு முதல்வர் ஜெயலலிதாவின் பதில் என்ன?

" 10 மணி நேரம் முதல், 18 மணி நேரம் மின்தடை உள்ளது. தி.மு.க., ஆட்சியிலும் மின் தடை இருந்தது. ஆனால், அது, 2 மணி நேரம் தான்.
2006ல், தி.மு.க., ஆட்சி பொறுப்பேற்றதும், வடசென்னை அனல்மின்நிலைய அலகு ஒன்று, அலகு இரண்டு, தூத்துக்குடி, மேட்டூர் அனல்மின் நிலையங்களில், தலா, 600 மெகாவாட் என, 1,800 மெகாவாட் மின் உற்பத்தி செய்யும் திட்டம் வகுக்கப்பட்டது. இதற்காக, 7,280 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. 2008ல் அதற்கான பணிகளும் துவங்கப்பட்டது. கடந்த, 2011ல் ஆட்சி பொறுப்பேற்ற, அ.தி.மு.க., அத்திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்த முயற்சிக்காமல் முடக்கி விட்டது. அதை நிறைவேற்றியிருந்தால், மின்தடை என்ற பேச்சுக்கே இடமில்லாமல் இருந்திருக்கும்.

கருணாநிதியின் திட்டம் எனக் கூறி அதற்கு தடைபோட்டு விட்டார். மேலும், என்.டி.சி., -என்.எல்.சி., பெல் ஆகிய நிறுவனங்கள் மூலம், 4,000 மெகாவாட் மின் உற்பத்தி செய்யவும் திட்டமிட்டோம். அதையும் நிறுத்தி விட்டனர். அனைத்தையும் கிடப்பில் போட்டு விட்டு, மத்திய அரசு மீதும், தி.மு.க., மீதும் பழி சுமத்துகிறார். முதல்வர் ஜெயலலிதா, 8,000 கோடி ரூபாய் மதிப்பீட்டில், உடன்குடியில் மின்சார உற்பத்தி திட்டத்தை துவக்குவதாக அறிவித்தார். ஆனால், இதுநாள் வரையிலும், அத்திட்டத்துக்காக, சல்லி காசு கூட அவர் செலவழிக்கவில்லை. உண்மையை மூடி மறைத்து, பொய் பிரசாரம் செய்கிறார். மத்திய அரசு, தமிழகத்துக்கு பல்வேறு திட்டங்களுக்காக ஒதுக்கிய நிதியை பெற்றுக்கொண்டு, காங்., - தி.மு.க., கூட்டு சதி செய்வதாக கூறுகிறார். மதுரவாயல் திட்டம், சேது சமுத்திர திட்டம், நாற்கர சாலை திட்டம் போன்ற மத்திய அரசு திட்டங்களை செயல்படுத்த விடாமல் தடை போடுகிறாரே, அது யாருடைய சதி என்பது, மக்களுக்கு தெரியும். லாயக்கற்ற, அருகதையற்ற, அ.தி.மு.க., ஆட்சியை அகற்ற மக்கள் உறுதி எடுக்க வேண்டும். இடைத் தேர்தலில், மாறனை வெற்றி பெற செய்யுங்கள்."
இவ்வாறு பேசியுள்ளா ர்.
அதை ஏற்காடு தொகுதியினர் எந்த அளவுக்கு காது கொடுத்து கேட்டுள்ளார்களோ தெரியவில்லை .உங்கள் கீழ்ப்படிதலுள்ள ஊடகங்களும் அதை மக்கள் கவனத்துக்கு கொண்டு செல்லவில்லை.
உங்கள் பரப்புரை கூட்டத்தை முதல் பக்கத்தில் வெளியிட்ட அவை ஸ்டாலினை -அவரின் பரப்புரை செய்திகளை யாரும் அவ்வளவு எளிதில் கண்டு பிடிக்க முடியாதபடிதான் போட்டுள்ளார்கள் 
 
 இடைத் தேர்தலில் கூட்டத்தில் பேசியதற்கு ஸ்டாலின் பதில் தந்துள்ளார்.சட்டமன்றத்தில் வேண்டுமானால் பதில் தர முடியாத அளவு 110 இல் பேசியிருக்கலாம்.
அல்லது பதில் தர முனைவோரை குண்டுகட்டாக வெளியேற்றி இருக்கலாம்.
இது மக்கள் மன்றம் வெறு வழி இல்லை.பதில் சொல்லவேண்டும்.இல்லை என்றாலும் பரவாயில்லை மக்கள் நீங்கள் சொல்லுவதைத்தான் கேட்கிறார்கள்
பாலச்சந்திரன் காணொளிக்காக காத்திருக்கும் ஜெயலலிதா!
ஊடகங்களும் உங்கள் சார்பில்தான் எழுதுகிறார்கள்.
ஸ்டாலின் பதிலும்,அவரின் கேள்விகளும் உங்களை ஒன்றும் செய்யப்போவதில்லை.
ஆனால் அதில் இருக்கும் உண்மை எப்போதும் அப்படியே விட்டு விடாது.என்றாவது உங்கள் ஆட்சிக்கு இடையூறாகி விடும்.
எனவே திமுக சதி .அவர்களால்தான் மி ன்தடை என்பதை எப்படியாவது நிருபித்து விடுங்கள்.
அல்லது
இப்போது அனல் மின் நிலையங்களில் -மின் வாரியத்தில் வேலை பார்ப்போர் அனைவரும் திமுகவினர்தான் ,தொமுச சங்கத்தை செர்ந்தவர்கள் அவர்கள்தான் அரசுக்கு கெட்ட பெயர் வர மின்சாரம் உற்பத்தியாகாமல் தடுக்கிறார்கள்
என்று 110 விதியின் கீழ் ஒரு அறிக்கையை விட்டுப்பாருங்களேன்
அப்படி நீங்கள் செய்தீர்களேயானால் நாங்களும் இரவு -பகல் மின்தடையில் கொசுக்கடியில்  உங்கள் ஜெயா அரசை திட்டாமல் கருணாநிதியை அவர் ஆட்சிக்காலத்தை திட்டிக்கொண்டே இனிவரும் உங்கள் ஆட்சியின் மிச்ச இரண்டாண்டு காலத்தையும்  தள்ளிவிடுவோம்.
========================================================================

ரூ.20 ஆயிரம் கோடி சாரதா சீட்டுக்கம்பெனி ஊழல் பணம் கைமாறியதில் மம்தாவுக்கு தொடர்பு!

பிடிபட்ட திரிணாமுல் எம்.பி., உண்மைகளை அம்பலப்படுத்தினார் !
           


கடைசியில் `பூனைக்குட்டிவெளியே வந்துவிட்டது.’ மேற்குவங்கத்தில். மேற்குவங்க மாநிலத்தையே உலுக்கி எடுக்கும் சாரதாசீட்டுக் கம்பெனி ஊழலில் நெருங்கிய தொடர்புடையவர் முதலமைச்சர் மம்தா பானர்ஜி தான்என்பது அம்மாநில மக்களை -அவரது ஆதரவாளர்களை - அவரது சொந்தக் கட்சியினரை கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. ஏனென்றால் சாரதா சீட்டுக் கம்பெனியிடம், தாங்கள் வேர்வை சிந்தி சம்பாதித்த பணத்தை சிறுக சிறுக சேமித்து செலுத்திய ரூ.20 ஆயிரம் கோடி பணத்தை இழந்திருக்கிறார்கள் மேற்கு வங்க மக்கள். இந்த ஊழலில்மம்தா பானர்ஜிக்கும் தொடர்புஉண்டு என்பதை இடதுசாரி தலைவர்கள் எவரேனும் சொல்லியிருந்தால் ஊடகங்கள் அதற்கு எதிராகஊதித் தள்ளியிருக்கும்; கம்யூனிஸ்ட்டுகளின் சதி என்று மம்தா பானர்ஜியின் கட்சியினர் இன்னும் பல சிபிஎம் தொண்டர்களை வெட்டிச் சாய்த்திருப்பார்கள்.
ஆனால் உண்மையை வெளிச்சத்திற்கு கொண்டு வந்திருப்பது மம்தா பானர்ஜியின் வலதுகரமாகசெயல்பட்ட அவரது சொந்தக்கட்சியின் மிக முக்கியமான நாடாளுமன்ற உறுப்பினர் குணால் கோஷ் ஆவார். சீட்டுக் கம்பெனி ஊழலில் முதலமைச்சரின் பெயரையே குற்றவாளி என்று அவரது வலதுகரமாக செயல்பட்ட ஒருவரே.பத்திரிகையாளர்களிடம் பகிரங்கமாக கூறியிருப்பதை தொடர்ந்து, இந்தஊழல் விவகாரத்தில் சிபிஐ விசாரணைக்கு உடனடியாக உத்தரவிடவேண்டுமென்று மேற்குவங்க இடதுமுன்னணி வற்புறுத்தியுள்ளது.நவம்பர் 27 வியாழனன்று கொல்கத்தாவையே பரபரப்பாக்கியது அந்த சி.டி.(குறுந்தகடு). சாரதா சீட்டுக்கம்பெனி ஊழல்விவகாரத்தில் பிரதான குற்றவாளிகளில் ஒருவரான திரிணாமுல் கட்சி எம்.பி. குணால் கோஷ், இந்தவிவகாரத்தில் தொடர்புடையவர்கள் என்று மிகப்பெரும் பட்டியலை குறிப்பிட்டு விவரங்களை மேற்கண்ட குறுந்தகட்டின் மூலம்வெளியிட்டிருக்கிறார்.
அந்த குறுந்தகடு முதலில் ஊடகங்களுக்கு வெளியிடப்பட்டது. பின்னர் அது ஆயிரக்கணக்கில் பிரதி எடுக்கப்பட்டு இப்போது கொல்கத்தா முழுவதும் அனைத்து மக்களின் கைகளுக்கும் கிடைக்கும் விதமாக ஆகியிருக்கிறது. மேற்கண்ட குறுந்தகட்டில் குணால் கோஷ் எம்.பி., மிக விரிவாக பல விபரங்களை கூறியிருக்கிறார். ரூ.20 ஆயிரம் கோடியை சூறையாடிய சாரதா சீட்டுக்குழுமத்தின் ஊடகத்துறை தலைவராக இருந்தவர் குணால் கோஷ் எம்.பி. அவர் இந்த ஊழல் விவகாரத்தில் மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, திரிணாமுல் கட்சியின் பொதுச் செயலாளரும் முன்னாள் ரயில்வே அமைச்சருமான முகுல்ராய், திரிணாமுல் எம்.பி. சுவேந்து அதிகாரி, மேற்குவங்க மாநில போக்குவரத்து அமைச்சர் மதன்மித்ரா உள்பட பலரது பெயரையும், அவர்களுக்கு உள்ள தொடர்பையும் விரிவாக குறிப்பிட்டிருக்கிறார். இனி அந்த குறுந்தகட்டிலிருந்து...“நான் சாரதா சீட்டுக் குழுமத்தின் ஊடகப் பிரிவு பொறுப்பாளராக இருந்தேன். ஆனால் அந்த நிறுவனத்தின் சார்பில் எந்தவொரு ஆவணத்திலும் அல்லது பணவோலையிலும் கையெழுத்திடுவதற்கு கூட எனக்கு அதிகாரம்கிடையாது. ஆனால் அங்கெல்லாம் நான் தான் என்று ஊடகங்கள் தவறாக கூறுகின்றன.
சாரதா சீட்டுக்கம்பெனியில் பணம் போட்ட அனைவரும் கடுமையாக பாதிக்கப்பட்டார்கள். ஆனால் சிலர் மட்டும் மிகப் பெரும் லாபம் அடைந்தார்கள். அவர்கள் இப்போது சுதந்திரமாக திரிகிறார்கள். இந்த வழக்கில் விசாரணை அமைப்புகள் என்னை மட்டுமே குறிவைக்கின்றன. ஆனால் ஒட்டுமொத்த கதையிலும் இருப்பவர்களை அவர்கள் யோசிக்கக்கூட இல்லை. இந்த பின்னணியிலேயே வேறு வழியில்லாமல், உண்மைகளை சொல்ல வேண்டிய கட்டாயம் எனக்கு ஏற்பட்டுள்ளது. விசாரிக்கப்பட வேண்டிய நபர்கள் என்று நான் சிலரது பெயர்களை குறிப்பிட விரும்புகிறேன்.1. டுட்டு போஸ் மற்றும் ஸ்ரிஞ்ஜோய் போஸ் (இருவரும் திரிணாமுல் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர்கள்):இவர்கள் இருவருடனும் சாரதா சீட்டுக் கம்பெனியின் தலைவர் சுதிப்தா சென்னுக்கு நேரடி தொடர்பு உண்டு. டுட்டு போசின் இல்லத்தில் தான் கலந்து ஆலோசனை நடத்துவார்கள். சாரதா குழுமத்தின் முதலீடுகளை இடமாற்றுவதற்காக ஒருபுதிய கம்பெனியை உருவாக்குவது குறித்து இவர்கள்தான் பேசினார்கள். 2. ரஜத் மஜூம்தார் (முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி). இவர் சுதிப்தா சென்னுக்கும், திரிணாமுல் பொதுச் செயலாளர் முகுல்ராய்க்கும், திரிணாமுல் மேலிடத் தலைமைக்கும் மிகவும் நெருக்கமான கையாள். இவர் சாரதா சீட்டுக் கம்பெனியின் பொறுப்புக்கு கொண்டு வரப்பட்டார்.
ஆனால் பின்னர் அந்த பொறுப்பிலிருந்து திடீரென ராஜினாமா செய்தார். அவர் ஏன் திடீரென்று ராஜினாமா செய்தார் என்று எனக்கு தெரியவில்லை. ஒருவேளை ஏதேனும் முறைகேடுகளை கண்டறிந்து அதை கட்சியின் தலைமைக்கோ அல்லது காவல் துறைக்கோ தெரிவிப்பார்என்று நினைத்தேன். ஆனால் உண்மையில் சாரதா சீட்டுக் கம்பெனியின் முதன்மையான வர்த்தகத்தில் இவருக்கு நேரடி தொடர்புஇருப்பது பின்னர் தான் எனக்கு தெரியவந்தது. அனைத்தும் தெரிந்த ஒரு உயர் ஐபிஎஸ் அதிகாரி, சாரதா சீட்டுக் கம்பெனியில் முறைகேடு நடப்பதை ஏன்அரசாங்கத்திற்கு தெரிவிக்கவில்லை? சீட்டுக்கம்பெனியின் தலைவர் சுதிப்தா சென் கைது செய்யப்படுவதற்கு முன்பு கடைசியாக இவரைத்தான் சந்தித்திருக்கிறார். முன்னதாக சுதிப்தா சென்தலை மறைவாகி விட்டதாக பரபரப்பு ஏற்படுத்தினார்கள். ஆனால் அவரது செல்போனில் மூன்று சிம்கார்டுகளும் கொல்கத்தா மாநகர எல்லைக்குள்தான் செயல்பட்டுக் கொண்டிருந்தன. அவரை யார் இயக்குகிறார்கள் என்பதை முழுமையாக விசாரிக்க வேண்டும். 3. கிருஷ்ணா சக்கரவர்த்தி (திரிணாமுல் மாநகராட்சி உறுப்பினர்) மற்றும் அவரது கணவர் சமீர் சக்கரவர்த்தி: இவர்கள் இருவரையும் கட்டாயம் விசாரிக்க வேண்டும். கிருஷ்ணா சக்கரவர்த்தி, பிதான்நகர் (சால்ட் லேக்) மாநகராட்சி தலைவராக இருந்தார். கடந்தாண்டு பிதான் நகர் மாநகராட்சியால் நடத்தப்பட்ட திரைப்பட விழா மற்றும் மிகப்பெரும் விருந்துக்கு முழுக்க முழுக்க சாரதா குழுமத்தின் தலைவர் சுதிப்தா சென்னே பணம் கொடுத்தார். கிருஷ்ணாவின் கணவர் சமீர் சக்கரவர்த்தி, ஒரு தொழிலதிபர் என்ற போதிலும் ஊடகத் துறையில் இதுவரைக்கும் வந்ததேயில்லை.
வங்கிகளில் இருக்கும் உரிமை கோராத பணம் ரூ.2,482 கோடி: பாராளுமன்றத்தில் தகவல்
ஆனால் திடீரென்று சேனல் 10 என்ற தொலைக்காட்சி செய்தி சேனலை துவக்குகிறார். துபாயிலும் ஏராளமாக முதலீடு செய்கிறார். சமீருக்கும் அவரது துபாய் முதலீடுகளுக்கும், அவரது தொலைக்காட்சி தொழிலுக்கும், சாரதா சீட்டுக் கம்பெனிக்கும் மிக நெருக்கமான தொடர்பு இருக்கிறது; இங்கிருந்து அங்கு பணம் கைமாறியிருக்கிறது. அது முழுமையாக விசாரிக்கப்பட வேண்டும். 4. சுவேந்து அதிகாரி மற்றும் சிசிர் அதிகாரி (இருவரும் திரிணாமுல் மக்களவை உறுப்பினர்கள்):ஒருநாள் சுதிப்தா சென் என்னை தொலைபேசியில் அழைத்தார். கிழக்கு மிட்னாப்பூரில் உள்ள காதி என்ற பகுதியில் ரியல் எஸ்டேட் வியாபாரத்தில் இறங்க விரும்புவதாக கூறினார். ஆனால் சுவேந்து அதிகாரியும் அவரது குடும்பத்தினரும் கட்சி நிதி என்ற பெயரில் ஏராளமாக பணம் கேட்டு விரட்டுவதாக கூறினார். எனவே முதலமைச்சரிடம் இதுபற்றி பேசுமாறும், சுவேந்து குடும்பத்தினருக்கு கூடுதலாக பணம் கொடுத்தால் எப்படியாவது மேற்கண்ட பகுதியில் ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட முதலமைச்சர் நேரடியாக உதவி செய்வாரா என்று கேட்டுச் சொல்லுமாறும் கூறினார். நான் முதலமைச்சர் மம்தா பானர்ஜியிடம் அனைத்தையும் கூறினேன். அதற்கு, ஏற்கனவே இந்த விஷயத்தில் ஏராளமான பணத்தைசுதிப்தா சென் கொடுத்திருக்கிறார்; இனியும் கொடுக்க வேண்டாம் என்று பதிலளிக்குமாறு முதலமைச்சர் என்னிடம் தெரிவித்தார். பின்னர் சுவேந்து அதிகாரியின் மிரட்டல் தாங்க முடியாமல்சேனல் 10 தொலைக்காட்சியையும், `சகல்பேலா’ பத்திரிகையையும் இப்போதைக்கு எடுத்துக் கொள்ளுமாறும் சுவேந்துவிடம் கூறிவிட்டதாக சுதிப்தா சென் எனக்கு தெரிவித்தார். 5. மதன் மித்ரா (மேற்குவங்க விளையாட்டு அமைச்சர்).
இவர்நீண்டகாலமாகவே தெற்கு 24 பர்கானா மாவட்டத்தின் விஷ்ணுப்பூர் தொகுதி எம்எல்ஏவாகஇருக்கும்றார். இவர்தான் மேற்படி சுதிப்தா சென்னுக்கு மிக நெருக்கமான நண்பரும் வழிகாட்டியுமாவார். சாரதா சீட்டுக் கம்பெனி ஊழியர் சங்கத்தின் தலைவராகவும் இவரை ஆக்கினார்கள். ஊழியர்கூட்டங்களில் சுதிப்தா சென்னைபெரிய அளவிற்கு புகழ்ந்து பேசுவதுதான் மதன் மித்ராவின் வேலை. ஆனால் இப்போது சுதிப்தா சென் யாரென்றே தெரியாது என கூறிக்கொண்டிருக்கிறார். தெரியாத ஒரு நபரைப்பற்றி சாரதா சீட்டுக்கம்பெனி ஏஜெண்டுகளின் கூட்டங்களில் இவர் எப்படி புகழ்ந்து பேசினாரோ?6. கே.டி.சிங். (திரிணாமுல் மாநிலங்களவை எம்.பி.) சாரதா சீட்டுக் குழுமத்தில் பிரச்சனைகள் எழுந்தபோது தில்லியில் ஒரு கூட்டம் நடத்தினார்கள். அதில் கே.டி.சிங் பங்கேற்று பேசினார்.
நிதி ரீதியாக சாரதா குழுமத்திற்கு உதவி செய்வதாகவும், தனது நிறுவனத்தில் சாரதா குழும ஏஜெண்டுகள் வேலை செய்ய ஏற்பாடு செய்வதாகவும் அவர் பேசினார். அப்போது முகுல்ராய், ரஜத் மஜூம்தார் ஆகியோரும் கூட்டத்தில் இருந்தார்கள். கே.டி.சிங்கை விசாரித்தால் இன்னும் ஏராளமான விபரங்கள் வெளியாகும். 7. முகுல்ராய் (முன்னாள் ரயில்வே அமைச்சர், திரிணாமுல் பொதுச் செயலாளர், மாநிலங்களவை எம்.பி.,)முகுல்ராயை நான் மிகவும் மரியாதைக்குரிய நபராக நினைத்தேன். அவரை நேசித்தேன். ஆனால் முகுல்ராயை விசாரிப்பதுதான் இந்த வழக்கில் காவல்துறையின் வேலையை இன்னும் எளிதாக்கும். மேலே குறிப்பிட்ட ரஜத் மஜூம்தார் என்பவர் முகுல்ராயின் கையாள்; கே.டி.சிங்குடன் முகுல்ராய்க்கு நெருக்கமான தொடர்பு. சாரதா கம்பெனியில் பிரச்சனை எழத் தொடங்கியபோது, அதாவது இந்தாண்டு ஏப்ரல் மாததுவக்கத்தில், அனைத்து உண்மைகளையும் அரசாங்கத்திடம் கூறிவிட வேண்டுமென்று நான் சுதிப்தா சென்னிடம் சொன்னேன். இதையடுத்து நிஜாம் மாளிகையில் முகுல்ராயுடன் நாங்கள் சந்தித்து பேசினோம். அப்போது ரஜத் மஜூம் தாரும் இருந்தார். அந்த சந்திப்பில் சுதிப்தா சென் அநாகரிகமாக நடந்து கொண்டார். அப்போது முகுல்ராய், நீங்கள் பேசிவிட்டு வாருங்கள். நான் பின்னர் பேசிக் கொள்கிறேன் என்று கூறிவிட்டு சென்றார். பிரச்சனைகள் தீவிரமடைந்தபோது சுதிப்தா சென் தலைமறைவாகிவிட்டார் என்ற பரபரப்பு எழுந்தது.
அப்போது முகுல்ராயிடம் பேசினேன். காவல்துறையிடம் பேசி நடவடிக்கை மேற்கொள்ளுமாறு வலியுறுத்தினேன். ஆனால் முகுல்ராய் மவுனம் காத்தார். இதில் முகுல்ராய்க்கு முக்கியமான தொடர்பு இருக்கிறது என உறுதியாக நம்புகிறேன்.8. மம்தா பானர்ஜி (முதலமைச்சர்):நான் மிகவும் வேதனையோடு,நான் நேசித்த தலைவரின் பெயரைகுறிப்பிடுகிறேன். உண்மையில் அவரது பெயரை சொல்லிவிடக்கூடாது என்று உறுதியாக இருந்தேன். ஆனால் உண்மைகள் என்னை அழுத்தின. சில ஆண்டுகளுக்கு பிறகு இன்னும் பயங்கரமான நிகழ்வுகள் நடந்தால், அப்போதையே உண்மைகளை சொல்லிருயிக்கலாமே எனத் தோன்றி விடும். அதனால் தான் உண்மையை சொல்கிறேன். சாரதா சீட்டுக் கம்பெனி விவகாரம் தொடர்பாக எதையுமே மம்தாவிடமிருந்து நான் மறைத்ததில்லை. சாரதா சீட்டுக் கம்பெனியின் ஊடகக்குழு முழுக்க முழுக்க திரிணாமுல் கட்சியின் பிரச்சாரத்திற்காகவே பயன்படுத்தப்பட்டது. இந்த சமயத்தில் சாரதா குழுமத்தில் ஏதேனும் முறைகேடுகள் இருக்கிறதா என்று கேட்டு மத்திய அரசு கடிதம் எழுதியபோது அதை முதலமைச்சர் எங்களிடம் மறைத்தார் என்று தெரியவில்லை.
மேலும், மத்திய பெரும் நிறுவனங்கள் அமைச்சகம், சாரதா கம்பெனிகள் உள்பட பல நிறுவனங்கள் தொடர்பாக கேள்வியெழுப்பி முதலமைச்சருக்கு தொடர்ந்து கடிதங்கள் எழுதியுள்ளது. அதை ஏன் அரசாங்கம் எங்களிடம் தெரிவிக்கவில்லை? சுதிப்தா சென்னை அழைத்து ஏன் அரசாங்கம் எச்சரிக்கவில்லை? ஏனென்றால் அந்த நேரத்தில் திரிணாமுல்லின் நேரடி அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனமாகத்தான் சாரதா ஊடகக்குழு செயல்பட்டு வந்தது. அப்போதுதான் சாரதா நிறுவனம் பிரச்சனைகளில் சிக்கப்போகிறது என்று சுவேந்து அதிகாரிக்கு தெரிந்திருக்கிறது. அதைப்பயன்படுத்தித்தான் சுவேந்து அதிகாரி, சாரதா குழுமத்தின் தலைவர்சுதிப்தா சென்னிடமிருந்து தொடர்ந்து பணம் பறித்திருக்கிறார். இந்த இருவருக்கும் இடையில்பணம் கைமாறுவதற்கு இடைத்தரகராக செயல்பட்டதே மம்தா பானர்ஜிதான்.”

