சாதனையா?வேதனையா??

தனது சாதனையாக  முதல்வர் ஜெய லலிதா குறிப்பிட்டு வரும் அம்மா உணவகங்களின் கதையைக் கேட்டால் பரி தாபமாக இருக்கிறது. 
என்ற பெயரில் சவலைப்பிள்ளைப் போல செயல்பட்டு வரும் இந்த உணவகங்களின் உண்மைக்கதை கதை சென்னையில் இருந்து துவக்குவோம். 
சென்னை மாநகராட்சி யில் “மலிவு விலை உணவ கத் திட்டம்’’ என்ற பெய ரில் கடந்த 2013 மார்ச் 19 ம் தேதி சாந்தோமில் ஜெயலலிதாவால் இத் திட்டம் துவங்கப்பட்டது. 
suran

இட்லி ஒரு ரூபாய்க்கும், சாம்பார் சாதம் 5 ரூபா ய்க்கும், தயிர் சாதம் 3 ரூபாய்க்கு விற்கப்படும் என அறிவிக்கப்பட்ட இத்திட் டம் சென்னை மாநகராட் சியில் நிறைவேற்றப்பட்ட தீர்மான வடிவத்தால் “அம் மா உணவகம்’’ என பெயர் மாற்றிக் கொண்டது.

சென்னை மாநகராட்சி யின் சார்பில் முதலில் 127 இடங்களில் துவங்கப் பட்டு தற்போது 200 இடங் களில் இத்திட்டம் விரிவு படுத்தப்பட்டுள்ளது. 
சென்னை மாநகராட்சியை தொடர்ந்து மற்ற மாநக ராட்சிகளுக்கும் இத் திட் டம்விரிவுபடுத்தப்படுமென சட்டசபையில் முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். 
திருச்சி, மதுரை, கோ வை, திருப்பூர், திருநெல் வேலி, சேலம், வேலூர், தூத்துக்குடி, ஈரோடு ஆகிய 9 மாநகராட்சிகளிலும், “அம்மா உணவகங்களை”  ஜெயலலிதா, சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து கா ணொலிக் காட்சி மூலம் தொடங்கி வைத்தார். 
சென்னையில் மட்டுமின்றி மற்ற மாநகராட்சிகளிலும் விரிவுபடுத்தப்பட்ட இத் திட்டத்திற்கு தமிழக அரசு ஒதுக்கிய நிதி எவ்வளவு என்பது தங்கமலை ரகசிய மாகும் !
மதுரையைப் போன்ற மாநகராட்சிப் பகுதிகளில் அம்மா உணவகத்திற்கு நாள் ஒன்றுக்கு ஆகும் செலவு எவ்வளவு தெரியு மா? 
ஒரு உணவகத்திற்கு ஒரு நாள் ஆகும் செலவு ரூ.11 ஆயிரமாகும். ஆனால், அந்த ஒன்றிலில் இருந்து வரும் வருமானம் எவ்வ ளவு தெரியுமா ரூ.3,600 மட் டும் தான்.
இந்த செலவுத் தொகையில் மின்கட்ட ணம் சேர்க்கப்பட்டவில் லை என்பது குறிப்பிடத்தக் கது. 
மதுரையில் ஆனையூர், தேன்மொழி திருமண மண்டபம், புதூர் மருத்துவ மனை அருகில், காந்தி புரம், ராமராயர் மண்டபம், புதுராமநாதபுரம் ரோடு, சி.எம்.ஆர்., ரோடு, மேல வாசல், திருப்பரங்குன்றம், பழங்காநத்தம் ஆகிய 10 வார்டுகளில் 11 இடங்களில் அம்மா உணவகம் இயங்கி வருகிறது. 
இந்த உணவகங் களுக்கு தமிழக அரசு நிதி ஒதுக்கீடு செய்யவில்லை. 
