இந்தி 26 விழு க்காடு?
தற்போது கடந்த மே 27 ஆம் தேதி பொதுத்துறை நிறுவனங்கள், வங்கிகள், வெளியுறவுத் துறை உள்ளிட்ட எல்லா அமைச்சகங்களின் அதிகாரிகள் துவங்கி அலுவலர்கள் வரை சமூக வலைத்தளங்களில் அனைத்தையும் இந்தியில் எழுத வேண்டும் என்று உள்துறை அமைச்சகத்திலிருந்து உத்திரவிட்டிருக்கின்றனர். அடுத்து வெளியான ஒரு சுற்றறிக்கையில் இப்படி கறாராகப் பின்பற்றும் முன்னணியான ஊழியர்களுக்கு பரிசுத் தொகையையும் உள்துறை அமைச்சகம் அறிவித்திருந்தது.
உடனடியாக கருணாநிதி இதற்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து ஒரு அறிக்கை வெளியிட்டிருக்கிறார். ”ஒருவரது விருப்பத்திற்கு மாறாக அவர் மீது அரசாணை மூலம் இந்தி மொழியைத் திணிக்கும் செயலின் ஆரம்பம்தான் இது” என்று அதில் குறிப்பிட்டிருந்தார்.
”1938ல் இந்தியை கட்டாய பாடமாக்கிய போதும், 1965ல் இந்தி ஆட்சி மொழிச்சட்டம் நடைமுறைக்கு வருமென்று அறிவித்த போதும் ஏற்பட்ட பேரெழுச்சிகளையும், கிளர்ச்சியையும் வரலாறு விரிவாக பதிவு செய்திருக்கிறது.” ”மொழிப் போர்க்களங்கள் இன்னும் உலர்ந்து போகவில்லை” எனக் காட்டமாக அறிக்கை வெளியிட்டிருந்தார்.
”எட்டாவது அட்டவணையில் உள்ள 22 மொழிகளையும் சமமாகப் பாவிக்க வேண்டும். அனைத்தையுமே மத்திய ஆட்சி மொழிகளாக மாற்ற வேண்டும். இந்திக்கு மட்டும் முன்னுரிமை கொடுப்பதன் மூலம், இந்தி பேசாத இந்திய மக்களிடையே பேதங்களைப் புகுத்தி, அவர்களை இரண்டாந்தர குடிமக்களாக்கிடும் முயற்சியின் முதற்கட்டமே இது” என்றும் தனது அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார் கருணாநிதி.
தமிழகம் மட்டுமின்றி பரூக் அப்துல்லா, மாயாவதி, ஒடிசாவில் பிஜூ ஜனதா தள் எனப் பலரும் தங்களது எதிர்ப்பை இம்மொழித்திணிப்புக்கெதிராக பதிவு செய்துள்ளனர்.
பல இடங்களிலும் இதற்கு எதிர்ப்புகள் பெருகவே, வேறு வழியில்லாத ஜெயலலிதாவும் மோடிக்கு ஆங்கிலத்தை இணைப்பு மொழியாக தொடருவதற்கு 1963ல் மத்திய அரசால் தரப்பட்ட உறுதிமொழியை நினைவுபடுத்தி, உத்திரவை வாபசு பெறும்படி கடிதம் எழுதியிருக்கிறார்.
கருணாநிதியின் அறிக்கைக்கு யோக்கியமாக பதில் சொல்ல வக்கில்லாத காவி கிரிமினல்கள் தங்களது வழக்கமான வார்த்தை பித்தலாட்டத்தில் இறங்கி விட்டனர். கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாமல், மத்திய உள்துறை அமைச்சர் தனது ட்விட்டரில் ”அமைச்சகம் நாட்டின் எல்லா மொழிகளையும் முன்னேற்றப் பாடுபடும்” என்று உறுதியளிக்கிறார். இந்திக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றுதான் கூறியிருக்கிறோம் என்று சமாளிக்கிறார்கள்.
தமிழ் இந்து நாளேடோ, ”மொழிப் போர்க்களங்கள் இன்னும் உலர்ந்து போய் விடவில்லை” என்ற வாக்கியத்தை மேற்கோள் காட்டி, கருணாநிதியை கிண்டல் செய்யும் சாக்கில் தமிழகத்தின் மொழிப் போராட்டத்தை கிண்டல் பண்ணியிருக்கிறது. தமிழ் இந்து வா? தமிழ்[அழிக்க வந்த]இந்தி நாளேடா?