- கொல்கத்தாவிலிருந்துசந்தீப் சக்கரவர்த்தி

நன்றி:தீக்கதிர். 

வெள்ளி, 29 நவம்பர், 2013

கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன்

பிறந்த தினம்
(நவ.29- 1908)
 
 
கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன் .
 
தமிழ்த் திரையுலகில் புரட்சி செய்தவர் .புராண கதைகளை படமாக்கி மூடத்தனத்தில் இருந்த திரையுலகில் அப்புராண படங்களிலும் மக்களுக்கான புதுமை கருத்துக்களை புகுத்தியவர்.பகுத்தறிவை தனது நகைச்சுவை மூலம் பரப்பியவர்.
நல்ல கணீர் குரல்வளம்மிக்கவர் .
பாடல்களில் அவர் கையாண்ட புதுமைகள்,கருத்துக்கள் இன்றைய அளவும் எற்றுக்கொள்ளக்கூடியவை.
இன்று ஆபாச வார்த்தைகளை நகைச்சுவை என்ற பெயரில் உளறிக்கொட்டுபவர்கள் கலைவாணர் படங்களை ஒருமுறை பார்ப்பது நல்லது.அதிலும் சின்ன கலைவாணர் என்ற பட்டத்தை தனக்கு தானே வழங்கிக்கொண்டு சிலர் திரிவதுதான் மகா கொடுமை.
கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன் பிறந்த தினம் (நவ.29- 1908)
பிறப்பு: நவம்பர் 29, 1908
பிறப்பிடம்: நாகர்கோயில், தமிழ்நாடு மாநிலம், இந்தியா
பணி: நடிகர், பின்னணிப் பாடகர் மற்றும் எழுத்தாளர்   
இறப்பு: ஆகஸ்ட் 30, 1957
நாட்டுரிமை: இந்தியன்
பிறப்பு 
அவர், 1908  ஆம் ஆண்டு நவம்பர் 29  ஆம் நாள் இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்திலுள்ள “நாகர்கோவிலுக்கு” அருகில் ஒழுங்கினசேரி என்ற இடத்தில், ‘சுடலையாண்டி பிள்ளை’, என்பவருக்கும், ‘இசக்கியம்மாலுக்கும்’ மகனாக ஒரு ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தார்.
ஆரம்ப வாழ்க்கை
மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்ததால், கல்வி என்பது அவருக்கு எட்டாக்கனியாகவே போய்விட்டது. நான்காம் வகுப்புடன் தன்னுடைய பள்ளிப்படிப்பைப் நிறுத்துக்கொண்ட அவர், சிறுவயதிலேயே நாடகக் கொட்டையில் தின்பண்டங்கள் விற்கத் தொடங்கினார். நாளடைவில் நாடகங்கள் அவரை மிகவும் ஈர்த்ததால், ஒரு நாடகக்குழுவில் சேர்ந்து சிறிதுகாலம் நடித்து வந்தார். அதன் பிறகு தன்னுடைய நண்பர்களுடன் இணைந்து ஒரு நாடகக்குழுவை தொடங்கிய என். எஸ். கிருஷ்ணன் அவர்கள், பல நாடகங்களை இயக்கியும் நடித்தும் வந்தார்.
சினிமா பயணம்
தன்னுடைய நாடகக் குழு மூலம் பல நாடகங்களை மேடையில் அரங்கேற்றி வந்த அவர், திரைப்படத்தில் நடிக்க வாய்ப்புகள் கிடைத்தது. இவர் நடித்த முதல் படம் ‘சதிலீலாவதி’. இருந்தாலும், திரைக்கு முதலில் வந்த படம் ‘மேனகா’ என்ற திரைப்படம் ஆகும். பெரும்பாலும், சொந்தமாக நகைச்சுவை வசனங்களை எழுதி, அதையே நாடகத்திலும், திரைப்படங்களிலும் பயன்படுத்துவதை வழக்கமாக கொண்டுவந்த அவர், தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்தார். குறுகிய காலத்திற்குள் சுமார் 150 –க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்த அவர், நகைச்சுவையில் புதிய மறுமலர்ச்சியையை ஏற்படுத்தி விட்டார். மேலும், இவருடைய மனைவி மதுரம் அவர்கள், ஒரு பிரபலமான நடிகை என்பதால், இருவரும் இணைந்து பல படங்களில் நடித்தனர். தமிழ் சினிமா வரலாற்றில் நகைச்சுவையை, சினிமா காட்சிகளாக மட்டுமின்றி, பாடல்களாகவும் அமைக்க முடியும் என நிரூபித்தார். சொந்தக் குரலில் கருத்தாழமிக்க பல பாடல்களைப் பாடியுள்ள இவர் ‘பணம்’, ‘மணமகள்’ போன்ற திரைப்படங்களையும் இயக்கியுள்ளார்.
சிரிக்க வைத்த மாபெரும் சிந்தனையாளர் கலைவாணர்
இவருடைய நகைச்சுவைக் காட்சிகள் வெறும் பொழுதுபோக்குக்காக மட்டுமல்லாமல், வாழ்வியலை ஒரு சில நொடிகளிலேயே புரிய வைக்கும் ஆற்றலை உண்டாக்கியவையாகும். யார் மனதையும் புண்படுத்தாமல், நகைச்சுவை மூலமாக சிந்தனை மிகுந்த கருத்துக்களை வெளிப்படுத்தினார். அறிவியல் கருத்துக்களையும், தன்னுடைய நகைச்சுவை வாயிலாக வெளிப்படுத்தியவர். பல சீர்த்திருத்த கருத்துக்களை திரைப்படங்களில் துணிவோடு எடுத்துக் கூறியவர். குறிப்பாகச் சொல்லப்போனால் என். எஸ். கிருஷ்ணன் அவரகள், சாதாரண நகைச்சுவை நடிகர் மட்டுமல்ல, தன்னுடைய சிரிப்பால் அனைத்து மக்களையும் சிந்திக்க வைத்தவர். இதானால் தான் இவருக்கு “கலைவாணர்” என்ற பட்டம் 1947 ஆம் ஆண்டு சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள நடராஜா கல்வி கழகத்தின் சார்பில் கொடுக்கப்பட்டு கெளரவிக்கப்பட்டார்.
அவர் நடித்த சில திரைப்படங்கள்
‘சதிலீலாவதி’, ‘அம்பிகாபதி’, ‘சந்திர காந்தா’, ‘மதுரை வீரன்’, ‘காளமேகம்’, ‘சிரிக்காதே’, ‘உத்தம புத்திரன்’, ‘சகுந்தலை’, ‘ஆர்யமாலா’, ‘கதம்பம்’, ‘மங்கம்மா சபதம்’, ‘ஹரிச்சந்திரா’, ‘ஹரிதாஸ்’, ‘பர்மா ராணி’, ‘பவளக்கொடி’, ‘பைத்தியக்காரன்’, ‘சந்திரலேகா’, ‘நல்லத்தம்பி’, ‘மங்கையர்க்கரசி’, ‘தம்பிதுரை’, ‘பவளக்கொடி’, ‘ரத்னகுமார்’, ‘மங்கம்மாள்’, ‘வனசுந்தரி’, ‘பணம்’, ‘அமரக்கவி’, ‘காவேரி’, ‘டாக்டர் சாவித்திரி’, ‘முதல் தேதி’, ‘ரங்கோன் ராதா’, ‘பைத்தியக்காரன்’, ‘ஆர்ய மாலா’, ‘மங்கையர்க்கரசி’, ‘ராஜா ராணி’, ‘பவளக்கொடி’, ‘சகுந்தலை’, ‘மணமகள்’, ‘நல்லகாலம்’, ‘ராஜா தேசிங்கு’.
அவர் பாடிய சில பாடல்கள்
‘ஜெயிலுக்குப் போய் வந்த’, ‘பணக்காரர் தேடுகின்ற’, ‘ஆசையாக பேசிப்பேசி’ (பைத்தியக்காரன்), ‘ஒண்ணுலேயிருந்து’, ‘இடுக்கண் வருங்கால்’ (முதல் தேதி), ‘சங்கரியே காளியம்மன்’ (ரங்கோன் ராதா), ‘காட்டுக்குள்ளே’, ‘ஒரு ஏகாலியைப்’, ‘ஆரவல்லியே’ (ஆர்யா மாலா), ‘கண்ணா கமலக் கண்ணா’, ‘கண்னேந்தன்’ (கண்ணகி), ‘இருக்கிறது பார் கீழே’ (மங்கையர்க்கரசி), ‘கண்ணே உன்னால்’, ‘சந்திர சூரியன்’ (அம்பிகாபதி), ‘தீனா..மூனா.. கானா…’ (பணம்), ‘உன்னருளால்’, ‘என் சாண் உடம்பில்’ (ரத்னமாலா), ‘சிரிப்பு இதன் சிறப்பை’ (ராஜா ராணி), ‘வாதம் வம்பு பண்ண’, ‘காசிக்குப் போனா கருவுண்டாகுமென்ற’ (டாக்டர் சாவித்திரி), ‘நித்தமும் ஆனந்தமே’, ‘விஜய காண்டிபா வீரா’, ‘அன்னம் வாங்கலையோ’, ‘இவனாலே ஓயாதத் தொல்லை’ (பவளக்கொடி), ‘இன்னுக்கு காலையில’, ‘வெகுதூரக்கடல் தாண்டி’ (சகுந்தலை), ‘நல்ல பெண்மணி’, ‘ஆயிரத்திதொள்ளாயிரத்தி’, ‘சுதந்திரம் வந்ததுண்ணு’ (மணமகள்), ‘சும்மா இருக்காதுங்க’ (நல்லகாலம்).
தேசபக்தி
பாரதத்தின் தந்தை எனப் போற்றப்படும், மகாத்மா காந்தியின் தீவிர பற்றாளராக விளங்கிய என். எஸ். கிருஷ்ணன் அவர்கள், காந்தியடிகளின் மறைவுக்குப் பின்னர், அவருடைய நினைவைப் போற்றும் வகையில், அப்பொழுதே ஐம்பதாயிரம் ரூபாய்க்கு மேல் தமது சொந்தப் பணத்தினை செலவிட்டு, தன்னுடைய ஊரில் அவருக்கு நினைவுத்தூண் எழுப்பினார்.
கலைவாணரின் சிந்தனையில் உதிர்ந்த ஒரு துளி
1957 ஆம் ஆண்டு நடந்த தமிழக சட்டசபை தேர்தலில் அண்ணாவின் சார்பாக பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அந்த தேர்தலில், அண்ணாவை எதிர்த்து ஒரு மருத்துவர் போட்டியிட்டார். அப்பொழுது காஞ்சிபுரத்தில் நடந்த கூட்டத்தில், அவர், பேசுகையில் ஆரம்பத்தில் இருந்து கடைசி வரை அந்த மருத்துவரை பற்றியே புகழ்ந்து பேசிவந்தார். இறுதியில், ‘இவ்வளவு நல்லவரை நீங்கள் சட்டசபைக்கு அனுப்பினால் உங்களுக்கு வைத்தியம் பார்ப்பது யார்? அதனால் டாக்டரை உங்கள் ஊரிலேயே வைத்துக்கொள்ளுங்கள், சிறந்த பேச்சாளரும், எழுத்தாளருமான அறிஞர் அண்ணாவை சட்டசபைக்கு அனுப்புங்கள்’ என முடித்தார்.
இல்லற வாழ்க்கை
1931 ஆம் ஆண்டு நாகம்மை என்னும் பெண்மணியைத் திருமணம் செய்துகொண்டார். அதன் பிறகு, ஒரு முறை “வசந்தசேனா” படப்பிடிப்பிற்காக புனேவிற்கு சென்ற போது, டி. எம். மதுரம் என்ற நடிகையுடன் காதல் வயப்பட்ட இவர், விரைவில் திருமணமும் செய்துக்கொண்டனர். இவர் திருச்சியிலுள்ள ஸ்ரீரங்கத்தை சேர்ந்தவர் ஆவார். பின்னர், டி. எம். மதுரத்தின் தங்கை வேம்பு என்பவரை மூன்றாம் மனைவியாக மணம் புரிந்தார். நாகம்மைக்கு கோலப்பன் என்னும் மகனும், டி. எம். மதுரத்திற்கு ஒரு பெண் குழந்தையும், வேம்புக்கு நான்கு மகன்களும், இரண்டு மகள்களும் பிறந்தனர்.
கொலைக் குற்றச்சாட்டு
இந்து நேசன் பத்திரிக்கை ஆசிரியர், லட்சுமி காந்தன் கொலை வழக்கில் அப்பொழுது பிரபல கதாநாயகனாக இருந்த தியாகராஜ பாகவதருடன் குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டார். சுமார் 30 மாதங்கள் சிறைவாசத்திற்குப் பிறகு விடுதலை செய்யப்பட்ட என். எஸ். கிருஷ்ணன் அவர்கள், மீண்டும் படங்களில் நடிக்கத் துவங்கினார். இந்நிகழ்வு, இவரின் கலைப் பயணத்திற்கு ஒரு கரும்புள்ளியை ஏற்படுத்தினாலும், தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்து, தமிழ் சினிமாவில் “கலைவாணர்” எனப் புகழப்பட்டார்.
மறைவு
நகைச்சுவையில் புதிய புரட்சியை ஏற்படுத்திய என். எஸ் கிருஷ்ணன் அவர்கள், 1957 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 30 ஆம் தேதி, தன்னுடைய நாற்பத்தொன்பதாவது வயதில் காலமானார். தமிழ்நாடு அரசு, அவரது நினைவாக, சென்னையில் உள்ள அரசு அரங்கத்திற்கு, ‘கலைவாணர் அரங்கம்’ எனப் பெயர் சூட்டியது.
 