மதுரை மாநகராட்சியின் பொது நிதியில் இருந்து தான் பணம் செலவிடப் படுகிறது. 2014-2015ம் ஆண்டிற் கான மதுரை மாநகராட்சி யின் நிதி நிலை அறிக்கை யில் 3 கோடியே 20 இலட்ச ரூபாய் அம்மா உணவகங் களுக்கு ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளது.
suran
நடப்பு ஆண் டில் இதுவரை அம்மா உணவகங்களுக்கு மதுரை மாநகராட்சி செலவிட்டத் தொகை என்பது ரூ.3.20 கோடியாகும். 
இதில் குறிப் பிடப்பட வேண்டிய அம்ச மென்பது மதுரை மாநகரா ட்சியில், 2014-15-ம் நிதி யாண்டுக்கு ரூ.12.78 கோடி பற்றாக்குறை என பட் ஜெட் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது தான். பற்றாக்குறையாக இருந்தா லும் பணத்தைப் போடு என அரசு சொல்ல, மாநக ராட்சியும் பொது நிதியை எடுத்து செலவிட்டு வருகி றது.மதுரை மாநகராட்சி யில் தான் இந்த நிலை என் பது இல்லை. சென்னையில் உள்ள அம்மா உணவகங் களுக்கு தினமும் 14 இலட் சம் ரூபாய் செலவு செய்யப் படுகிறது, இதில் 9 இலட் சம் மட்டுமே வருமானம் ஆகிறது. தினசரி 5 இலட்ச ரூபாய் நிதி பற்றாக்குறை யோடு தான் இந்த “அற் புதமான’’ திட்டம் நடை பெற்று வருகிறது. 
இந்த திட்டத்திற்கு சென்னை மாநகராட்சியில் மட்டும் ஆண்டுக்கு ரூ.34.96 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ள தாகக் கூறப்படுகிறது. 
இங்கும் சொல்ல வேண்டிய விஷயமென்பது சென்னை மாநகராட்சியின் 2014-2015 ஆம் ஆண்டிற்கான நிதி நிலை அறிக்கையில் பற் றாக்குறையாக 1.15 கோடி ரூபாய் என அறிவிக்கப் பட்டது தான்.
சென்னை தான் இப் படி என்று நினைக்காதீர் கள். 
சேலத்தின் நிலையோ இதை விட மோசம். சேலம் மாநகராட்சியில் கடந்த 2013 ஆம் ஆண்டு மே 10 ம் தேதி மலிவு விலை உணவ கங்கள் திறக்கப்பட்டது. 
உணவகங்களுக்கு தேவை யான உணவு பொருட்கள் உளுந்து, துவரம் பருப்பு, சமையல் எண்ணெய், வெந் தயம், பூண்டு, மிளகாய், புளி, மஞ்சள் பொடி, கடுகு, மசாலா, பெருங்காயம் ஆகி யவை பொன்னிக்கூட்டுறவு சிறப்பங்காடியில் இருந் தும், அரிசியினை தமிழ் நாடு நுகர்பொருள் வா ணிப கழகத்திடம் இருந் தும், பால் பொருட்களை ஆவின் நிறுவனத்திடமிரு ந்து பெறப்பட்டு வரு கிறது. ஒவ்வொருஉணவகத்திலும் காலை, 1,200 இட்லி,மதியம் தலா,300சாம்பார்சாதம், தயிர் சாதம் விற்பனை செய் யப்பட்டு வந்தது. ஒவ் வொரு உணவகத்திலும், 12 பேர் வீதம், 10 உணவகங் களில், மகளிர் சுய உதவிக் குழுவை சேர்ந்த, 120 பேர் பணியாற்றி வருகின்றனர். 
இவர்களுக்கு தினக் கூலி யாக தலா, 250 ரூபாய் வழங் கப்பட்டு வருகிறது. மாநகராட்சியில் செயல் படும், 10 மலிவு விலை உண வகங்களில் மூலம் தினசரி வருவாய், 42 ஆயிரம் ரூபாய்.