தமிழால் இணைவோ மை எடுத்து விட்டு இந்தியால் இணைவோம் என்றாக்கி விடலாமே?
தமிழ், தமிழினம், தமிழிசை, தமிழ் வழிபாடு, தமிழ் ஆட்சிமொழி என்று சொன்னவுடனேயே பார்ப்பனக் குஞ்சுகளின் செவியில் அது நராசராமான வார்த்தைகளாகத்தான் ஒலிக்கும் என்பதற்கு இது இன்னொரு எடுத்துக்காட்டு.
அப்படியே இருந்தாலும் இந்தியாவில் இந்தி பேசும் மாநிலங்களிலும் இந்தி பேசுவோர் எண்ணிக்கை வெறும் 26 விழு க்காடுதான்.மீதி 75 விழுக்காடு மற்றைய மொழி பெசுவோர்தான்.
பொது மொழி என்றோ, தேசிய மொழி என்றோ ஏதும் இல்லாத, 125 கோடி மக்கள் கொண்ட
இந்தியாவில் இந்தி பேசுவோர் எண்ணிக்கை மட்டும் 26 சதவீதம்தான். இந்தக் கணக்கைச்
சொல்வது நாமல்ல, மத்திய அரசு பத்தாண்டுகளுக்கு ஒரு முறை மேற்கொள்ளும் மக்கள்
தொகைக் கணக்கெடுப்பான சென்சஸ்!
இந்தி பேசுவோர் 2001- ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப் பின்படி, இந்தி பேசும்
மக்களின் எண்ணிக்கை என்று 42 கோடி பேர் என கணக்கு காட்டியிருந்தனர். அதாவது 45
சதவீதம் பேர்.
அய்ந்தாவது இடம் தமிழுக்கு வங்காளம், தெலுங்கு, மராத்தி மொழி பேசுவோருக்கு அடுத்து
அதிகம் பேர் பேசும் மொழி தமிழ்தான். தமிழ் பேசு வோர் என 6 கோடியே 7 லட்சம் பேர் எனப்
பதிவு செய்திருந்தனர்.
மத்திய அரசின் மோசடி இது ஒருபுறம் இருக்க, இந்தி மொழி பேசுவோர் என்று மத்திய அரசு
கணக்கு காட்டியிருப்பது ஒரு மோசடியான வேலை என்பது அம்பலமாகியுள்ளது. காரணம்
இந்த 42 கோடி மக்களும் இந்தி பேசுபவர்கள் அல்ல.. வெவ்வேறு மாநிலங்களில் இந்தியின்
கிளை மொழிகளைப் பேசுபவர்கள்.
26 சதவீதம்தான் இந்தியை மட்டும் பேசுவோர் எண்ணிக்கை என்று பார்த்தால் 27 கோடியே 79
லட்சம் பேர். அதாவது நாட்டு மக்கள் தொகையில் 26 சதவீதம். இந்தி குடும்பத்தைச் சேர்ந்த
மொழிகளான போஜ்புரி, ராஜஸ்தானி, மகதி, சத்தீஸ்கரி, ஹரியான்வி, மேவாரி, மால்வி,
மார்வாரி உள்ளிட்டபத்துக்கும் மேற்பட்ட மொழிகளைப் பேசுவோர் 15 கோடிக்கு மேல்
உள்ளனர். இவை வட்டார வழக்கு மொழிகள் அல்ல. தனி எழுத்துருக்களைக் கொண்டவை
. இந்த மொழி பேசுவோர் தங்கள் தாய்மொழி இந்தி என்று சொல்வதில்லை. அந்தந்த
மாநிலங்களில் தாய் மொழியாக தங்கள் மொழிகளையே குறிப்பிடுகின்றனர்.
