மூன்றாண்டு
ஜெயா ஆட்சி
குளிக்கிற யானையை என்ன செய் கிறார் ?
யானையை வரைந்தவரே இவர்தாங்க!
-----------------------------------------------------------------------------------------------------------
இஞ்சி
- கொக்கரக்கோ சௌம்யன்..
ஆட்சி யில் மூன்றாண்டுக்கு முன்னர் ஜெயா முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டபோது அவர் சில வாக்குறுதிகளை கொடுத்தார்.ஆனால் இப் போது மூன்றாண்டுகளான போதும் அந்த வாக்குறுதிகள் அப்படியே இருக்கின்றன.இப்போதைய மக்களவை தேர்தலிலும் அறுதியாக வென்று விட்டார்.தனியே கூட்டணி இல்லாமல் தேர்தலை சந்தித்ததாக சொல்லிக்கொண்டிருந்தாலும் ஜெயாவின் கூட்டனிதான் வலிமையானது.தேர்தல் ஆணையம்-காவல்துறை-எடுபிடி அரசு அலுவலர்கள் -காசு என்ற வலுவான கூட்டணி ஜெயா அமைத்துத்தான் இத்தேர்தலை சந்தித்தார்.இதே கூட்டணி சட்டப்பேரவை தேர்தலிலும் அமைந்தால் முடிவு இப்போது போல்தான் அமையும்.திமுக உட்பட்ட எதிர்கட்சிகள் அதற்குள் பிரவீன்குமாரை அதற்குள் தமிழ் நாட்டை விட்டு தேர்தல் ஆணையர் பதவியை விட்டு வெளியேற்ற வேண்டும் .ஊடகங்களோ ஜெயா அரசு தரும் விளம்பர காசுத்துண்டுகளுக்காக நாக்கை தொங்க விட்டு அலைகிறது.அரசுக்கு எதிரான செய்திகள் வடிகட்டப்படுகின்றன.தங்களின் பத்திரிக்கை நேர்மையை சாதனை விளம்பரங்களுக்காக சாகடித்து ஜெயாவின் மக்கள் தொடர்பு அலுவலராக மாறி விட்டன.
இங்கே நம்ம தமிழகத்தில் மூன்று ஆண்டுகளுக்கு முன்னதாக ஒரு ஆட்சி அமைந்ததே... அது இப்பொழுது என்ன செய்து கொண்டிருக்கின்றது????
இது நல்ல ஆட்சியா? அல்லது கெட்ட ஆட்சியா? என்றே யாரும் சொல்ல முடியாத நிலையில் தான் இருக்கின்றது!!! இதற்கான விடை தேடித்தான் இந்தப் பதிவின் பயணம் தொடர்கிறது......
ஆட்சிக்கு வந்தவுடனேயே தன் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்திலும் விலை உயர்வைக் கொண்டு வந்து, கசப்பு மருந்து தருகிறேன் என்று தான் ஆரம்பித்தார்கள்...
. “விஷன் 2023” என்று ஒரு மோஷன் கிராஃபிக்ஸ் ஃபிலிம் காட்டினார்கள். அதுக்கு அர்த்தம் என்னன்னா? இந்த ஃபிலிம்ல நாங்க காட்டுற ரீல் எல்லாம் ரியல் ஆகனும்ன்னா 2016லயும் தங்களுக்கு வாக்களித்தால் தான் சாத்தியமாகும்ன்னு அர்த்தம்....!!!
ஆனால் இந்த மூன்று ஆண்டுகளில் தமிழகத்தில் சொல்லிக்கொள்கின்ற மாதிரியாக ஏதாவது ஒரு தொலை நோக்குத் திட்டமாவது துவங்கப்பட்டிருக்கின்றதா??
எத்தனை புதிய மின் உற்பத்தி திட்டங்களுக்கு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டு அடிக்கல் நாட்டப்பட்டிருக்கின்றது??
50 சதவிகிதம் உயர்த்தப்பட்ட பேருந்து கட்டணங்களைக் கொண்டு, பழைய திமுக ஆட்சியை விட எத்தனை பேருந்துகளின் தரம் உயர்த்தப்பட்டிருக்கின்றது???
அல்லது முன்பிருந்த போக்குவரத்துக்கழகத்தின் கடன்கள் அடைந்து விட்டிருக்கின்றதா? அல்லது கடன் இன்னும் கூடியிருக்கின்றதா????
ஆட்சிக்கு வந்தவுடனேயே உயர்த்தப்பட்ட வாட் வரியினால் வருடத்திற்கு 5200 கோடி ரூபாய் வருவாய் உயர்ந்துள்ள நிலையில், அதைக் கொண்டு அதற்கு முன்பு திமுக ஆட்சியில் பெரிய கடன் சுமை இருப்பதாக கூத்தடித்தீர்களே...
