தேர்தல் கால வேடம்
கடும் வெப்பம் காரணமாக தமிழ்நாட்டில் 2.5 கோடி தென்னைமரங்கள் பாதிக்கப்படும் அபாயம் உள்ளதாக தகவல்.
தஞ்சாவூர் கோவில் பராமரிப்பு பணிகள் அனைத்தும் இந்திய தொல்லியல் துறையால்மட்டுமேமேற்கொள்ளப்படுகிறது:அறநிலையத்துறை .
தமிழகத்தில்5நாட்களுக்குவெப்பச்சலனத்தால் மழை பெய்ய வாய்ப்பு.இந்திய வானிலை மையம் .
5 மாதங்களுக்குப் பிறகு பெங்களூருவில் கடந்த 2 நாட்களாக மழை பெய்து வருவது, அம்மாநில மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த மழை தண்ணீர் பிரச்சனையை தீர்க்கும் என பெங்க ளூரு மக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டிருக்கி றார்கள்.
கர்நாடகத்தின் ஹாசன் தொகுதி எம்பியும் தேவகவுடாவின் பேரனுமான பிரஜ்வல் ரேவண்ணாவால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட பெண் கடத்தப்பட்டுள்ளதாக அவரது மகன் போலீஸில் புகார் அளித்துள்ளார்.
ஜிஎஸ்டி சட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட நோட்டீஸ் மற்றும் கைது நடவடிக்கை விவரங்களை தாக்கல் செய்ய வேண்டும் என ஒன்றிய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அவதூறுகள் வரும் என அஞ்சியே, கொரோனா தடுப்பூசி சான்றிதழ்களில் இருந்து பிரதமர் மோடியின் படம் நீக்கப்பட்டதாக ராஷ்ட்ரிய ஜனதா தளம் (ஆர்ஜேடி) தலைவர் மிசா பாரதி விமர்சித்துள்ளார்.
உத்தவ் தாக்கரே போலி சிவசேனாவை நடத்துகிறார் என்றும், உண்மையான கட்சி மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவிடம் உள்ளது என்றும் வரம்பு மீறிய அடுத்தகட்ட பொய்யை ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா அவிழ்த்துவிட்டள்ளார்.
மக்களவை தேர்தல் காரணமாக அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்குவது தொடர்பான வாதங்களை உச்சநீதி மன்றம் பரிசீலிக்க உள்ளதாக தகவல் வெளியாகி யுள்ளது.
இடஒதுக்கீடு பற்றி அடிக்கடி தவறான கருத்துக்களை கூறி வரும் பிரதமர் மோடிக்கு, நாட்டில் இடஒதுக்கீடு மீதான 50 சதவீத வரம்பை நீக்குவீர்களா? என காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.
பிரஜ்வல் ரேவண்ணா ஆபாச வீடியோ வழக்கில் ஜனதா தளம் (எஸ்) மூத்த தலை வரும், முன்னாள் அமைச்சரும், பிரஜ்வலின் தந்தையுமான எச்.டி.ரேவண்ணா மீது இரண்டாவது எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.
தேர்தல் கால வேடம்
இடஒதுக்கீட்டை நீக்கவும் மாட்டோம். நீக்க அனுமதிக்கவும் மாட்டோம் என்று அலறுகிறார் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா.
மக்க ளவை தேர்தல் களத்தில் சமூக நீதி சார்பில் இட ஒதுக்கீட்டு பிரச்சனை ஒரு பேசு பொருளாகி யிருப்பது வரவேற்கத்தக்க ஒன்று.
சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று இந்தியா கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகள் ஏற்றுக்கொண்டு வலியுறுத்துகின்றன.
ஆர்எஸ்எஸ் அமைப்பு உருவாக்கப்பட்டதே மனுஅநீதியின் அடிப்படையிலான சாதிய மேலாதிக்கத்தைநிலைநிறுத்துவதற்காகத்தான் என்பது உலகறிந்த ஒன்று.
அந்த அமைப்பு துவ க்கப்பட்ட காலத்திலிருந்தே வாய்ப்பு கிடைக் கும் போதெல்லாம் இடஒதுக்கீட்டுக்கு எதிரான நிலையையே எடுத்து வந்துள்ளது.
ஆர்எஸ்எஸ் அமைப்பின் தலைவர்களில் ஒருவரான மன்மோகன் வைத்யா என்பவர் இடஒதுக்கீடு வேறு சூழலில் அறிமுகப்படுத்தப் பட்டது.
அதற்கு ஒரு கால வரம்பு வைத்து முடிவு கட்ட வேண்டுமென்று 2017ஆம் ஆண்டில் ஒரு விழாவில் பேசும் போது கூறியுள்ளார். அந்த அமைப்பைச் சேர்ந்த கோவிந்தாச்சாரியா என்ப வர் 2016 ஆம் ஆண்டில் ஒரு ஏட்டிற்கு அளித்த பேட்டியில் இடஒதுக்கீட்டை நிராகரித்ததோடு புதிய அரசியலமைப்பு தேவை என்றார்.
2015ஆம் ஆண்டில் எம்.ஜி.வைத்யா என்ற ஆர்எஸ்எஸ்காரர் சாதி அடிப்படையிலான இட ஒதுக்கீடு ஒழிக்கப்பட வேண்டும் என்று கூறி யுள்ளார்.
ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் 2015ஆம் ஆண்டு இடஒதுக்கீட்டு முறை மறு பரிசீலனை செய்யப்பட வேண்டும் என்று கூறி யுள்ளார்.
இது ஒருபுறமிருக்க, விபிசிங் பிரதமராக இருந்தபோது பிற்படுத்தப்பட்டோருக்கு ஒன்றிய அரசுப்பணியில் இடஒதுக்கீடு வழங்க வகை செய்யும் மண்டல் குழு பரிந்துரையை நிறை வேற்ற முயன்ற போதுதான் எல்.கே.அத்வானி என்ற பாஜககாரர் தலைமையில் ரதயாத்திரை நடத்தப்பட்டது.
அப்போது மண்டலா?
கமண்ட லா?
என்ற விவாதம் முன்னுக்கு வந்தது. விபிசிங் அரசை பாஜக கவிழ்த்ததற்கு காரணம் இடஒதுக் கீடு மீதான அவர்களது ஒவ்வாமைதான்.
மருத்துவப்படிப்பில் பிற்படுத்தப்பட்டவர்களு க்கு 27 சதவீதம் வழங்க வேண்டும் என்பதை நீதி மன்றத்தில் எதிர்த்தது மோடி அரசு மறந்துவிட முடியாது. இப்போதும்கூட பட்டியலின மற்றும் பழங்குடியினருக்கான இடங்களை வஞ்சகமாக மறுக்கும் ஆட்சிதான் இது.
இடஒதுக்கீட்டுக்கு ஆதரவான அரசமைப்புச் சட்டத்தையே மாற்ற சதிசெய்யும் கூட்டம்தான் பாஜக. இவர்கள் திடீரென சமூகநீதி பேசுவது தேர்தல் கால வேடமேயன்றி வேறல்ல.