குற்றச்சாட்டு ஆனால் இதை மறைத்து விட்டு, மொத்தமாக இந்தி பேசுபவர்கள் 42 கோடி பேர்
என கணக்கு சொல்கிறது மத்திய அரசு. இதன் மூலம் பெரும்பான்மை யோர் பேசும் மொழி
இந்தி என்ற பொய்த் தோற்றத்தை உருவாக்குகிறது மத்திய அரசு என்ற குற்றச்சாட்டு நீண்ட
காலமாகவே உள்ளது.
முரண்பாடு "இந்திய மக்கள் தொகையில் இந்தி பேசுவோர் எண்ணிக்கை என்பது நீண்ட
காலமாக விவாதத்துக்குரியதாக உள்ளது. இந்தியின் சாயலில் உள்ள மொழிகளை வட்டார
வழக்கு மொழிகளாக மத்திய அரசு கருதுகிறது. ஆனால் அந்த மொழிகளைப் பேசுவோர்
அவற்றை தங்கள் தனித்துவம் மிக்க தாய் மொழி என்கிறார்கள். இந்த முரண்பாடு நீங்கும் வரை
இந்தி பேசும் மக்களின் எண்ணிக்கை பற்றிய உண்மையான கணக்கு கிடைக்காது," என்கிறார்
இந்திய மொழிகள் கணக் கெடுப்புத் துறைத் தலைவர் ஜிஎன் டெவி.
1938ல் தாளமுத்து நடராசன் துவங்கி, 1965ல் சின்னச்சாமி என்ற திமுக தொண்டன் துவங்கி ஏறக்குறைய 70க்கும் மேற்பட்ட இளைஞர்கள் இந்தி ஆட்சிமொழிக்கெதிராக தீக்குளித்துப் போராடிய தமிழகம், இந்தி எதிர்ப்பு போராட்டத்தின் மூலம் வரலாற்றில் தனக்கென ஒரு இடத்தை தக்க வைத்துக் கொண்டது.
அந்த மரபின் தொடர்ச்சிதான், தமிழ் இசைக்கான போராட்டம், ஆலயத்தில் தமிழ் வழிபாட்டுக்கான போராட்டம், தில்லையில் தேவாரம் பாடும் போராட்டம், அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்குவதற்கான போராட்டம் ஆகிய அனைத்தும். தமிழ் மக்களின் இந்தப் போராட்டங்கள் அனைத்திற்கும் அன்று முதல் இன்று வரை பார்ப்பனக் கும்பல் எதிரியாகத்தான் இருந்து வந்திருக்கிறது.
தற்போது ஆட்சியதிகாரத்தில் பார்ப்பன பாசிசம் அமர்ந்து விட்டது. இல்லை, தமிழருவி, வைகோ, ராமதாசு, விஜயகாந்த் போன்ற தமிழின விரோதிகள் மோடிக்கு பல்லக்குத் தூக்கி பதவியில் அமர்த்தியிருக்கிறார்கள்.
தமிழ்க் குடியைக் கெடுத்த இந்தக் கோடரிக் காம்புகள் இப்போது இந்தி திணிப்புக்கு எதிராக கண்டன அறிக்கை விடுகிறார்கள்.
இந்த அறிக்கை பிரிவினைக்கு வித்திடும் என்று எச்சரிக்கை விடுகிறார் கால்நடை வைகோ. குறைந்த பட்சம் தேசிய ஜனநாயக கூட்டணியிலிருந்து மதிமுகவின் பிரிவினையை முதலில் வைகோ அறிவிக்கட்டும்.
தமிழகத்தின் பார்ப்பன எதிர்ப்பு மரபை நாசமாக்கும் விதத்தில் பாரதிய ஜனதாவுக்கு காவடி எடுத்த இந்த துரோகிகளை தமிழ் மக்கள் அடையாளம் காண வேண்டும்.
இந்து-இந்தியா என்ற இந்துத்துவா கொள்கைகளுக்கு எதிராகப் போராடுவதும் இந்தி திணிப்புக்கு எதிராகப் போராடுவதும் வேறு வேறல்ல. மோடியின் பார்ப்பன பாசிச ஆட்சிக்கு எதிரான முதல் குரல் தமிழகத்திலிருந்து எழும்புகிறது.