தமிழ் சினிமாவில் பல கலைஞர்கள் உருவாகி, சாதித்து, மறைந்திருக்கலாம், ஆனால், என். எஸ். கலைவாணரைப் போல், நகைச்சுவையில் சமூக சீர்திருத்தக் கருத்துக்களைத் திரைப்படங்களில் துணிவோடு எடுத்துக்கூறியவர் எவரும் இல்லை. கருத்துக்களை வழங்குவதில் மட்டும் இவர் வள்ளலாக இருந்துவிட வில்லை, தமது வாழ்க்கையிலும் ஆயிரக் கணக்கானவர்களுக்குப் பணத்தை வாரி வழங்கிய அற்புத மனிதர் ஆவார். உண்மையை சொல்லப்போனால், என். எஸ். கிருஷ்ணன் அவர்களை நகைச்சுவை நடிகர் என்ற வட்டத்துக்குள் அடைத்துவிட முடியாது, சிரிப்பு மொழியில் சீர்திருத்த விதிகளைத் தூவிய மாபெரும் சிந்தனையாளர். காலங்கள் மாறினாலும், திரைப்படத்துறையில் மாற்றங்கள் பல நிகழ்ந்தாலும், என். எஸ். கலைவாணர் அவர்கள் நூற்றாண்டுகள் பல கடந்தும், கலையுலகில் சாகா சரித்திர நாயகனாகஇன்னமும் வாழ்ந்து வருகிறார். வாழ்ந்துவருகிறார்.
Kalaivanar-N-S-Krishnan
----------------------------------------------------------------------------------------------------------------------------


ஏற்காட்டில் மார்க்சிஸ்ட் கட்சியின் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் .திமுக காங்கிரசுடன் கூட்டணியில் இருந்த கட்சி அதனால் அதற்கு வாக்களிக்காதீர்கள் .அதிமுக வுக்கு வாக்களியுங்கள் என்று பரப்புரை செய்துள்ளார்.அதை ஒட்டி எழுந்த சில கே ள்விகள்.

நீங்கள் இன்று விழுந்து,விழுந்து ஆதரிக்கும் ஜெயலலிதாவும் முன்பு காங்கிரசு,பாஜக கூட கூட்டணி வைத்தவ்ர்தானே.பல லட்சம் அரசு ஊழியர்களை ஒரே கையெழுத்தில் வீட்டுக்கு அ னுப்பியவர்.சாலைப்பணியாளர்கள் அன்று .மக்கள் நலப்பணியாளர்கள் இன்று .அவர் கையெழுத்தில் பழி வாங்கப்பட்டவர்கள்.இவர்கள் தொழிலாளர்கள் என்பது பாட்டாளி வர்க்கத்தலைவர்களான உங்களுக்கு தெரியாதா?

ஜெயலலிதா திருந்த வில்லை.பிரதமர் நாற்காலிக் கனாவில் அப்படி நடிக்கிறார்.அதற்காக தனது நெருங்கிய நண்பர்களான மோ டி,சோ வை கூட ஒதுக்கி வைத்துள்ளார் .
அவரை எதிர்த்து கூட அல்ல .பரமக்குடி விடயத்தில் அவர் கைத்தடி அறிக்கையை கண்டித்து நீங்கள் எழுப்பிய உயிரில்லா குரலுக்கு கூட எதிர் வினையாக தீக்கதிருக்கு அரசு விளம்பரங்கள் நிறுத்தப்பட்டுள்ளன.அடுத்து நூலகங்களுக்கு  வாங்கப்படும் தீக்கதிரும் நிறுத்தப்படும் வாய்ப்புகள் அதிகம் உருவாகியுள்ளது.இவருக்கும் உங்களின் மேற்கு வங்க தீதிக்கும் சிறிய எட்டு வித்தியாசங்கள் கூட கிடையாது.
மக்களவை தேர்தலில் ஒரு இடம் ஒதுக்குவது கூட உங்களுக்கு பகல் கனவாக ஆகும் வாய்ப்பு உள்ளது.அதற்கு கூட நீங்கள் தோட்டத்துக்கு அவரின் மற்றொரு அடிமை தா.பா.வுடன் அலையாய் அலைய வேண்டியிருக்கும்.
இவ்வளவும் உங்கள் மாநிலக் குழுவுக்கு தெரியாத விடயங்கள் இல்லை.ஆனால் உங்களின் சுயநல கருணாநிதி எதிர்ப்பு மட்டுமே உங்களை ஏற்காட்டு மலையில் இவ்வளவு பேச வைத்திருக்கிறது.
வரும் மக்களவை தேர்தலில் கூட திடீரென 40 திலும் நாமே .40 ம் நமக்கே என்று  கூட உங்கள் புதுத் தோழர் ஜெயலலிதா சொல்லும் அபாயம் உள்ளது.
ஏற்காட்டில் உங்களை வரவெற்காமலெயெ பரப்புரை செய்யும் உங்கள் விசுவாசத்தை  கண்டு உங்கள் அம்மா இப்போது என்ன நினைப்பார்கள் தெரியுமா?

"நமக்கு வாய்த்த அடிமைகள் மிக ,மிக திறமைச் சாலிகள் .ஆனால் சில சமயம் வாய்தான் காதுவரை கிழிகிறது "என்றுதான் வெறென்ன?
----------------------------------------------------------------------------------------------------------------------- 

செவ்வாய், 26 நவம்பர், 2013

நாயகன் மோடி?

.2013-ம் ஆண்டிற்கான 'டைம்ஸ்' இதழின் சிறந்த நபரை தேர்வு செய்ய டைம்ஸ் இதழ் ஆன்லைனில் நடத்திய வாக்கெடுப்பில் பதிவான ஓட்டுகளின் அடிப்படையில் டைம்ஸ் இதழ் சர்வதேசத் தலைவர்கள், தொழில் முனைவோர், பிரபலமானவர்கள் என 42 பேரை இறுதியாகப் பட்டியலிட்டுள்ளது.
இந்த 42 பேரில், 2013-ஆம் ஆண்டிற்கான சிறந்த நபர் யார் என்பதை அடுத்த மாதம் அறிவிக்க இருக்கிறது.
இந்தப் பட்டியலில், ஜப்பான் பிரதமர் சின்ஷோ அபே, அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா, பாகிஸ்தான் சிறுமி மலாலா யூசுப் சாஹி, அமேசான் சி.இ.ஓ. ஜெஃப் பெசோஸ் மற்றும் அமெரிக்க ராணுவ ரக்சியங்களை வெளியிட்ட எட்வர்ட் ஸ்நோடன் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
கடந்த 2012 ஆம் ஆண்டிற்கான நபராக டைம்ஸ் பத்திரிகை அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமாவை தேர்வு செய்தது .
குஜராத் முதல்வருமான நரேந்திர மோடியின் பெயர் இடம் பெற்றுள்ளது. பட்டியலில் இடம் பிடித்துள்ள ஒரே இந்தியர் மோடி தான் என்பது குறிப்பிடத்தக்கது.
மோடி குறித்து ஆன்லைனில் ஓட்டளிக்கும் இடத்தில் " சர்ச்சைக்குரிய இந்து தேசியவாதி, குஜராத் மாநிலத்தின் முதல்வர், உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாட்டை ஆளும் காங்கிரஸ் கட்சியை பதவியிழக்கச் செய்யும் வேட்பாளராக கருதப்படுபவர்" என டைம்ஸ் இதழ் அறிமுகப்படுத்தியுள்ளது.
, இதுவரை மோடிக்கு 25% வாக்குகள் பதிவாகியுள்ளதாக தெரிகிறது. 25% வாக்குகளுடன் மோடி முதலிடத்தில் உள்ளார்.
முன்பு  கொலையாளி  ராஜ பக்ஷே  டைம் பத்திரிகை சிறந்த நபர் பட்டியலில் இடம் பெற பல லட்சங்களையும் -அரசு அலுவலர்களையும் பயன் படுத்தியது 
பல்வெறு நாடுகளில் இருந்து பல்வேறு பெயர்களில் வாக்களிக்க வைத்தது 
இப்போது நினைவுக்கு வருகிறது.
ஒருவேளை மோடி கூட்டமும் அதே தொழில் நுட்பத்தை கடை பிடிக்கிறதோ?
 இந்தியாவில் உள்ள ஊடகங்களில் மோடியை தூக்கி பிடித்து எழுதி மோடிக்கு பரபரப்பான விளம்பரத்தை தேடிய பாஜக தற்போது உலக அளவில் அவரை பிரபலப் படுத்தும் முயற்சியாக இது இருக்கலாம்.

==========================================================================

சிற்றுந்துகளில் வரையப்பட்டது பசுமை அடையாளம்தான் இரட்டை இலை சின்னம் இல்லை.அதை அது நினைவு படுத்தவும் இல்லை என்று தமிழக அதிமுக அரசு நீதிமன்றத்தில் பதில் கொடுத்துள்ளது.


எம்ஜியார் சமாதியில் முன்பு வைக்கப்பட்ட இரட்டை இலை சின்னம் இரட்டை இலை அல்ல பறக்கும் குதிரையின் இறகுகள் அதன் நடுவில் இருப்பது காம்பு அல்ல.குதிரையின் வால் என்று நீதிமன்றத்தில் சொல்லியவர் இப்போது அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் தலைமை பொறுப்பில் இருக்கிறார்.இப்போது பசுமை சின்னத்தை பற்றி விளக்கியவர் என்ன பொறுப்புக்கு போ கப்போ கிறாரொ?

பசுமை சின்னம் வரையும் போது அந்த பசுமைக்கு காரணமான உதய சூரியனை எப்போது வரைவீர்கள்?
பொங்கல் வாழ்த்துக்களில் கரும்பு மற்றும் பசுமை சின்னங்களின் பின்னால் சூரியன் இருப்பதை வரைத்திருப்பார்களே .அதானால்தான் கேட்டேன்.
-------------------------------------------------------------------------------------------------------------------------
படித்துறைப் பாண்டியும் பழ.நெடுமாறனும்..!

