சாதனையா?வேதனையா??
தனது சாதனையாக முதல்வர் ஜெய லலிதா குறிப்பிட்டு வரும் அம்மா உணவகங்களின் கதையைக் கேட்டால் பரி தாபமாக இருக்கிறது. என்ற பெயரில் சவலைப்பிள்ளைப் போல செயல்பட்டு வரும் இந்த உணவகங்களின் உண்மைக்கதை கதை சென்னையில் இருந்து துவக்குவோம். சென்னை மாநகராட்சி யில் “மலிவு விலை உணவ கத் திட்டம்’’ என்ற பெய ரில் கடந்த 2013 மார்ச் 19 ம் தேதி சாந்தோமில் ஜெயலலிதாவால் இத் திட்டம் துவங்கப்பட்டது. இட்லி ஒரு ரூபாய்க்கும், சாம்பார் சாதம் 5 ரூபா ய்க்கும், தயிர் சாதம் 3 ரூபாய்க்கு விற்கப்படும் என அறிவிக்கப்பட்ட இத்திட் டம் சென்னை மாநகராட் சியில் நிறைவேற்றப்பட்ட தீர்மான வடிவத்தால் “அம் மா உணவகம்’’ என பெயர் மாற்றிக் கொண்டது. சென்னை மாநகராட்சி யின் சார்பில் முதலில் 127 இடங்களில் துவங்கப் பட்டு தற்போது 200 இடங் களில் இத்திட்டம் விரிவு படுத்தப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சியை தொடர்ந்து மற்ற மாநக ராட்சிகளுக்கும் இத் திட் டம்விரிவுபடுத்தப்படுமென சட்டசபையில் முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். திருச்சி, மதுரை, கோ வை, திருப்பூர், திருநெல் வேலி, சேலம், வேலூர், தூத்துக்குடி, ...