எந்தவிதத்திலும் மோடி ஆட்சி முந்தைய அலங்கோல காங்கிரசு அரசுக்கு இளைத்ததாக இருக்கப்போவதில்லை.மோடி அரசு இந்தியாவை முன்னேற்றப் போவதில்லை என்பது இந்த கொஞ்ச கால மோடி அமைச்சர்கள் அறிக்கைகளைப்பார்த்து தெரிந்து கொள்ள லாம்.
ஆட்சி அமைந்து முதல் அறிக்கையே ரெயில் கட்டணங்களை கூட்டுவதுதான்.அதிலும் இன்னமும் கொஞ்ச நாளில் ரெயில் துறையை தனியார்களிடம் ஒப்படிக்கப் போகிறார்களாம்.
காங்கிரசு விற்காததை இவர்கள் வந்து விற்கிறார்கள்.அதை வாங்கப்போவது.அம்பானி,அல்லது அதானி.
பாதுகாப்புத்துறையிலும் 100 விழுக்காடு தனியார்-அந்நிய முதலீட்டை கொணற பொகிறார்களாம்.பேசாமல் பாகிஸ்தான் அல்லது அமெரிக்காவிடம் இந்திய எல்லை பாதுகாப்பையும்,ராணுவத்தையும் குத்தகைக்கு எடுத்துக்கொள்ள லாமே?
மோடி ஆட்சிக்கு வந்தால்,தேனாறு பாயும்,பாலாறு ஓடும் என்று நாட்டில் கதை விட்டு,கனவு கண்டு கொண்டிருந்தவர்கள் நெற்றியில் மொத்தமாக நாமம் வரையப்பட்டு வருகிறது.
ரெயில் கட்டணம் உயர்ந்தது.இந்தி திணிப்பு வருகிறது.அடுத்து ஒவ்வொன்றாக வரும்.காங்கிரசு தமிழ் நாட்டில் துடைத்து எறியப்பட இந்தி திணிப்பு முக்கிய காரணி என்பது இல.கணேசன்,பொன்.ராதாகிருஷ்ணன் கூட்டத்துக்கு தெரியாதா?
விடுதலை காலங்களில் காலுன்றி இருந்த காங்கிரசுக்கே அந்நிலை என்றால் இன்னமும் காலை சரியாக பதிக்க முடியா நிலையில் இருக்கும் பாஜக நிலை ?
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
..ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 21-ந்தேதி உலக இசை தினமாக கொண்டாடப்படுகிறது. இந்தியா, ஆஸ்திரேலியா, பிரிட்டன், சீனா உட்ப ட 110-க்கும் மேற்பட்ட நாடுகளில் இது கொண்டாடப்படுகிறது.
இந்த இசை தினத்தில்தான் கேவி மகாதேவன் [ 2001- ஜூன் 21-ந்தேதி] மரணம் அடைந்தார்.
கே.வி.மகாதேவன் |
கே. வி. மகாதேவன் (மார்ச் 14, 1918 - ஜூன் 21, 2001), ஒரு தமிழ்த் திரைப்பட இசையமைப்பாளர். 1942-ல் மனோன்மணி என்ற திரைப்படத்துக்கு முதன்முதலில் இசையமைத்த இவர் 1990-ல் முருகனே என்ற படத்துடன் தன் இசையமைப்புப் பணிகளை நிறுத்திக்கொண்டார்.
திருவிளையாடல், தில்லானா மோகனாம்பாள், கந்தன் கருணை, தாய் சொல்லைத் தட்டாதே, படிக்காத மேதை, வசந்த மாளிகை எனப் பல புகழ் பெற்றத் திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார்.
கந்தன் கருணை மற்றும் சங்கராபரணம் ஆகிய படங்களுக்கு இசையமைத்ததன் மூலம் தேசிய விருதைப் பெற்றுள்ளார். தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் மொத்தம் 1500-க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார் கே. வி. மகாதேவன். மொத்தமாக 218 தமிழ்ப் படங்களுக்கு இசையமைத்தார்.
தமிழ்நாட்டின் தென்பகுதியில் நாகர்கோவிலில் உள்ள கிருஷ்ணன் கோவில் என்ற சிற்றூரில் வெங்கடாசல பாகவதர், பிச்சையம்மாள் ஆகியோருக்கு மகாதேவன் பிறந்தார். இவரது பாட்டனார் ராம பாகவதர் திருவனந்தபுரம் அரசரின் ஆஸ்தான வித்துவானாக இருந்தவர்.