ஆனால், மகளிர் சுய உதவிக்குழுக்களை சேர்ந் தவர்களுக்கு வழங்கப்படும் தினசரி சம்பளம் மட்டும், 30 ஆயிரம் ரூபாய் ஆகும்.
SURAN
 தவிர, மளிகை பொருட் கள், காஸ் சிலிண்டர் உள் ளிட்டவற்றுக்கு தினமும் (ஒரு உணவகத்துக்கு) சரா சரியாக, 8 ஆயிரம் ரூபாய் வரை செலவு ஆகிறது.
மின்சாரம், பராமரிப்பு உள்ளிட்டவற்றை கணக் கிட்டு பார்க்கும் போது, அம்மா உணவகத்தின் மூலம், சேலம் மாநகராட் சிக்கு தினமும் ஏற்படும் இழப்புத்தொகை என்பதை கணக்கில் கொள்ளலாம். 
இது எல்லா மாநகராட் சிகளுக்கும் பொருந்தும்.அம்மா உணவகத்திற்கு பொது மக்களிடம் வர வேற்பு இருக்கும் நிலையில் இந்த திட்டம் தொடர வேண்டும் என்பதே அவர் களது எதிர்பார்ப்பாக உள்ளது. 
நூலக நிதியை மக்களிடம் வாங்கி விட்டு நூலகத்துறைக்கு கொடுக்காமல் இருக்கும் நகராட்சிகள் அம்மா உணவகத்துக்கு மட்டும் தனது ஊழியர்களுக்கு கூட சம்பளம் கொடுக்காமல் பணத்தை செலவிடுகிறது.குடி நீர் கட்டணங்கள்,காப்புத் தொகைகளை உயர்த்துகிறது.
நிதி  பற்றாக் குறையால்  திண் டாடி வரும் மா நகராட்சி களுக்கு கூடுதல் நிதி ஒதுக் கீடு செய்து மக்க ளுக்குத் தேவையான திட் டங்களை நிறைவேற்றித் தருவதற்குப் பதில், ஏற்கனவே பற்றாக்க்குறையான நிதி நிலையில்  இருந்தே அம்மா உணவ கங்களுக்கு நிதியை மடை மாற்றம் செய்து அம்மா புகழ் பாடுவது தான் தமிழக அரசின் சாதனையா?-
சரி இந்த உணவங்கள் மூலம் தமிழ் நாட்டில் ஏழ்மை ஒழிந்து விட்டதா?சில இடங்களில் மட்டும் செயல்படும் இந்த உணவகங்களில் உண்மையில் உழைக்கும் அடித்தட்டு மக்களுக்கு எந்த பயனும் இல்லை.அவர்கள் இந்த உணவகங்களில் சாப்பிடவும் இல்லை.
suran
சோம்பேறிகளும் தனது உழைப்பைஅம்மாவின் செல்லப்பிள்ளை  டாஸ்மாக்கில் கொடுத்து விட்டு வீட்டுக்கு செல்ல முடியா நிலையில் உள்ள குடிமகன்களும் ,சில பண்டாரம்,பரதேசிக்களும்தான் சாப்பிடுகிறார்கள்.
வாக்களித்த மக்களுக்கு அடிப்படை விலைவாசிகளை உயர்த்தி விட்டு அங்கொன்றும்,இங்கொன்றுமாக கண்துடைப்பு உணவகங்கள்,குடிநீர்,காய்கறி,மருந்து  கடைகளை  திறந்து விட்டு அதற்கு பல கோடிகளில் பக்கம்,பக்கமாக விளம்பரங்களை போட்டு அழகு பாக்கும் காணொளி ஆட்சிதான் இந்த ஆட்சியின் சாதனை .

                                                                                                                     -ப.கவிதா குமார்
suran
------------------------------------------------------------------------------------------------------------
நியாய விலைக்கடைகளில் இருந்த உப்பு,அம்மா உப்பாகிவிட்டது,ஊட்டி தேயிலை அம்மா தேயிலையாகிர்த்து .கூட்டுறவு மருந்தகங்கள் அம்மாவாகி விட்டன.இன்னமும் மாறாதது .தமிழ்நாடு மாநில வாணிபக்கழக [டாஸ்மாக்]கடைகள்தான் .