அந்தக் கடன்களில் இதுவரை எவ்வளவு அடைத்து வட்டியை மிச்சப்படுத்தியிருக்கின்றீர்கள்????
இந்த மூன்று ஆண்டுகளில் ஒரே ஒரு பெரிய தொழிற்சாலையையாவது தமிழகத்திற்கு கொண்டு வந்து ஒரு ஆயிரம் இளைஞர்களுக்காவது புதிய வேலை வாய்ப்பை உருவாக்கித் தந்திருக்கின்றீர்களா?
முல்லைப் பெரியாறு பிரச்சினை தீர்க்கப்பட்டு பழைய ஒருங்கிணைந்த மதுரை மாவட்ட விவசாயிகள் பலனடைந்து கொண்டிருக்கின்றார்களா????
காவிரியில் மூன்று வருடமாக தொடர்ந்து உங்களால் ஜூன் 12இல் தண்ணீர் திறந்து விட முடிந்ததா???
காவிரி டெல்ட்டாவில்.... விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி, மானியங்கள், குறுகிய கால பயிர்க்கடன், 24 மணி நேர மும்முனை மின்சாரம் போன்றவை வழங்கி கடந்த ஆட்சியை விட விளைச்சலை அதிகப்படுத்தியிருக்கின்றீர்களா?
அல்லது கடந்த திமுக ஆட்சியில் இருந்ததை விட விளைச்சல் படுபாதாளத்திற்கு சென்றிருக்கின்றதா?????
தாங்கள் ஆட்சிக்கு வர காரணமாக இருந்த மின்வெட்டை இந்த மூன்றாண்டுகளுக்குள் முடிவுக்கு கொண்டு வந்து விட்டீர்களா????
100 சதவிகிதம் உயர்த்தப்பட்ட மின் கட்டணத்தைக் கொண்டு மின்சார வாரியத்தின் கடன் அடைக்கப்பட்டிருக்கின்றது??? அல்லது அது இன்னும் அதிகரித்திருக்கின்றதா???
தமிழக மீனவர்களை இலங்கை ராணுவம் கைது செய்வது நின்று போயிருக்கின்றதாஆஆஆ????
இலங்கையில் தமிழர்களுக்கு தனி ஈழம் கிடைத்து விட்டதா? அதற்காக தாங்கள் மேற்கொண்ட நடவடிக்கைகள் என்னென்ன?
அல்லது குறைந்த பட்சம், அங்குள்ள முள்வேலி முகாம தமிழர்களின் வாழ்க்கையிலாவது ஒரு நிம்மதி ஒளியை ஏற்றி வைத்திருக்கின்றீர்களா???
தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு கடந்த திமுக ஆட்சியை விட சிறப்பாக இருக்கின்றதா? அதை மக்கள் ஒத்துக்கொள்வார்களா?
எத்தனை புதிய அரசு அலுவலக கட்டிடங்கள், புதிய பாலங்கள், புதிய சாலைத் திட்டங்களைப் போட்டு நிறைவேற்றியிருக்கின்றீர்கள்?
அரசு அலுவலகங்களில் நிர்வாகம் கடந்த ஆட்சியை விட மேம்பட்டதாகவும், வேகமானதாகவும் செயல்படுகின்றதா??
மூன்று ஆண்டுகளில் காவிரியும் அதன் கிளை ஆறுகளும் எத்தனை முறை தூர் வாரப்பட்டிருக்கின்றன?
கடந்த மூன்று ஆண்டுகளில் பெருவாரியான இலவசங்கள் அளித்தது தவிர்த்து வேறு என்னென்ன தொலை நோக்குத் திட்டங்களை செயல்படுத்த துவங்கியிருக்கின்றீர்கள்???
இப்படி எந்த தொலைநோக்குத்திட்டமுமே இல்லாமல் இருந்தால் அடுத்த ஐந்து ஆண்டுகளில் தமிழகத்தின் வளர்ச்சி 15 ஆண்டுகள் பின் தங்கி விடாதா?????
அதைத்தான் இந்த ஆட்சியாளரான ஜெயலலிதா விரும்புகிறாரா??? இப்படி எந்த தொலை நோக்குத்திட்டங்களும், தொழிற்சாலைகளும், வளர்ந்து வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப புதிய வேலைவாய்ப்புக்களும் உருவாக்காமல், வேலையில்லா திண்டாட்டத்தை உருவாக்கி அல்லது அதிகப்படுத்தி, மக்களை இலவசங்கள் கொடுத்து மூளையை மழுங்கடித்து, மலிவுவிலை சாமான்கள் விற்பனை என்ற தொழில் முனைவோர் செய்ய வேண்டியதை ஒரு அரசாங்கமே செய்து கொண்டு... அதை ஒரு சாதனையாகவும் கூறிக்கொண்டு..., ஊடகங்களின் பலத்தால் அதை சில பல அப்பாவி மக்களும் நம்புகின்ற சூழ்நிலையை உருவாக்கி......