அந்த நகைச்சுவைக் காட்சியை தொலைக்காட்சிகள் எப்பொழுது ஒளிபரப்பினாலும் அதனைப் பார்த்து ரசித்துச் சிரிக்காதவர்களே இருக்க முடியாது!
தேநீர்க் கடை முன்பு நடிகர் வடிவேலு தமது கோஷ்டிப் பரிவாரங்களுடன் போய் நிற்பார். கோஷ்டியில் ஒருவர் போய் டீக்கடைக்காரரிடம் "அண்ணனுக்கு ஒரு டீ போடு!" என்பார். டீக்கடைக்காரர் "டோக்கன் வாங்கு" என்பார். அவர் உடனே, "அண்ணே டோக்கன் வாங்கணுமாம்ணே" என்று வடிவேலுவிடம் வந்து சொல்வார். உடனே வடிவேலு, முகத்தை இறுக்கமாக வைத்துக்கொண்டு, "இந்தப் படித்துறை பாண்டிக்கிட்டயே டோக்கன் கேக்குறியா? நீ இந்த ஊர்லயே இருக்க முடியாதுடா.. டேய்"
என்று கத்திக்கொண்டே டீக்கடையை அடித்து நொறுக்கிவிட்டு, "எங்ககிட்டயவே..." என்று கத்திக்கொண்டே தனது கோஷ்டிப் பரிவாரங்களுடன் ஓடி ஒரு மறைவில் இருந்துகொண்டு, தன் கோஷ்டி ஆளிடம், "டேய்... அந்தக் கடைக்காரன் கடையை இழுத்து மூடிவிட்டு ஓடுறானான்னு பார். அவன் ஓடிட்டா அவன் நமக்கு அடிமை, ஓடாவிட்டால் நாம் அவனுக்கு அடிமை" என்று மூச்சிரைக்கச் சொல்வார். கோஷ்டியிலிருந்து ஒருவர் எட்டிப் பார்க்கையில், டீக்கடைக்காரர் கடையை இழுத்து மூடிவிட்டு தனது வேட்டியால் தலையில் முக்காடு போட்டுக்கொண்டு ஓட்டம் பிடிப்பார். இதனைப் பார்த்தவுடன் கோஷ்டியில் ஒருவர், "அண்ணே ஓடுறாண்ணே!" என்று சொல்வார். அப்போது வடிவேலு மிக உற்சாகமாக, "அப்ப இன்னையிலருந்து நமக்கு ஒரு அடிமை சிக்கிட்டான்டா" என்று பெரிய ரவுடி போல 'ஃபிலிம்' காட்டுவார்.
படித்துறைப் பாண்டியைப் போல அய்யா நெடுமாறன் தனது படை பரிவாரங்களுடன் தமிழகத்தில் அரசியல் செய்து வருகிறார். நெடுமாறன் வகையறாக்கள் இவ்வளவு காலமும் வீராவேசமாகப் பேசினார்கள். கருணாநிதியை ரவுண்டு கட்டினார்கள். வா... வந்து பார்... என்கிற அளவில் பிளந்து கட்டினார்கள். தமிழர் துரோகி என்றார்கள், தமிழர்களுக்கு எதிரி என்றார்கள், தமிழகத்திலிருந்தே விரட்ட வேண்டும் என்றார்கள். உச்சகட்டமாக தெலுங்கர் என்றுகூறி மார் தட்டினார்கள். புரட்சித்தலைவி அம்மா ஆட்சிக்கு வந்தால்தான் எல்லாம் மாறும் என்று 2009 நாடாளுமன்றத் தேர்தலிலும், 2011 சட்டப்பேரவைத் தேர்தலிலும் ஊர் ஊராகப் பிரச்சாரம் செய்தார்கள். இலை மலர்ந்தால் ஈழம் மலரும் என்றார்கள். இன்னும் கூடுதலாகப் போய் ஜெயலலிதாவை 'ஈழத் தாய்' என்றார்கள். உண்மையான புரட்சித் தலைவி அம்மாதான் என்றார்கள். அதிமுகவினரைவிடக் கூடுதலாக ஜெயலலிதாவை 'அம்மா அம்மா' என்று ஊர் ஊராய் தொகுதி தொகுதியாய் கூவினார்கள். ஈழவிடுதலையை வாங்கித் தருபவர் என்று அடையாளப்படுத்தினார்கள். அம்மா வந்தால் தமிழகத்தில் ஈழவிடுதலைக்கான போராட்டங்கள் தீவிரப்படுத்தப்படும் என்றார்கள். ஏன்... அம்மாவே தலைமை தாங்கி ஈழப் போரை நடத்துவார் என்றெல்லாம் பிரச்சாரம் செய்தார்கள்.
அம்மா ஆட்சிக்கு வந்தார்; இனப்படுகொலை செய்த இராஜபக்சேவைத் தண்டிக்கவும் இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்கவும் வலியுறுத்தி தமிழக சட்டப்பேரவையில் உடனடியாகத் தீர்மானம் நிறைவேற்றினார். தீர்மானத்தை வரவேற்று பழ.நெடுமாறன் ஆகா.. ஓகோ.. என வானுக்கும் மண்ணுக்கும் குதித்து அறிக்கை வெளியிட்டார். எதிலும் இரண்டடி தாவி ஓடநினைக்கும் அண்ணன் சீமான், அதே அம்மாவைப் பாராட்டி சென்னை நகர் முழுவதும் சுவரொட்டிகள் ஒட்டினார். அது மட்டுமல்லாது அம்மாவைப் பாராட்டி வேலூரிலிருந்து சென்னை வரை நடை பயணம் வேறு. அம்மாவே நாணி வெட்கப்படுமளவுக்கு புகழாரப் பொதுக்கூட்டங்கள்.
இந்தக் காட்சிகளெல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக மாறத் தொடங்கின. கடந்த இரண்டாண்டுகளாகவே தமிழகத்தில் மாவீரர் நாள் பொதுக்கூட்டங்களை நடத்த ஈழத்தாய் மறுத்து வருகிறார். மேதகு பிரபாகரன் அவர்களின் படங்களை அச்சிட்டு ஒட்டப்படும் சுவரொட்டிகள் கிழிக்கப்பட்டு வருகின்றன. எந்த இடத்திலும் மாவீரர் நாள் விழாவுக்கோ, மே 18 முள்ளிவாய்க்கால் படுகொலை நினைவேந்தல் கூட்டங்களுக்கோ தமிழகத்தில் அனுமதி மறுக்கப்பட்டுவரும் நெருக்கடிகள் தொடர்கின்றன. இந்நிலையில்தான் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்கக் கூடாது என்று தமிழகத்தில் போராட்டங்கள் வெடித்தன. கட்சி பேதமின்றி அனைத்துக் கட்சிகளும் போராட்டங்களில் ஈடுபட்டன. ஆனால் நெடுமாறன் வகையறாக்களோ இத்தகைய எந்தப் போராட்டத்திலும் பங்கேற்கவில்லை.
வெற்றி அல்லது வீரச்சாவு என முழங்கி 15 நாட்களாக உண்ணாநிலை அறப்போரில் ஈடுபட்ட தோழர் தியாகு அவர்களின் போராட்டத்துக்கு ஆதரவாக அனைத்துக் கட்சிகளும் அமைப்புகளும் களத்தில் குதித்தபோதுகூட, அவருக்கு வாழ்த்துச் சொல்லக்கூட நேரமில்லாமல் நெடுமாறன் தஞ்சை விளாரில் தங்கி முள்ளிவாய்க்கால் முற்றத்துக்கான வேலைகளில் ஈடுபட்டு வந்தார்.
தமிழர்களின் உணர்வுகளை மதித்து காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்கக் கூடாது என தமிழக அரசு சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றியது. அந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட மறுநாளே - அதாவது நவம்பர் 13 அதிகாலை - முள்ளிவாய்க்கால் முற்றத்தின் சுற்றுச் சுவர்களையும், பூங்காவையும் தமிழகக் காவல்துறை இடித்துத் தள்ளியது. அங்கிருந்த நெடுமாறன் உள்ளிட்ட 83 பேரை, பணி செய்ய விடாமல் தடுத்தாகச் சொல்லி வேனில் அள்ளிக்கொண்டுபோய் ஒரு திருமணத்தில் அடைத்தார்கள். எப்படியும் மாலை 5 மணிக்கு மேல் விட்டுவிடுவார்கள் என்று நினைத்திருந்தவர்களின் நினைப்பில் ஜெயலலிதா மண்ணைப் போட்டார். இரவோடு இரவாக 83 பேரையும் திருச்சி சிறைக்குள் திணித்தார்கள்.
முள்ளிவாய்க்கால் முற்றம் இடிப்பைக் கண்டித்தும், நெடுமாறன் உள்ளிட்ட 83பேர் கைதைக் கண்டித்தும் தமிழகத்தில் உள்ள ஈழ ஆதரவுக் கட்சிகள், அமைப்புகள் அனைத்தும் அறிக்கை வெளியிட்டன. 'டெசோ' சார்பில் கண்டனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் முள்ளிவாய்க்கால் முற்றத்திற்கே சென்று பார்வையிட்டு, தமிழக அரசைக் கண்டித்ததோடு, இடிக்கப்பட்ட பகுதிகளை தமிழக அரசே கட்டித் தரவேண்டும், கைது செய்யப்பட்டவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
9 நாட்கள் சிறைவாசத்திற்குப் பின் பிணையில் வெளிவந்த அய்யா நெடுமாறனை, 'வாராது வந்த மாமணி', 'தமிழ்த் தேசியப் போராளி' ம.நடராசன் சிறைவாயிலிலேயே ஆரத்தழுவி வரவேற்றார். பின்பு செய்தியாளர்களிடம் நெடுமாறன், மிகுந்த கோபத்துடனும், முகத்தை இறுக்கமாக வைத்துக்கொண்டும், அதிர்ச்சிகரமான செய்தியை வெளியிட்டார். (இந்த இடத்தில் உங்களுக்கு வடிவேலு ஞாபகம் வந்தால் நாம் பொறுப்பல்ல)
"முள்ளிவாய்க்கால் முற்றத்தின் சுற்றுச்சுவரை இடித்த அதிகாரிகள் தன்னிச்சையாக எடுத்த முடிவாகத்தான் இருக்க முடியும். அவர்கள் மீது தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்காவிட்டால் பொதுமக்கள் முதல்வரைத் தவறாக நினைப்பார்கள்" என்று 'வீராவேசமாகப்' பேசினார். முள்ளிவாய்க்கால் முற்றத்தை இடித்தது தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்குத் தெரியாது என்றும், அதிகாரிகள் தன்னிச்சையாகவே இடித்தார்கள் என்றும் நெடுமாறன் கூறுவதன் மூலம் நிகழ்ந்த தவறுகளுக்கு ஜெயலலிதா காரணமல்ல என்று மக்களுக்குத் தெளிவுபடுத்துகிறாராம்.
தமிழகத்தை ஆட்சி செய்பவருக்கு தமிழகத்தின் எந்த மூலையில் எது நடந்தாலும் தெரிந்திருக்க வேண்டும்தானே. "அமைச்சரே மாதம் மும்மாரி மழை பொழிகிறதா?" என்று வெளியில் என்ன நடக்கிறது என்பதுகூடத் தெரியாமல் ஆட்சி நடத்தும் அந்தக்கால அரசியா ஜெயலலிதா? என்ன சொல்ல வருகிறார் நெடுமாறன்? ஒன்றுமே தெரியாமல் ஜெயலலிதா ஆட்சிபுரிகிறாரா? அல்லது ஜெயலலிதாவைக் காப்பாற்ற நினைக்கிறாரா? சரி, ஜெயலலிதாவிற்குத் தெரியாமல் இடித்தார்கள் என்றால், அய்யா சிறைக்குப் போனது கூடவா அம்மாவுக்குத் தெரியாது. நீதிமன்றத்தில் பிணை கேட்டதுகூடவா தெரியாது? முள்ளிவாய்க்கால் முற்றம் திறப்பின்போது, அரசு அனுமதி வழங்காததால் அய்யா நீதிமன்றத்திற்குப் போனாரே, இதுகூடவா அம்மாவுக்குத் தெரியாது? கொளத்தூர் மணி அவர்கள் மீது தேசியப் பாதுகாப்புச் சட்டம் பாய்ந்ததுகூடவா தெரியாது? இவையும் அதிகாரிகளே தன்னிச்சையாக எடுத்த முடிவுதானா? மாவீரன் நெடுமாறன் இப்படி அந்தர் பல்டி அடித்துப் பேசும் அரசியல்தான் என்ன!
சரி, நெடுமாறன்தான் இப்படி என்றால், வீழ்ந்துவிடாத வீரத்துக்கும், மண்டியிடாத மானத்துக்கும் சொந்தக்காரரான சீமான், நெடுமாறன் கைதையொட்டி முள்ளிவாய்க்கால் முற்றத்திலேயே செய்தியாளர்களிடம் பேசும்போது "இந்நிகழ்வுக்கு மத்திய உளவுத்துறைதான் காரணமாக இருக்க முடியும். மத்திய அரசால்தான் தமிழக அதிகாரிகள் தமிழர்களுக்கு எதிராக நடக்கிறார்கள். இப்போக்கை தமிழக அரசு மாற்றிக் கொள்ள வேண்டும்" என்றார். நெடுமாறன் எப்படிப் பேசினாரோ அதையே சீமானும் தமிழக அரசுக்கும் முள்ளிவாய்க்கால் இடிப்பு சம்பவத்திற்கும் தொடர்பில்லை என்று சொல்கிறார்.
இவ்வளவு கடுமையாகவும், தமிழினத்திற்கு விரோதமாகவும் நடந்துகொள்ளும் ஜெயலலிதாவைப் பார்த்து, ஜெயலலிதா செய்வது மக்கள் விரோதம் என்று சொல்லக்கூடத் துணிச்சல் இல்லாதவர்களாக இந்த 23ஆம் புலிகேசிகள் தமிழகத்தில் வலம் வருகிறார்கள். இதற்குக் காரணம் என்னவாக இருக்க முடியும்? ஒன்றுமில்லை. அடிப்படையில் கலைஞர் கருணாநிதி எதிர்ப்புதான். தமிழீழ விடுதலையோ, தமிழர் ஒற்றுமையோ, தமிழின விடுதலையோ, தமிழ்த் தேசிய அரசியலோ.. இந்த நெடுமாறன் வகையறாக்களுக்கு முக்கியமல்ல; கருணாநிதி எதிர்ப்புதான் முக்கியம் என்பதை முள்ளிவாய்க்கால் முற்ற இடிப்புக்குப் பின்னான இவர்களின் அரசியல் நமக்கு உணர்த்துகிறது. கலைஞர் கருணாநிதி சாதாரணமாகத் தட்டினாலே அய்யோ இரத்தம்... என்று கூப்பாடு போட்டவர்கள், ஜெயலலிதா உலக்கையை வைத்து இவ்வளவு மோசமாக அடித்தும் தலையில் வருவது தக்காளி சட்னிதான் என்று சிரித்துக்கொண்டே துடைத்துக்கொண்டு வருகிறார்கள்.
இப்போது முதலில் சொன்ன வடிவேலுவின் காமெடிக் காட்சியை நினைத்துப் பார்த்தால், நெடுமாறனின் அரசியல் கண்டு நீங்களே விழுந்து விழுந்து சிரிப்பீர்கள்.
பாவம்... நெடுமாறன் வகையறாக்களுக்கு 'பில்டிங் ஸ்ட்ராங்.. பேஸ்மெண்ட் வீக்...' என்ன செய்வது?  இந்த இலட்சணத்தில் தமிழீழத்தை மீட்கப் போகிறார்களாம்... தமிழ்த் தேசியத்தை அடையப் போகிறார்களாம்!
இவர்களது அரசியல் கண்டு ஜெயலலிதாவின் மைண்ட் வாய்ஸ் இப்படித்தான் சொல்கிறது - "எவ்வளவு அடிச்சாலும் நெடுமாறன் தாங்குறாரே... இவர் ரொம்ப நல்லவரு..."
 
                                                                                                                                   - வன்னிஅரசு,
   
100 வயதான ரிப்பன் மாளிகை.

இந்தியாவின் முதல் மாநகராட்சி யான "மெட்ராஸ் மாநகராட்சி "என்ற,  சென்னை மாநகராட்சி 1688-ம் ஆண்டு தொடங்கப்பட்டது.
 அப்போது மாநகராட்சி அலுவலகம், செயின்ட் ஜார்ஜ் கோட்டை டவுன் ஹாலில் செயல்பட்டது.
பிறகு டவுன் ஹாலை அரசு எடுத்துக் கொண்டதால், 1730களில் ஜார்ஜ் டவுன் எர்ர பாலு செட்டித் தெருவுக்கு மாநகராட்சி அலுவலகம் மாற்றப்பட்டது.
அந்த அலுவலகம் போதவில்லை. எனவே 1909- ம் ஆண்டு டிசம்பரில் அடிக்கல் நாட்டப்பட்டு, நான்கு ஆண்டுகள் பார்த்துப்பார்த்து, இன்றைய மாநகராட்சி தலைமை அலுவலக கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டது.
 இன்று 100 வயதை நிறைவு செய்யும் சென்னை ரிப்பன் மாளிகை. படம்: வி.கணேசன்
இந்தோ- சராசனிக் பாணியில், ரூ. 7.5 லட்சம் செலவில் , 132 அடி கொண்ட மைய கோபுரத்துடன், 252 அடி நீளம், 126 அடி அகலத்தில் மிக பிரம்மாண்டமாக கட்டப்பட்ட இக்கட்டிடத்துக்கு உள்ளாட்சி நிர்வாகத்தில் பல சீரமைப்புகளை செய்த லார்ட் ரிப்பனின் பெயர் சூட்டப்பட்டு, 1913- ம் ஆண்டு நவம்பர் 26-ம் தேதி திறக்கப்பட்டது.
 வெள்ளை அடித்ததுபோல், எப்போதும் வெள்ளை வெள்ளேரென்று இருக்கும் , இன்றைய நவீன சென்னையின் பழம் பெருமையை தாங்கி நிற்கும் ரிப்பன் மாளிகை, இன்று நூறு வயதை நிறைவு செய்கிறது.
-----------------------------------------------------------------------------------------------------------------------------
 