தந்தையார் வெங்கடாசல பாகவதர் கோட்டு வாத்தியம் இசைப்பதிலும் வல்லவர். சிறு வயதிலோயே இசையில் நாட்டம் கொண்டிருந்தமையினால் மகாதேவன் பள்ளிப் படிப்பைத் தொடரவில்லை. பாலகாந்தர்வ நாடக சபையில் இணைந்து பெண் வேடம் ஏற்றுப் பாடியவாறு நடித்தார்.
பூதப்பாண்டி அருணாசலக் கவிராயரிடம் முறையாக இசை பயின்றார். முறையாக இசை பயின்ற பின்னர் அங்கரை விசுவநாத பாகவதரின் இசைக் குழுவில் இணைந்து பம்பாய் ஐதராபாத், தில்லி, நாக்பூர் ஆகிய வெளியூர்களுக்குச் சென்று கச்சேரி செய்து வந்தார்.
மகாதேவன் 1942 முதல் மனோன்மணி, பக்தகௌரி, அக்கினி புராண மகிமை, பக்த ஹனுமான், நல்ல காலம், மதன மோகினி ஆகிய படங்களுக்கு இசை அமைத்து தமிழ்த் திரையுலகில் தனக்கென்று ஒரு நிலையான இடத்தைத் தக்க வைத்துக் கொண்டார்.
மதன மோகினி திரைப்படத்தில் பி. லீலாவுடன் இணைந்து பாடல் ஒன்றையும் பாடியுள்ளார்.
திருவிளையாடல், தில்லானா மோகனாம்பாள், கந்தன் கருணை, தாய் சொல்லைத் தட்டாதே, படிக்காத மேதை, வசந்த மாளிகை எனப் பல புகழ் பெற்றத் திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார்.
கந்தன் கருணை மற்றும் சங்கராபரணம் ஆகிய படங்களுக்கு இசையமைத்ததன் மூலம் தேசிய விருதைப் பெற்றுள்ளார். தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் மொத்தம் 1500-க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார் கே. வி. மகாதேவன். மொத்தமாக 218 தமிழ்ப் படங்களுக்கு இசையமைத்தார்.
தமிழ்நாட்டின் தென்பகுதியில் நாகர்கோவிலில் உள்ள கிருஷ்ணன் கோவில் என்ற சிற்றூரில் வெங்கடாசல பாகவதர், பிச்சையம்மாள் ஆகியோருக்கு மகாதேவன் பிறந்தார். இவரது பாட்டனார் ராம பாகவதர் திருவனந்தபுரம் அரசரின் ஆஸ்தான வித்துவானாக இருந்தவர்.
தந்தையார் வெங்கடாசல பாகவதர் கோட்டு வாத்தியம் இசைப்பதிலும் வல்லவர். சிறு வயதிலோயே இசையில் நாட்டம் கொண்டிருந்தமையினால் மகாதேவன் பள்ளிப் படிப்பைத் தொடரவில்லை. பாலகாந்தர்வ நாடக சபையில் இணைந்து பெண் வேடம் ஏற்றுப் பாடியவாறு நடித்தார்.
பூதப்பாண்டி அருணாசலக் கவிராயரிடம் முறையாக இசை பயின்றார். முறையாக இசை பயின்ற பின்னர் அங்கரை விசுவநாத பாகவதரின் இசைக் குழுவில் இணைந்து பம்பாய் ஐதராபாத், தில்லி, நாக்பூர் ஆகிய வெளியூர்களுக்குச் சென்று கச்சேரி செய்து வந்தார்.
மகாதேவன் 1942 முதல் மனோன்மணி, பக்தகௌரி, அக்கினி புராண மகிமை, பக்த ஹனுமான், நல்ல காலம், மதன மோகினி ஆகிய படங்களுக்கு இசை அமைத்து தமிழ்த் திரையுலகில் தனக்கென்று ஒரு நிலையான இடத்தைத் தக்க வைத்துக் கொண்டார்.
மதன மோகினி திரைப்படத்தில் பி. லீலாவுடன் இணைந்து பாடல் ஒன்றையும் பாடியுள்ளார்.
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------