இப்படியே சென்று கொண்டிருந்தால், தமிழகத்தின் அடுத்த தலைமுறையே..., சொந்தமாக உழைத்து சுயமாக வாழ இயலாமல் அல்லது முடியாமல் அரசாங்கத்திடம் அனைத்திற்குமே கையேந்தி நிற்கும் அவலம் ஏற்பட்டு விடாதா????
இதைத் தான் இந்த ஆட்சியாளராகிய ஜெயலலிதா விரும்புகின்றார் என்பது தெள்ளத்தெளிவாக தெரிந்து விட்ட நிலையில்....
இனி தமிழகத்தின் நடுத்தர வர்க்கத்தினர் தான் விழித்துக்கொள்ள வேண்டும். இதற்கு மேலும் அரசாங்கத்தின் இது போன்ற இலவச போதைக்கும், மலிவு விலை சமாச்சாரங்களுக்கும் மயங்கி நின்று தன்னுடைய சந்ததியினரை படுகுழியில் தள்ளி விடாமல்.......
இன்றைக்கு தாம் படித்த படிப்பிற்கும், பார்க்கின்ற வேலைகளுக்கும், எம் ஜி ஆர் ஆட்சிக்காலத்திற்குப் பிறகு தமிழகத்தில் நடைபெற்ற திமுகவின் ஆட்சிக்காலங்களே காரணம் என்பதை திறந்த மனதுடன் யோசித்து உணர்ந்து கொண்டு இந்த ஆட்சியைப் புறம் தள்ளி, மீண்டும் தமிழகத்தில் திமுக ஆட்சியானது தளபதி மு.க. ஸ்டாலின் அவர்கள் தலைமையில் உருவாகிட வாய்ப்பளிக்க வேண்டும்...!!
யானையை வரைந்தவரே இவர்தாங்க!
-----------------------------------------------------------------------------------------------------------
இஞ்சி
இஞ்சி செரிமானக் கோளாறைச் சரிசெய்வது மட்டுமல்லாமல், உணவில் உள்ள புரோட்டீன்களை சரியான விகிதத்தில் சமப்படுத்துகிறது. மேலும் இஞ்சி நம் வயிற்றில் மியூக்கஸ் சுரப்பை உறுதிப்படுத்தி , அல்சர் நோயிலிருந்து நம்மைக் காக்கும். மேலும் இஞ்சியில் உள்ள கார்மினேட்டிவ் தன்மை வயிற்றில் ஏற்படும் வாயுத் தொந்தரவைப் போக்குவதற்கு உதவியாக இருக்கிறது. இஞ்சியில் உள்ள ஆன்டி-ஆக்சிடன்ட் மற்றும் ஆன்டி-எமெட்டிக் பண்புகள், எரிச்சல், வீக்கம் மற்றும் வலி ஆகியவற்றிற்கு சிறந்த மருந்தாக உள்ளது.
இஞ்சியை செரிமானத்துக்கு எப்படி பயன்படுத்துவது என்று பார்க்கலாம் :-
இஞ்சி சாறு :-
இஞ்சியை நன்றாகக் கழுவிட்டு அதன் தோலை உரித்து விடுங்கள் பின்னர், இஞ்சி சாறு தயாரித்துக் கொள்ளவும். இந்த சாற்றைக் கட்டாயம் எல்லாரும் ஒரு நாளுக்கு ஒருமுறையாவது குடித்து வந்தாலே போதும் சீ க்கிரம் நிவாரணம் கிடைக்கும்.
அஜீரணத்துக்கு
இஞ்சியைத் துண்டை பல்லால் கடித்து, இதில் வரும் ஜூஸை அப்படியே விழுங்காமல், கொஞ்சம் கொஞ்சமாக வயிற்றுக்குள் தள்ளவும். இப்படியே ஒவ்வொரு துண்டாகக் கடித்து அதில் வரும் சாற்றைக் குடித்தால் விரைவில் அஜீரணத்துக்கு விடுதலை கிடைக்கும்.
வாந்திக்கு இஞ்சி :-
ஒரு இஞ்சித் துண்டில் சிறிதளவு உப்பைத் தூவி, கடவாய்ப் பல்லில் நன்றாகக் கடித்து, அந்த சாற்றைக் குடித்தால் அஜீரணக் கோளாறு சரியாவது மட்டுமில்லாமல் வாந்தி வருவதும் நிற்கும்.