ஞாயிறு, 24 நவம்பர், 2013

பழிவாங்கப்படும்

                                                                                                            
 பணியாளர்கள்
 
 
                                                                                                                    -எழில்.இளங்கோவன்
 
“வலியோர் சிலர் எளியோர்தமை வதையேமிகு புரிகுவதா”
என்ற புரட்சிக் கவிஞர் பாரதிதாசனாரின் பாடல் வரிகளை நினைவுபடுத்துவதாக அமைந்துள்ளது அதிமுக ஜெயா  அரசின் பழியுணர்வும், மக்கள் நலப்பணியாளர் களின் அவல நிலையும்.பணியாளர்கள் பணியில் அமர்த்தப்பட்டார்கள், திராவிட முன்னேற்றக் கழக அரசினால்.
ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க. அரசு 8.11.2011 அன்று, ஒரே நாளில் 13,000 மக்கள் நலப்பணி யாளர்களின் வேலையைப் பறித்து வீட்டிற்கு அனுப்பிவிட்டது.
suran
ஓர் அரசுக்குத் தன் குடிமக்களின் அடிப்படைத் தேவையான உணவு, உறை விடம், வேலை ஆகிய மூன்றையும் செய்து தர வேண்டிய கடமையும், பொறுப்பும் இருக்கிறது.
இதற்கு மாறாக 13,000 குடும்பங்கள் பரிதவிக்கும் அளவுக்கு, மக்கள் நலப் பணியாளர்களைப் பணிநீக்கம் செய்தது அ.தி.மு.க. அரசு.
இந்தப் பணிநீக்க அரசாணையை ஏற்காத பணியாளர் சங்கங்கள், தமிழக அரசின் அரசாணைக்கு எதிராகச் சென்னை உயர்நீதிமன்றத்தை நாடி னார்கள்.
வழக்கை ஏற்று விசாரித்த நீதிமன்றம், 23.1.2012ஆம் நாள், தமிழக அரசின் மக்கள்நலப் பணியாளர் பணிநீக்க ஆணையை நீக்கி, மீண்டும் அவர்களுக்குப் பணி வழங்க ஆணை பிறப்பித்தது.
இவ்வாணையை ஏற்க மறுத்து அ.தி.மு.க. அரசு உயர்நீதிமன்ற அமர்வில் மேல்முறையீடு செய்ததன் விளைவாக, கடந்த ஆண்டு ஏப்ரல் 26ஆம் நாள் அளித்த தீர்ப்பில், தமிழக அரசின் பணிநீக்க ஆணை செல்லும் என்றும், ஐந்து மாத ஊதியத்தை மட்டும் மக்கள் நலப் பணியாளர்களுக்குக் கொடுத்து விடவும் தீர்ப்பு வழங்கியது.
உயர்நீதிமன்ற அமர்வின் தீர்ப்பை எதிர்த்து தமிழ்நாடு மக்கள் நலப்பணி யாளர்கள் முன்னேற்ற சங்கம், திண்டுக்கல் மக்கள் நலப் பணியாளர் சங்கம் இணைந்து மேல்முறையீடு செய்த வழக்கின் தீர்ப்பை அதிரடியாக வழங்கியுள்ளது உச்சநீதிமன்றம்.
சீர்காழியில் நூதன போராட்டம் நடத்திய மக்கள் நலப்பணியாளர்கள் கைது
சென்னை உயர்நீதிமன்ற அமர்வு அளித்த தீர்ப்பை ரத்து செய்வதுடன், மக்கள் நலப் பணியாளர்களின் மேல் முறையீட்டு மனுவை அவர்களின் புதிய மனுவாக விசாரித்து 6 மாதங்களுக்குள் தீர்ப்பளிக்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் அனில் ஆர்.தவே, தீபக் மிஸ்ரா தீர்ப்பு வழங்கி யுள்ளார்கள்.
இதில் குறிக்கத்தக்க செய்தி என்னவென்றால், வழக்கு விசாரணை முடியும்வரை, தமிழக அரசு வாய்தா போன்ற இழுத்தடிப்புகளைச் செய்யக் கூடாது என்றும் அறிவுறுத்தியுள்ளது.
இவ்வழக்கில் பணியாளர் சங்கம் சார்பாக வாதிட்ட வழக்கறிஞர் அந்தி அர்ஜுனா, மக்கள் நலப் பணியாளர்கள் நீக்கப்பட்டது அ.தி.மு.க. அரசின் பழிவாங்கும் செயல், இதற்கு அரசியல் காரணம் உள்ளது என்று தம் வாதத்தின் போது கூறியிருக்கிறார்.
தமிழக அரசு சார்பில் வழக்கறிஞர் ராகேஷ் துவேதி இதை மறுத்தாலும், உண்மை அதுதான் என்பது வெள்ளிடை மலையாகத் தெரிகிறதே!
இப்பணியாளர்களை முதல் முதலாகப் பணியில் அமர்த்தியவர் கலைஞர். ஏற்றுக்கொள்ள முடியுமா இதை?
கலைஞரால் நியமனம் செய்யப்பட்ட இப்பணியாளர்கள் அரசுப் பணியாளர் களே இல்லை.
அவர்கள் வெறும் ஒப்பந்தப் பணியாளர்கள்தாம். ஆகவே அவர்களைப் பணியில் இருந்து நீக்க வேண்டும் என்பது தமிழக அரசின் வாதம்.
உண்மை வேறுவிதமாக இருக்கிறது. தி.மு.க. ஆட்சியின் போது, மக்கள் நலப்பணியாளர்கள் பணிக்கான விளம்பரம் முறையாகச் செய்தித்தாள் களில் வெளியிடப்பட்டது. அதற்கான நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டு, மாவட்ட ஆட்சியரால் முறையாகத் தேர்வு செய்யப்பட்டவர்கள் இப்பணியாளர்கள்.
அப்படியிருந்தும் ஒப்பந்தப் பணியாளர்கள் என்று சொல்லி 2011ஆம் ஆண்டுமுதல் 13,000 பணியாளர்களை வீட்டுக்கு அனுப்பக் கங்கணம் கட்டிக் கொண்டு இருக்கிறது அ.தி.மு.க. அரசு என்றால், இது கலைஞரைப் பழிவாங்கு வதாக நினைத்துக் கொண்டு மக்களைப் பழிவாங்கும் செயல் இல்லாமல் வேறென்ன!
அண்மையில் உலக சிக்கன நாள் கூட்டத்தில் அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் பேசும்போது, தமிழக வரி வருவாய் 89 கோடி ரூபாயில் 44 கோடி சமூகப் பாதுகாப்புத் திட்டத்திற்கு ஒதுக்குவதாகப் பேசியிருக்கிறார்.
தமிழகத்தின் மொத்த ஒதுக்கீட்டில் இது 50 விழுக்காடு.
மக்கள் நலப்பணியாளர்களின் பணி என்ன? அரசின் நலத்திட்டங்களை மக்களிடம் கொண்டு செல்வதும், அது குறித்து மக்களுக்கு விளங்கச் சொல்லி, அவைகளை ஒட்டிய பணிகளைச் செய்வதும்தான் மக்கள் நலப் பணி.
இவர்களுக்கு மட்டும் என்ன சமூகப் பாதுகாப்பு இல்லையா? அல்லது கலைஞரால் பணி பெற்றவர்கள் என்பதனால் சமூகப் பாதுகாப்புக் கொடுக்கக் கூடாதா?
தமிழக அரசு வழக்கறிஞர் உச்ச நீதிமன்றத்தில், மக்கள் நலப்பணியாளர் களுக்கு நிவாரணத் தொகை யாக ரூபாய் 34 கோடி கொடுக்கப்பட்டிருப்பதாகச் சொல்கிறார்.
tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper
இவையெல்லாம் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் போக்குவரத்துச் செலவுகளுடன் ஒப்பிட்டால் குறைவுதான்.
தாம்பரத் திற்கு அண்மை யில் உள்ள ஒரகடம் என்ற ஊரில் நிகழ்ச்சி ஒன்றுக்குக் கலந்து கொள்ள வந்த ஜெயலலிதா, சென்னையில் இருந்து மீனம்பாக்கம் விமான நிலையத்திற்குக் காரில் வருகிறார். அங்கிருந்து ஒரகடத் திற்கு அதே காரில் சென்றால் அதிகபட்சம் ஒருமணி நேரம்தான் ஆகும்.
அப்படிச் செய்யாமல் ஜெயலலிதா, மீனம்பாக்கத்தில் இருந்து அந்த ஒரு மணி நேரப் பயணத்தை ஹெலிகாப்டரில் சென்று வந்திருக்கிறார்.
ஒரகடத்தில் ஹெலிகாப்டர் இறங்க, ‘ஹெலிபேட்’ அமைத்தது உள்பட இது போன்ற பயணச் செலவுகள் கணக்கில் அடங்கா விளம்பரப் பதாகைகள், நாளிதழ்கள் உள்பட வண்ண வண்ண விளம்பரங்கள் என்று அவருக்காக அரசு செலவிடும் தொகையோடு ஒப்பிட்டால், மக்கள் நலப்பணியாளர்கள் பெறும் ஊதியம் கூட மிகவும் குறைவானதுதான்.
கலைஞர் ஆட்சியில் தொடங்கப் பட்ட அல்லது கொண்டுவரப்பட்ட எந்த ஒரு திட்டத்தையும், அது மக்கள் நலம் பயக்கும் திட்டமாக இருந்தாலும் கூட, அதனை நிறைவேற்றாமல் ஒதுக்கித் தள்ளும் வேலையைத் தானே அ.தி.மு.க. அரசு செய்து கொண்டு இருக்கிறது.
அப்படித்தான் தி.மு.க. ஆட்சியில் கலைஞரால் கொண்டுவரப்பட்ட மக்கள் நலப்பணியாளர் வேலைத்திட்டத்தையும் முடக்க முயல்கிறது இந்த அரசு.
ஆனாலும் உச்சநீதிமன்ற தீர்ப்பு ஜெயா  அ.தி.மு.க. அரசின் பழியுணர்ச்சிக்குத் தடையாய் அமைந்து விட்டது
பழி உணர்வும் பகை உணர்வும் ஒரு நாளும் வெல்வதில்லை!அது போல் தான் ஜெயலலிதா தான் தமிழத்திற்கு முதல்வர் என்பதை மறந்து அரசியல் காழ்ப்புணர்ச்சியில் பழி வாங்குவதும் . 
---------------------------------------------------------------------------------------------------------------------------
பாதாம், வால்நட்
 
போன்ற கொட்டைகளை சாப்பிடுவது, இதய நோய் மற்றும் புற்று நோயால் இறக்க நேரிடும் ஆபத்தைக் கணிசமாகக் குறைப்பதாக புதிய ஆய்வு ஒன்று காட்டுகிறது.
எவ்வளவுக்கெவ்வளவு கொட்டைகளை சாப்பிடுகிறோமோ அவ்வளவுக்கவ்வளவு அதிக காலம் நாம் வாழலாம் என்று "நியூ இங்கிலாந்து மருத்துவ சஞ்சிகை"யில் வெளியிடப்பட்டுள்ள ஆய்வு அறிக்கை ஒன்று கூறுகிறது.
 
அமெரிக்காவில் 30 ஆண்டு காலகட்டத்தில் சுமார் 1 லட்சத்து 20 ஆயிரம் பேரிடம் நடத்தப்பட்ட ஆய்வின் அடிப்படையில் இந்த முடிவுகள் வந்துள்ளன.
தினமும் ஒரு கையளவு கொட்டைகளை சாப்பிடுவதால், எந்த ஒரு காரணத்தாலும் இறப்பதை 20 சதவீதம் என்ற அளவில் குறைக்கிறது என்று இந்த ஆய்வு கூறுகிறது.
கொட்டைகளை உண்பவர்கள் மற்றவர்களைக் காட்டிலும் சராசரியாக சற்று கூடுதலாக உடல் நலன் குறித்து அக்கறையுடன் இருக்கிறார்கள் என்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.
அவர்கள் அதிகம் புகைப்பதில்லை, கூடுதலாக உடற்பயிற்சி செய்யக்கூடியர்களாக இருக்கிறார்கள், பழங்கள் மற்றும் காய்கறிகளை சாப்பிடுபவர்களாக இருக்கிறார்கள் --- இவையெல்லாம் இந்த ஆய்வு முடிவுகளில் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டன என்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.
-----------------------------------------------------------------------------------------------------------------------------
பிடித்த தொழில் ?
----------------------------------------------------------------------------------------------------------------------------
ஒருமுறை அக்பர் பீர்பாலிடம், ""நமது நாட்டில் மக்கள் அதிகமாக மேற்கொண்டிருக்கும் தொழில் எது?'' என்று கேட்டார்.
""வைத்தியத் தொழில்தான்,'' என்றார் பீர்பால்.
""என்ன விளையாடுகிறாயா? போதுமான மருத்துவர்கள் இல்லாததால், மக்கள் நோயால் வருந்திக் கொண்டிருப்பதாக அபுல் பசல் கூறினாரே. அப்படியிருக்க, நம் நாட்டில் மக்கள் அதிகமாக மேற்கொண்டிருக்கும் தொழில் வைத்தியத் தொழில் என்று கூறுகிறாயே, இதை உன்னால் நிரூபிக்க முடியுமா?'' என்றார் அக்பர்.
""நிச்சயம் நிரூபிக்கிறேன்,'' என்ற பீர்பால் மறுநாள் கையில் ஒரு பெரிய கட்டு போட்டுக் கொண்டு வந்து கொண்டிருந்தார்.

வழியில் ஒருவர் பீர்பாலிடம், ""கையில் என்ன கட்டு?'' என்று கேட்டார்.
""வழுக்கி விழுந்து விட்டேன். பலமான காயம் ஏற்பட்டு கை வீங்கி விட்டது,'' என்றார் பீர்பால்.
""உடனே அந்த மனிதர் அதற்கு ஒரு வைத்தியம் சொல்லி, உடனடியாக அந்த வைத்தியத்தைச் செய்து கொள்ள வேண்டுமென்றும், தாமதப்படுத்தினால் கையையே இழக்க நேரிடும்,'' என்றார்.
இவ்வாறு போகிற வழியெல்லாம் பார்க் கிறவர்கள் ஒவ்வொருவரும், ஒவ்வொரு விதமாக வைத்தியம் சொன்னனர். ஒருவாறு அரண்மனைக்குப் போய்ச் சேருவதற்குள் முப்பத்து ஆறு விதமான வைத்தியங்கள் சொல்லி விட்டனர்.
அக்பர் பீர்பாலின் கட்டைப் பார்த்து, என்னவென்று கேட்க, பீர்பால் அவரிடமும் வழுக்கி விழுந்து விட்டதாகவும், கை வீங்கி விட்டது என்றும் கூறி வழியில் பார்த்தவர்கள் சொல்லிய வைத்திய முறைகளையெல்லாம் சொன்னார்.
""அவர்கள் கிடக்கிறார்கள் முட்டாள்கள். அவர்கள் பேச்சைக் கேட்காதே! நான் ஓர் அற்புதமான வைத்தியம் சொல்லுகிறேன். அதை செய்து பார். பட்டென்று வீக்கம் ஒரு நொடியில் போய்விடும்,'' என்றார்.
அதைக் கேட்ட பீர்பால் சிரித்தார்.
""பீர்பால் நான் என்ன சொல்லி விட்டேன். நீ எதற்காக சிரிக்கிறாய்?'' என்று சற்று கோபமாக கேட்டார் அக்பர்.
""அரசே மன்னிக்க வேண்டும். எல்லாருக்கும் பிடித்தமான தொழில் எது என்று நேற்று என்னிடம் கேட்டீர்களே... அதற்கு பதில் இதுதான்,'' என்றார் பீர்பால்.
 
நன்றி:தினமலர் சிறுவர் மலர்.
-------------------------------------------------------------------------------------------------------------------------------
 
 
இணையத்தில் வீடியோ பதிவுகளை வெளியிடுவதற்கான முன்னணி வலைத்தளமான யூடியுப், அதன் முதலாவது வருடார்ந்த இசை விருது விழாவை அமெரிக்காவின் நியூ யார்க் நகரில் நடத்தியுள்ளது.
ராப்பிசை உலகின் பிரபலக் கலைஞர் (Rapper) எமினெம் இந்த ஆண்டுக்கான சிறந்த கலைஞருக்கான யூடியுப் விருதை வென்றுள்ளார்.
 
மாக்ல்மோர் மற்றும் ரயன் லூவெஸ் ஆகிய கலைஞர்களும் விருதுவென்றுள்ளனர்.
அமெரிக்கப் பாடகியான லேடி காகாவும் இலங்கை வம்சாவளிப் பெண்ணான பிரபல ஆங்கில-இசைப் பாடகி மாயாவும் (மாதங்கி அருள்பிரகாஸம்) விருதுவிழா மேடையில் இசை-நடன நிகழ்ச்சி நடத்தினர்.
இந்த விருதுவிழா இணையத்தில் நேரடி ஒளிபரப்புச் செய்யப்பட்டது.
கூகுள் நிறுவனத்துக்குச் சொந்தமான யூடியுப் இணையதளம் புதிய இசை வெளியீடுகளின் முன்னணி சந்தையாக மாறிவிட்டதாக செய்தியாளர்கள் கூறுகின்றனர்.
புதிய இசை ஆல்பங்களை வெளியிடுவதில் வானொலிச் சேவைகளையும் எம்டிவியையும் விஞ்சி யூடியுப் பிரபலம் பெற்றுவருகிறது  குறிப்பிடத்தக்கது.
-------------------------------------------------------------------------------------------------------------------------------
அருந்ததி ராய்

அருந்ததி ராய் மேகாலயாவின் தலைநகர் சில்லாங்கில் பிறந்தார்.
கேரளத்தை சேர்ந்த மேரி ரோசுக்கும் வங்காளத்தைச் சேர்ந்த தேயிலைத் தோட்டத்தில் வேலை செய்த தந்தைக்கும் பிறந்தார். தனது சிறுவயதில் கேரளாவில் உள்ள ஆய்மணம் என்ற சிற்றூரில் வளர்ந்தார். கோட்டயத்திலும் நீலகிரியிலும் பள்ளிப்படிப்பை முடித்தார். பின்னர் டில்லி பல்கலைக்கழகத்தில் கட்டிடக்கலை படிப்பில் சேர்ந்தார்.

அங்கு தனது முதல் கணவரைச் சந்தித்தார். பின் தங்கள் படிப்பை விடுத்து இருவரும் வெளியேறினர். தன் முதல் கணவருடன் நான்கு ஆண்டுகள் வாழ்ந்தார். பின்னர் அவர் பிரதீப் கிரிஷன் என்ற திரைப்பட இயக்குநரை மணந்தார். இருவரும் சேர்ந்து சில படங்களை எடுத்தனர். இப்படங்களுக்கு அருந்ததி திரைக்கதை எழுதியது குறிப்படத்தக்கது.
அவற்றில் சில In Which Annie Gives It Those Ones and Electric Moon.
 அருந்ததி ராய் தனது பள்ளி பருவத்திலிருந்தே தானாகச் சிந்திப்பவர்.
இந்தியப் பெண் எழுத்தாளர் அருந்ததி ராய் பிறந்த தினம் (நவ.24- 1961)

இதற்கு அவர் படித்த பள்ளியின் கட்டற்ற படிப்புமுறை காரணமாகத் திகழ்ந்தது. இவரது பல படைப்புகளில் சமுதாயத்திலுள்ள பெண் அடிமைத்தனம் , குழந்தைத் தொழிலாளர் பிரச்சனை , அமேரிக்காவின் வெளியுறவு கொள்கைகள் முதலியவற்றை விமர்சனத்துக்கு உட்படுத்தினார். மேதா பட்கர் தொடங்கிய நர்மதா பச்சாவோ அந்தோலன் என்ற அமைப்பில் தீவிரமாக பங்கு கொண்டார். இவ்வாறே இவரது குரல் சமுதாயத்தின் மறுபக்கத்தை மக்களிடம் கொண்டு சேர்த்தது. இந்த குரல் பலமுறை எழுத்து வடிவமாக இருந்தது என்பது குறிப்பிடத்தகுந்தது. தன் எழுத்து மக்களைச் சென்றடைவதை உணர்ந்த அருந்ததி ராய் நாவல்கள், அரசியல் கட்டுரைகள் , விமர்சனங்களைப் என பல விதமான படைப்புகளை படைத்து வருகிறார்.

இவரது படைப்புகளின் தன்மை பல நேரம் எதனையும் கருப்பு வெள்ளையென்று பிரித்து அடையாளம் காட்டாது. மனிதர்கள், நாடுகள், கொள்கைகள் என்று அனைத்திலும் உள்ள தீமை மற்றும் நன்மையை உணர்ச்சி நிலையிலிருந்து விலகி படைப்பதால் இவரது படைப்புகள் உலகில் பல பத்திரிக்கைகளில் இடம் பெற்றுவருகின்றன.

1997 ஆம் ஆண்டு தனது முதல் புதினமான த காட் ஆப் ஸ்மால் திங்ஸ்க்கு புக்கர் பரிசு பெற்றார். புக்கர் பரிசு வென்ற முதல் இந்தியர் என்பது குறிப்பிடத்தக்கது.

2003ஆம் ஆண்டு இவருக்கு வழங்கப்படவிருந்த சாகித்ய அகாதமி பரிசை இவர் மறுத்து விட்டார்.