முடி வெட்ட அல்லது முடி திருத்தப் போனேன் .இருக்கிற ஐந்தாறு முடியை திருத்த[?]70 ரூபாய் கேட்டார்.எது,எதுக்கோ திறக்கிற அம்மா இதுக்கு திறந்தால் .இரு க்கும் ?
வேர்ட் புரோகிராமில், 
""ஓவர்டைப் நிலை'' 
என்பது, ஏற்கனவே அமைக்கப்பட்ட வரியில், நாம் டை செய்திடும் டெக்ஸ்ட், வலதுபுறமாக இருக்கும் டெக்ஸ்ட்டை நீக்கும் நிலையாகும். 
இந்த நிலை இயக்கப்படாத போது, நாம் ஏற்கனவே அமைந்த வரியில், டைப் செய்தால், அது இடையே செருகலாக அமைக்கப்படும். 
எனவே, இந்த செயல் தன்மையை வைத்து, ஓவர் டைப் நிலை இயக்கப்பட்டுள்ளதா என்று அறிந்து கொள்ளலாம். அப்படி இல்லாமல், டாகுமெண்ட் பக்கத்தினைப் பார்த்த நிலையில் இதனை உணர்ந்து கொள்ள வேண்டும் எனில், ஸ்டேட்டஸ் பாரில் அதனை அமைத்துக் கொள்ளவும் எளிதான வழி ஒன்று உள்ளது. 
suran
இதற்கு ஸ்டேட்டஸ் பாரில் ரைட் கிளிக் செய்து, Overtype option எதிரே டிக் அடையாளத்தினை அமைக்க வேண்டும். உடனேயே, ஓவர்டைப் நிலை இயங்குகிறதா என ஸ்டேட்டஸ் பாரில் காட்டப்படும். "Insert” என ஸ்டேட்டஸ் பாரில் காட்டப்படும். இதனைப் பார்த்தே, ஓவர்டைப் நிலை இயங்கிக் கொண்டிருக்கிறதா என அறியலாம்.
இந்நிலையை அமைக்க மூன்று வழிகள் உள்ளன. முதலாவதாக, Ins கீ பயன் படுத்துவது. ஆனால், இந்த வழியைப் பின்பற்றி அமைக்க, வேர்ட் புரோகிராமினை இந்த கீயினை இவ்வழிக்கு செட் செய்து அமைத்திருக்க வேண்டும். இரண்டாவது வழி, ஸ்டேட்டஸ் பாரில் உள்ள ஓவர்டைப் பாரில் கிளிக் செய்வது. அதாவது, ஏற்கனவே இதனை, இங்கு முதல் பாராவில் குறிப்பிட்டுள்ளபடி, அமைத்திருக்க வேண்டும். 
மூன்றாவது வழியில் அமைத்திட, கீழ்க்காணும் செயல்முறைகளை மேற்கொள்ள வேண்டும்.
1. Word Options டயலாக் பாக்ஸை இயக்கவும். (வேர்ட் 2007ல், ஆபீஸ் பட்டன் அழுத்தி, பின்னர், Word Options என்பதில் கிளிக் செய்திடவும்) வேர்ட் 2010ல், ரிப்பனில் File டேப் அழுத்தி, அதன் பின்னர், Options கிளிக் செய்திடவும்.
2. டயலாக் பாக்ஸில் இடது பக்கம் Advanced என்பதில் கிளிக் செய்திடவும்.
3. Use Overtype Mode என்ற செக் பாக்ஸில் கிளிக் செய்திடவும். பின்னர் ஓகே கிளிக் செய்து வெளியேறவும்.
நன்றி:தினமலர்.
Click Here

suran
suran

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?