மே 2004-ல் சிட்னி அமைதிப் பரிசையும் வென்றார்.
---------------------------------------------------------------------------------------------------------------------------
 
 
 
 

சனி, 23 நவம்பர், 2013

இப்போதுதான் இப்படியா?.எப்போதுமே இப்படித்தானா??

 பழ.நெடுமாறன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் 80 பேர் திருச்சி மத்திய சிறையில் இருந்து இன்று காலை விடுவிக்கப்பட்டனர். மதுரை உயர் நீதிமன்றக் கிளை வழங்கிய பிணையை  அடுத்து அவர்கள் ம் விடுவிக்கப்பட்டனர்.
சிறை வாயிலில் அவர்களை,இதுவரை காணாமல் போயிருந்த  புதிய பார்வை ஆசிரியர் மு .நடராஜன் வரவேற்றார்.
suran
இப்போதுதான் இப்படியா ?.எப்போதுமே இப்படித்தானா??
சிறையில் இருந்து வெளிவந்த பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த பழ.நெடுமாறன்:
"தஞ்சை விளார் கிராமத்தில் அமைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவு முற்றச்சுவரை இடித்த அதிகாரிகள் மீது தமிழக முதல்வர் ஜெயலலிதா நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். மேலும், முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து மீண்டும் அந்த இடத்தில் அதனை அமைக்க முயற்சி மேற்கொள்ளப்படும்" என்றார்.
நெடுமாறன் சிறை வாயில் செவ்வி அவரை "சிரிப்பு போராளியாக" காட்டுகிறது.
அவருக்கு சற்றும் சளைக்காதவர் சீமான்.
இவர்கள் பேச்சுகள் வடிவேலு நடிக்காத குறையைத் தான் போக்குகிறது.
வடிவேலுவுடன் இந்த மாவீரர்களை சரிசமமாக்கக் கூடாது.
சென்ற தேர்தலில் திமுக வுக்கு ஆதரவாக பரப்புரை செய்ததால் ஜெயா அடிவருடி சினிமாக்காரர்களால் பழி வாங்கப்பட்டு ஒதுக்கப்பட்டாலும் அவர் இன்றுவரை மரியாதை நிமித்தமாக [?]முதல்வரை சந்தித்து சரணாகதி அடையவில்லை.மதுரை வீரனாகத்தான் உள்ளார்.நெடுவோ மதுரை பெயரையே தனது கோழைத்தன அரசியல் மூலம் கெடுத்து விட்டார்.
தஞ்சையில் அமைந்துள்ள முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதி என சொல்லப்பட்ட இடத்தை நெடுஞ்சாலைத்துறையினர் மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டபோது அவர்களைப் பணி செய்யவிடாமல் தடுத்தது உள்ளிட்ட சில வழக்குகளில் தமிழ் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன் உள்ளிட்ட 81 பேர் தஞ்சை காவல்துறையினரால் கடந்த 13- ஆம் தேதியன்று கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர் .
 
 
இடிக்க உத்திரவிட்டவரையே ஏவ லால்கள் மீது நடவடிக்கை எடுக்கச் சொல்லும் திறமையும்,புத்திசாலித்தனமும் ,தகிரியமும் நமது "மாவீரன் "[?]நெடுமாறனையும்,சீமெண்ணை மன்னிக்கவும் சீமானையும் தவிர யாருக்கு வரும்.?
இனி வழக்கு தொடர்ந்து முள்ளிவாய்க்கால் முற்றம் அமைக்க முடியாது .அதிமுக" அடிவருடிகள் முத்தம் "கிளை வேண்டுமானால் நெடுமாறன்,சீமான் அமைக்க  முடியும்.
கருணாநிதி முதல்வராயிருக்கும் போது நடந்த ஈழத்தமிழர் அழித்தொழிப்புகளுக்கு கலைஞர்தான் காரணம்.அ வரத்தான்   மத்திய அரசுடன் சேர்ந்து தமிழர்களை கொன்று குவித்தார்.ராஜபக்சேயின் தமிழர்களை கொன்ற பீரங்கிகளுக்கு கருணாநிதிதான் வெடிமருந்து குண்டுகளை அடைத்து கொடுத்தார் என்று பேசிய மாவீரன்கள் வாய் இப்போது போயஸ் தோட்டத்தில் அடகு வைக்கப்பட்டுள்ளதோ?
இவர்களின் அன்றைய துணிச்சல்களுக்கு அன்றைய முதல்வர் கருணாநிதி தமிழினத் தலைவர் கண்டுகொள்ள மாட்டார்,அவரின் தமிழினத தலைவர் என்ற  பெருமையை சிதைக்க  வேண்டும் என்ற தகிரியமும் .இன்றைய முதல்வர் பற்றி வாய் திறந்தால் வைகோ,நக்கீரன் கோபால் மட்டுமல்ல அவாள் பெரியவர் காஞ்சி மடத்தலைவரே  பட்ட பாடுகள் பற்றிய பயமும்தான் காரணம்.!
இனிமேலும் நீங்கள் முற்றம்,ஈழம்,பிரபாகரன் என்று பேசினால் ஈழத்தில் உள்ள தமிழன் உணர்வாளன் வளர்க்கும் நாய் கூட உங்களை நம்பாது-மதிக்காது.ஓட ,ஓட கடித்து குதறி விடும்.
போய் முன்னாள் ஈழத்தாய் ஜெயா காலில் விழுந்து கட்சியில் சேர்ந்து கூட்டத்துக்கு பத்தாயிரம் வாங்கி பிழைக்கிற வழியைப் பாருங்கள்.
முற்றம் இடிக்கப்பட்டவுடன் மறைந்து போன மு.நடராசன் திடீரென காட்சி தருகிறார் .குளிர் விட்டு போச்சா?
 
 
 
 
 

வெள்ளி, 22 நவம்பர், 2013

இவர்கள் பயத்துக்கு பழனி மலையை பொக்கெட்டுக்குள் வைத்தாலும் பத்தாது!

முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தின் சுற்றுச் சுவரை இடித்துத் தள்ளி, அடுத்தது முற்றத்தையும் இடிக்க நேரம் பார்த்துக் கொண்டிருக்கிறார் நெடுமாறன்,சீமான் ஆகியோரின் ஈழத் தலைவி.
கொளத்தூர் மணி
 கைது, நெடுமாறன் கைது என்று கைதுகளுக்கும் குறைவில்லை.  சர்வாதிகார ஆட்சியின் காட்டுத் தர்பாரை எதிர்க்கத் துணிவற்ற தமிழ்த் தேசியவாதிகளோ… ‘இது மத்திய உளவுத் துறையின் சதி‘ என்கிறார்கள். அதாவது ஈழத்தாய் ஜெயலலிதாவுக்கும் இதற்கும் தொடர்பு இல்லையாம்.
நெடுமாறன்
‘‘முற்றத்தை யாராவது அழிக்க நினைத்தால் அவர்களை, இறந்து போன தமிழர்களின் ஆன்மா மன்னிக்காது’’

கைதுக்கு முந்தைய நெடுமாறனின் பேட்டியைக் கவனியுங்கள்…
‘‘மத்திய புலனாய்வுத் துறை மூலமாக இதை இடிக்கவும் விழாவை தடுக்கவும் முயற்சி நடைபெற்று வரும் நிலையில், தமிழக அரசும் ஏன் எதிராக செயல்படுகிறது என்றே தெரியவில்லை” என்று புலம்பினார். “ஏன்” என்ற கேள்விக்கு நெடுமாறனுக்கு பதில் தெரியவில்லையென்றால் நடராஜனிடம் கேட்டால் சொல்லக் கூடும்.
 முள்ளிவாய்க்கால் முற்றம் நிகழ்ச்சிக்கு இடையூறு செய்தது முதல் சுற்றுச் சுவரை இடித்தது வரை சகலமும் ஜெயலலிதாவின் வேலைதான் என்பதை அனைவரும் அறிந்துள்ளனர். நெடுமாறனுக்கு மட்டும் தெரியவில்லையாம்.
அடுத்த பாராவில், ‘‘முற்றத்தை யாராவது அழிக்க நினைத்தால் அவர்களை, இறந்து போன தமிழர்களின் ஆன்மா மன்னிக்காது’’ என்று எச்சரிக்கிறார். மூன்றாவது பாராவில், ‘‘இதை அழிக்க நினைப்பவர்கள் தமிழ் இனத்தின் துரோகி” என்று சாபம் விடுகிறார். கடைசி வரையில் இடித்த அவரின் ஈழ அம்மா பெயரை மட்டும் அவர் சொல்லவே இல்லை.
மேற்கண்ட பேட்டி, நெருக்கடி முற்றிய நிலையில், குறிக்கப்பட்ட தேதிக்கு முன்னரே முற்றத்தை திறந்து வைத்து நெடுமாறன் பேசியது.
ஒருவேளை சுற்றுச் சுவர் இடிக்கப்பட்ட பின்னர் ஜெயலலிதாவைக் கண்டித்து ஏதேனும் பேசியிருப்பாரோ என்று தேடிப் பார்த்தோம். அப்போதும் இதேமாதிரி, ‘தமிழர்கள் ஆவி மன்னிக்காது’ என்றுதான் பேசிக்கொண்டிருக்கிறார். கடைசி வரையில் இடித்தது யார் என்பதை அவர் சொல்லவே இல்லை.
“அதை மட்டும் சொல்லிராதீங்க… அடிச்சுக் கூட கேப்பாங்க, அப்பவும் சொல்லிராதீங்க” என்ற வடிவேல் காமெடியைப் போல… நெடுமாறன் கடைசி வரையிலும் ‘அதை’ மட்டும் சொல்லவே இல்லை. நெடுமாறன் மட்டுமா? சீமான்,போன்ற பலர் இந்த ஈழத்தியாகிகள்  பட்டியலில்  உண்டு.
சீமான்
‘சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றிய ஜெயலலிதா, இப்படி இடிப்பார் என்று எதிர்பார்க்கவில்லை’ என்று அதிர்ச்சி அடைகிறார்.

முற்றம் இடிப்பைக் கண்டித்துப் பேசிய சீமான்,
இது மத்திய உளவுத்துறையின் சதி’ என்றதோடு நிற்கவில்லை. அதை நிரூபிக்க ஆதாரங்களை எடுத்து விட்டார். ஆக்கிரமிக்கப்பட்டதாக சொல்லப்படும் நெடுஞ்சாலை மத்திய நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமென்றும், அதனால் ரா அமைப்பின் தூண்டுதலின் பேரில்தான் சுற்றுச் சுவர் இடிக்கப்பட்டிருப்பதாகவும் ஈழ இணையதளம் ஒன்றுக்கு பேட்டி அளித்திருந்தார்.
ஈழ இணையத்துக்காரர்களுக்கு தமிழக நெடுஞ்சாலைகளெல்லாமே மத்திய அரசுக்கு சொந்தமானவையல்ல .ஊருக்குள் உள்ள மத்திய அரசு நெடுஞ்சாலை யை  தமிழக அரசு ஏன் இடிக்கிறது என்பது கூடவா சிந்திக்கத் தெரியாது?என்பதை அண்ணனுக்கு யாராவது எடுத்துச் சொன்னால் நல்லது. இந்த இடத்தை மாநில அரசிடமிருந்து குத்தகைக்கு எடுத்துள்ளதாகவும், குத்தகையை மாநில அரசு புதுப்பிக்கவில்லையென்றும் நெடுமாறன் கூறியிருக்கிறார். அண்ணன் அதையும் கவனிக்கவில்லை போலும். ஜெ அரசு சம்பந்தப்பட்டதாக இருந்தால், எப்படியோ அது அண்ணன் கண்ணில் படாமலேயே போய் விடுகிறது.
அதுமட்டுமல்ல, ‘காமன்வெல்த் மாநாட்டுக்குத் தமிழ்நாட்டில் எழுந்திருக்கும் எதிர்ப்புகளை திசை திருப்பவே, முள்ளிவாய்க்கால் முற்றம் இடிக்கப்பட்டுள்ளது’ என்ற யாரும் எதிர்பார்க்காத கோணம் ஒன்றையும் எடுத்து விட்டார். இப்படி சொல்லி முடிப்பதற்குள் அவருக்கு ஜெயலலிதாவின் காமன்வெல்த் தீர்மானம் நினைவுக்கு வந்து விட்டது. ‘சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றிய ஜெயலலிதா, இப்படி இடிப்பார் என்று எதிர்பார்க்கவில்லை’ என்று அதிர்ச்சி அடைகிறார். அப்ப தீர்மானமெல்லாம் நாடகமா என்று சந்தேகமாக கேட்கிறார்.
என்ன பேசினாலும் ‘ஜெயலலிதா’ என்ற பெயரை மட்டும் அவர் சொல்லவில்லை. பெருமகனார் என்பதைப் போல பெருமகளார் என்று மரியாதையாகவாவது சொல்லலாம். ஆனால் எச்சரிக்கையாக ‘தமிழக அரசு’ என்கிறார். தமிழக அரசின் செயல் அவருக்கு அதிர்ச்சி அளிக்கிறதாம்.
வைகோ
வைகோவை பொருத்த வரை அம்மாவுடன் கூட்டணி கிடையாது.

அம்மாவுக்கு அப்பாற்பட்டு ஒரு அரசா? கழிவறை முதல் கல்லறை வரை எது திறக்கப் பட்டாலும், “நான் உத்தரவிட்டுள்ளேன், என்னுடைய அரசு நிறைவேற்றியிருக்கிறது” என்று அடக்கத்தோடு பொறுப்பேற்றுக் கொள்ளும் அம்மையார், இந்த புல்டோசர் வேலைக்கு மட்டும் பொறுப்பேற்றுக் கொள்ள மாட்டாரா என்ன?
அம்மாவுக்கு அப்பாற்பட்டு ‘தமிழக அரசு’ என தனியே ஒன்று செயல்படுவதாக சீமான் பேசி வருவது அம்மாவுக்கு தெரிந்தால், அண்ணன் மீது அவதூறு வழக்கு பாயத் தொடங்கி விடுமே! சீமான் இந்தக் கோணத்தில் யோசித்தாரா தெரியவில்லை.
ஸ்ஸ்.. யப்பா… முடியலை.
ஜெயலலிதா எவ்வளவு அடித்தாலும் வலிக்காதது மாதிரியே நடிக்கும் இவர்கள், இப்போதும் வலியை பொறுத்துக் கொண்டு, உள்குத்துக்கு ஆயின்மென்ட் தடவிக் கொண்டிருக்கிறார்கள்.
வைகோவை பொருத்த வரை அம்மாவுடன் கூட்டணி கிடையாது. அவர் தலைவிதி முடிவாகி விட்டது. “அங்க அவன் இடிக்கிறான், இங்க இவள் இடிக்கிறாளா, அங்கே ராஜபக்சே இடிக்கிறான், இங்கே ஜெயலலிதா இடிக்கிறாளா?” என்று வைகோ உணர்ச்சி வசப்பட்டு வார்த்தையை விட்டதை காப்டன் டிவிக்காரன் கவ்வி விட்டான். அதையே திரும்பத் திரும்ப போட்டுத் தாக்குகிறான்.
இதையெல்லாம் கண்டு நெடுமாறன் அண்ட் கோவுக்கு சித்தம் கலங்குகிறது. ‘நாம வெயிட்டாவும், வீக்காவும் பேசி சமாளிச்சுக்கிட்டிருக்கோம். இந்தாளு நடுவுல புகுந்து குட்டையைப் குழப்புறாரே’ என்று அவர்கள் உள்ளுக்குள் குமைகிறார்கள்.
நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் இருந்தே ஜெயலலிதா குடைச்சல் கொடுத்துக் கொண்டுதான் இருக்கிறார். நினைவு ஜோதி கொண்டு வந்தவர்களை கைது செய்தார். நிகழ்ச்சியையே தடை செய்ய முயன்றார். அதனால்தான் திட்டமிட்டதில் இருந்து இரண்டு நாட்கள் முன்பாகவே நெடுமாறன், முற்றத்தை திறந்து வைக்க வேண்டியிருந்தது. அதன் பிறகும் காவல் துறையின் நெருக்கடிகள் நிற்கவில்லை. பிரபாகரன் படம் பதித்த ப்ளெக்ஸ் போர்டுகள் வைக்கக்கூடாது என்று அவற்றை அகற்றினார்கள்.
அந்த சமயத்தில் ‘இந்து’ பத்திரிகையில் ஒரு செய்தி வெளியானது. ‘முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தின் உட்பகுதியில், ஈழப் போராட்டத்தில் உயிர் நீத்த பல தலைவர்களின் படங்கள் ஓவியங்களாக வைக்கப்பட்டுள்ளன. அதில் பிரபாகரனின் ஓவியமும் உள்ளது. அந்த ஓவியம் மட்டும் ஒரு துணியால் மூடி வைக்கப்பட்டுள்ளது’ என்ற அந்த செய்தியைக் கண்டு பதறிப்போன நெடுமாறன் உடனடியாக மறுப்பு ஒன்றை வெளியிட்டார். , ‘ஈழப் போராட்டத்தில் இறந்து போனவர்களின் ஓவியங்களை மட்டுமே முற்றத்தில் வைத்துள்ளோம். பிரபாகரன் இன்னும் உயிருடன் இருக்கிறார். அதனால் அவர் படத்தை வைத்திருக்கிறோம் என்ற செய்தியே தவறானது’ என்று அறிக்கை வெளியிட்டார்.
எவ்வளவு அயோக்கியத்தனம் இது? காலம் எல்லாம் எந்தப் பெயரை வைத்து அரசியல் செய்தார்களோ… அந்தப் பெயரை சத்தமே இல்லாமல் கை கழுவி விட்டார்கள். முப்பதாண்டு காலமாக தங்களின் சுயநல அரசியலுக்குப் பயன்படுத்திக் கொண்ட பிரபாகரன் என்ற பெயரை, அவரது மரணத்திற்குப் பிறகு தீண்டத் தகாததாக மாற்றி விட்டனர் தமிழ்த் தேசியவாதிகள். அதனால்தான் ‘பிரபாகரனின் ஓவியம் இருக்கிறது’ என்ற செய்திக்கு அஞ்சிப் பதறுகிறார் நெடுமாறன்.
ஓவியம் இருக்கிறது என்ற செய்தி அம்மாவின் கண்ணில் பட்டு விட்டால் என்ன செய்வது என்பது தான் அவருடைய பிரச்சினை. அதனால்தான், எப்டியெல்லாமோ பேசி சமாளிக்கிறார். பிரபாகரன் உயிரோடு இருப்பதாக இப்போது எவரும் பேச மறுக்கும் நிலையில் அதை ஒரு லா பாயிண்டாக வைத்து இந்து செய்தியை மறுக்கிறார் நெடுமாறன். இதில் பிரபாகரன் புகழை விட ஜெயா மீதான அச்சமே மேலோங்கி இருக்கிறது.
பிரபாகரன் பெயரைச் சொல்ல பயம், ஜெயலலிதா பெயரைச் சொல்ல பயம்… இவர்கள் எல்லாம் சேர்ந்துதான் ஈழம் வாங்கித் தரப் போகிறார்களாம்!
இதில் உச்சகட்ட காமெடி ஒன்றும் இருக்கிறது. இரவு 10 மணிக்குப் பிறகு ஒலிபெருக்கி பயன்படுத்திய வழக்கில் (சசிகலா) நடராஜன் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் முன் ஜாமீன் கேட்டு நடராஜன், மதுரை உயர்நீதிமன்ற கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில், ‘‘நவம்பர் 8 -ம் தேதி நடைபெற்ற திறப்பு விழாவில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றேன். விழாவை ஏற்பாடு செய்திருந்த உலகத் தமிழர் பேரமைப்பு அறக்கட்டளைக்கும், விழா ஏற்பாட்டாளர்களுக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை. பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த தமிழறிஞர்கள், கவிஞர்கள், தமிழ் ஆர்வலர்கள் இவ்விழாவில் பங்கேற்றனர். திறப்பு விழா மற்றும் கருத்தரங்கம் எந்தவொரு தனிப்பட்ட நபருக்கோ, அரசுக்கோ அல்லது நாட்டுக்கோ எதிராக ஏற்பாடு செய்யப்படவில்லை.” என்கிறார் நடராஜன்.
சசிகலா நடராசன்
‘எனக்கும் இந்த முற்றத்துக்கும் அதன் திறப்பு விழா நிகழ்ச்சிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை’

//விழாவை ஏற்பாடு செய்திருந்த உலகத் தமிழர் பேரமைப்பு அறக்கட்டளைக்கும், விழா ஏற்பாட்டாளர்களுக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை// என்ற வாக்கியத்தின் பொருள் உங்களுக்கு ஏதாவது புரிகிறதா? உலகத் தமிழர் பேரமைப்பு அறக்கட்டளை என்பது முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் அமைக்கப்படுவதற்காக உருவாக்கப்பட்டது. இதற்கு நெடுமாறன்தான் தலைவர். ‘விழா ஏற்பாட்டாளர்கள்’ என்றால் யார்? நடைமுறையில் இது நடராஜனைதான் குறிக்கும். தனக்கும் நெடுமாறனுக்கும் தொடர்பில்லை என்கிறார்.
அப்புறம்,  ‘இது தனியொரு நாட்டுக்கோ தனியொரு நபருக்கோ எதிரானது இல்லை’ என்கிறார். ‘யாருக்கும் எதிரானது இல்லை’ என்றால் ராஜபக்சேவுக்கும் எதிரானது இல்லை போலும். மொத்தத்தில் ‘எனக்கும் இந்த முற்றத்துக்கும் அதன் திறப்பு விழா நிகழ்ச்சிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை’ என்பதுதான் அவர் தனது ஜாமீன் மனுவில் கூறவரும் விசயம்.
ஒரு வருடத்துக்கு முன்பு தஞ்சாவூரில் நடந்த பொங்கல் விழா நிகழ்ச்சியில், நடராஜனுக்கு சொந்தமான ரோலக்ஸ் வாட்ச், நிசான் கார், என்டோவர் கார், சொனாட்டா கார் ஆகியவை விழா மேடையில் வைத்து விற்பனை செய்து, அதில் கிடைத்த 45 லட்ச ரூபாய் பணத்தை முள்ளிவாய்க்கால் முற்றத்திற்காக நெடுமாறனிடம் கொடுத்தார் நடராஜன். இது அவர்களே வெளியிட்ட பத்திரிகை செய்திதான். அந்த 45 லட்சம் பணம் போக, விளார் கிராமத்தில் உள்ள தனது நிலம் 2 ஏக்கரையும் முற்றத்திற்காகக் கொடுத்தார். பிறகு நிகழ்ச்சியின் அனைத்து ஏற்பாடுகளையும் முன்னின்று செய்தார். முற்றத்தை நெடுமாறன் திறந்து வைக்கும் போதும் அதன் பிறகும் நடராஜனும், அவரது சகோதரர் சுவாமிநாதனும் எப்போதும் உடன் இருந்தார்கள். இப்படியிருக்க… ‘எனக்கும் அதுக்கும் சம்பந்தமே இல்லை’ என்று அடித்து விடுகிறார் நடராஜன்.
நேற்று நெடுமாறன் உள்ளிட்ட 81 பேருக்கு ஜாமீனும், நடராஜனுக்கு முன்ஜாமீனும் வழங்கியிருக்கிறது உயர்நீதிமன்றம். ‘10 மணிக்கு மேல் ஒலிபெருக்கி போட்டது’ என்பதெல்லாம் ஒரு போண்டா செக்சன். இதற்கு முன் ஜாமீன் வாங்கி வரலாறு படைத்திருப்பவர் அநேகமாக ‘மொழிப்போர்‘ மறவர் நடராசன் ஒருவராகத்தான் இருக்க முடியும். அதேபோல, இந்த போண்டா கேசுக்கு முன்ஜாமீன் வாங்குவதற்கே உயர் நீதிமன்றம் வரை விரட்டிய அரசும் புரட்சித் தலைவியின் அரசாகத்தான் இருக்கமுடியும்.
தொடர்ந்து பல்லைக் கடித்துக் கொண்டு வலியைப் பொறுத்துக்கொள்வதே அடுத்தடுத்து அடி வாங்குவதற்கான அடிப்படையாகவும் அமையக் கூடும்.  “நாம இவ்வளவு தூரம் கை வலிக்க அடிக்கிறோம். நம்மளை ஒரு வில்லனாவே ஒத்துக்க மாட்டேங்குறாங்களே” என்று அம்மா ஆத்திரமடைவதற்கான வாய்ப்பும் உண்டு.
புற முதுகு காட்டாத தமிழின வீரம் என்பது சங்க இலக்கியத்திற்கு மட்டுமே சொந்தம், முள்ளிவாய்க்கால் முற்றத்திற்கு அல்ல போலும்.

- வழுதி

நன்றி;வினவு.

 

வியாழன், 21 நவம்பர், 2013

ஏன் வீண் தயக்கம்?

 ஏ வுதளம்’ இங்கே வந்திட !
மாவட்டத்தில் உள்ள மகேந்திரகிரியைச் சேர்ந்த திரவ எரிவாயு மையத்தில்
பணிபுரிவோர் அனுப்பிய வேண்டு கோளினை பரிந்துரை செய்து நான் கடந்த 19-8-2013 அன்று பிரதமர் டாக்டர் மன்மோகன்சிங் அவர்களுக்கு கடிதம்
அனுப்பியிருந்தேன். கனிமொழி என்னிடம் வேண்டுகோள் கடிதத்தைக் கொடுத்ததோடு, மாநிலங்கள் அவையிலும் அதைப்பற்றி எழுப்பிய கேள்விக்கு,
அளிக்கப்பட்ட பதிலில், ""“ISRO has two operational launching pads located at Satish Dhawan Space Centre, Sriharikota - the First Launch Pad and the Second Launch Pad, with necessary infra structure to support eight launches per year. The launching infra structure at Sriharikota will be strengthened with the addition of Second Vehicle Assembly Building at SLP, which will enhance the launch frequency to twelve launches per yearby 2017”" என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

எரிவாயு தொழில் நுட்ப மையம் அமைக்க வேண்டும் என்றும், தூத்துக்குடி மாவட்டம்
குலசேகரப்பட்டினத்தில் """"இஸ்ரோ""வின் சார்பில் இரண்டாவது ராக்கெட் ஏவு
மாநிலங்களவை உறுப்பினர் கவிஞர் கனிமொழியிடம், திருநெல்வேலி
நெல்லை மாவட்டம், மகேந்திரகிரியில் இந்திய விண்வெளி மற்றும் திரவதளத்தை அமைக்க வேண்டும் என்றும் தான் பிரதமருக்கு அனுப்பிய கடிதத்தில் நான்
கேட்டுக் கொண் டிருந்தேன்.
கேரளாவில் உள்ள திருவனந்தபுரத்தில் """"இஸ்ரோ"" சார்பில்
அமைக்கப்பட்டுள்ள இந்திய வானியல் தொழில் நுட்பப் பயிலகம், வான்வெளி
தொடர்பான நுட்பவியல்களுக்கு மட்டுமே முக்கியத் துவம் அளித்து வருகிறது.
ஆனால் வானியல் மற்றும் திரவ எரிவாயு தொடர்பானவற்றுக்கு முக்கியத்துவம்
அளித்து பயிலகம் அமைக்கப்பட வேண்டுமென்பது தற்போதைய நிலையில் மிக
அவசரமும், முக்கியத்துவமும் வாய்ந்ததாகும்.
Photo: ஆனந்த விகடன் எஸ்.பாலசுப்ரமணியன் அவர்கள் என்னை இன்று சந்தித்தபோது.

நமது நாட்டில் வான்வெளி மற்றும் திரவ எரிவாயு தொடர்பான நிபுணத்துவம்
மிக்கவர்கள் மிகவும் குறைந்த எண்ணிக்கையிலேயே இருப்பதாக எனக்குத் தகவல்
தரப்பட்டுள்ளது. விமானங்கள் வடிவமைப்பு, கெலிகாப்டர் வடிவமைப்பு, அதிவேக
விமானங்கள் உருவாக்கம், வான்வெளி தொழில் நுட்ப ஆய்வுகள் ஆகியவை சார்ந்த
படிப்புகளுக்கு மகேந்திரகிரியில் ஏற்படவிருக்கும் திரவ எரிவாயு மையம் தகுதி
வாய்ந்த ஒரு சிறப்பு நிறுவனமாக இருக்கும் என்பதால், அதனை ஏற்படுத்திட நான்
பரிந்துரை செய்ய விரும்புகிறேன். அந்தப் புதிய மையத்திற்குத் தேவையான அளவு
நிலமும், நடைமுறைப்படுத்திட ஆலோசனை வழங்கும் தொழில் நுட்ப
நிபுணத்துவமும் உள்ளன என்பதையும் தெரிவித்திட விரும்புகிறேன்.

வானியல் துறையில் """"இஸ்ரோ"" தனது இரண்டாவது ஏவுதளத்தை
அமைக்கும் திட்டம் 12வது ஐந்தாண்டுத் திட்டத்தில் இணைக்கப்பட் டுள்ளது.
அதற்காகக் குழு ஒன்றும் அமைக்கப்பட்டு புதிய ஏவுதளம் அமைக்க இடம் தேர்வு
செய்வது தொடர்பாக அந்தக் குழு ஆய்வு செய்தும் வருகிறது.
எதிர்பார்த்த அளவிற்கு தென்தமிழ்நாடு தொழிற் துறையில் முன்னேற்றம்
அடையாமல் இருக்கிறது. தொழில் வளர்ச்சிக்குத் தேவையான அனைத்த
அடிப்படை அம்சங்களும் பூகோள ரீதியாகத் தென் தமிழகத்தில்
அமைந்திருப்பதோடு, திறன்மிக்க மனித ஆற்றல் மிகுதியாகவே அங்கே
இருக்கின்றன. எனவே, அந்தப் பகுதி மத்திய அரசின் உரிய கவனத்திற்கும்,
தொழில் வளர்ச்சித் திட்டங்களுக் கும் தேர்வு செய்யப்பட வேண்டியது அவசியமாகும்.
நெல்லை மாவட்டம், மகேந்திரகிரியில் """"இந்திய வான்வெளி - திரவ எரிவாயு
மையம்"" மற்றும் தூத்துக்குடி மாவட்டம், குலசேகரப்பட்டினத்தில் """"இரண்டாவது
ராக்கெட் ஏவுதளம்"" அமைப்பதன் மூலம் அந்த மண்டலமே வளர்ச்சி பெற்ற
மண்டலமாக நிச்சயம் மாற்றமடையும் என்பதோடு நமது நாட்டில் தொழில் நுட்பப்
புரட்சிக்கு வித்திடும் பகுதியாகவும் அது உருவாகும்.
எனவே இந்த இரண்டு முக்கியத்துவம் வாய்ந்த நிறுவனங்களை அமைப்பது

குறித்து உரிய நடவடிக்கையை உடனடியாக மேற்கொள்ள வேண்டு மென்று
என்னுடைய அந்தக் கடிதத்தில் பிரதமர் அவர்களைக் கேட்டுக் கொண்டேன்.
இந்த நிலையில்தான், கடந்த வாரத்தில் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்
தவான் விண்வெளி ஆய்வு மையத்திலிருந்து """"மங்கல்யான்"" விண்கலம், முதன்
முறையாக செவ்வாய்க் கிரகத்தை ஆய்வு செய்வதற்காக வெற்றிகரமாகச்
செலுத்தப்பட் டுள்ளது. 450 கோடி ரூபாய்ச் செலவில், இந்திய விஞ்ஞானிகளால்,
உருவாக்கப்பட்ட விண்கலம் ஆகும் அது. செவ்வாய்க் கிரகத்துக்கான இந்த
விண்கலத்தைத் திட்டமிட்ட பாதையில் தொழில் நுட்ப ரீதியாகத் துல்லியமாக
நிலைநிறுத்தியதன் மூலம் நமது இந்திய விஞ்ஞானிகள் உலகத்தின் கவனத்தை
வெகுவாக ஈர்த்துள்ளனர். பூமியிலிருந்து சுமார் 300 நாட்களில் 44 கோடி கிலோ
மீட்டர் தூரம் பயணித்து செவ்வாய்க் கிரகத்துக்கு அருகில் 2014ஆம் ஆண்டு
செப்டம்பர் மாதத்தில் செல்ல விருக்கும் இந்த விண்கலம் செவ்வாய்க் கிரகத்தில்
ஆய்வுகளை மேற்கொள்ளும். அமெரிக்கா, ரஷ்யா, ஐரோப்பிய யூனியன் வரிசையில்
நான்காவதாக இந்தியா இந்த முயற்சியில் இடம் பெற்றுள்ளது என்பது ஒவ்வொரு
இந்தியரும் பெருமை கொள்ளத்தக்க செய்தியாகும்.
இதற்குக் காரணமாக இருந்த இஸ்ரோ தலைவர் கே. ராதாகிருஷ்ணன்
அவர்களின் தலைமையில் அரும்பணியாற்றியிருக்கும் அனைத்து விஞ்ஞானி
களுக்கும் எனது இதயபூர்வமான பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் நான் ஏற்கனவே தெரிவித்திருக் கிறேன். இந்தியாவுக்குப் பெருமையையும், மகிழ்ச்சி
யையும் தேடித் தந்துள்ள """"இஸ்ரோ"", தமிழகத்தைப் பொறுத்தவரை தொடர்ந்து
கசப்புணர்வோடும் பாராமுகமாகவும் நடந்து கொள்கிறதோ என்ற ஒரு அய்யப்பாடு
12வது ஐந்தாண்டுத் திட்டத்தில் விண்வெளி ஆராய்ச்சியை
ஊக்கப்படுத்துவதற்காக ஆண்டுக்கு 60 திட்டங்கள் என வகுக்கப்பட்டன.
இதற்காகக் கணிசமான நிதியும் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆந்திர மாநிலம்,
ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இரண்டு
ராக்கெட் ஏவு தளங்கள் ஏற்கனவே உள்ளன. பல செயற்கைக் கோள் திட்டங்கள்
செயல்பாட்டில் இருப்பதாலும், பல நாடுகள் செயற்கைக்கோள்களை ஏவிட
இந்தியாவை அணுகுவதாலும் மேலும் ஒரு ராக்கெட் ஏவுதளத்தை அங்கேயே
அமைக்க """"இஸ்ரோ"" முடிவெடுத்தது. ஆனால் அதற்கு மிகவும் பொருத்த மான
இடம், தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள குலசேகரப்பட்டினமே என்றுதான்
""""இஸ்ரோ""வைச் சேர்ந்த பல நிபுணர்கள் வலியுறுத்தினார்கள். எனினும் அதனைப்
பரிசீலனைக்கே எடுத்துக் கொள்ளாமல், ஸ்ரீஹரி கோட்டாவிலேயே தொடர்ந்து
மூன்றாவது தளத்தையும் அமைக்கும் பணிகளை """"இஸ்ரோ"" தொடங்கி விட்டது
என்கிறார்கள்.

அறிவியல் அடிப்படையிலும், பூகோள ரீதியாகவும், பாதுகாப்புக்
கோணத்திலும் மிகவும் பொருத்தமாக அமைந்துள்ள குலசேகரப்பட்டினத்தில்
ஏவுதளம் அமைத்தால், வழக்கமாக ஆகும் செலவில் பல கோடி ரூபாயை மீதப்படுத்த
வாய்ப்பு இருந்தும், சுமார் 12 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புடைய இந்தத் திட்டத்தைச்
சிலர் திசை மாற்றி விட்டதாக அதிகாரிகளே வருந்துகிறார்கள்.
இதைப்பற்றித் திரவ இயக்க உந்து மைய ஊழியர் சங்கத்தின் பொதுச்
செயலாளர் திரு. எம். மனோகரன் கூறும்போது, """"ஸ்ரீஹரிகோட்டாவை விட ராக்கெட்
ஏவுதளம் அமைக்க மிகச் சிறந்த இடம் குலசேகரப்பட்டினம். இதனைச் தொழில்
நுட்ப விபரங்கள் மூலமே உறுதிப்படுத்திட முடியும். பி.எஸ்.எல்.வி.
செயற்கைக்கோள்களை தெற்கு நோக்கி ஏவி 450 முதல் 1000 கி.மீ. தூரத்தில் நிலை
நிறுத்த வேண்டும். ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட்டுகளை பூமத்திய ரேகைக்கு மேலாக
கிழக்கு நோக்கி ஏவி 36 ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்தில் நிலைநிறுத்த வேண்டும்.
உலக விண்வெளி விதிமுறைப்படி ஒரு நாடு ஏவும் ராக்கெட்டுகள், இன்னொரு
நாட்டின் மீது பறக்கக்கூடாது. ஆனால் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து நேரடியாக
ராக்கெட்டுகளை ஏவினால், அது இலங்கை, இந்தோனேசியா நாடுகள் மீது பறக்க
வாய்ப்பு உண்டு. அதற்காக தென்கிழக்காக அனுப்பி, மீண்டும் திசை திருப்பி,
சுற்றுப்பாதைக்கு இப்போது கொண்டுவர வேண்டியிருக்கிறது. இதனால் பல கோடி
ரூபாய் கூடுதலாகச் செலவாகிறது.

பி.எஸ்.எல்.வி. ராக்கெட்டின் எரிபொருள் நிரப்பும் பகுதி நான்கு பாகங்களை
உள்ளடக்கியது. இலங்கையைச் சுற்ற கூடுதல் எரிபொருள் நிரப்புவதற்காக மட்டுமே
நான்காவது பாகம் இணைக்கப்படுகிறது. இதற்கு மட்டுமே செலவாகும் தொகை
சுமார் இருபது கோடி ரூபாயாகும். குலசேகரப்பட்டினத்தில் இருந்து ராக்கெட்டை
அனுப்பினால், இதனைத் தவிர்க்க முடியும்.

செயற்கைக்கோளின் பயன்பாடு அதன் எடையைப் பொறுத்தே
தீர்மானிக்கப்படுகிறது. கூடுதல் எடையுள்ள செயற்கைக்கோளில் கூடுத லாக
டிரான்ஸ்பாண்டர்கள், ஆராய்ச்சிக் கருவிகள் எடுத்துச் செல்ல முடியும்.
ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து பி.எஸ்.எல்.வி. ராக்கெட்டின் மூலம் 1600 கிலோ எடை
கொண்ட செயற்கைக்கோளை 650 கி.மீ. தூரத்தில் நிலை நிறுத்த முடியும். ஆனால்
குலசேகரப்பட்டினத்தில் இருந்து ஏவும் போது 2200 கிலோ எடையுள்ள
செயற்கைக்கோளை அனுப்புவது சாத்தியம். 600 கிலோ கூடுதல் எடை கிடைக்கும்.
இன்றைக்கு சர்வதேச மார்க்கெட்டில் 1 கிலோ எடையை விண்ணில் அனுப்ப
பன்னிரண்டு இலட்சம் ரூபாய் முதல் பதினெட்டு இலட்சம் ரூபாய் வரை செலவாகும்.
அப்படிப் பார்த்தால் 600 கிலோ கூடுதல் எடைக்கான செலவு 90 கோடி ரூபாய்.
எனவே குலசேகரப்பட்டினத்திலிருந்து ஏவும்போது, கூடுதல் எடையும் செலவை
மீதப்படுத்தும் நன்மைகளும் ஏற்படும்.

குலசேகரப்பட்டினத்திலிருந்து ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் மூலம்
செயற்கைக்கோள்களை ஏவினால் 36 ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்தை குறைவான
பயண நேரத்தில் கடந்து விட முடியும். இலக்கைத் தொட்ட பிறகு, மிஞ்சியுள்ள
எரிபொருளை வைத்தே செயற்கைக்கோளின் ஆயுள் நிச்சயிக்கப்படும். பயண நேரம்
குறைவதால், எரிபொருள் மீதமாகி, செயற்கைக்கோளின் ஆயுள் இரண்டு
ஆண்டுகள் வரை கூடுதலாகும். எனவே குலசேகரப்பட்டினத்தி லிருந்து ஒரு
பி.எஸ்.எல்.வி. ராக்கெட்டை ஏவுவதன் மூலம் குறைந்தபட்சம் 110 கோடி ரூபாய்
மூன்றாவது ஏவுதளம் அமைப்பதற்காக ஒதுக்கப்பட்டுள்ள மொத்தத் தொகை
12 ஆயிரம் கோடி ரூபாய். இந்தத் தொகையை 109 பி.எஸ்.எல்.வி. ராக்கெட்
அனுப்புவதால் மிச்சமாகும் தொகையை வைத்தே ஈட்டி விடலாம். ஒரே இடத்தில்
கூடுதல் ஏவுதளங்களை அமைப்பதில் பல பிரச்சினைகள் உண்டு. ஸ்ரீஹரிகோட்டா
புயல் பாதிப்பு அதிகமுள்ள பகுதி என்பதால், ஆண்டுக்கு இரண்டு மாதங்கள் பணி
நடப்பதில்லை. அதனால் உற்பத்தித் திறன் குறைகிறது. எதிர்பாராத விதமாக ஒரு
ஏவுதளத்தில் விபத்துகள் நடந்தால் மற்ற ராக்கெட் தளங்களும் பாதிக்கப்படும்.
இயற்கைச் சீற்றங்களாலும், அந்நிய சக்திகளாலும் ஆபத்து வரும்போது
ஒட்டுமொத்தத் தொழில் நுட்பமும் சிதைய வாய்ப்புண்டு"" என்று புள்ளி
விபரங்களோடு திரு. மனோகரன் விவரித் திருக்கிறார்.

குலசேகரப்பட்டினம் புறக்கணிக்கப்படுவதற்குச் சில காரணங்கள்
கூறப்படுகிறது. கேரளா மற்றும் ஆந்திர மாநிலங்களின் செல்வாக்குதான்
""""இஸ்ரோ""வில் அதிகமாக உள்ளது. தனக்கு இல்லாவிட்டாலும் பரவாயில்லை,
தமிழ்நாட்டிற்குக் கிடைத்து விடக்கூடாது என்ற பிடிவாத மனநிலையில் சிலர்
செயல்படுகிறார்கள். ராக்கெட் தயாரிப்பில் அறுபது சதவிகிதப் பணிகள் தமிழகத்
தில் உள்ள மகேந்திரகிரியில்தான் நடக்கின்றன. ஆனால் அதற்கான ஆளெடுப்புப்
பணிகளோ திருவனந்தபுரத்தில் நடக்கிறது. இதனால் சில குறிப்பிட்ட
மாநிலங்களைச் சேர்ந்தவர்களே பணிக்கு வருகிறார்கள்.
புதிய ராக்கெட் ஏவுதளம் அமைக்க முடிவெடுத்த உடனேயே அவசரக்
கோலத்தில் ஆந்திர மாநிலம், கிருஷ்ணா மாவட்டத்தில் 300 ஏக்கர் நிலத்தைக்
கையகப்படுத்தி விட்டார்கள். தொழிற்சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்த பிறகு,
பேராசிரியர் நாராயணா தலைமையில் ஒரு குழு அமைத்தார்கள். 2013 பிப்ரவரிக்குள்
இடத்தைத் தேர்வு செய்து அறிக்கை அளிக்க வேண்டும் என்று கூறப்பட்டது. அந்தக்
குழுவில் இடம் பெற்றவர் களில் நான்கு பேர் ஆந்திராவைச் சேர்ந்தவர்கள். இரண்டு
பேர் கேரளாவைச் சேர்ந்தவர்கள். ஒருவர் மட்டுமே தமிழர். இந்தக் குழு குலசேகரப்
பட்டினத்தை ஆய்வு செய்யவே இல்லை. இடத்திற்காக ஆந்திர முதல்வரைச் சந்தித்த
""""இஸ்ரோ"" அதிகாரிகள், தமிழக முதல்வரைச் சந்திக்கவே இல்லை என்கிறார்கள்.
ஆனால் இப்படிப்பட்ட அரிய தொழில் வளர்ச்சிக் கான தேவைகளைப்பற்றியெல்லாம் சிந்தித்துச் செயல்படுவதற்கு தமிழ்நாட்டில் மக்கள்
நலனைத் தலையானதெனக் கருதும் ஓர் அரசு வேண்டும்; அது செயல் ஊக்கம்
மிக்கதாக இருந்திட வேண்டும். ஆனால் தமிழ்நாட்டில் இதைப் பற்றியெல்லாமா சிந்திக்கிறார்கள்!


இந்தக் குலசேகரப்பட்டினம் ஏவுதளத்திற்காக நான் பிரதமருக்கு கடந்த
ஆகஸ்ட் மாதமே கடிதம் எழுதி, அந்தச் செய்தி ஏடுகளிலும் வெளிவந்தது. அதைத்
தொடர்ந்து இந்தப் பிரச்சினையில் தமிழக அரசு எடுத்த நடவடிக்கை என்ன?
என்னதான் நாம் பிரதமருக்கு எழுதினாலும், தமிழக அரசின் சார்பில் கோரிக்கை
வைத்தால்தானே அந்த வேண்டுகோள் முக்கியத்துவம் பெறும். இதற்குத் தமிழக
அரசு ஏன் முன்வரவில்லை?
ராக்கெட் ஏவுதளம் குலசேகரப்பட்டினத்தில் அமைந்தால் நேரடியாக 4000
பேருக்கும், மறைமுகமாக 10 ஆயிரம் பேருக்கும் வேலை வாய்ப்பு கிடைக்கும்.
அதிகப்பட்சமாக 3 லட்சம் கோடி ரூபாய் வரை முதலீடுகள் வரும். அவற்றின்
மூலம் 30 ஆயிரம் முதல் 50 ஆயிரம் பேருக்கு நேரடியாக வேலை வாய்ப்பும், சுமார்
ஒரு இலட்சம் பேருக்கு மறைமுக வேலைவாய்ப்பும் கிடைக்கும்.
திரவ உந்துவிசை கல்வி நிறுவனம் ஏற்படுத்தப் படுவதால், இதன்மூலம்
தமிழகத்திலிருந்து ஏராளமான விஞ்ஞானிகள் உருவாக வாய்ப்புகள் ஏற்படும்.
ரயில் வசதிகள் மேம்படுத்தப்படும். சாலைகள் விரிவாக்கப்படும்.
தூத்துக்குடி விமான நிலையம் சர்வதேச விமான நிலையமாக மாற்றப்படும்.
இந்த நன்மைகளெல்லாம் விளைந்திட குலசேகரப்பட்டினத்தில் ஏவுதளம்
அமைய வேண்டும். அந்த ஏவுதளம் அமைய, அதனை அமைத்தே ஆக
வேண்டுமென்ற முனைப்போடு செயல்படுகின்ற ஒரு அரசு தமிழகத்திலே அமைய
வேண்டும். அதுவே நாட்டிற்கும் நல்லது! நாட்டு மக்களுக்கும் நல்லது!

                                                                                        -  கலைஞர் கருணாநிதி

திப்பு சுல்தான் 
------------------------------------
 திப்பு சுல்தான் பிறந்த தினத்தையொட்டி  பகிர்வு
 
புலி என உண்மையாகவே குறிக்க வேண்டிய வீரர் மற்றும் தலை சிறந்த நிர்வாகி இவர் .எளிய வீரரராக ,வாழ்க்கையை தொடங்கி மைசூரின் மன்னர் ஆனார் ஹைதர் அலி  . ஆங்கிலேயருக்கு
அடிபணிய மறுத்து போராடிய அவரின் மகன் தான் திப்பு சுல்தான் . திப்பு கி.பி 1767ல் தமது 17 ம் வயதில் ஜோசப் ஸ்மித் தலைமையில் போரிட்ட ஆங்கிலப்படையை எதிர்த்து வாணியம்பாடியில் தமது முதல் வெற்றிக்கனியைப் பறித்தார். கி.பி.1767முதல் கி.பி.1769 வரை தமிழ்நாட்டில் பரவலாக பல இடங்களில் ஆங்கிலப் படைக்கும் மைசூர் படைக்கும் நடந்த போர்களில் எல்லாவற்றிலும் வெற்றியே பெற்றார் திப்பு. இரண்டாம் மைசூர் போரில் ஆங்கிலேயரை தோற்கடித்து போடப்பட்ட ஒரு இந்திய மன்னர் சொல்கிறபடி ஒப்பந்தம் போடுகிற அற்புதம் திப்புவின் வீரத்தால் வாய்த்தது. ஹைதர் போர் நடந்து கொண்டிருக்கும் பொழுதே மரணம் அடைந்து விட மன்னர் ஆனார் திப்பு .அவர் ஆட்சியில் இருந்த இருபது வருடத்தில் 18 வருடங்கள் போர்களத்திலேயே
கழித்தார்
'யுத்தத்தைப் போர்க்களத்தோடு முடித்துக் கொள்ளுங்கள். அப்பாவி மக்கள் மீது ஒருபோதும் வன்முறை நடத்தாதீர்கள். பெண்களைக் கௌரவமாக நடத்துங்கள். பிடிபட்ட கைதிகளின் மத நம்பிக்கைக்கு மதிப்புக் கொடுங்கள். குழந்தைகளுக்கும் முதியோருக்கும் பாதுகாப்பு கொடுங்கள்' என்று, தன் ராணுவத்துக்கு எழுத்துப்பூர்வமாக உத்தரவு பிறப்பித்தவர் திப்பு சுல்தான்.
உலகத்தரத்திலான ராணுவத்தை உருவாக்கி இருந்தார் ; சொந்த தேதிமுறை பின்பற்றினார்,நாசாவின் கென்னெடி விண்வெளி மையத்தின் நுழைவாயில் ஒரு ஓவியம் கொண்டிருக்கிறது -அதில் திப்பு ஏவுகணையை பயன்படுத்தி போரிடுவது சித்தரிக்கப்பட்டுள்ளது ; போர்களத்தில் ஏவுகணையை  முதன்முதலில் உலகிலேயே பயன்படுத்தியவர் இவர்தான். அது இரண்டு கிலோமீட்டர் தூரம் வரை துல்லியமாக சென்று தாக்கும் ஆற்றல் பெற்றதாக இருந்தது .அந்த ஆவணங்கள் இன்றும் லண்டனில் பத்திரமாக உள்ளன.
மத நல்லிணக்கத்துக்கு அற்புதமான எடுத்துகாட்டு இவர்- நூற்றி ஐம்பத்தாறு கோயில்களுக்கு மானியம் வழங்கப்பட்டு வந்தது . எந்த அளவுக்கு அவரின் ஆட்சியில் மத நல்லிணக்கம் நிலவியது என்பதற்கு இந்த தகவலே போதும் .கோயில்களுக்கு செலவிடப்பட்ட 2,33,959 ரூபாயில்   இந்துக்
கோயில்களுக்கும் மடங்களுக்கும் மட்டும் 2,13,959 அளிக்கப்பட்டது இவர் ஆட்சியில்,சிருங்கேரி மடத்தலைவருடன் நெருங்கிய உறவு பாராட்டினார் .
கப்பல் கட்டும் தொழில்நுட்பம்,முகலாயர்களின் ஆட்சியில் இருந்து மாறுபட்ட நிர்வாகம்,இடைத்தரகர்கள் இல்லாத நிலவரி விதிப்பு என இவரின் ஆட்சியின் நிர்வாகப்பாடங்கள் ஏராளம். நான்கு மைல்களுக்கு ஒரு பள்ளிக்கூடம் என்ற திட்டத்தை செயல்படுத்தினார் அவர் .
ஆடம்பரத்தை மக்கள் தவிர்க்க வேண்டும் என்றெண்ணி திருமணத்துக்கு ஒரு சதவிகிதம் மட்டுமே வருமானத்தில் செலவு செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டார் குடகு பகுதியில் ஒரே பெண்ணைப் பல ஆண்கள் மணந்துகொள்ளும் பழக்கத்தைத் தடுத்து சட்டம் இயற்றியுள்ளார். கோயில்களில் இருந்த தேவதாசி முறையையும் ஒழிக்கச் சட்டம் போட்டதுடன், மதுவிலக்கை அமல்படுத்தி, அதைத் தீவிரமாகக் கண்காணித்தார்.
இவர் உருவாக்கிய பல்வேறு சத்தமெழுப்பும் இயந்திரப்புலி ஒன்று இன்னமும் இங்கிலாந்து ம்யூசியத்தில் பழுதடைந்து எவ்வளவோ முயற்சிக்குபின் சரி செய்ய முடியாமல் இருக்கிறது
ஆங்கிலேயரிடம் மூன்றாம் மைசூர் போரில் தோற்று அவரின் மகன்களை போருக்கான பிணையாக கொண்டு சென்றார்கள் ஆங்கிலேயர்கள்; ஆங்கில கலாசாரத்தில் அவரின் பிள்ளைகளை வளர்த்து இவரைக் காயப்படுத்தினார்கள் .
நான்காம் மைசூர் போரில் அவரின் தளபதியின் துரோகம்,ஹைதராபாத் நிஜாமின் கடல் போன்ற படையோடு ஆங்கிலேயர் சேர்ந்த ஐம்பதாயிரம் பேர் படையை முப்பதாயிரம் பேர் கொண்ட படையோடு எதிர்கொண்டு மரணம் அடைந்தார். வீர வரலாறும் முடிவுக்கு வந்தது.
 
பூ.கொ. சரவணன்
 
நன்றி:விகடன்